Monday, February 21, 2011

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாறு

தெரு கிரிக்கெட் விளையாடும் சிறுவன் தொடங்கி தெண்டுல்கர் வரை அத்தனை பேருக்கும் ஒரே கனவுதான். உலகக்கோப்பை. அதை மட்டும் வென்றுவிட்டால் போதும்; உலகத்தையே வென்றதற்குச் சமம்.

1975 தொடங்கி இன்று வரையிலான உலகக்கோப்பைப் போட்டிகளின் புள்ளிவிவரத் தொகுப்பு மட்டுமல்ல; உங்களை சிலிர்க்க வைத்த, பிரமிக்க வைத்த, பெருமை கொள்ளவைத்த அத்தனைத் தருணங்களையும் வரலாற்றுப் பதிவாக மறு உருவாக்கம் செய்கிறது இந்தப்புத்தகம்.

நடந்துமுடிந்த போட்டிகளை மீண்டும் ஒருமுறை வர்ணித்து, சுவாரசியம் குறையாமல் எழுதுவது சுலபமான விஷயம் அல்ல. தீவிர கிரிக்கெட் ரசிகரான நூலாசிரியர் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி ரசித்து ரசித்து எழுதியிருப்பதை நீங்கள் சிரித்துச் சிரித்துப் படிக்கலாம்.

நேற்றுவரை டிவியையும் டிவிடியையும் வைத்து உலகக்-கோப்பைப் போட்டிகளை நினைவூட்டி ரசித்த நீங்கள், இனி புத்தகம் மூலமாகவும் ரசிக்கப்போகிறீர்கள். புதிய அனுபவத்துக்குத் தயாராகுங்கள்!


Enjoy Cricket World Cup 2011.

8 comments:

  1. பத்ரி,
    தமிழில் விளையாட்டுகளுக்கான பத்திரிக்கைகளுக்கு என்று இடமுள்ளதா?

    என்னுடைய சிறு வயதில் சாம்பியன் என்ற ஒரே ஒரு (மொக்கை) பத்திரிக்கையை தவிர வேறெந்த விளையாட்டு பத்திரிக்கைகளையும் பார்த்ததில்லை. அதன் பிறகு ஸ்போர்ட்ஸ்டார், ஸ்போர்ட்ஸ் வோல்ட், தி கிரிகெட்டர் என்று மாறி விட்டது.


    கிங் விஸ்வா
    தமிழில் தமிழ் காமிக்ஸ் உலகம் - வாண்டுமாமாவின் மகத்தான படைப்பு - புலி வளர்த்த பிள்ளை

    ReplyDelete
  2. Using/exploring Cricinfo experience!

    ReplyDelete
  3. அடுத்து, மதுரை பாண்டிய வேளாளர் தெருவின் மாரியாத்தா கொண்டாட்டம் மற்றும் அத்தெருவின் தமிழ் இலக்கிய விழாவின் தொன்மை குறித்து எப்போது எழுத போகிறீர்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  4. திரு.பத்ரி
    உலோகம் மற்றும் கிரிக்கெட் வரலாறு ஆகிய இரண்டு புத்த்கங்களும் உங்களின் தி.நகர் கடையில் இன்று கிடைக்குமா?

    ReplyDelete
  5. கார்த்திக்: இந்தப் புத்தகங்கள் இன்று கிடைக்காவிட்டாலும் நாளை முதல் கிடைக்கலாம். இன்றுதான் உலகக்கோப்பை ஒரு பிரதி அலுவலகம் வந்தது. பைண்டிங்கிலிருந்து இப்போதுதான் வெளியே வர ஆரம்பித்திருக்கும்.

    ReplyDelete
  6. கண்ணன்: அருமையான யோசனை. எழுத நீங்கள் தயாரா?

    ReplyDelete
  7. //அடுத்து, மதுரை பாண்டிய வேளாளர் தெருவின் மாரியாத்தா கொண்டாட்டம் மற்றும் அத்தெருவின் தமிழ் இலக்கிய விழாவின் தொன்மை குறித்து எப்போது எழுத போகிறீர்கள் என்று ஆவலோடு காத்திருக்கிறேன்.//

    Badri said...
    //கண்ணன்: அருமையான யோசனை. எழுத நீங்கள் தயாரா?//

    உங்கள் ஆஸ்தான எழுத்தாளர் பாரா,வை இவ்வளவு சுலபமாக கழட்டிவிடுவீர்கள் என்பது அவருக்கு தெரியுமோ, தெரியாதோ!. என்ன ஆயிற்று உங்களின் மற்ற எழுத்தாளர்களுக்கு.

    ReplyDelete
  8. Indiaplaza.in is selling book on Dhoni just for Re.1/-. How is that feasible?

    ReplyDelete