Thursday, October 14, 2010

கம்ப்யூட்டர் புத்தக மொழிபெயர்ப்பாளர்கள் தேவை

கிழக்கு பதிப்பகம் எளிமையான ஆறு கம்ப்யூட்டர் புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கும் வேலையில் இறங்கியுள்ளது.
  1. விண்டோஸ் 7
  2. வேர்ட் 2010
  3. எக்ஸல் 2010
  4. எச்.டி.எம்.எல் வகையறா
  5. அவுட்லுக் 2010
  6. ஆக்சஸ் 2010
ஆகியவையே அவை. (இவை கிட்டத்தட்ட டம்மீஸ் தொடர் போன்றவை. கணினி பற்றி அதிகம் தெரியாதவர்கள் பயன்படுத்தக்கூடிய மாதிரியில் உள்ளவை.)

மிக எளிமையான படங்கள் நிறைந்த புத்தகங்களே இவை. ஆனால் இந்த சப்ஜெக்ட் தெரிந்த மொழிபெயர்ப்பாளர்கள்தான் தேவை. மொழிபெயர்ப்புகள் முழுக்க முழுக்க தங்க்லீஷ் முறையில்தான் இருக்கவேண்டும். Copy this file என்பதை ‘இந்த ஃபைலை காப்பி செய்யவும்’ என்றுதான் மொழிபெயர்க்க விரும்புகிறோம். எனவே கருத்துரீதியாக இத்துடன் உடன்படாதவர்கள் தயவுசெய்து என்னை நாலு திட்டு திட்டிவிட்டு, ஒதுங்கிவிடவும். மற்றபடி, எனது மேற்படிக் கருத்துடன் ஒத்துப்போகும் நபர்கள், இந்தத் திட்டத்தில் இணைந்து பணியாற்ற விரும்பினால், vaidehi@nhm.in என்ற மின்னஞ்சல் முகவரிக்குத் தகவல் அனுப்பவும்.

ஒவ்வொரு புத்தகமும் சுமார் 260 பக்கங்கள் இருக்கும். ஆனால் ஒவ்வொரு பக்கத்திலும் பெரும்பாலானவை ஸ்க்ரீன் ஷாட் படங்கள்தான். அந்தப் படங்களின் கேப்ஷன் முதலிய சிலவற்றை மட்டுமே தமிழ்ப்படுத்தினால் போதும். மேல் விவரங்கள் உங்கள் மின்னஞ்சல்களைப் பார்த்து.

23 comments:

  1. I can do it.. give me your mail id so that I can send my id.

    ReplyDelete
  2. மின்னஞ்சல் கொடுத்துள்ளேன்... badri@nhm.in கூடவே vaidehi@nhm.in இரண்டுக்கும் மின்னஞ்சல் அனுப்புங்கள்.

    ReplyDelete
  3. அன்புள்ள பத்ரி அவர்களுக்கு,
    இப்பணியினை செய்ய நானும் விழைகிறேன். மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன். நன்றி.

    கணேஷ்.

    ReplyDelete
  4. நண்பரே, நானும் இப்பணியை செய்ய விரும்புகிறேன் மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.

    ReplyDelete
  5. //Copy this file என்பதை ‘இந்த ஃபைலை காப்பி செய்யவும்’ என்றுதான் மொழிபெயர்க்க விரும்புகிறோம். எனவே கருத்துரீதியாக இத்துடன் உடன்படாதவர்கள் தயவுசெய்து என்னை நாலு திட்டு திட்டிவிட்டு, ஒதுங்கிவிடவும்//

    1
    2
    3
    4

    ஒதுங்கியாச்சு !!

    ReplyDelete
  6. //இந்த ஃபைலை காப்பி செய்யவும்’ என்றுதான் மொழிபெயர்க்க விரும்புகிறோம்.//

    இந்த கோப்பினை நகலெடுக்கவும் என்பது ஒன்றும் பெரிய பிரச்சனையாக தெரியவில்லை

    ReplyDelete
  7. நல்ல முயற்சி வாழ்த்துக்கள் !!!!

    ReplyDelete
  8. //இந்த கோப்பினை நகலெடுக்கவும் என்பது ஒன்றும் பெரிய பிரச்சனையாக தெரியவில்லை//

    இந்த ஃபைலை காப்பி செய்யவும்----என்பது ஒன்றும் பெரிய பிரச்சனையாக தெரியவில்லை

    ReplyDelete
  9. //இந்த கோப்பினை நகலெடுக்கவும் என்பது ஒன்றும் பெரிய பிரச்சனையாக தெரியவில்லை//

    நாளை வேலைக்குச் சென்றவுடன்- ஐ.டி. மேனேஜர்- இந்தாப்பா, இந்த ஃபைலைக் காப்பி பண்ணிடு; அப்படியே ஒரு பேக் அப் எடுத்துடு...

    ஊழியர் (தமிழில் படித்தவர்); சார்...என்ன சொல்றிங்க... புரியலை.

    மானேஜர்; யூ ஆர் டிஸ்மிஸ்ட்... இது புரியுதா?

    ReplyDelete
  10. //இந்த ஃபைலை காப்பி செய்யவும்----என்பது ஒன்றும் பெரிய பிரச்சனையாக தெரியவில்லை //

    அது தமிழும் அல்ல
    ஆங்கிலமும் அல்ல

    அது தான் பிரச்சனை

    அது உங்களுக்கு பிரச்சனையாக தெரியவில்லை என்றால்
    உங்கள் தமிழில் பிரச்சனை
    அல்லது உங்கள் ஆங்கிலத்தில் பிரச்சனை
    அல்லது உங்களிடம் பிரச்சனை

    ReplyDelete
  11. //நாளை வேலைக்குச் சென்றவுடன்- ஐ.டி. மேனேஜர்- இந்தாப்பா, இந்த ஃபைலைக் காப்பி பண்ணிடு; அப்படியே ஒரு பேக் அப் எடுத்துடு...

    ஊழியர் (தமிழில் படித்தவர்); சார்...என்ன சொல்றிங்க... புரியலை.

    மானேஜர்; யூ ஆர் டிஸ்மிஸ்ட்... இது புரியுதா? //

    இல்லை, புரியவில்லை

    Manager : Copy this file. Take a backup
    Employee : புரியல
    Manager : You are dismissed

    இது புரிகிறது

    மேலாளர் : இந்த கோப்பினை நகலெடுக்கவும்
    ஊழியர் : காண்ட் அண்டர்ஸ்டாண்ட்
    மேலாளர் : நீங்கள் வேலையை விட்டு நின்று கொள்ளுங்கள்

    இதுவும் புரிகிறது

    ReplyDelete
  12. ////இந்த கோப்பினை நகலெடுக்கவும் என்பது ஒன்றும் பெரிய பிரச்சனையாக தெரியவில்லை//

    நாளை வேலைக்குச் சென்றவுடன்- ஐ.டி. மேனேஜர்- இந்தாப்பா, இந்த ஃபைலைக் காப்பி பண்ணிடு; அப்படியே ஒரு பேக் அப் எடுத்துடு...

    ஊழியர் (தமிழில் படித்தவர்); சார்...என்ன சொல்றிங்க... புரியலை.

    மானேஜர்; யூ ஆர் டிஸ்மிஸ்ட்... இது புரியுதா? //

    ஆங்கிலத்தில் வேண்டுமென்றால் ஆங்கில புத்தகத்தையே படித்தால் போதுமே

    ஏன் தமிழ் புத்தகத்தை படிக்கவேண்டும்

    புரியவில்லை
    முடிந்தால் விளக்கவும்

    ReplyDelete
  13. //ஆங்கிலத்தில் வேண்டுமென்றால் ஆங்கில புத்தகத்தையே படித்தால் போதுமே

    ஏன் தமிழ் புத்தகத்தை படிக்கவேண்டும்

    புரியவில்லை
    முடிந்தால் விளக்கவும்//

    விளக்கம்: கிழக்கு எப்படி கல்லா நிரப்புவது?

    ReplyDelete
  14. //அது தான் பிரச்சனை

    அது உங்களுக்கு பிரச்சனையாக தெரியவில்லை என்றால்
    உங்கள் தமிழில் பிரச்சனை
    அல்லது உங்கள் ஆங்கிலத்தில் பிரச்சனை
    அல்லது உங்களிடம் பிரச்சனை//

    தமிழில் பிரச்சனை இல்லை
    ஆங்கிலத்தில் பிரச்சனை இல்லை
    ஆகவே கலப்பதில் பிரச்சனை இல்லை

    ReplyDelete
  15. //அது உங்களுக்கு பிரச்சனையாக தெரியவில்லை என்றால்.....
    அல்லது உங்களிடம் பிரச்சனை //

    உங்களிடம் ஒருவர் வந்து "எனக்கு fever" என்றால், அவருக்கு என்னென்ன பிரச்சனை இருக்கக்ககூடும் என்பீர்கள்?
    கலந்து பேசுவது ஒரு பிரச்சனை என்றால் தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட எல்லாருக்குமே பிரச்சனைதான்.

    ReplyDelete
  16. @Bruno,
    So, கிழக்கு அழைப்பது மொழி பெயர்ப்பாளர்களை அல்ல என்கிறீர்கள் !
    ஜனரஞ்சகபடுதுபவர்களை தான் !

    ReplyDelete
  17. "மொழி பெயர்ப்பாளர்களை அல்ல என்கிறீர்கள் !"


    மொழி பெயர்க்க கம்ப்யூட்டர்களே போதுமே.. சுவையாக எழுதுவதுதான் முக்கியம்..

    ReplyDelete
  18. நான் தமிழில் எழுதிய தொழில்நுட்பப் பதிவுகளை படிப்பதற்கு நண்பர்கள் நிறைய சிரமப் பட்டதை பார்த்திருக்கிறேன். இப்போது தொழில்நுட்ப வார்த்தைகளை தமிழ்படுத்துவதை நிறுத்திக் கொண்டேன். கண்டுபிடித்த அத்தனை தொழில்நுட்பங்களும் அந்நிய மொழியில்தான் இருக்கிறது. அதை எளிமையாக எடுத்துரைப்பதற்கு மட்டும் தாய்மொழியில் செய்து கொள்ளலாம். தகவல் தொழில்நுட்பத்துறையில் ஆங்கிலம் தவிர்க்க முடியாத ஒன்று. எழுத்து நடைகளை ஏற்பதும் ஏற்காததும் வாசகர்கள் கையில்தான் உள்ளது. எதையும் திணிப்பது வேலைக்கே ஆகாது. உங்கள் புத்தகங்கள் பலருக்கு பயன் தர வாழ்த்துகள்.

    ReplyDelete
  19. Dear Badri,

    Can you pl. intervene and stop this nonsense going on on tamilpaper ?

    I among many others really hoped this site would be a breath of fresh air to the tamil web.
    I am sadly dissappointed by the propaganda articles by Mr. Aravindan appearing on tamilpaper.

    1. It is not knowledge related arivu-saar. Much of what is written is disputed, contentious, opinionated and undermines the social harmony. Neither is this the place to post one's own research.

    2. All his articles aim to either vindicate or bolster up Hindutva. He was already known on Sulekha. Looks like he is an official member of RSS too. Looking at the articles, his series firmly follows its agenda.

    3. If you thought this would provide a democratic platform for alternative thoughts, then you are sadly mistaken. We already have enough issues than to provocate the minds of the readers with matters that are hardly related to their lives and priorities. Giving opportunities to the other side will only aggravate the problem in hand.

    4. Agreed he has decent writing skills, but you may use him only to write on non-sensitive issues.
    Also such authors' works have to be more strictly edited for bias.

    Tamilpaper is fast turning into another Tamilmanam.
    Pl. act fast before you lose readers interest on this site.

    I would like you to set high standards for this site and choose not only the writers carefully but also the topics they could write about. Pl. block all sensitive issues like Hindutva, Islamic fundmentalism, Dravidianism, casteisms etc. We had enough of it and there are plenty of other sites if someone likes it.

    We should not only look for intelligent people but also who are progressive, liberal and modern, most importantly without any fundamentalist leanings. We need people who have fresh new look on issues, who could cut apart from the past and show optimism in writings. Simply put, dont manufacture more and more issues. My head should not ache after reading the article.

    But if you are into sensationalism and page hits, pl. ignore this post.

    By the way, the website design is very impressive. Pass my praises to your designers.

    ReplyDelete
  20. mr anon,

    You seem to be in a fit as aravindan is hitting the nail on your coffin. So, I take you to be a pinko.

    Leftist ideology based "social harmony" engineering is what is disputable, opinionated, contentious and out right ridiculous. Your fiction based social harmony is the bone of contention anywhere. And that is why you seem to be rather agitated and want badri to stop publishing aravindan neelakandan.

    RSS or hindutva is not anti national group. If truth vindicates some of the views of hindutva parties, you cannot turn the other way and preserve your idea of "social harmony"(sic).

    Try to face it or take a vacation. Unlike loony lefties, who prefer to be judgemental and opinionated without the faintest idea of truth just to preserve their warped "social harmony" vision, aravindan is preferring to tell it out in the open and trusts the intellect of the readers to form his own opinion.

    I believe tamilpaper.net would rather remain neutral as now than turn in to another garbage truck loaded with commie trash.

    ReplyDelete
  21. I would like you to set high standards for this site and choose not only the writers carefully but also the topics they could write about. Pl. block all sensitive issues like Hindutva, Islamic fundmentalism, Dravidianism, casteisms etc. We had enough of it and there are plenty of other sites if someone likes it.

    ’அறிவுரை சொன்னா ஆராயக்கூடாதுன்னு’ கமல் ஒரு படத்துல சொல்வாரு. இதை அப்படியே எடுத்துக்குவோம். :-)

    ReplyDelete
  22. கமல் ஒரு படத்துல சொல்வாரு

    Pammal K Sambandham

    arivuraiya pazamoziya?

    ReplyDelete
  23. அது அறிவுரை அல்ல, பழமொழி சொன்னா ஆராயக்கூடாது என்று சொல்லுவார்.
    பம்மல் உவ்வ்வ்வே சம்பந்தம் என்ற படம்.

    ReplyDelete