ஆயிரம் விளக்கு தொகுதிக்கான அஇஅதிமுக வேட்பாளராக ஆதி ராஜாராம் நிறுத்தப்பட்டுள்ளார்.
சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய சென்னை வேட்பாளராக N.பாலகங்கா நிறுத்தப்பட்டிருந்தார்.
இவர்கள் இருவரும் பிளசெண்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராகத் தீர்ப்பு வந்தபோது நடுத்தெருவில் குதித்து ஆர்ப்பாட்டம் செய்து கார்களை, பஸ்களை உடைத்தவர்கள். கடுமையான ஆயுதங்களை வைத்துப் பொதுமக்கள்மீது தாக்குதல் செய்ததாக இவர்கள்மீது வழக்குகள் தொடுக்கப்பட்டன. பின்னாளில் இந்த வழக்குகள் அஇஅதிமுக அரசால் இழுத்து மூடப்பட்டன.
நல்லவர்களுக்கு அஇஅதிமுக வாய்ப்பு கொடுக்காத வரையில் என் வாக்கு அவர்களுக்குக் கிடையாது.
பெங்களூர் இலக்கியத் திருவிழா
5 hours ago
நல்லவர்களுக்கு அஇஅதிமுக வாய்ப்பு கொடுக்காத வரையில் என் வாக்கு அவர்களுக்குக் கிடையாது.
ReplyDeletecome on, do you expect JJ to nominate you :)
அப்போ இந்த தடவை நீங்க ஓட்டு போட போறதில்லையா பத்ரி..?
ReplyDeleteஎப்படி பார்த்தாலும் நீங்க ஓட்டு போட முடியாது.
ReplyDeleteநீங்க அங்கே போய் ஓட்டு போடப்போனால் ஏற்கனவே உங்க ஓட்டை யாராவது போட்டுட்டு போயிருப்பாங்க தானே :)
அரசியல்வாதிகள் எல்லோருமே கிரிமினல்கள் இல்லை. ஒருசிலர் ஒட்டுமொத்த ரவுடிகள். உதாரணம்: கராத்தே தியாகராஜன், சேகர் பாபு - இவர்கள் சென்ற சென்னை நகரமன்றத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடக்கும் இடங்களை (அண்ணா பல்கலைக்கழகம், ஸ்டெல்லா மாரிஸ் கல்லூரி) சில குண்டர்களுடன் சென்று கைப்பற்றி வாக்குகளை அஇஅதிமுக வேட்பாளருக்குப் போய்ச்சேர வைத்தவர்கள். இன்று அம்மாவுடன் சண்டை போட்டுக்கொண்டு கராத்தே நடுத்தெருவில். ஆனால் சேகர் பாபு அஇஅதிமுகவின் ஒரு ரவுடி வேட்பாளர்.
ReplyDeleteபாலகங்கா, ஆதி ராஜாராம் போன்றவர்கள் சந்தர்ப்பத்துக்குத் தகுந்தவாறு ரவுடி வேடம் போடுபவர்கள். அம்மாமீது வழக்கு, தீர்ப்பு என்றால் பஸ்ஸைக் கொளுத்துவது, அதில் இருக்கும் ஆள்களையும் கொளுத்துவது, அடிதடி, வம்பு வழக்கு.
இவர்கள் எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் இவர்களுக்கு வாக்களிப்பது இல்லை. சென்ற நாடாளுமன்றத் தேர்தலில் தயாநிதி மாறனுக்கு வாக்களித்தேன். அவரது அமைச்சர் பணிமீது எனக்கு பல குற்றச்சாட்டுகள் இருந்தாலும் அவர் ரவுடி இல்லை.
வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் மு.க.ஸ்டாலின் நிற்பார் என்று நினைக்கிறேன். அப்படியானால் அவருக்கு வாக்களிக்கத் தயங்க மாட்டேன். வேறு நல்ல வேட்பாளர்கள் பிற கட்சிகளிலிருந்து நின்றால் அவர்களையும் பார்த்துவிட்டு தீர்மானிப்பேன். ஆனால் இப்பொழுதுள்ள வேட்பாளரைப் பார்க்கும்போது அஇஅதிமுகவுக்குக் கிடையாது.
அஇஅதிமுக வேட்பாளர் பாதர் சயீது, எஸ்.வீ.சேகர் போன்றோர்மீது எனக்குப் பிரச்னையில்லை. அவர்கள் என் தொகுதியில் நின்றிருந்தால் அவர்களை பிறரையும் ஒப்பிட்டே வாக்களித்திருப்பேன்.
அதிமுக நேர்காணலின் போது கேட்கப்பட்ட முக்கியமான கேள்வி -பொதுச்செயலாளர் கைது செய்யப்பட்டபோது,சிறைக்குச் சென்றிர்களா என்பதுதான்?
ReplyDeleteபஸ்களை கொளுத்தினேன், கார்களை உடைத்தேன் என்றெல்லாம் பதில் சொல்பர்களுக்கு கண்டிப்பாக கூடுதல் மதிப்பெண்கள்தான் கிடைத்திருக்கும்.
திமுகவிலும் எங்கள் தொகுதியில் ரவுடியைத்தான் நிறுத்தியிருக்கிறார்கள்.
இரு கட்சிகளுக் இதற்கு விதிவிலக்கல்ல.
Hi,
ReplyDeleteJust need a clarification.
Is it an offence (in the eyes of law) to disclose the name of the party to whom we cast our vote ?
Arnold Bala