Wednesday, January 04, 2006

நிலச்சீர்திருத்தம் - அமார்த்ய சென்

ராமைய்யாவின் குடிசையில் ஆரம்பித்த விவாதம் நிலச்சீர்திருத்தம் பற்றித் தொட்டது. அமார்த்ய சென் நேற்று ஹைதராபாதில் பேசும்போது சொன்னது இது:
The rapid growth of the country's economy in the recent past notwithstanding, India cannot become a major player in the global economy unless it completed the land reform process, Nobel laureate Amartya Sen said here on Tuesday.

It was important to unleash the kind of energy that China had done to emerge as a global player, for which land reforms were extremely important. The land reform process, which kept the economies of States like West Bengal, where it was fairly complete, floating, was substantially incomplete in the country.
மேற்கு வங்கத்தில் நடந்த மாதிரி, சீனாவில் நடந்தமாதிரி நிலச் சீர்திருத்தம் இந்தியா முழுக்க நடைபெற வேண்டும் என்பதில் ஐயமில்லை. இப்பொழுது நான் படித்துக்கொண்டிருக்கும் புத்தகம், The Long March, An Account of Modern China, Simone de Beauvoir, Phoenix Press, 1957, சீனாவின் நிலச்சீர்திருத்தம் பற்றி நன்றாகச் சொல்கிறது.

3 comments:

  1. நன்றி பத்ரி..விவாதம் நல்ல திசையில் பயணிக்கிறது. அமர்த்தியா சென் சொல்கிறார் மே.வ.மாநிலத்தில் நிலச் சீர்திருத்தம் முடிவடையும் சூழலில் இருக்கிறது என்று. இந்தியாவில் வேறெந்த மாநிலத்தை விடவும் நிச்சயமாக அங்கு மிகப் பெரிய அளவில் அது நடந்திருக்கிறது என்றே அறிய முடிகிறது. அதன் காரணமாக மட்டுமே கிராமப்புறங்களில் இடதுசாரிகளின் செல்வாக்கும் அதிகமாக இருக்கிறது என்று நினைக்கிறேன்.

    ஆனால், இன்றைய பொருளாதார சீர்திருத்தங்கள் காரணமாக பெரிய தொழில்களை மாநிலத்திற்குக் கொண்டுவர புத்ததேவ் எடுக்கும் முயற்சிகளுக்கு இதே நில உச்சவரம்புச் சட்டம் தடையாக இருப்பதாகவும் அது குறித்து இடது முன்னணிக்குள் கருத்து வேறுபாடு இருப்பதாகவும் செய்திகள் இருக்கின்றன.

    பிற பின்.

    ReplyDelete
  2. பத்ரி,
    சிமோன் டி பேவார்-இன் தி செகண்ட் செக்ஸ் படித்ததுண்டா? நானும் வாசித்ததில்லை. ஆனால்
    அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் என்று பயண நண்பிகள் இருவர் சொன்னார்கள்( உண்மையில் இதுவரைக்கும் தெரியாத ஜந்துவா நீ என்று கிண்டல் செய்தனர்). இணையத்தில் அவரது சிலகட்டுரைகளை வாசித்தேன். சார்த்-தின் மனைவிதான் அவர் என்பதாக சொன்னார்கள்.

    ReplyDelete
  3. தெருத்தொண்டன்: இன்றும் நாளையும் கேரளாவில் உள்ளேன். இங்கு நிலச்சீர்திருத்தம் பற்றி அறிவுஜீவிகள் என்ன நினைக்கிறார்கள் என்பதைக் கேட்டறிகிறேன்...

    நில உச்சவரம்பு எனும்போதே அது உழும் நிலம்தான். தொழில்கள் மேற்கு வங்கம் வர அவர்களுக்கு விவசாய நிலம் தேவையா? வேறு நிலங்கள் கிடையாதா? எல்லாவற்றுக்கும் மேலாக மாநில அரசுகளுக்கு நிலத்தைக் கையகப்படுத்தும் உரிமை உள்ளது. அதனால் அவசியம் என்றால், சரியான விலையைக் கொடுத்து நிலத்தைப் பெற்று அதனை வேறு தொழில்கள் செய்யப் பயன்படுத்தலாமே?

    ===

    கார்த்திக்: என்னிடம் அந்தப் புத்தகம் உள்ளது, ஆனால் படிக்க ஆரம்பிக்கவில்லை. சிமோன், சார்த்-இன் மனைவி இல்லை. அதாவது திருமணம் என்னும் பந்தத்தால் பிணைக்கப்பட்டவர் இல்லை. கூட வாழ்ந்தார், அதெ நேரம் அவருக்க்கு என்று பிற ஆண் காதலர்களும் உண்டாம்.

    ReplyDelete