சென்ற வாரம் கர்நாடக மாநிலம் மங்களூரில் ஸ்ரீ ராம சேனை என்ற பெயரில் தடியர்கள் சிலர் ‘மதுவகம்’ ஒன்றில் நுழைந்து அங்கிருக்கும் பெண்களைத் தனியாகக் குறிவைத்து அடித்துத் தாக்கியுள்ளனர்.
தொலைக்காட்சியில் சில துண்டுகளைப் பார்த்தபோது அதிர்ச்சியாக இருந்தது. பெண்களைத் துரத்தித் துரத்தி அடித்துக் கீழே வீழ்த்துகின்றனர். சுற்றிப் பார்த்துக்கொண்டிருக்கும் ஆண்கள் பலரும் அமைதியாக உள்ளனர். ஒருவர் மட்டும் எதிர்க்கிறார். அவரும் நையப் புடைக்கப்படுகிறார்.
மது அருந்துவது சரியா, தவறா என்று அறவியல், உடல் நலம், ஒழுக்கவியல் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பட்டிமன்றம் நடத்தலாம். ஆனால் “பெண்கள்” குடிக்கக்கூடாது என்று சொல்ல இந்தக் குரங்குகள் யார்? அப்படியே சொல்வதற்கு இவர்களுக்குக் கருத்துரிமை உள்ளது என்றாலும், ஓரிடத்தில் புகுந்து பிறரை - அது ஆணாகவோ, பெண்ணாகவோ இருக்கட்டும் - அடிக்க எந்த உரிமையும் கிடையாது.
‘Pub culture’ கூடாது என்றெல்லாம் யார் வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், இன்று சட்டப்பூர்வமாக 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மது வழங்குவதற்கென்று உரிமம் பெற்ற மதுக்கடைகளில், நடன அரங்குகளில், மது அருந்தக்கூடாது என்று தடுக்க அல்லது தாக்க முற்படுபவர்கள் சட்டத்துக்குப் புறம்பாக நடப்பவர்கள். தனி மனிதர்களுக்கான சுதந்தரம் என்பதில் தலையிட அடுத்தவர்களுக்கு உரிமையில்லை. வேண்டுமானால், கர்நாடகத்தில், பெண்கள் யாரும் மது அருந்தக்கூடாது என்று சட்டம் கொண்டுவர பாஜக முயற்சி செய்யட்டும். அப்போது பார்ப்போம் என்ன நடக்கிறது என்று.
கலாசாரக் கருத்துகள், கருத்துத் தளத்தில் மட்டுமே விவாதிக்கப்படவேண்டும். அடிதடியில் ஈடுபவர்களுக்கு கடுமையான தண்டனைகள் தரப்படவேண்டும்.
ஸ்ரீ ராம சேனையின் தாக்குதலில் சிலர் இறந்தே போயிருக்கலாம். அடி படாத இடத்தில் பட்டு, ஓடுபவர்கள் கூர்மையான கம்பி எதிலாவது குத்திக்கொண்டு, அல்லது எதிரே வரும் வண்டியில் மோதி ... என்று இறப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே ஸ்ரீ ராம சேனை தடியர்களை, கொலைக்குற்றம் சாட்டி உள்ளே தள்ளவேண்டும்.
***
எங்கெல்லாம் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ, அங்ககெல்லாம் இதுபோன்ற கூத்தாட்டங்கள் தொடங்கிவிடுகின்றன. சட்டத்தை சிறிதும் மதிக்காத அரைகுறை கலாசார காவலர்களை கடுமையாக அடக்கவேண்டியது காவல்துறையின் கடமை. அப்படி காவல்துறை செயல்படாமல் தடுக்கப்பட்டால், அந்த அரசைத் தூக்கி எறிவது மக்கள் கடமை.
பிப்ரவரி 14, வேலண்டன் தினம் வரப்போகிறது. அன்று இந்த கலாசார காவலர்கள் கையில் குண்டாந்தடியுடன் தெருவில் வலம் வந்தால், அதற்கு சட்டக் காவலர்களிடம் இருந்து எந்த எதிர்ப்பும் வரவில்லை என்றால், பாதிக்கப்படும் இளைஞர்கள் (ஆண், பெண்), தாங்களும் கையில் குண்டாந்தடிகளைத் தூக்குவதில் எந்தத் தவறும் இல்லை என்றாகிவிடும்!
ஐந்து புத்தகங்கள் – 9
3 hours ago
I agree in entirety with what you have written.
ReplyDeleteDid you notice Anbumani's recent comments on this?
http://news.outlookindia.com/item.aspx?653017
இந்த சமயத்தில் அன்புமணி இப்படி சொல்லியிருக்கக்கூடாது. தாக்கியவர்களுக்கு வக்காலத்து வாங்கும் தொனியில் இருக்கிறது. மேலும், இந்திய/தமிழ்க் கலாசாரம் என்றால் என்ன என்று வரையறுப்பதற்கு எந்த அரசியல்வாதிக்கும் உரிமை இல்லை.
நண்பா, சரியாக சொன்னீர்கள்.
ReplyDeleteஅன்புமணி, அவரது தந்தை ராமதாஸ், அவர்களது பாட்டாளி மக்கள் கட்சி ஆகியோர் குடிக்கு எதிராக இருக்கிறார்கள். அன்புமணியின் அடிப்படைக் கரிசனம் ஏற்றுக்கொள்ளக்கூடியதே. பெரும்பான்மை குடிகாரர்கள் சிறு வயதில், தெரு விபத்துகளில் இறக்கிறார்கள்; அந்தக் காலகட்டம்தான் அவர்களது வாழ்க்கையில் அதிக உற்பத்தி ஏற்படும் காலம் என்று அன்புமணி சொல்வதும் ஏற்கக்கூடியதே.
ReplyDeleteஆனால், அன்புமணியே கூட, இதுபோன்ற ரெக்ரியேஷனல் குடிகாரர்கள் குடல் வீங்கிச் சாகிறார்கள் என்று சொல்வதில்லை. குடித்துவிட்டு தெருவில் வாகனம் ஓட்டிச் செல்லக்கூடாது என்பதை சட்டபூர்வமாக நடைமுறைப்படுத்தினாலே இந்தப் பிரச்னையைப் பெருமளவு ஒழித்துவிடலாம்.
குடியே கூடாது என்று அன்புமணி எதிர்பார்த்தால், அதுவும் எனக்குப் பிரச்னை இல்லை. ஆனால், பெண்கள் மட்டும் குடிக்கக்கூடாது என்றோ pub culture என்பது இந்திய விழுமியங்களுக்கு எதிரானது என்பதால் அது கூடாது என்றோ அவர் சொல்வது ஏற்கத்தக்கதல்ல.
சொல்லப்போனால், குடிப்பது, அதன்மூலம் வாழ்க்கையைக் கொண்டாடுவது என்பது உலக கலாசாரங்கள் பலவைப் போன்றும், இந்திய கலாசாரத்திலும் ஓர் அங்கமே. வள்ளுவர் போல ஒரு சிலர் மட்டும்தான் குடி கூடாது என்று அறவியல் கருத்துகளைச் சொல்லியிருக்கிறார்கள்.
”வரலாற்று நோக்கில் தமிழ்ச் சமூகமும் கள்ளும்” என்ற தலைப்பில் ஆய்வாளர் எஸ். இராமச்சந்திரன் எழுதிய கட்டுரை:
ReplyDeletewww.sishri.org/kalkudi.html
நல்ல பதிவு...
ReplyDeleteபாசிஸம் என்பது இதுதானோ, தங்களை கலாச்சாரகாவல்ர்கள் என்று சொல்லிக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவது சங்பரிவார அமைப்புகளுக்கு இது புதிதல்ல. மேலும் பாஜகவின் மானில ஆட்சி அவர்களுக்கு சாதகமாக இருக்கிறது.
Well said. Title is really funny!
ReplyDelete//
ReplyDeleteஎங்கெல்லாம் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ, அங்ககெல்லாம் இதுபோன்ற கூத்தாட்டங்கள் தொடங்கிவிடுகின்றன.
//
Absolutely baseless allegation and totally biased view.
கலாச்சாரக் காவலர் அஷோக் கேலோட் சொல்லுகிறார் கேளுங்கள். இதெல்லாம் உங்கள் கண்ணுக்குத் தெரியாமல் இப்படி பேசுகிறீர்களா இல்லை தெரிந்தும் உங்கள் அரசியல் சார்புக்கு ஒத்துவராததால் அதை வசதியாக மறந்துவிட்டுப் பேசுகிறீர்களா ?
பா.ஜ.க வுக்கும் ராம சேனைக்கும் எப்பேற்பட்ட சம்பந்தம் உண்டென்று தெரியுமா ? அல்லது அதுவும் தெரியாதா ?
இந்த பிரமோத் முத்தாலிக் என்ற ராம சேனை தலைவர் பா.ஜ.க வுக்கு எதிராக 2008 கர்னாடக தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தி தோற்றவர்.
ஆகவே, பா.ஜ.க ஆட்சிக்கு வந்த உடன் கலாச்சாரக் காவலர்கள் வருகிறார்கள். ஃபாசிசம், என்றெல்லாம் ஊளையிடும் முட்டாள் நரிக்கூட்டத்தில் புதிய உருப்பினரானதற்கு பத்ரிக்கு வாழ்த்துக்கள்.
//எங்கெல்லாம் பாஜக ஆட்சிக்கு வருகிறதோ, அங்ககெல்லாம் இதுபோன்ற கூத்தாட்டங்கள் தொடங்கிவிடுகின்றன. சட்டத்தை சிறிதும் மதிக்காத அரைகுறை கலாசார காவலர்களை கடுமையாக அடக்கவேண்டியது காவல்துறையின் கடமை. அப்படி காவல்துறை செயல்படாமல் தடுக்கப்பட்டால், அந்த அரசைத் தூக்கி எறிவது மக்கள் கடமை.//
ReplyDeleteஆந்திராவில் கிறிஸ்தவர்கள் திரையரங்கேறி டாவின்ஸி கோட் பார்க்கவந்தவர்களை தாக்கினார்கள். எல்லா செய்திதாள்களிலும் வந்திருந்தன. அப்போது இதை எழுதி இருந்தால் வரவேற்றிருக்கலாம். அதை விடுங்கள் திமுக ஆட்சி வந்த உடன் மேலப்பாளையத்தில் மும்தாஜை சம்பிரதாய சுத்தமாக கல்வீசி பிறகு கத்தியால் குத்தி நடு ரோட்டில் கொன்றார்களே அப்போது இதை எழுதியிருக்கலாம். அல்லது நெல்லையில் காஃபிர்கள் வரும் இடத்தில் டீ கடை நடத்தியதற்காக ஹையருன்னிஸாவை மார்க்க தடியர்கள் வெட்டிக்கொன்ற போது சொல்லியிருக்கலாம். அப்போதெல்லாம் அமைதி காத்துவிட்டு இப்போது "எனவே ஸ்ரீ ராமசேனை தடியர்களை, கொலைக்குற்றம் சாட்டி உள்ளே தள்ளவேண்டும்." என்று படுலாஜிக்காக எழுதுகிறீர்களே பத்ரி...நான் மேலே சொன்ன இரண்டு கொலைகளும் நடந்தது தமிழ்நாட்டில் - திமுக ஆட்சியின் போது. திமுகவின் உற்ற நட்பு இயக்கமான தமிழகமுஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நெல்லை அதிகாரி "இந்தியாவில் பெண்களை கல்லால் அடித்து கொல்லும் சட்டம் வேண்டும்" என்று எக்ஸ்பிரஸுக்கு கொடுத்த பேட்டியில் சொன்னார். நீங்கள் தமிழ்நாட்டில்தானே வாழ்கிறீர்கள்? இத்தகைய கொடூர கொலைக்கெல்லாம் மௌனித்த உங்கள் பதிவு இப்போது கள்ளுண்ட குரங்காக குதிப்பது ஏனோ? அல்லது பீடி சுற்றியும் டீ கடை வைத்தும் பிழைக்கும் பெண்கள் கொல்லப்பட்ட போது கண்டுகொள்ளாத மீடியாக்கள் பப் தாக்குதலை இப்படி தேசிய பிரச்சனை ஆக்குவது ஏனோ? (என்னைப் பொறுத்தவரையில் ஸ்ரீ ராம் சேனாகாரர்கள் ரவுடிகள். அவர்கள் தண்டிக்கப்படவேண்டும். குடிப்பதும் குடிக்காததும் தனிமனித சுதந்திரம். அந்த பெண்கள் தெருவில் வந்து குடித்துவிட்டு மோசமாக நடந்து ஒரு பொது தொந்தரவு ஆகாத வரை அவர்களை கேட்க எவருக்கும் உரிமை இல்லை. ஆனால் எனக்கு ஸ்ரீ ராம் சேனா தடியர்கள் செய்ததைப் போல அல்லது அதைவிட மோசமாக இருப்பது மீடியா தடியர்களின் நடவடிக்கை. பச்சைபடுகொலைகளை கேட்க வக்கில்லாதவர்கள் பப் வன்முறையை ஒளிவட்டம் போட்டு காட்டி இந்து தலிபான் என கதைவிடும் அருவெறுப்பு.)
அன்புள்ள பத்ரி, நான் கூறியிருக்கும் மும்தாஸ் படுகொலை உங்கள் கவனத்துக்கு வராமல் போயிருக்கலாம். இதோ அதற்கான லிங்க்: http://www.indianexpress.com/news/in-tamil-nadu-town-fundamentalists-play-moral-cops-even-kill-to-have-way/26668/0
ReplyDeleteதமிழ்நாட்டின் சில பகுதிகளில் பெண்களின் நிலையும் தலிபானிய பாசிசமும் திமுக ஆட்சியில் கோலோச்சுவதை நீங்கள் இதன் மூலம் அறியலாம். மங்களூர் தாக்குதலை காட்டிலும் பலமடங்கு மோசமான இந்த நிலை நிலவுவதை இப்போதாவது தட்டிக்கேட்டு ஒரு பதிவு போடுவீர்கள். அந்த அளவு நேர்மை உடையவர் நீங்கள் என நான் நம்புகிறேன்.
அரவிந்தன்: முஸ்லிம் சமுதாயம் உத்தமமானது என்று நான் சொல்லவில்லை. பெண்களுக்கு எதிரான அடக்குமுறையில் முன்னிற்பது முஸ்லிம்கள்தான். முஸ்லிம் பெண்கள், தங்கள் சமூக ஆண்களை எதிர்த்து வெளியே வரவேண்டியது மிக அவசியம்.
ReplyDeleteசிறு வயதிலேயே பெண் திருமணம், பெண்ணுக்கு பொதுக்களத்தில், முக்கியமாக அரசியலில் தேவையான இடம் கொடுக்காமை, பெண்களுக்கு வேண்டிய அளவு கல்வி கொடுக்காதிருத்தல், ஜமாஅத் பெயரால் மாற்றுக் கருத்துள்ளவர்களைத் தள்ளி வைத்து வன்முறை செய்தல், பர்தா முறை - இப்படி ஒவ்வாத பல கருத்துகள் முஸ்லிம்களிடம் உண்டு. இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமல்ல. உலகம் எங்கும்.
உலக முஸ்லிம் சமுதாயம் பெரும்பாலும் உருப்படாமல் இருப்பதற்கு இதெல்லாம்தான் காரணம்.
நிற்க.
ஒவ்வொரு முறையும் இந்து தடியர்களின் வெறியைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கூடவே முஸ்லிம்களைப் பற்றியும் கருத்து சொல்லவேண்டியது அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.
ராமசேனை குண்டர்கள் தொலைக்காட்சி கேமராக்களை அழைத்துவந்து வெறியாட்டம் போடுகின்றனர். கண்ணில் கண்ட காட்சி அதிரவைத்த காரணத்தால் பதிவிடுகிறேன். மேலப்பாளையம் போன்ற விஷயங்கள் அதிகம் கண்ணில் படுவதில்லை. பட்டால் நிச்சயம் கண்டிப்பேன்.
கிறிஸ்துவர்கள் டா வின்ச்சி கோட் பற்றி அய்யோ, குய்யோ என்று அடித்துக்கொண்ட முட்டாள்தனத்தைப் பற்றி எங்கோ கருத்து சொன்னதாக ஞாபகம். நமது ஆட்சியாளர்கள் மதியிழந்து அந்தப் புத்தகத்தையும் தடை செய்யவில்லை; படத்தையும் தடைசெய்யவில்லை. அப்படிச் செய்ய முயன்றபோது நீதிமன்றம் தலையிட்டுள்ளது. (தமிழக கிறித்துவக் கூட்டம் அவசர அவசரமாக கருணாநிதியை வாழ்த்தி தப்பு தப்பாக அடித்த போஸ்டர்கள் பலனில்லாமல் போயின.)
சல்மான் ருஷ்டி பற்றி என் கருத்தை அறிய விரும்பினால், சாத்தானின் வேதம் புத்தகம் தடை செய்யப்பட்டது மிகவும் அபத்தம் என்பேன்.
போதுமா?
இப்போது, திமுகவுக்கு வருவோம். திமுகவின் தோழமைக் கட்சி என்று தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சொல்வது காமெடி. அவர்களால் திமுகவுக்கு ஆகவேண்டியது ஒன்றுமே இல்லை. தமுமுகவினர் வன்முறையில் ஈடுபட்டு, அவர்களை தமிழக காவல்துறை சிறையில் தள்ளாவிட்டால் அதை நான் நிச்சயமாகக் கண்டிப்பேன்.
இப்போது, கர்நாடக பாஜக அரசையும் ராம சேனை குண்டர்களையும் எடுத்துக்கொள்வோம். ராம சேனை குண்டர்கள் பொதுவில் பெண்களை அடித்துத் தாக்குகிறார்கள். வீடியோ ஆதாரம் உள்ளது. அத்தனை பேரும், பிணையில் விடுதலை. அவர்கள்மீது கொலைக்குற்றம் சாட்டப்படவில்லை. நடந்தது கொலைவெறித் தாக்குதல் என்பதாகவே எனக்கு படுகிறது.
அடிதடியில் இறங்கிய வானரங்கள் ஜாலியாக வெளியே வந்து, பாஜக அரசுக்கு சவால் விடுகிறார்கள். அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதை முடுக்கிவிடாத ஏடியூரப்பா, பப் கலாசாரத்தைச் சாடுகிறார். அதைச் சாட இப்போது என்ன அவசரம்? குண்டர்களை உள்ளே தள்ளி, கடுமையான தண்டனை வாங்கிக்கொடுத்து, பொதுமக்களுக்கு சட்டத்தின்மீது நம்பிக்கை கொண்டுவர வைப்பதுதானே உடனடித் தேவை?
பாஜக ஆட்சியில் இருந்தால் நமக்கு ஒன்றும் நடக்காது என்ற தைரியம் ராமசேனை போன்ற பண்டாரங்களிடம் நிறையவே உள்ளது. அதை மாற்றும் விதமாக பாஜக படு தீவிரமாக வன்முறையை அடக்கினால், நான் நிச்சயம் பாஜகவை வரவேற்பேன்.
அதைச் செய்யாத காரணத்தால்தான், ஒரு வாரம் கழித்து என் கோபத்தை வெளிப்படுத்த இந்தப் பதிவை எழுதினேன்.
வஜ்ரா: பப் கலாசாரம் பற்று எதிர்க் கருத்து சொல்ல அனைவருக்கும் உரிமை உண்டு. அஷோக் கெஹ்லாட்டுக்கு நிச்சயம் அந்த உரிமை உண்டு. ஏடியூரப்பாவுக்கும் உண்டு. பிரமோத் முத்தாலிக்குக்கும் உண்டு. அன்புமணி ராமதாசுக்கும் உண்டு.
ReplyDeleteஆனால், அதற்காக வன்முறையை ஏவுவது, மனிதர்களைக் கை நீட்டி அடிப்பது, கொலைவெறித் தாக்குதலில் இறங்குவது - இதைத்தான் நான் எதிர்க்கிறேன்.
பப் கலாசாரத்தை எதிர்ப்பவர்களை ஓரணியாகத் திரட்டுங்கள். கூட்டணி அமோகமாக இருக்கும்! அதில் அனைத்து முஸ்லிம் முன்னேற்ற தாடிகளும் இருப்பார்கள். சங்கராச்சாரிகளும் இருப்பார்கள். காங்கிரஸ் கிழவர்கள் இருப்பார்கள். பாஜக காவிகள் இருப்பார்கள். கூட, தமிழ் தேசியர்கள் இருப்பார்கள். காம்ரேடுகள் இருப்பார்களா இல்லையா என்று தெரியவில்லை.
என் கவலையெல்லாம் சட்டம் ஒழுங்கு பற்றி கவலைப்படாத குண்டர்களை பற்றியே. அவர்கள் ராமசேனை தடியர்களானாலும் சரி, முஸ்லிம் குண்டர்கள் ஆனாலும் சரி. அடிதடியில் இறங்கும் அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்படவேண்டும். அவ்வளவுதான்.
இதைத் தடுக்காமல், ஃபாசிச சக்திகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்காத எல்லா அரசுகளையும் குற்றம் சொல்வேன்
மும்பையில் தடியெடுத்துக் கொண்டு தண்டல் செய்த ராஜ் தாக்கரே காங்கிரஸ் ஆட்சியில் தானே செய்தார்.
ReplyDeleteஆந்திராவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் போது தானே, ஆசிட் வீச்சுமற்றும் அதனைத் தொடர்ந்து என்கவுண்டர் எல்லாம் நடந்தது.
பா. ஜ. க ஆட்சிக்கு வந்தால் தான் இப்படி நடக்கிறது என்று பகிரங்கக் குற்றச்சாற்றுவதில் உண்மை இல்லை என்பதே அரவிந்தன் மற்றும் என் வாதமும் கூட.
மற்றபடி, பப்பிற்குச்செல்லுதலை தடுக்க எவனுக்கு எந்த அறுகதையும், உரிமையும் இல்லை என்பதற்கு மாற்றுக்கருத்தே இல்லை.
ஒரு நெருடலான விஷயம் என்னவென்றால், இதே பப் கல்ச்சர் பற்றி நரேந்திர மோடி இப்படிப் பேசியிருந்தால் உங்கள் பதில் எதிர்வினை "யார் வேண்டுமானாலும் பப் கல்ச்சர் பற்றி விமர்சிக்கலாம்" என்று இருக்குமா ? இருக்கும் என்று நம்பலாமா ?
நீங்கள் ஒன்றும், ஒவ்வொறு முறை பா.ஜ.க வை விமர்சிக்கும் போது முஸ்லீம்களை விமர்சிக்கவேண்டாம். ஆனால் ஒரு முறையாவது, தன்னிச்சையாக பா.ஜ.க வை குறைகூறும் கை காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் பக்கமும் தன்னிச்சையாக சுட்டடுமே ?
//இப்போது, திமுகவுக்கு வருவோம். திமுகவின் தோழமைக் கட்சி என்று தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தைச் சொல்வது காமெடி. அவர்களால் திமுகவுக்கு ஆகவேண்டியது ஒன்றுமே இல்லை.//பத்ரி, ஒரு சின்ன technicality. தமுமுகவை கட்சி என சொல்லவில்லை தோழமை இயக்கம் என்றுதான் சொல்லியிருக்கிறேன். தமுமுக-திமுக தோழமை காமெடி அல்ல. மாறாக தேர்தல் சமயத்தில் தமுமுக திமுக கூட்டணியை ஆதரித்ததும் தேர்தலுக்கு பிறகு தமுமுககாரர்கள் வக்ப் வாரியத்தில் முக்கிய பொறுப்புகள் கொடுக்கப்படுவதும், தமுமுக ஒரு அரசியல் கட்சியாக இல்லாத போதும் தமிழக அரசு நடத்தும் அனைத்துகட்சி கூட்டங்களுக்கு தமுமுக போன்ற அடிப்படைவாத அமைப்பு அழைக்கப்படுவதும், தமுமுகவுக்கு முதலமைச்சரே முன்வந்து ஆம்புலன்ஸ் வழங்குவதும் என நடக்கும் அனைத்தும் காமெடி என நீங்கள் நினைக்கலாம். நாளைக்கு தட்டி எழுப்பப்பட்டு இந்து காஃபிர்களுக்கு எதிராக "நேரடி நடவடிக்கையில்" இறங்கும் ஸ்லீப்பர் செல் ஜிகாதிகளுக்கு பல தளங்களில் infrastructure அமைத்துக்கொடுக்கும் பணியை திமுக செய்து வருகிறது. சரி அது போகட்டும். //ஒவ்வொரு முறையும் இந்து தடியர்களின் வெறியைப் பற்றிப் பேசும்போதெல்லாம் கூடவே முஸ்லிம்களைப் பற்றியும் கருத்து சொல்லவேண்டியது அவசியம் இல்லை என்று நினைக்கிறேன்.// I cannot agree more with this statement. ஆனால் விஷயம் என்னவென்றால் முஸ்லிம்கள் குறித்ததல்ல பிரச்சனை. ஒவ்வொரு முறை திமுக ஆட்சிக்கு வரும் போதும் தலிபான் முஸ்லீம் தடியர்கள் கொலைவெறி ஆட்டம் போடுகிறார்களே...ராம்சேனை ரவுடிகள் கொலை செய்யும் நோக்கத்துடன் அங்கே வரவில்லை. (படாத இடத்தில் பட்டால் உயிர் போயிருக்கும் எனவே கொலை முயற்சி என சொல்லவேண்டும் என்பதை லீகல் காமெடி என்றே சொல்லவேண்டும்) ஆனால் கல்லூரி மாணவர்கள் கத்தியை கொண்டு ஒரு பெண்ணை நட்ட நடு தெருவில் பட்டபகலில் குத்தி கொல்கிறார்கள். அதற்கு முன்னால் சம்பிரதாயமாக கல் எறிகிறார்கள். A pre-planned public execution. இதனை -உங்கள் மாநிலத்தில் உங்கள் முதலமைச்சரின் மௌடீக ஆதரவினால் மனதைரியம் பெற்றதாக சொல்லப்பட்ட ஒரு அமைப்பு - செய்யும் போது அதுவும் ராம்சேனையின் ரவுடித்தனத்தை கிண்டர்கார்டன் குழந்தைகளின் செயலாக மாற்றுகிற அளவு கொடூரமான ஒரு நிகழ்வு ஏன் உங்கள் கவனத்துக்கே வரும் அளவு கூட ஊடக முக்கியத்துவம் பெறவில்லை? ஏன் அது குறித்து நீங்கள் பேசவில்லை? இதுதான் என் கேள்வி. இது முஸ்லீம்களை குறித்ததல்ல. நம் ஊடக அரசியலின் வக்கரத்தை குறித்தது.
ReplyDeleteThe accused, initially detained under the National Security Act, had obtained bail. Senior policemen in Tirunelveli are shocked by what they term the DMK governmentஒs ஓblatant sympathyஔ for the Muslim fundamentalists. ஓObviously, the accused committed the offence with the grave intention to create law and order problems and disrupt peace in Tirunelveli district, known to be communally sensitive. Also, all of them have links with Muslim fundamentalist outfits. The government should have allowed the law to take its natural course. For a new government to resort to such a move is rather demoralising for the police force,ஔ said a senior police officer in Tirunelveli. Police officials say that in one of the cases, Crime No. 15 of 2001 registered at the Melapalayam police station, while two of the five accused were juveniles and let off given their age, the other three, including M S Syed Mohammed Buhari, Sheik Hyed and Jafer Ali had ஓadmitted to the offenceஔ. ஓDespite this, the government ordered the withdrawal of cases against them,ஔ an officer said. (இண்டியன் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 8 2006)
ReplyDeleteமும்தாஜ் ஹெயருன்னிஸா கொலைகள் நடந்தது மார்ச் 2007. இப்போது சொல்லுங்கள் பத்ரி. திமுக ஆட்சியில் ராம்சேனையை விட மோசமான கொலைகார இஸ்லாமிய தடியர்கள் சுதந்திரமாக திமுக அரசு இருப்பதால் நமக்கு பிரச்சனை இல்லை என்று செயல்பட முடிகிறதா இல்லையா என்று. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்த போதுதான் தமிழ்நாட்டின் தலைநகரில் யூத்காங்கிரஸ் ரவுடிகள் சரிகாஷாவை கொலை செய்தனர். அவர்கள் நிலை என்ன இன்றைக்கு? இந்நிலையில் சொல்லுங்கள் பாஜகவுக்கு மட்டும் ஊடக ஒளிவட்டம் அளிப்பது அரசியல் இல்லாமல் வேறென்ன? சரி பெண்களை கண்ட்ரோல் செய்வது என்பதே ஒழுக்க விதிகளை காப்பாற்ற நவீன சமுதாயங்களுக்கு முந்தைய நிலை சமுதாயங்கள் தேர்ந்தெடுத்த எளிய வழி. இதிலிருந்து பெண்கள் மீறி எழும் போது இத்தகைய கொடூரங்கள் சமுதாயத்திலிருந்து பீறிட்டெழுகின்றன. இவை சட்டத்தின் உதவியாலும் காவல்துறையின் கடுமையான கரங்களாலும் ஒடுக்கப்படவேண்டியவை. ஆனால் இவற்றினை அரசியலாக்கும் போது என்ன நடக்கிறது? பாஜக அரசு முதலில் கடுமையான நடவடிக்கை எடுக்க தலைப்பட்டது. உடனடியாக ஏறத்தாழ அனைத்து ஊடகங்களும் அன்று வரை பெயர் தெரியாத ஸ்ரீ ராம் சேனாவின் தலைவனிடம் பேட்டி எடுத்து "பாஜக இந்துக்களுக்கு எதிரானது" என்று வெளியிட்டு மகிழ்ந்தன. (The functioning style of the state BJP government has proved that it is against Hinduism, said Jeetesh Kumar, state joint convener of Sri Ram Sena, speaking at a press conference here on Wednesday January 28. Pramod Mutalik, founder of Sri Ram Sena, who has been arrested in connection with a Davangere case, must be released before Thursday January 29 evening, failing which a protest will be held at all the district headquarters of the state on Friday January 30, he warned.) ஏறக்குறைய ஒவ்வொரு பத்திரிகையும் பாஜக catch 22 நிலையில் மாட்டிக்கொண்டதாக கூறின. தங்களை தாராள முன்னேற்றத்தன்மை கொண்டதாக காட்டிக்கொள்ளும் ஊடகங்களின் இந்த அரசியல் சில்லுண்டித்தனத்தையும் இது எப்படி இப்படிபட்ட lunatic fringe elementsகளை தேசிய முக்கியத்துவம் பெற வைக்கின்றன என்பதையும் உண்மையில் நடப்பது ஒரு மீடியா தலிபான்களின் தடித்தன விளையாட்டு என்பதையும் யாராவது சுட்டிக்காட்டினால் நல்லது. ஆனால் அதற்கான குறைந்த பட்ச தைரியம் கொண்ட ஒரு மனிதரையும் காணவில்லை என்பது வருந்ததக்க விஷயம்.
It's well understood that nobody has any right to control another's acts, however well meant the motives for such control could be. What constitutes moral behavior and what's immoral, amoral etc. is decided by time-honored norms during each epoch and undergo continuous revision. This bashing-up the parties and chasing and abusing women drinkers has been going on in Chennai with the tacit support of police for ages and no one has raised the issue and no TV channel has evinced any interest. Goons regularly invade five-star hotel dance halls, separate the couples, chase and abuse women with choice invectives. Now they have turned their attention to parties in farm houses where women revelers are targets of verbal and physical abuse. So much so, I heard from a friend that henchmen of certain political parties now now started collecting 'hafta' in advance from owners of farm houses so that their parties are not invaded by the moral police. The selective attention, inordinate coverage, to happenings in Mangalore underlines the patently tendentious motives of the English media, both print and electronic.
ReplyDelete-TSD Murthy (From Retributions)
http://offstumped.nationalinterest.in/2009/02/08/mangalores-real-shame-talibanization-of-national-media/
ReplyDelete