கீழே நீங்கள் பார்ப்பது, ரிஷபாந்திக அர்தநாரி. இடப்பக்கம் உள்ளது தஞ்சை, வலப்பக்கம் கங்கை கொண்ட சோழபுரம்.
.jpg)
.jpg)
அடுத்து, பல்லவர்கள் ஆரம்பித்துவைத்த நடராஜரை உலோகத்தால் செய்து உலகப்புகழ் பெற்ற சோழர்கள், அவற்றை எப்படி இந்தக் கோயில்களில் காட்டியுள்ளனர் என்று பார்ப்போம்.
.jpg)
.jpg)
தஞ்சையில் சரியாக படம் எடுக்கவிடாமல் ராஜராஜன் விழாக்குழுவினர் மேடை அமைத்துக் கெடுத்துவிட்டனர். (என்னதான் இருந்தாலும் என் படமெடுக்கும் திறனும் என்னிடம் உள்ள மொபைல் போன் கேமராவும் மோசம் என்பதையும் அறிக.)
அடுத்த ஹரிஹரன் வடிவம், இரண்டிலும் .
.jpg)
.jpg)
இரண்டிலும் லிங்கோத்பவர்கள் (லிங்கத்துக்குள்ளாக சிவனது உருவம் தோன்றுமாறு...)
.jpg)
.jpg)
இரண்டு இடங்களிலும் விஷ்ணு சிற்பங்கள்...
.jpg)
.jpg)
இன்னும் பல ஒப்பீடுகளைப் பார்க்கலாம். ஆனால் பொதுவாக கங்கை கொண்ட சோழபுரம் சிற்பங்களில் நேர்த்தி சற்று அதிகமாக இருப்பதுபோல என் பாமரக் கண்களுக்குத் தெரிகின்றன.
(தொடரும்)
சற்று அதிகமாக இருப்பதுபோல என் பாமரக் கண்களுக்குத் தெரிகின்றன///
ReplyDeleteஏய்யா, உங்க கூட்டமெல்லாம் இப்படி டிஷ்கிளைமர் போட்டே எழுதுறீங்க !!
பொதுவாக கங்கை கொண்ட சோழபுரம் சிற்பங்களில் நேர்த்தி சற்று அதிகமாக இருப்பதுபோல என் பாமரக் கண்களுக்குத் தெரிகின்றன.
ReplyDeleteyes its true!!!!
சிற்பக்கலை சம்பந்தப்பட்ட புத்தகங்கள் ஏதும் கிடையாதா?
ReplyDeleteஎனக்கென்னவோ நடராஜர் சிலையைத் தவிர ( அதுவும் அந்த அட்டகாசமான விரிசடைக்காகவும்,
ReplyDeleteமனதை மயக்கும் புன்னகைக்காகவும் மட்டும்தான்)
மற்ற எல்லாவற்றிலுமே தஞ்சையே மேல் எனத் தோன்றுகிறது. குடவாயில் திரு. பாலசுப்ரமணியம், வித்யா வாசஸ்பதி நாகசாமி-ஆகியோரைக் கேட்டால்
இன்னும் சொல்வார்கள். கங்கை கொண்ட சோழபுரத்தில் நிலவும் ஆளரவமற்ற ஒருவித அமைதி, சிற்பங்களைக் கூடுதலாக ரசிக்கும் மன-நிலையை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கும் என நினைக்கிறேன்.
Which is idapakkam and which is valapakkam in your ardhanari?
ReplyDeleteperiya kovil pariya seithikal ulla web addres thevai......pls send me.........e-mail. thangaprakash.k@gmail.com
ReplyDelete