எது எப்படி இருந்தாலும், தஞ்சாவூரின் கல்வெட்டுகளுக்கு நிகர் அவையேதான். ஒரு இஞ்ச் விடாமல் எழுதித் தள்ளியிருக்கிறார்கள். கங்கை கொண்ட சோழபுரத்திலும் கல்வெட்டுகள் உள்ளன. ஆனால் அவற்றின் நேர்த்தி தஞ்சாவூருக்கு அருகில்கூட வருவதில்லை.
தஞ்சையில் காணப்படும் சுவர் கல்வெட்டின் ஒரு பகுதி கீழே - எப்படி நூல் வைத்துச் செய்தாற்போல ஒரு துளி அசங்கல் இல்லை என்று பாருங்கள். நேர்க்கோட்டில் தெளிவான எழுத்துகள்.
கங்கைகொண்ட சோழபுரத்தின் சிற்பங்கள் எல்லாம் பிரமாதம் என்றாலும் ஒரு கங்காதரர் அவ்வளவு அழகாக இல்லை. அதைக் கீழே பார்க்கலாம். கைகள் ஒட்டவைத்தாற்போலவும், முகம் அழகற்று இருப்பதுபோலவும், கையில் பிடித்திருக்கும் ஜடை அவ்வளவு இயல்பாக இல்லாததுபோலவும் உள்ளன. (மகேந்திரனின் திருச்சி கங்காதரரைப் பார்த்தபிறகு வேறு எந்த கங்காதரரும் அருகில்கூட நிற்கமுடியாது என்பது வேறு விஷயம்!)
(இப்போதைக்கு முற்றும்!)
depression caused by tamil weather-forecasters
6 hours ago
சட் என்று முடித்து விட்டேர்களே ! எனினும் தொடர் பதிவுக்கு நன்றி !
ReplyDeleteஅடுத்த முறை இந்த பக்கம் வரும்போது தராசுரம் கோயிலையும் பார்த்துவிட்டால் உங்கள் பயணம் நிறைவடையும் ! கோயில் சிறிது என்றாலும் சிற்பங்கள் மேலே சொன்ன இரண்டு கோயிலை விட நுட்பமானவை
சிற்பங்களைப்பற்றிய நுணுக்கமான ஒரு ஆராய்ச்சி. நல்ல பதிவு.
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteமுதல் முறையாக உங்கள் தளத்திற்கு வருகிறேன். எதைப் பற்றியும் தனித்து இல்லாமல், எல்லா விஷயங்களையும் மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள். நன்றி!
கங்கைகோண்ட சோழபுரம் சென்றதில்லை. தஞ்சாவூர் போயிருந்தாலும் இவ்வளவு உன்னிப்பாகக் கவனித்ததில்லை. எவ்வளவுதான் கவனித்தாலும் கலைப்படைப்புகள் அனைத்தும் நம்மோடு சேர்ந்து வளர்கின்றன என்று தோன்றுகிறது. மிகவும் அருமையான கட்டுரை. பகிர்ந்தமைக்கு நன்றி...
Fascinating.
ReplyDelete