நினைத்து பார்க்கமுடியாத விலையில், ரூபாய் 5 தொடங்கி கிழக்கு, பிராடிஜி, வரம், நலம் புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. வரலாறு, வாழ்க்கை, அரசியல், புதினம், வர்த்தகம், சுய முன்னேற்றம், அறிவியல், மொழிபெயர்ப்பு என்று பல துறைகளைச் சேர்ந்த நூல்கள் கண்காட்சியில் கிடைக்கும்.
சில புத்தகங்களுக்கு 80% வரை (ஆம், எண்பது சதவிகிதம் வரை!) தள்ளுபடி உள்ளது.
இடம் 1:
மைலாப்பூர் குளம் எதிரில்.
தொலைபேசி எண் : 9500045643
இடம் 2:
L.R. சுவாமி ஹால்
சிவா விஷ்ணு கோயில் எதிரில்
சங்கர பாண்டியன் ஸ்டோர் அருகில்
தி. நகர்,சென்னை
தொலைபேசி எண் : 9500045608
தேதி:
பிப்ரவரி 5 முதல் பிப்ரவரி 13 வரை.
பத்ரி,
ReplyDeleteவெளியூர் வாசகர்கள் வாங்க வழி?!!
There are minimum 4 opposite side to the Tank; On which Mada Strreet your stall is vailable; give some more particulars please;
ReplyDeleteமைலாப்பூர் கபாலீசுவரர் கோயில் குளத்தின் மேற்குக் கரை; பேருந்து நிறுத்தம் உள்ள பகுதியில்; அல்லயன்ஸ் புத்தகக் கடைக்கு அடுத்து.
ReplyDeleteBadri Sir,
ReplyDeleteCan we get the same offer same in nhm.in??
Bala
சுஜாதா புத்தகமெல்லாம் பார்த்தது ஆச்சரியம்... சுஜாதாவைக்கூட, புத்தகம் அழுக்கடைந்து கழித்துக் கட்டும்வரை வாங்க ஆள் இல்லையா?!
ReplyDeleteஅனானி: சுஜாதா புத்தகங்கள் பற்றி... அப்படியில்லை. நாங்கள் பல இடங்களுக்கும் புத்தகங்கள் அனுப்பும்போது, முக்கியமாக புத்தகக் கண்காட்சிகளுக்கு அனுப்பும்போது புத்தகங்கள் அழுக்காகிவிடுகின்றன. அவற்றை மீன்ப்டும் மற்ற கடைகளுக்கு அனுப்பமுடியாது. அதேபோல நாள் ஆன புத்தகங்கள், அட்டை கிழிந்த புத்தகங்கள் போன்ற பலவற்றையும் இங்கே மிக அதிகத் தள்ளுபடிக்கு விற்கிறோம்.
ReplyDeleteதேடினால், ஆச்சரியமான விலையில் பல புத்தகங்கள் உங்களுக்குக் கிடைக்கலாம்!
மற்றபடி சுஜாதா புத்தகங்களை நாங்கள் இரண்டு, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மறு அச்சு செய்கிறோம். அவை படுவேகமாக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.
=====
இவற்றை இணையத்தில் விற்பனை செய்யமுடியாது. ஏனெனில் கையில் இருக்கும் (பழைய, டேமேஜ்ட்) ஸ்டாக் என்னவோ அதற்கு ஏற்றார்போலத்தான் இந்தத் தள்ளுபடி விற்பனை நடக்கும். இந்த ஸ்டாக் எல்லாமே புத்தகக் கண்காட்சி நடக்கும் இடங்களில் உள்ளன. இவற்றை இணையத்தில் வாங்கச் சொல்லி, நீங்கள் ஆர்டர் செய்துவிட்டால், எப்படியாவது நான் அவற்றை உங்களுக்குத் தந்தாகவேண்டும்! அது சாத்தியமற்றதாகப் போகலாம்.
It is unfortunate that this is conducted only in the CITY.. Like all others, you are also neglecting the sub-urban.. There is a lot of potential in the sub-urban area (beyond Guindy) which lot of people don't take into account. If possible, pls extend this festival to sub-urban areas.. (atleast start with Tambaram). Mahesh.
ReplyDeleteDear Forum,
ReplyDeleteAs you know, over the last two years, we have conducted several fairs around Chennai. However, this is the first time we are attempting a 'deep discount' fair. The idea here is to sell stock that is unsold over a long time, damaged stock, 'dirtied' stock etc.
Depending upon the results of these two fairs, we will look at extending the same to other places. But do understand that if the stock we have is sold out, we will have to stop this fair. This is a special one off kind of an event; like what Landmark organizes annually.
தி. நகரில் (LR Samy Hall)"கடலை விற்ற காசை மடியில் கட்டிக்கொண்டு போய்த்தான் வாங்கவேண்டும்" என்று நிர்ப்பந்திக்கிறார்கள்...கார்டுகளுக்கு "நோ!" சொல்கிறார்கள் ... இந்த 'அறிவுலக பயங்கரவாதத்தை' பா.ரா.விடம் சொல்லுங்கள்!
ReplyDeleteவாசகர்களே! ஏமாற்றத்தைத் தவிர்க்க ரூ. ஆயிரத்தையாவது மடியில் கட்டிக்கொண்டு செல்லுங்கள்!!
Hi Badri,
ReplyDeletethis is not related to this blog, i have sent you a mail regarding a student's education, can you please check and give me your contact number to contact you for more details. thanks sundaram
நேற்று மாலை சென்றிருந்தேன் .
ReplyDelete10 , 15 , 25 என்கிற விலையிலேயே நிறைய புத்தகங்கள் அடங்கி விடுகின்றன .
அசோகமித்திரன் , இ.பா நாவல்கள் பலதும் கிடைக்கின்றன . (15 ரூபாய் மிஞ்சி போனால் 25 ரூபாய் ).
ஆதவனின் இரவுக்கு முன் மாலை 20 என நினைக்கிறேன் .
ஹாய் மதன் ஒவ்வொரு தொகுதியும் 20 .
கிட்டத்தட்ட j .s . ராகவனின் அனைத்து நகைச்சுவை புத்தகங்களும்.
வரலாறு இல்லாத கிழக்கா? ( இந்தியா : காந்திக்கு பிறகு குறிப்பிட தகுந்தது )
சத்ய ஜித்ரே வின் புத்தகங்களே ஆறேழு தேறும். ( 10 அல்லது 15 ...)
சுஜாதாவின் மீண்டும் ஜீனோ மட்டும் ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு என்று இருந்தது . (90 ஓ 70 ஓ ).
அள்ள அள்ள பணத்தை கிள்ளி கொடுத்தே வாங்கலாம்.
போதாது யதேஷ்டம் .
நல்ல offer . நன்றி .... ப . வேண்டாம் !
This comment has been removed by the author.
ReplyDeleteசென்னையில் வேலை பார்ப்பதன் வசதியை புத்தகம் வாங்கிய போது உணர்ந்தேன்
ReplyDeleteம்ம்ம்... சென்னை காரங்க கொடுத்து வச்சவங்க
ReplyDeleteI dont know how to say thanks.
ReplyDeleteToday morning went to TNagar Shop.
Cant resist myself to take the books.
Got some 60 books for 1300 Rs.
This is the first time I see an offer like this.
Will prepare some more money and buy more books again.
Thanks. Thanks. Thanks.
இதுதாண்டா தள்ளுபடி!
ReplyDelete10-2-2011 என் வாழ்வில் முக்கியமான நாள்.
மாலை சுமார் 5 மணிக்கு T'Nagar சிவா விஷ்ணு கோவில் எதிரே உள்ள கிழக்கு விற்பனை நிலையத்தில் நுழைந்தேன் .அடுத்த ஒரு மணி நேரம் என்ன நடந்தது என்பதே தெரியாது.
புத்தம் புதிய புத்தகங்கள்.யாரோ வேண்டுதல் நிறைவேற்றுவதைப்போல இலவசத்தை விட சற்று அதிகமான விலையில்.எதை எடுப்பது,விடுவது? 30 புத்தகங்களை வாங்கினேன் மொத்தம் 415 ரூபா..என்னையே கிள்ளிப்பார்த்துக்கொண்டேன்.பில்லில் தேதியைப்பார்த்தேன் 2011தான் 1961இல்லை.
நான்கு நூறு ரூபாவும் ஒரு 20 ரூபா தாளும் கொடுத்தேன்.5ரூபா சில்லறை இல்லை ஏதாவது புத்தகம் எடுத்துக்கிறீங்களா ன்னு விற்பனை பிரதிநிதி கேட்டது உணமையிலேயே இலக்கியம். (சுஜாதா ரசித்திருப்பார்).
பத்ரிக்கு கோடானு கோடி நன்றிகள் !!
வீட்டில் மனைவியும் மகளும் இதை நம்பவே இல்லை.பிறகு பில்லை பார்த்துவிட்டு guilty யாக feel செய்தார்கள்.(மகள்:25%க்கு மேல் அதிகமாக உள்ள தள்ளுபடியை திருப்பி கொடுத்துடுங்கப்பா.நாம எதோ தப்பு செய்தா மாதிரி இருக்கு)ஒரு சாம்பிள்:"அடேடே" by மதி
6 volumes..ரூ.90மட்டுமே!!
பிற முக்கிய குறிப்புகள்:
1. கடையில் கும்பலே இல்லை என்பது மரியாதைக்காக சொல்வது.ஈ.காக்கா இல்லை என்பது உண்மை.எனவே யாரும் கும்பலை நினைத்து வராமல் இருந்துவிட வேண்டாம்.
2.இது ONCE IN A LIFE TIME OPPORTUNITY.. தவற விடாதீர்கள்.
3.Only cash transaction.No plastics.ஆயிரம் ரூபா எடுத்துப்போகவும்.
Badri..
ReplyDeleteI am feeling very much. Is there is any way to buy books by online ? Most of our peoples are outside Chennai.........
Today visited Tnagar shop again and purchased near 70 books for my self. Purchased 110 books for my friend bala. As he is in vellore, I took a box there and packed well. Will send the parcel via any bus or parcel service.
ReplyDeleteThanks a lot for the great offer.
In Both TNagar and Mylapore, good Medical, History, Self Development books are available. Do not miss this golden opppurtinity - Saravanan
ReplyDeleteஅன்புள்ள பத்ரி சாருக்கு...
ReplyDeleteசைதை முரளியின் பணிவான வணக்கம். உண்மையிலேயே இது சிறப்பானதொரு சேவை. இதில்கூட கிழக்கை மிஞ்ச யாரும் இல்லை என்று (சீப்பாகப் பேசவில்லை) சொல்லுமளவுக்கு கடை விரித்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.
‘கடை விரித்தேன் கொள்வாரில்லை’ என்று இனி யாரும் சொல்ல முடியாது.
மற்ற பதிப்பாளர்களும் இதுபோன்று கடை விரிக்க முன் வருவார்களா என்பது சந்தேகம்தான்.
நானும் ஆயிரம் ரூபாய்க்குப் பல புத்தகங்கள் வாங்கினேன்.
நன்றியுடன்,
சைதை முரளி.