இந்திய விமான சேவையில் புரட்சி நடக்கும் நேரம் இது. பல புதிய விமான நிறுவனங்கள் உரிமம் பெற்று சேவையை ஆரம்பித்துள்ளனர். 1993-1995-ல் கூட இப்படித்தான் இருந்தது. பல புதிய நிறுவனங்கள் தோன்றின. ஜெட் ஏர்வேய்ஸ்கூட அப்பொழுதுதான் (1993-ல்) ஆரம்பித்தது. மோடிலுஃப்ட், NEPC, ஈஸ்ட் வெஸ்ட், தமானியா போன்ற, இப்பொழுது காணாமல் போயுள்ள, சில நிறுவனங்களும் அந்த நேரத்தில்தான் ஆரம்பித்தன. ஏர் சஹாரா ஆரம்பித்ததும் 1993-ல்தான்!
ஜெட் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் நரேஷ் கோயலுக்கு எங்கிருந்து ஒரு விமான நிறுவனத்தை நடத்தும் அளவுக்குப் பணம் வந்தது என்று பல கேள்விகள் எழுந்தன. பின்னணியில் சில நிழலுலக ஆசாமிகள் இருப்பார்களோ என்று பேசப்பட்டது. ஆனால் இப்பொழுது அந்தக் கேள்விகள் எல்லாமே காணாமல் போய்விட்டன.
சஹாரா இந்தியா பரிவார் - ஏர் சஹாராவின் தாய் நிறுவனம் - 1978-ல் வெறும் ரூ. 2,000 முதலீட்டில் ஆரம்பிக்கப்பட்டது என்று பெருமையாகச் சொல்கிறார்கள். இந்த நிறுவனத்தைப் பற்றி அவ்வளவு உயர்வாக நான் கேள்விப்பட்டதில்லை. உத்தரப் பிரதேசத்தின் பல கோடி சிறு முதலீட்டாளர்களின் சீட்டுத் தொகையை அடிப்படையாகக் கொண்டு வளர்ந்த நிறுவனம் என்று கேள்விப்பட்டுள்ளேன். இவர்கள் பல தொழில் துறைகளில் முதலீடு செய்துள்ளனர். விமானச் சேவை ஒன்று. தொலைக்காட்சி, செய்தித்தாள் போன்ற மீடியா துறை ஒன்று. இந்தியாவெங்கும் பல நகரங்களில் சாடிலைட் குடியிருப்புகள் கட்டுவதாக ஒரு மாபெரும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மியூச்சுவல் ஃபண்ட் துறையில் நுழைந்துள்ளனர். சஹாரா இணையத்தளத்துக்குச் சென்றால் தாம் என்னென்னவெல்லாமோ செய்வதாகச் சொல்கிறார்கள்.
சஹாரா பற்றி இந்தியர்கள் அதிகமாகத் தெரிந்துகொண்டது அவர்கள் இந்திய கிரிக்கெட் வீரர்களின் சட்டையை ஸ்பான்சர் செய்தபோதுதான்.
-*-
1997க்குப் பிறகே இந்தியன் ஏர்லைன்ஸை அடுத்து ஜெட், சஹாரா ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே உள்நாட்டு விமானச் சேவையை அளித்து வந்தன. சிறிது சிறிதாக ஜெட், இந்தியன் ஏர்லைன்ஸைப் பின்னுக்குத் தள்ளி இந்தியாவின் முன்னணி விமான நிறுவனமாக மாறியது. சிறந்த சேவையை நாடும் வாடிக்கையாளர்கள் ஜெட் ஏர்வேய்ஸை மட்டுமே பயன்படுத்தினர். இந்தியன் ஏர்லைன்ஸின் கஸ்டமர் சர்வீஸ் மோசமாக இருந்தது. ஆனால் ஜெட்டின் சேவையின் நம்பகத்தன்மை அதிகமானதாக இருந்தது.
இந்திய அரசு வெளிநாட்டு விமான சேவையையிலும் தனியாரை அனுமதிக்கத் தொடங்கியபோது சஹாரா, ஜெட் ஆகிய இருவருக்கும் அனுமதி கிடைத்தது.
இரண்டு வருடத்துக்கு முன்னர் இந்திய அரசு மீண்டும் தனியார் நிறுவனங்களை உள்நாட்டு விமானச் சேவையை வழங்க அழைத்தது. ஏர் டெக்கான் அப்பொழுது குறைந்த விலைச் சேவையை வழங்க முன்வந்தது. No-frills விமானச் சேவை ஐரோப்பாவில் பிரசித்தம். இந்தியாவில் ஏர் டெக்கான் இந்தப் புரட்சியைக் கொண்டுவந்தது. பல ஐரோப்பிய நகரங்களுக்கு இடையேயான விமானச் சேவைக் கட்டணம் மயக்கத்தை வரவழைக்கும். 40, 50 பவுண்டுகளுக்கு பிரிட்டனின் ஒரு நகரத்திலிருந்து கிரீஸ் நாட்டின் ஒரு நகரத்துக்குப் பறந்து செல்லலாம். ஆனால் இந்த இரண்டு விமான நிலையங்களுமே முக்கியமான நகரங்களாக இருக்காது. அங்கிருந்து பஸ்/ரயில் பிடித்து வெளியே செல்வதற்கு பறப்பதுக்கு ஆகும் செலவைவிட அதிகம் ஆகும். இது நமக்கு ஒன்றும் புதிதல்ல. திருச்சியிலிருந்து சென்னை வர ரயிலில் ரூ. 100ஐவிடக் குறைவு. ஆனால் எழும்பூரிலிருந்து நங்கநல்லூர் ஆட்டோவில் செல்ல அதற்குமேல் ஆகிவிடும்.
ஏர் டெக்கான்தான் முதன்முதலில் விமானக் கட்டணத்தை வெகுவாகக் குறைத்த நிறுவனம். அவர்களது சேவையில் பல குறைபாடுகள் இருந்தாலும் விமானங்கள் கிளம்ப தாமதமானாலும் பலமுறை விமானப் பயணமே ரத்து செய்யப்பட்டாலும் பலரும் ஏர் டெக்கான் சேவையை விரும்பி ஏற்கிறார்கள். அதற்குக் காரணம் விலை குறைவாக இருப்பதே. ஜெட் ஏர்வேய்ஸ் தன் சேவையை பிரீமியம் சேவையாகவே கருதினாலும் ஏர் டெக்கான் வந்தபிறகு குறைந்தவிலை கூப்பன்களை வழங்குகிறார்கள். ஆறு கூப்பன்கள் ரூ. 26,000க்குக் கிடைக்கிறது. அதாவது ஒரு டிக்கெட் ரூ. 4,000 - இதில் எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம். அதேபோல check fares என்ற வகையில் ஒரே பாதைக்கு எப்பொழுது டிக்கெட் எடுக்கிறோமோ அதைப் பொருத்து விலை மாறும்.
இதுபோன்ற வசதிகள் ஏர் டெக்கான் நுழைந்ததால் மட்டுமே நமக்குக் கிடைத்துள்ளன. இப்பொழுது ஏர் டெக்கானை அடுத்து ஸ்பைஸ் ஜெட், கிங்ஃபிஷர், கோ - ஏர், பாரமவுண்ட் என்று மேலும் சில விமானச் சேவைகள் வந்துள்ளன. இவை அனைத்துமே சற்றே மாறுபட்ட சேவையை அளிக்க முற்படுகின்றன. பாரமவுண்ட் தங்கள் சேவையை 'எகானமி கிளாஸ் கட்டணத்தில் பிசினஸ் கிளாஸ் சேவை' என்று வர்ணிக்கிறார்கள். கிங்ஃபிஷர் தங்கள் இருக்கைகள் அனைத்துக்கும் தொலைக்காட்சி வசதிகளைக் கொடுக்கிறார்கள். (கொச்சி - பெங்களூர் மார்க்கத்தில் இந்த மாதம் கிங்ஃபிஷர் விமானம் ஒன்றில் வந்தேன்.) கோ (Go), ஸ்பைஸ் இரண்டுமே குறைந்த கட்டண வசதி என்று விளம்பரப்படுத்துகிறார்கள்.
-*-
புதுப்புது விமானச் சேவை நிறுவனங்கள் வந்ததில் இருந்தே ஜெட்டின் லாபம் குறைந்துள்ளது; சஹாரா இன்னமும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. ஜெட்டின் லாபம் குறைய மற்றுமொரு காரணம் ஏவியேஷன் எரிபொருள் விலை அதிகரித்திருப்பது. முன்னெல்லாம் ஏவியேஷன் எரிபொருள் விலை அதிகமானால் கூசாமல் டிக்கெட் விலையை ஏற்றுவார்கள். ஆனால் இப்பொழுது அதெல்லாம் முடியாது. ஏர் டெக்கான், இன்னபிற குறைந்தவிலை விமானச் சேவை இருக்கும்வரை விலையை இஷ்டத்துக்கு ஏற்ற முடியாது.
சஹாராவின் சுப்ரோதா ராய் சில மாதங்களுக்கு முன்னர் இருந்தே ஏர் சஹாராவை விற்றுவிடத் தீர்மானித்தார். அப்பொழுது கிங்ஃபிஷர் விஜய் மால்யா ஏர் சஹாராவை $400 மில்லியன் கொடுத்து வாங்க விரும்பினார். ஆனால் சுப்ரோதா ராய் அந்த விலையை ஏற்றுக் கொள்ளவில்லை. கடைசியாக ஜெட் ஏர்வேய்ஸ் $500 மில்லியன் கொடுத்து ஏர் சஹாராவை வாங்க முடிவு செய்தது.
இந்த இணைப்பு என்னைப் பொருத்தவரை அவசியமானது. ஏர் சஹாராவால் தனியாக இயங்க முடியாது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனத்துக்கு ஒரு தலைவர் கிடையாது. சுப்ரோதா ராய் பல விஷயங்களில் கையை விட்டுவைத்துள்ளார். சமீபத்தில் அவரது உடம்பு சரியில்லை என்றும் அவர் தன் நிறுவனங்களில் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளவேண்டும் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் ஜெட் ஏர்வேய்ஸ் மார்க்கெட் லீடர். இந்திய விமானச் சந்தை பெரிதாகிக் கொண்டே வருகிறது. எனவே தாற்காலிகமாக லாபம் குறைந்தாலும் ஜெட்டின் லாபம் வரும் நாள்களில் அதிகமாகும். விற்பனையும் அதிகமாகும்.
ஜெட் - சஹாரா மோனோபொலி என்ற வரையறைக்குள் வராது. இதை விமானத்துறை அமைச்சர் பிரஃபுல் பட்டேலும் குறிப்பிட்டுள்ளார். ஏர் டெக்கான், கிங்ஃபிஷர், கோ - மூன்றும் பெரிதாக வளர வாய்ப்புகள் உள்ளன.
ஜெட்டுக்கு இந்த மெர்ஜரினால் ஒரு மிகப்பெரிய வசதி கிடைத்துள்ளது. வெளிநாட்டு விமானச் சேவை உரிமத்தைப் பெற ஒரு தனியார் விமானச்சேவை நிறுவனம் குறைந்தது ஐந்து வருடங்களாவது உள்நாட்டில் சேவை அளித்திருக்கவேண்டும். அப்படி இருந்த இரண்டு நிறுவனங்கள் ஜெட், சஹாரா மட்டுமே. அவையிரண்டும் இப்பொழுது இணையப்போகின்றன என்பதால் அடுத்த மூன்று வருடங்களுக்கு வேறெந்த இந்திய விமானச்சேவை நிறுவனத்துக்கும் வெளிநாடுகளுக்குப் பறக்கும் உரிமம் கிடைக்காது. ஏர் டெக்கான் விரும்பினால் இன்னமும் மூன்று வருடங்கள் கழித்து இந்த உரிமத்தைப் பெறமுடியும்.
இந்த மெர்ஜரை அடுத்து, இன்னமும் சில வருடங்களில் ஜெட் ஏர்வேய்ஸ் உலக அளவில் முதல் ஐந்து விமானச்சேவை நிறுவனங்களுக்குள் ஒன்றாக வர வாய்ப்புகள் உள்ளன.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
15 hours ago
இந்தியத் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் சமீபத்தில் ஏற்பட்ட மெர்ஜர்களைத் தொடர்ந்து நிகழ்ந்திருக்கும் இந்த ஒரு மெர்ஜரும் கவனிக்கப்படத்தக்கது.
ReplyDeleteஏர் சகாராவைத் தொடர்ந்து சகாரா பரிவாரத்தின் பல்வேறு வியாபார முயற்சிகளும் விற்பனைக்குத் தயாராக இருப்பதாக் ஏதோ ஒரு தளத்தில் படித்த ஞாபகம்.அடுத்து இந்த லிஸ்டில் இடம்பெறப் போவது சகாரா ஒன் தொலைக்காட்சியா அல்லது அதிக ஹைப்பை ஏற்படுத்திய ஏம்பிவேலி குடியிருப்புத் திட்டமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
இந்த முடிவுகளுக்கு சுப்ரதோ ராயின் உடல்நிலை,அவர்களது தாயகமான பாராபாங்கிங்குக்குத் திரும்புதல் என்று பல காரணங்கள் கூறப்படுகின்றன.
இதில் அனில் அம்பானி சகாரா ஒன்னை வாங்கப்போகிறாராம்.பொறுத்திருந்து பார்ப்போம்.
Try the same -http://vivasaayi.blogspot.com/2006/01/blog-post_19.html
ReplyDeleteமாணவர்களுக்கு ஜெட் ஏர்வேஸ் பயணசீட்டில் 50% தள்ளுப்படி தருகிறார்கள். ஆனால் சரியான சான்றிதழ் இருந்தால், பெரிய கெடுபிடிகள் இல்லாமல், உடனே கிடைக்கிறது.
ReplyDelete// ஏர் சஹாராவால் தனியாக இயங்க முடியாது. தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கும் அந்த நிறுவனத்துக்கு ஒரு தலைவர் கிடையாது. சுப்ரோதா ராய் பல விஷயங்களில் கையை விட்டுவைத்துள்ளார். //
ReplyDeleteAir Sahara chief is "Rono Dutta", earlier president of 'United Airlines'.
உசா, தள்ளுப்படி? உங்களை என்ன செஞ்சா தகும்? :-)
ReplyDeleteபோவட்டும், மாணவர்களுக்கு ஜெட் ஏர்வேஸிலே 50 % தள்ளுபடி? அது சரி...நானெல்லாம் இஸ்கூலில் படிக்கிற காலத்தில், சொந்த ஊருக்குப் போக, ரெயில்வே டிக்கட்டிலே கன்செஷன் தருவார்கள். அந்த இருபது முப்பது ரூபாய்க்கு, இஸ்கூல் அட்மின் அலுவலகத்திலே க்யூவிலே நிக்கணும்..ஹ¥ம்ம்ம்ம்
Air Sahara's current CEO is Rono Dutta, but the promoter/owner is Subroto Roy. There have been a few CEOs before Dutta too, most notable being UK Bose.
ReplyDeleteBy leader, I didn't mean the CEO, but the owner/promoter.
Even Jet has had a few 'foreign' CEOs, but the real driving force is Naresh Goel and the CEOs for all practical purposes have merely acted as COOs.
பிரகாசு, அது வந்து சுத்த தமிழ் முயற்சி இது :-)
ReplyDeleteசலுகை என்றுப் போட்டு இருக்க வேண்டும் இல்லையா?, வேற எந்த ஏர்வேஸில் தருகிறார்களா? இந்த ரயில் டிக்கெட்டு
"ஆட்டோகிராப்" நினைவு எனக்கும் வந்தது.