Wednesday, January 11, 2006

நேற்று நான் வாங்கிய புத்தகங்கள்

சென்னை புத்தகக் காட்சியில் நேற்று நான் வாங்கிய புத்தகங்கள்:

1. காந்தி வாழ்க்கை, மூலம் லூயி ஃபிஷர், தமிழில் தி.ஜ.ர, பழனியப்பா பிரதர்ஸ், முதல்பதிப்பு 1962, இந்தப் பதிப்பு 1990, பக்கங்கள் 744, டெமி, கெட்டி அட்டை, விலை ரூ. 90 (இது மிச்சம் மீதி இருக்கும் பழைய பிரதி. தேடினால் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. நான் வாங்கியதைப் பார்த்து வழியில் என்னிடம் கேட்டவர்களையெல்லாம் அந்தப் பக்கம் அனுப்பி வைத்தேன். அதனால் இன்று பிரதிகள் இருக்குமா என்றே சொல்ல முடியாது. புது அச்சாக்கத்தில் வந்தால் விலை ரூ. 300ஐத் தாண்டும்)

2. இந்திய தத்துவ ஞானம், கி. லக்ஷ்மணன், பழனியப்பா பிரதர்ஸ், முதல் பதிப்பு 1960, இந்தப் பதிப்பு 2005, பக்கங்கள் 440, கிரவுன், சாதா அட்டை, விலை ரூ. 84

3. கால்டுவெல் ஐயர் சரிதம், ரா.பி.சேதுப்பிள்ளை, பழனியப்பா பிரதர்ஸ், முதல் பதிப்பு 1944, இந்தப் பதிப்பு 2003, பக்கங்கள் 136, கிரவுன், சாதா அட்டை, விலை ரூ. 30

4. கம்பா நதி, வண்ணநிலவன், அன்னம், முதல் பதிப்பு 1979, இந்தப் பதிப்பு 1994, பக்கங்கள் 112, கிரவுன், சாதா அட்டை, விலை ரூ. 22

5. மொழியும் அதிகாரமும், எல். ராமமூர்த்தி, அகரம், 2005, பக்கங்கள் 192, டெமி, சாதா அட்டை, விலை ரூ. 90

6. குட்டி இளவரசன், அந்த்வான்த் செந்த் - எக்சுபெரி, தமிழில் ச.மதனகல்யாணி & வெ.ஸ்ரீராம், க்ரியா, ப்ரெஞ்ச் பதிப்பு 1946, தமிழ் முதல் பதிப்பு 1981, இந்தப் பதிப்பு 1994, பக்கங்கள் 100, கிரவுன், சாதா அட்டை, விலை ரூ. 100

7. எனது வாழ்வும் போராட்டமும், கான் அப்துல் கபார் கான், தமிழில் க.விஜயகுமார், தமிழோசை பதிப்பகம் - (My Life and Struggle by Khan Abdul Ghaffar Khan as narrated to K.B.Narang, English Translation by Helen H. Bouman - இந்தத் தமிழ் மொழியாக்கம் ஆங்கிலம் வழியாக.) பக்கங்கள் 224, டெமி, சாதா அட்டை, விலை ரூ. 100

8. காலம் 25ம் இதழ், அறிவியல் சிறப்பிதழ் (கண்டாவிலிருந்து வரும் காலாண்டிதழ்)

9. யூ ஆர் அப்பாயின்டட், 'மாஃபா' கே.பாண்டியராஜன், விகடன் பிரசுரம், பக்கங்கள் 182+, கிரவுன், விலை ரூ. 70

10. காசு மேல காசு, நாகப்பன் - புகழேந்தி, விகடன் பிரசுரம், பக்கங்கள் 252+, கிரவுன், விலை ரூ. 85

11. வந்தார்கள்.. வென்றார்கள்!, மதன், விகடன் பிரசுரம், பக்கங்கள் 188+, டபுள் கிரவுன், விலை ரூ. 95

9 comments:

  1. இது எப்படி நகைச்சுவைப் பதிவாக வறையறுக்கப்படுகிறது????

    ReplyDelete
  2. தெரியவில்லை. யாராவது வேண்டுமென்றே செய்திருக்கலாம். எப்படி மாற்றமுடியும் என்று பார்க்கிறேன்...

    ReplyDelete
  3. //குட்டி இளவரசன்//

    In which stall can I get this book? க்ரியா? How is the translation?

    Is there tamil translated work of 'Gabriel Garcia Marquez'? I am looking for tamil translation of 'Marquez's One hundred years of solitude' [oru nootraandin thanimai].

    ReplyDelete
  4. அம்மியே பறக்குதே..சின்னத் துரும்புங்க நாங்க என்ன ஆவோம்னு புரியலீங்களே.. பத்ரி, உங்களுக்குத் தெரியாம வகைப்படுத்தலை மாற்ற முடியுமா? கள்வன் பெரியவனா காப்பான் பெரியவனா போல் இருக்கிறதே..

    டாக்டர் வீட்டில் யாருக்காவது உடல்நலம் குன்றினால், வேறு யாராவது நல்ல டாக்டரைப் பார்க்கச் சொல்வார்கள் என்பது நகைச்சுவை மாதிரி, நல்ல புத்தகங்கள் வாங்க பத்ரி வெளி பதிப்பகங்களுக்கு சென்றார் என்ற பொருளில் அவரே நகைச்சுவை என்று வகைப் படுத்தியதாக நினைத்தேன்..

    ஐயகோ..இது பிறர் வேலையா? அதிர்ச்சி தருகிறது..

    ReplyDelete
  5. விஜய்: நான் வாங்கியது அன்னம்/அகரம் ஸ்டாலில். இதைத்தவிர பிற கடைகளிலும் இருக்கலாம்.

    மார்க்வேஸ் நாவல்கள் தமிழில் மொழிபெயர்க்கப்படவில்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரது பல சிறுகதைகள் தமிழ் சிற்றிதழ்களில் (அனுமதி இல்லாமல்தான்:-) மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன.

    ReplyDelete
  6. விஜய்: ஒரு நூற்றாண்டுத் தனிமையின் முதல் அத்தியாயம், முன்பு வெளியான 'கல்குதிரை' மார்க்வெஸ் சிறப்பிதழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. நாகார்ஜுனனால் செய்யப்பட்ட அந்த மொழிபெயர்ப்பு எக்கச்சக்கத்துக்குத் திருகப்பட்டிருந்ததாகப் பொதுவில் ஒரு குற்றச்சாட்டும் உண்டு. அதை ஆங்கிலத்தில் படிப்பதும் வெகு சுலபமே. மார்க்வெஸ் நாவல்கள் தமிழில் மொழிபெயர்ப்பா? செய்யலாம் தான், எங்கே....? இந்தியில், ஓரளவு சமீபத்தைய ராபர்ட்டோ கலாஸ்ஸோவின் Ka வைக்கூட (வேறு உள்ளோட்டங்களிருப்பினும் ;-) மொழிபெயர்த்துவிட்டார்களென்று நினைக்கிறேன்.

    ReplyDelete
  7. விஜய் மற்றும் சன்னாசி மார்குவேசின் நூற்றாண்டுத் தனிமை பிரம்மராஜன் மொழிபெயர்ப்பில் தமிழில் வரவிருப்பதாக காலச்சுவட்டிலோ,உயிர்மையிலோ படித்த ஞாபகம்.அன்னா கரீனா தமிழில் வந்திருக்கிறதாமே வாங்கவில்லையா?

    பத்ரி புத்தகச் சந்தையில் கிடைக்கும் நூல்களில் குறிப்பிடக் கூடியவற்றின் பட்டியல் கிடைக்குமா?

    ReplyDelete
  8. நன்றி பத்ரி, சன்னாசி, ஈழநாதன்.

    சன்னாசி ஈழநாதன் சொன்னதும் ஞாபகம் வருகிறது. அவர் சொன்னப்படி பிரம்மராஜன் மொழிபெயர்கிறார் என்று படித்த ஞாபகம் அது தான் கேட்டேன். ஆயிரம் தான் ஆங்கிலத்தில் இருந்தாலும் நம்ம மொழியிலே படிக்கிறது சுகம் என்ற உண்மையோடு நான் ஆங்கிலத்தில் அவ்ளோ பிஸ்து இல்லை என்பது இன்னொரு உண்மை :-)

    ஈழநாதன் அன்னா கெரீனா 'சிவன்' என்பவரின் மொழிப்பெயர்ப்பில் இரண்டுபக்கங்கள் படித்து வெறுத்து தூரப்போட்டு விட்டேன். அவ்வளவு கொடூமையான மொழிப்பெயர்ப்பு அது. புதுசாவது நல்லாயிருக்கான்னு பார்க்கனும்.

    ReplyDelete
  9. film asst director-kku offer kodukka vendum sir

    ReplyDelete