சுதேசமித்திரனின் காக்டெய்ல். முடிக்கவில்லை. எடுத்தால் கீழே வைக்க முடியாது! ஆனால் நான் பாதியில் படித்துக்கொண்டிருக்கும்போது என் மனைவி அதைப் பிடுங்கிக் கொண்டதால் மீதியை பின்னர்தான் படிக்க வேண்டும். அசாதாரணமான நடை. மையமில்லாத கதை(யே இல்லாத? கதை) சொல்லல். எல்லாம் குடியைப் பற்றியதா இல்லை குடிகாரன் பாசுவைப் பற்றியதா? எழுத்தாளரின் சுய கதையா இந்தப் புத்தகம்? முழு விமர்சனம் பின்னர். யுனைடட் ரைட்டர்ஸ் பதிப்பு.
நக்கீரன் கோபாலின் சேலஞ்ச். காதில் பூ சுற்றுகிறாரா? இல்லை அத்தனையும் நிஜமாகவே நடந்ததா? ஜெயலலிதாவும் அதிமுக குண்டர்களும் கோபாலைக் கொலை செய்ய 20 முறையாவது முயற்சி செய்திருப்பார்கள் இந்தப் புத்தகத்தில் (ஜெயலலிதாவின் முதல் ஆட்சியின்போது). அதைத்தவிர சில நிஜமான கொலைகளை போலீஸ் முதற்கொண்டு செய்துள்ளது என்கிறார்.
எத்தனையோ கஷ்டங்களுக்கிடையில் அடுத்தடுத்த இதழ்களைத் தான் எப்படிக் கொண்டுவந்தேன் என்பதைப் பக்கம் பக்கமாக எழுதித் தள்ளுகிறார். ஒருவகையில் அவர் மீது பரிதாபமும், இன்னொரு வகையில் (இதெல்லாம் உண்மையாக இருந்தால்!) ஏன் இன்னமும் ஸ்மார்ட்டாக நடந்துகொண்டிருக்கக் கூடாது என்றும் தோன்றுகிறது. இந்தப் புத்தகத்தைப் பற்றியும் விரிவாக எழுத வேண்டும். நக்கீரன் சொந்தப் பதிப்பு.
அப்புறம் ஐன்ஸ்டைன் இயற்பியல் கண்டுபிடிப்புகள் பற்றிய ஒரு (ஆங்கிலப்) புத்தகம். (ஆனால் அதைப்பற்றி எழுதப்போவதில்லை. அந்த சமாச்சாரத்துக்கெல்லாம் வெங்கட் பதிவுக்குப் போங்கள்!)
ஆன்மீகத்திற்கும் கவிதைக்கும் என்ன தொடர்பு?
17 hours ago
No comments:
Post a Comment