Friday, August 10, 2007

பதிவர் பட்டறை - அடுத்த கட்டம்

(தமிழ் வலைப்பதிவர் பட்டறை கூகிள் குழுமத்துக்கு நான் அனுப்பிய மடல்.)

1. வாரா வாரம் ஒரு கல்லூரியையாவது எடுத்துக்கொண்டு, அங்கு தமிழ் வலைப்பதிவுகள் தொடர்பான செயல்முறை விளக்கம் செய்து காண்பிப்பது. இதற்குத் தேவை...

(அ) (ஊர் ஊராகக்) கல்லூரிகளைக் கண்டறிந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அனுமதி பெறும் குழு.
(ஆ) ஒவ்வொரு கல்லூரிச் சந்திப்பிலும் என்னென்ன செய்யவேண்டும் என்பதற்கான உள்ளடக்கத்தை (பயிற்சி உதவிகள், கையேடுகள்) தயாரிக்கும் குழு. இந்த உள்ளடக்கத்தைத் தொடர்ச்சியாக மேம்படுத்த வேண்டும்.
(இ) கல்லூரிக்குச் சென்று செயல்முறை விளக்கத்தைச் செய்யக்கூடியவர்கள் குழு.

2. லாபியிங்: மாநில அரசு, ஊடக நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஆகியோர்களிடம் லாபியிங் செய்து அவர்களை தமிழ் இணையத்தில் (யூனிகோட் எழுத்துருவில்) தளங்களையும் வலைப்பதிவுகளையும் உருவாக்கத் தூண்டும் குழு.

(அ) பல சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திப்பது எளிது. கட்சி கட்சியாகவோ தனிப்பட்ட முறையிலோ இவர்களைச் சந்தித்து நமது கருத்துகளை எடுத்துக்கூறி அழுத்தத்தை உருவாக்குவது. நமது தேவைகளை விளக்கிக்கூறி அதற்கு அரசாங்கம் என்ன செய்யவேண்டும் என்று வலியுறுத்துவது.
(ஆ) ஊடக நிறுவனங்களைச் சந்தித்துப் பேசி அவர்கள் ஏன் யூனிகோடில் இணையத்தளங்களை வைக்கவேண்டும், ஏன் தங்கள் பத்திரிகையாளர்களுக்கு (தமிழில்) வலைப்பதிவுகள் தொடங்க அனுமதி தரவேண்டும் என்பது பற்றிப் பேசுவது, அவர்களுக்குத் தேவையான உதவிகளை இலவசமாகச் செய்து தருவது.
(இ) பல்கலைக்கழக, கல்லூரி முதல்வர்களைச் சந்தித்து அவர்களுக்கென தமிழில் (யூனிகோடில்) இணையத்தளங்கள், வலைப்பதிவுகள் உருவாக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, அதற்கான உதவிகளைச் செய்து தருவது.

3. கம்ப்யூட்டர் விநியோகஸ்தர்கள்: தமிழகம் முழுவதிலும் உள்ள பெரிய, சிறிய கணினி விற்பனையாளர்களை அணுகி, தமிழ் எழுத வகை செய்யும் மென்பொருள்களை கணினியில் இன்ஸ்டால் செய்தே தருமாறு வலியுறுத்துவது.

4. கணித்தமிழ் சங்க உறுப்பினர் நிறுவனங்கள், பெரிய மென்பொருள் நிறுவனங்கள் (மைக்ரோசாஃப்ட், அடோபி-மேக்ரோமீடியா) ஆகியவற்றுடன் தொடர்புகொண்டு தமிழ் யூனிகோடுக்கான ஆதரவு எப்படி இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளுதல், நமக்கேற்ற ஆதரவைக் கோருதல்.

5. பிற நகரங்களில் பட்டறை நடத்த முன்வருபவர்களுக்கு ஆதரவு, உதவி. (புதிதாகச் சேர்த்துள்ளேன்.)

இது தொடர்பான விவாதம் தேவை.

3 comments:

  1. பாக உந்தி பாபு, லெட் அஸ் டூயிட்...

    ReplyDelete
  2. தேவைபடும் உதவிகள்

    1. தமிழக அரசு unicode பற்றி ஏதேனும் அரசு உத்தரவு வழங்கி உள்ளதா என்ற விபரம்

    2. தமிழ் தட்டச்சு குறித்து அறிந்து கொள்ள ஒரு தளம். (விபரம் + பயிற்சி)

    ReplyDelete