தனியார்மயமாக்கலை எதிர்ப்போருக்கு ஒரு நற்செய்தி!
நவம்பர் 29, 2002 முதல் நவம்பர் 28, 2003 வரை தமிழகத்தில் விற்பனையான சாராயம் (IMFL) = ரூ. 3,877 கோடிகள். இந்த விற்பனை முழுவதுமாக தனியார் சில்லறை விற்பனைக் கடைகள் மூலம் நடந்தது.
தனியார் கடைகளின் குறைந்த செயல்திறனைக் கண்டித்து தமிழக அரசு தானே இந்த விற்பனையை மேற்கொள்ள முடிவு செய்தது :-) நவம்பர் 29, 2003 முதல் நவம்பர் 28, 2004 வரையிலான தமிழக அரசின் TASMAC விற்பனைக் கடைகளின் சாராய விற்பனை ரூ. 5,441 கோடி ஆகியுள்ளது. அதாவது 40.34% அதிக விற்பனை.
அதேபோல ஏப்ரல் 2003-ஜனவரி 2004-ல் (9 மாதங்கள்) சாராய விற்பனை ரூ. 3,421 கோடிகள்.
ஏப்ரல் 2004-ஜனவரி 2005 சாராய விற்பனை ரூ. 4,838 கோடிகள்.
இவ்வாறு தமிழக அரசின் சாதனையை பொதுப்பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று தமிழக சட்டசபையில் விளக்கினார்.
[இந்த விஷயம் ஏன் விவாதத்துக்கு வந்தது என்றால், திமுக உறுப்பினர்கள் டாஸ்மாக் சாராய விற்பனையை எடுத்துக்கொண்டதால் அரசுக்குக் கிடைத்த ஆயத்தீர்வை (excise) குறைந்துள்ளது என்று குற்றம் சாட்டினார்களாம். அதற்கு பதிலாக அமைச்சர் அதெல்லாம் இல்லை, ஆயத்தீர்வையும் அதிகம் வந்துள்ளது, மொத்த விற்பனையுமே கூரையைப் பிய்த்துக் கொண்டு சென்றுள்ளது என்றாராம்.]
என் கருத்து: இந்தியா முழுமைக்குமான சாராய விற்பனையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அதற்கான உரிமங்களைப் பெற பிற மாநிலங்களில் விண்ணப்பிக்க வேண்டும். TASMAC-ஐ ஒரு தனி கம்பெனியாக நிறுவி சாராய சூப்பர் ஸ்டாராக ஆக்க வேண்டும். தமிழகம் தவிர பிற மாநிலங்களில் ஏகபோக உரிமை இருக்காது. ஆனாலும் என்ன... TASMAC நிச்சயம் நல்ல விற்பனையைக் காண்பிக்க முடியும் என்றே தோன்றுகிறது.
அரசு நிறுவனம் தனியாரை விட அதிக விற்பனையைக் காண்பிக்கும் ஒரு துறையை அப்படியே வீணடித்துவிடக்கூடாது.
இந்நிலையில் பால் விற்பனை செய்யும் ஆவின் எப்பொழுதும் போல சொதப்பி நஷ்டத்தில் உள்ளது என்றே நினைக்கிறேன். எனவே பால் விற்பனைக்கு பதில் ஆவின் பூத்களையும் சாராயக் கடைகளாக மாற்றலாம் என்றும் அரசு யோசனை செய்யலாம்.
தகவல்: தி ஹிந்து
வெண்முரசு 75, புதுவையில் நான்
6 hours ago
நண்பர் பத்ரியின் நக்கலுக்கு அளவு இல்லாமல் போய்விட்டது. 'ஆவின் பூத்'துகளை சாராயக் கடையாக மாற்றலாம் என்ற யோசனையைத்தான் சொல்கிறேன். பத்ரி எழுப்பியுள்ள பிரச்னைக் குறித்து உருப்படியான கருத்து சொல்ல இன்னும் விரிவான ஆய்வு தேவை. இப்போதைக்கு நேரம் இன்மையால் பிறகு கட்டாயம் இங்கே வருகிறேன். அதற்குள் எந்த புண்ணியவானாவது அதைச் செய்து வைத்தால் மகிழ்ச்சிதான். - சந்திரன்
ReplyDeleteIAS உட்பட அரசு அதிகாரிகளை டாஸ்மாக் விற்பனையாளராக்கலாம் .
ReplyDelete""ஆவின் பூத்களையும் சாராயக் கடைகளாக மாற்றலாம் என்றும் அரசு யோசனை செய்யலாம்.""
ReplyDeleteமிகச் சிறந்த இந்தியக் குடிமகன்களை உருவாக்க இதுவே உகந்த வழி.
இவ்வளவுதானே. கேரளத்தைப் பாருங்கள்.
ReplyDeleteநேற்றைய (4.3.2005) மாத்ருபூமி முதல் பக்கப் பெட்டிச் செய்தி -
கடந்த ஆண்டு (2004) கணக்கின்படி ஒரு மலையாளி வருடத்துக்குச் சராசரி 720 ரூபாய்க்குக் குடித்திருக்கிறார். 2001-ம் ஆண்டில் 420 ரூபாயாக இருந்தது இந்தச் செலவு.
2004-ல் கேரளத்தில் ஒரு நபர் ஆண்டில் சராசரி 3.11 லிட்டர் குடித்திருக்கிறார். 2001-ல் குடித்ததோ 2.04 லிட்டர் மட்டும்தான்.
டிசம்பர் 15, 2004 முதல், ஜனவரி 5, 2005 வரெ 7.30 லட்சம் கேஸ் மது செலவானது.
மாநிலத்தில் 351 அய்.எம்.எ·ப்.எல் மதுக்கடைகளும், 512 பார்களும், 4362 கள்ளுஷாப்புகளும் உண்டு.
மந்திரி வைக்கம் புருஷோத்தமன் கேரளச் சட்டமன்றத்தில் அளித்த புள்ளிவிவரங்கள் இவை.
இரா.மு
வாழ்க பாரதம் !!
ReplyDeleteமிகவும் கண்டிக்கத்தக்க 'இந்த'த் தொழிலை அரசு உடனே நிறுத்தவேண்டும். இது தொடர்பாக நான் முன்பு எழுதிய கட்டுரையின் சுட்டி இங்கே: http://annakannan-katturaigal.blogspot.com/2004_03_03_annakannan-katturaigal_archive.html
ReplyDelete