Wednesday, March 15, 2006

லூசுத்தனமான அரசியல் கட்சி

இன்று தினகரனில் ஒரு விளம்பரம் பார்த்தேன். ஒரு புது அரசியல் கட்சி உதயமாகிறதாம்.

அவர்கள் தங்களது கொள்கையாக சிலவற்றைச் சொல்லியிருந்தனர். எல்லோரும் சொல்லும் விஷயங்கள்தாம். ஆனால் ஒரேயொரு கொள்கை பார்த்தவுடனே சிரிப்பை வரவழைத்தது.

கட்சியின் பெயர் விச்சர்தி விச்சார்ட்டி. (என்ன இழவோ, எப்படி உச்சரிப்பு என்று தெரியவில்லை. காலையில் தமிழில் பார்த்தது ஞாபகம் வரவில்லை. URL மட்டும் குறித்துக்கொண்டேன்.) அவர்களது இணையத்தளம்: http://www.vicharti.org/. அந்த சூப்பர் கொள்கை என்ன தெரியுமா?
The New Party in power will offer rupees 5000 every month to every Indian Citizen.
ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் மாசம் ரூ. 5,000 வழங்குவதென்றால் ஒரு மாதத்துக்கு ஆகும் செலவு = 110 கோடி (மக்கள்) * ரூ. 5,000 = 5,50,000 கோடி. ஒரு வருடத்துக்கு ரூ. 66,00,000 கோடிகள் = . இன்றைய டாலர் கணக்கில் சுமார் 1.5 டிரில்லியன் டாலர்கள்.

இந்தியாவின் GDP எவ்வளவு தெரியுமா? சுமார் 3.3 டிரில்லியன் டாலர்கள் மட்டுமே!

ஆக இந்த முட்டாள்கள் அதில் கிட்டத்தட்ட பாதியை மக்களுக்கு சும்மா, இலவசமாகத் தூக்கிக் கொடுக்கப்போகிறார்களாம்!

இந்திய அரசின் ஆண்டு வருமானம் என்ன தெரியுமா?

நடப்பாண்டு வரி வருமானம் (எதிர்பார்ப்பு) = 4,42,153 கோடி ரூபாய்கள்.
வரியில்லா பிற வருமானம் (எதிர்பார்ப்பு) = 76,260 கோடி ரூபாய்கள்

ஆக மொத்த வருமானம் (எதிர்பார்ப்பு) = 5,18,413 கோடி ரூபாய்கள்.

இந்த வருமானத்தை வைத்துக்கொண்டு ஒருவருக்கு மாதம் ரூ. 5000 கூடக் ஒருவருக்கு ரூ. 5000 வீதம் அனைவருக்கும் ஒரு மாதம்கூடக் கொடுக்க முடியாது. அதற்கே ரூ. 5,50,000 கோடிகள் தேவைப்படும்.

ஒரு வழிதான் உண்டு. இஷ்டத்துக்கு நோட்டுகளை ரிசர்வ் வங்கி அச்சடிக்க வேண்டியதுதான். இதனால் பணவீக்கம் கிட்டத்தட்ட 50 மடங்குக்கு மேல் அதிகரிக்கும். இதனால் ஒரு வாழைப்பழம் சுமார் 50 ரூபாய்க்கு விற்கும். அப்பொழுது மாதம் கிடைக்கும் ரூ. 5000-ல் 100 வாழைப்பழங்கள் மட்டும்தான் வாங்கலாம்!

இதுபோன்ற கிறுக்குத்தனமான ஐடியாக்களையெல்லாம் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யும் அளவுக்கு ஜோக்கர்கள் நம் நாட்டில் உள்ளார்கள்!

11 comments:

  1. //இதுபோன்ற கிறுக்குத்தனமான ஐடியாக்களையெல்லாம் செய்தித்தாள்களில் விளம்பரம் செய்யும் அளவுக்கு ஜோக்கர்கள் நம் நாட்டில் உள்ளார்கள்!//

    இதுக்கெல்லாம் பதிவு போடும் ஜோக்கர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?;-)

    ReplyDelete
  2. Hilarious!

    From their agenda:

    >>"From a party and invite members"

    >>"It will be their legacy which will be revised annually"

    Precious, you can't make this stuff up!

    ReplyDelete
  3. உங்கள் பதிவின் தலைப்பு, ' லூசுத்தனமான நாளிதழ்' என்று இருந்திருக்க வேண்டும் :-)

    ReplyDelete
  4. ஒவ்வொரு ஏழைக்கும் ரூ. 5000 அல்லது 2000 என்பதாவது சாத்தியமா?

    நம் ஊரில் உள்ள ஊழல்தனங்களை களைந்தௌவிட்டால் நம் வருமானமும் GDPயும் பெருக வாய்ப்பு உள்ளதே?

    சத்தியமா நான் அந்த விளம்பரம் கொடுக்கல.

    ReplyDelete
  5. Excellent review. I wonder how do you manage to get those statistics about India. I want keep this for my future reference.

    Thanks

    ReplyDelete
  6. puLLi vivara puli 'Captain' Badri vaazga vaazga :))

    ReplyDelete
  7. பிரகாஷ்: நாளிதழ் லூசு அல்ல. அவர்களுக்குக் காசு கிடைத்துள்ளது. இது விளம்பரமாக வந்தது; செய்தியாக அல்ல.

    ReplyDelete
  8. srry, கவனிக்கலை. தினகரனில் என்றதுமே, செய்திதான் என்று நினைத்துவிட்டேன்.

    ReplyDelete
  9. Badri,

    You said "With this income they can not pay even Rs.5000 per month"

    Isn't that what is promised? I think it should read as..

    "With this income they can not pay Rs.5000 even for a month"

    correct? Sorry I don't have tamil editor.

    - Ravi

    ReplyDelete
  10. பெரகாசோட தலீவரு பரட்டை இப்ப ஜெயலலிதாவுக்கு சப்போட் என்றதும் பெரகாசுக்கு தினகரன், சன் டிவி, தமிழ்முரசு, முரசொலி, குங்குமம் எல்லாமே எதிரியாதான் தெரியும்.

    ReplyDelete
  11. அரசியல்வாதிகள் விடுத்து வெறும் விளம்பரங்கள் என்று எடுத்துக் கொண்டால் அமெரிக்காவும் சளைத்ததல்ல என்பதை நீங்கள் அறிவீர்கள்.

    எடுத்துக்காட்டு வேண்டுமா என்ன? ;-)

    ReplyDelete