சென்ற வருடம் கிழக்கு பதிப்பகத்துக்காக நான் ஈடுபட்டு உருவாக்கிய புத்தகங்கள் மிகவும் குறைவு. "அள்ள அள்ளப் பணம்", மூன்று கிரிக்கெட் புத்தகங்கள் - அவ்வளவுதான்.
ஆனால் இந்த வருடம், கிரிக்கின்ஃபோ வேலையை விட்டுவிட்டு முழுவதுமாக கிழக்கில் ஈடுபட்டேன். என் பிரதான வேலை புத்தகங்களைத் தயார் செய்வதல்ல. ஆனாலும் ஈடுபாட்டின் காரணமாக சில புத்தகங்களில் வேலை செய்தேன். வரவிருக்கும் சென்னை புத்தகக் கண்காட்சி நேரத்தில் (6-16 ஜனவரி 2006, காயிதே மில்லத் கல்லூரி, கிழக்கு ஸ்டால் எண் D-60) அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
மூன்று விரல்
இரா.முருகன் எழுதிய நாவல். குமுதம்.காம் இணைய இதழுக்காக எழுதப்பட்ட தொடர்கதை. ஏற்கெனவே புத்தகமாக சபரி பதிப்பகம் மூலம் வெளிவந்தது. இதுதான் நான் வாங்கிப் படித்த முருகனின் முதல் புத்தகம். அவரது சிறுகதைகளை, கவிதைகளை, குறுநாவல்களை அதுவரையில் படித்திருக்கவில்லை நான். இரா.முருகன் யார் என்றே எனக்குத் தெரியாத நேரம் அது. நவீன தமிழ் எழுத்தாளர்கள் பற்றி அறிந்திருக்காத நேரம். ஜூலை 15, 2003-ல் நான் இந்தப் புத்தகம் பற்றி எழுதிய பதிவு இங்கே. அப்பொழுது கிழக்கு பதிப்பகம் ஆரம்பிக்கப்படவில்லை. கிழக்கு ஆரம்பிப்பதற்கான எண்ணம் கூட அப்பொழுது உருவாகவில்லை.
முதல் பதிப்பில் பரவலாக வெளியே தெரியாத புத்தகம் இது. இப்பொழுது இரண்டாம் பதிப்பில் பலரையும் சென்றடையும் என்று நம்புகிறேன். இந்த நாவல் முதலில் எழுதப்பட்ட நேரத்தைவிட இப்பொழுது மென்பொருள் எஞ்சினியர்கள் அதிகம். அவர்களது வாழ்க்கை சரியாக இதுவரையில் எங்குமே பதிவாகவில்லை.
மென்பொருள் வல்லுனர்களின் வாழ்க்கையை சுதர்சன் என்னும் மாயவரத்து இளைஞனின் பார்வையில் சொல்லும் கதை இது. சுதர்சன் லட்சக்கணக்கான மென்பொருள் புரோகிராமர்களின் வகைமாதிரி. எதைப் படித்தால் வேலை கிடைக்கும், உள்ள வேலையை எப்படித் தக்கவைத்துக் கொள்ளலாம், வேறு எந்த மொழியை/paradigm-ஐக் கற்று அடுத்த hot-topicக்குத் தாவலாம் என்று யோசிக்கும் கூட்டத்தின் பிரதிநிதி. இரவு பகல் பாராது உழைக்க வேண்டிய கட்டாயம். ஊர் விட்டு ஊர் சென்று, நாடு விட்டு நாடு சென்று அங்கு முகத்தில் அடிக்கும் அந்நிய கலாசாரத்தின் ஈர்ப்புக்கு மயங்கி ஆனால் தன் பின்னணியை விட்டுக்கொடுக்க முடியாத திரிசங்கு சொர்க்கத்தில் மாட்டியிருக்கும் மனிதன்.
தன் வேலைக்கு அப்பால் சொந்த வாழ்க்கை என்று ஒன்று உள்ளது என்பதையே எப்பொழுதாவதுதான் நினைப்பவன். ஆனால் அந்த வாழ்க்கையும் அவனுக்கு தீராத பிரச்னைகளை மட்டுமேதான் கொண்டுவருகிறது. பெற்றோரின் உடல் நலக் குறைவு, தந்தை பொய்க் குற்றச்சாட்டால் ஜெயில் செல்லவேண்டிய நிலைமை, தன் மீது காதல் கொண்ட பெண், ஆனால் தான் காதலிக்காத பெண் - உருவாக்கும் நெருக்கடிகள், எங்கோ லண்டனில் பார்த்துப் பழகிய பெண்ணின் மீதான ஈர்ப்பு தன்மீது உருவாக்கும் சுமை, என்று இன்னமும் பல சுற்றியிருக்கும் பெண்கள் உருவாக்கும் சூறாவளிக்குள் மாட்டுகிறான். முடிவாக 9/11 இரட்டை கோபுரத் தகர்வும் அதையொட்டிச் சரிந்த மென்பொருள் துறையும் இழக்கப்பட்ட வேலை வாய்ப்புகளும் அவனை எங்கேயோ கொண்டு சேர்க்கின்றன.
மென்பொருள் துறையைச் சார்ந்தவர்கள் அனைவருமே நிச்சயமாக இந்தக் கதையுடன் ஒன்றிப்போகமுடியும்.
எனக்கு மிகவும் பிடித்த முருகனின் படைப்பு இது. அவரது அரசூர் வம்சம் நாவலுக்கு முன்னர் எழுதப்பட்டது.
அறிவியக்கமே நவீனநாட்டின் மையம்
9 hours ago
மூன்று விரல் நாவல் தொடக்கத்தில் குமுதம்.காம் இல் படித்தேன் சுவாரசியமான ஆரம்பம் அந்த நாவல், பிறகு ஏனோ தொடர்ந்து படிக்கவில்லை....
ReplyDeleteவாழ்த்துகள் பத்ரி....
//வாழ்த்துகள் பத்ரி.... //
ReplyDeleteகண்டிக்கிறேன். நல்ல பதிவு. நன்றி பத்ரி என்றல்லவா கூறியிருக்கவேண்டும்?
பகவான் பிரும்மமகரிஷி
குழலி, குமுதமே அனைத்து கதைகளையும் நிறுத்திவிட்டது. பா.ரா எழுதிக் கொண்டிருந்த "சுண்டெலி" எனக்கு மிகப் பிடித்திருந்தது. அதை அவர் வேறு எங்காவதாவது எழுதியிருக்கலாம். அதை புத்தகமாய் போடவில்லையா பத்ரி ?
ReplyDeleteஅடுத்து நாகூர்ரூமியின் "கப்பலுக்குப் போன மச்சான்" அதுவும் மிக நன்றாய் இருந்தது. அது நாவலாய் வெளிவந்தது என்று நினைக்கிறேன். ஆர். வெங்கடேஷ் . துளசி என்ற பெயரில் எழுதிய "இருவர்", இதுவும் புத்தகமாய் வந்துள்ளது. பத்ரி சொன்னதுப் போல
தமிழ் இணைய அறிமுகத்துக்கு பிறகே இராமு உட்பட இவர்கள் படைப்புகள் அறிமுகமாயின.
நான் இரசித்த நல்ல நாவல்.
ReplyDeleteAre the iyengar glitches fixed up in this newer edition ?
ReplyDeleteMoonru viral is the first and may be only novel that revolves around the issues both personal and official by a typical IT guy. The plot for the novel dates back to 93 in a short story by name Silicon Vasal. There Ira Mu would describe a programmer who slogs day and night and would gone mad and jump out of the window. One of the Murugan's classic touching the psychological issue that programmers are facing. He wrote that in 93 and that short story appeared in India Today Ilakkia Malar. Since that short story Murugan's works are always close to my heart. Thanks for bringing it's second edition.
ReplyDeleteஅந்த இந்தியா டுடே இலக்கிய மலர் + அந்த கதையின் தாக்கம் என்னிடம் இன்னமும் இருக்கிறது. அப்பொழுது இரா.முருகன் இளைஞர், நம்பிக்கை தரும் எழுத்தாளர் என்று சுஜாதா எழுதியிருந்ததாக நினைவு.
ReplyDeleteகுறிப்பு 1: commaவை "அப்பொழுது" என்பதன் பிறகு போட்டிருக்க வேண்டும்... மிஸ்ஸாகிவிட்டது ;-)
குறிப்பு 2: பிரும்மமகரிஷி + goinchami-8A வழியில் :: "நல்ல பதிவு . நன்றி பத்ரி.." ;-)))
நானும் குமுதம் கதைகள் பகுதியில் மூன்று விரல் படித்துவந்தேன்.
ReplyDeleteதிடீர்னு நின்னு போச்சு.
இப்பப் புத்தகமா வந்துருக்கறது மகிழ்ச்சி.
கட்டாயம் வாங்கணும்.