அமெரிக்கா அதிபர் ஜார்ஜ் புஷ், தன் குழுவிலேயே அதிகமான போர்வெறி கொண்ட கொடுமையான மனிதர் பால் உல்ஃபோவிட்ஸை உலக வங்கியின் தலைவராக நியமித்துள்ளார்.
இதைப் பிற நாடுகள் கடுமையாக எதிர்க்க வேண்டும். உலக வங்கியின் இயக்குனர்கள் இந்த நியமனத்தை எதிர்த்து, வேறு யாரையாவது நியமிக்கச் சொல்ல வேண்டும்.
உலக வங்கியின் தலைவரை அமெரிக்க அதிபர் நியமிப்பது என்பதே அபத்தமாக இருக்கிறது.
பால் உல்ஃபோவிட்ஸ் தன் வாழ்க்கையில் அதிகமாக சாதித்திருக்கலாம். ஆனால் நமக்கெல்லாம் தெரிய வருவது ஈராக் தொடர்பான அவரது சத்தங்கள் மட்டுமே. உலக வங்கியின் மீது இடதுசாரிகளுக்கும், உலகமயமாதலை எதிர்ப்பவர்களுக்கும் எப்பொழுதுமே நல்ல அபிப்ராயங்கள் இருந்ததில்லை. இப்பொழுது அத்துடன் இன்னும் பலரையும் சேர்த்துக் கொள்ளலாம்.
உல்ஃபோவிட்ஸ் தலைமையிடத்துக்கு வந்தால் உலக வங்கியின் பணத்தை வைத்துக்கொண்டு அமெரிக்காவுக்கு வால் பிடிப்பவர்களுக்கு மட்டும்தான் பணம் தருவேன் என்று நிச்சயமாக மிரட்டுவார். பிற நாடுகள் மீதும், பிற கலாசாரங்கள் மீதும் உல்ஃபோவிட்ஸுக்கு சிறிது கூட மரியாதை இருந்ததில்லை. இவரது எழுத்துக்கள் Project for the New American Century என்னும் இணையத்தளத்தில் இருக்கின்றன. (கூகிள் தேடுதல் மூலம் பெறலாம்.)
போர்வெறியர் மட்டுமல்ல, உல்ஃபோவிட்ஸ் நியோ-கன்சர்வேடிவ்களின் மோசமான பொருளாதாரக் கொள்கைகளையும் சிறு நாடுகள் மீது விதிக்க சற்றும் தயங்கமாட்டார். அமெரிக்காவின் நலன் மட்டும்தான் தன் குறிக்கோள் என்பதைத் தவிர வாழ்நாளில் உல்ஃபோவிட்ஸ் உருப்படியாக பிற நாடுகளைப் பற்றி யோசித்தது கூடக் கிடையாது. சுனாமிக்குப் பிறகு இந்தோனேஷியா மீது பறந்து சென்று அங்கு நிகழ்ந்த சேதங்களுக்கு வருத்தம் தெரிவித்தாராம். அது ஒன்றுதான் அவரது ஆதரவாளர்களால் சொல்லப்படக்கூடியதாக உள்ளது!
எதிர்ப்புகளை மீறி உலக வங்கியின் தலைவராக இந்த மனிதர் வந்தால் உலக வங்கிக்கு மாற்றாக மற்றுமொரு நிதி நிறுவனத்தை உருவாக்க பிற நாடுகள் முயற்சி செய்யவேண்டும். அது ஒன்றின் மூலம்தான் சிறு நாடுகள் உருப்படியான பயனைப் பெற முடியும்.
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
2 hours ago
I heard Wolfowitz's name is not being considered because of concerns expressed by political leaders from almost all geographies.
ReplyDeleteera.mu
முருகன்: உலக வங்கியின் இணையத்தளத்தில் இப்படித்தான் சொல்கிறார்கள்:
ReplyDelete"The World Bank's Board has received a nomination from the United States for the Presidency of the Bank of Dr. Paul D. Wolfowitz, U.S. Deputy Secretary of Defense. The Executive Directors of the Board, who are charged under the Bank's Articles of Agreement with the selection of the Bank's President, are in the process of consultations with the member countries they represent. An official announcement of the outcome of the deliberations and actions of the Executive Directors will be made as soon as a decision has been reached."
பார்க்கலாம் - என்ன நடக்கிறது என்று.
ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபனத்தின் செய்தித் தகவலில் இருந்து பெற்ற சற்றே அதிகப்படியான தகவல்:
ReplyDelete"Traditionally, the United States chooses the head of the World Bank and Europe picks the chief of the International Monetary Fund.
It's rare for the selections to be vetoed by the broader membership of the bodies, and so Paul Wolfowitz is likely to pass the nomination process. But that doesn't mean his appointment will be without controversy."
முதலில் இந்த "tradition"ஐ மாற்ற வேண்டும்.
பத்ரி,
ReplyDeleteஅமெரிக்கா ஜனாதிபதிகள் போரின் போது தங்களுக்கு உதவிய அறிவுஜீவிகளுக்கு இது போல ரொட்டித் துண்டுகளை வீசுவது வழக்கமானதுதான். வியட்நாம் போரில் துணைநின்ற ராபர்ட் மெக் நமராவை உலக வங்கித் தலைவராக்கினார் லிண்டன் ஜான்சன்.
மார்ச் முதல் வாரத்தில் அமெரிக்காவின் ஃபைனாஷியல் டைம்ஸ், உல்பொவிட்ஸ் உலக வங்கியின் தலைவராகக் கூடும் என்று செய்தி வெளியிட்டது. ஆனால் இரு தினங்களுக்குள்ளாகவே அவருக்கு பதில் ஹுயூலட் பாக்கர்ட்டின் முன்னாள் CEO கார்லி ஃபியோரினாவின் பெயர் பரிசீலிக்கப்படுவதாக வால் ஸ்ட்ரீட் ஜெர்னல் எழுதியிருந்தது. பெண்டகனை விட்டு அவரை வேறிடத்திற்கு அனுப்பும் உத்தேசம் இல்லை என்று பெண்டகன் செய்தித் தொடர்பாளரை மேற்கோள் காட்டி எழுதுகிறது வால் ஸ்ட்ரீட்.
உல்போவிட்ஸ்க்குப் பதிலாகப் பரிசீலிக்கப்படும் இந்தப் பெண்மணியும் சர்ச்சைக்குரிய நபர்தான்.அரசியல் சர்ச்சைக்குள்ளாகமல் இருந்திருக்கலாம். ஆனால் HP காம்பக்கை வாங்கிய விவகாரத்தில் நிறைய சர்ச்சை எழுந்ததை பிசினஸ் பத்திரிகைகளில் படித்திருக்கலாம்.
இதற்கிடையில் பிப்ரவரி 25ம் தேதியிட்ட லாஸ் ஏஞ்சலிலஸ் டைம்ஸ் போனோ என்ற ராக நட்சத்திரத்தின் பெயரை முன் மொழிந்து தலையங்கம் எழுதியிருக்கிறது. சீரியசாகவே பேசுகிறார்களா அல்லது கிண்டலா என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.
மாலன்
நேற்று NPRல் இதுபற்றி செய்தியிலும், விவாதங்களிலும் விரிவாக பேசப்பட்டது. சுட்டிகள் இதோ:
ReplyDeletehttp://www.npr.org/templates/story/story.php?storyId=4537475
http://www.npr.org/templates/story/story.php?storyId=4537918
http://www.npr.org/templates/story/story.php?storyId=4537570
http://www.npr.org/templates/story/story.php?storyId=4537718
பத்ரிக்கு
ReplyDeleteவணக்கம். உலக வங்கிக்கு மாறாக மற்றோரு மாபெரும் நிதி நிறுவனத்தை நிறுவ உருவாக்க முயற்சி செய்ய வேண்டும்" அது நடைமுறையில் சாத்தியமா? அதற்கு உலக நாடுகளின் ஆதரவை திரட்டுவது சுலபமா? ஓய்வாக உள்ள பொழுது இது பற்றி எழுதுங்கள். நன்றி.மயிலாடுதுறை சிவா...
சிவா: உலக வங்கிக்கு மாற்றாக அதேபோன்று பெரிய நிதி நிறுவனத்தை உருவாக்குவது எளிதானதல்ல. நேரம் பிடிக்கும். இன்னம் 50 வருடங்கள் ஆகலாம். ஆனால் மாற்று நிறுவனம் ஒன்று வேண்டும் என்ற காரணத்துக்காகவே மற்றுமொரு நிறுவனத்தை உருவாக்க வேண்டும்.
ReplyDeleteஉலக வங்கி பல ஆப்பிரிக்க நாடுகளுக்கு 30-40 மில்லியன் டாலர்கள்தான் பல நேரங்களில் கடன் கொடுக்கிறது. எனவே 250 மில்லியன் டாலர் அளவில் கடன் கொடுக்கக்கூடிய விதமாக ஒரு டெவலப்மெண்ட் வங்கியை உருவாக்க முடியும். இந்தியா போன்ற சில வளரும் நாடுகளின் முன்னணியில் இருக்கும் நாடுகள் இதைச் செய்யலாம். இத்துடன் ஐரோப்பிய நாடுகள் பலவும் சேர்ந்து கொள்ள வேண்டும்.
கடனுதவி செய்யும்போது அந்த நாட்டின் கையை முறுக்காமல் அந்தத் திட்டத்தினை மட்டும் மனதில் கொண்டு, மேலும் கடன் வாங்கிய நாட்டால் கடனைத் திருப்பிக் கொடுக்க முடியுமா என்பதை மட்டும் கவனித்துக் கடன் கொடுக்க வேண்டும். அதை விடுத்து பொய்யாக democracy, transparency என்று திரித்துப் பேசி தனது சொந்த அரசியல் கருத்துகளைத் திணிப்பது, அமெரிக்கா எதைச் செய்தாலும் அது சரி என்பது போன்ற கெடுதல்கள் இல்லாது, பிற நாடுகளின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு நடந்து கொள்ளும் நிறுவனமே வளரும் நாடுகளுக்குத் தேவை.
பத்ரி,
ReplyDeleteகீழ் காணும் சுட்டியில் உள்ள ஒரு செய்தி. http://www.deccanherald.com/deccanherald/mar162005/i6.asp
>>>>
the BMP has started its work, with the World Bank providing Rs 3.2 crore for the two-kilometre stretch from Viveknagar till Sarjapur Road.
>>>
பெங்களூரின் அடையாறு எனப்படும் பகுதியில் உள்ள ஒரு சுமார் 2 கி,மீ சாலை கடந்த ஒரு வருடமாக மிகவும் (x N) மோசமாக இருந்துவருவதை சுட்டிக்காட்டும் ஒரு செய்தி. இந்த சாலையை சரி செய்ய பெங்களூர் மாநகராட்சிக்கு உலக வங்கியின் சில கோடி பணம் வந்த பிறகுதான் வேலையை ஆரம்பிப்பார்களாம். என்ன தன்னிறைவற்ற தன்மை இது ? இதற்கு உலக வங்கி தயவு எதற்கு ? இது போல அங்கங்கே கட்டணக் கழிப்பிடம் கட்டுவதற்கும் உலக வங்கியிடம் கடன் வாங்கி, அவர்கள் டிக்டேட் செய்வதை கேட்பதையே கம்யூனிஸ்ட் கட்சிகள் அவ்வப்போது மேடையில் முழங்கி வருகிறது. என்னமோ போங்க..!
- அலெக்ஸ்