Wednesday, August 22, 2007

தலையில்லாக் கோழி

'தலையில்லாக் கோழி' என்ற தொடர் ஆங்கிலத்தில் எதைக் குறிக்கிறது என்றெல்லாம் நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிந்துகொள்ள விரும்பமாட்டார்கள். தலையை ஒரே வெட்டாக வெட்டியபின் கோழிக்குக் கொஞ்சம் உயிர் இருக்கும். தலையற்ற முண்டம் பரபரவென்று அங்கும் இங்கும் ஓடும். அதைப் பார்க்கும்போது அது ஒரே அவசரத்தில் இருப்பதுபோலத் தோன்றும்.

'தலையில்லாக் கோழி' என்ற தொடர், ஆழ்ந்து யோசிக்காமல் அவசர அவசரமாக அதையும் இதையும் செய்வதைக் குறிக்கிறது.

இப்பொழுது அணு ஒப்பந்தம் தொடர்பாக நம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்துகொள்வதைப் பார்த்தால் இந்தச் சொற்றொடரைவிடக் கடுமையான சில சொற்களால் அவர்களைச் சாடலாம் என்றே தோன்றுகிறது.

ஆனால் யார் இதனைச் செய்யலாம்? நிச்சயமாக அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் ரோனென் சென் இதனைச் சொல்லியிருக்கக் கூடாது. ராஜாங்க அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றி - உண்மை என்றாலும்கூட - சில கருத்துகளை வெளியே சொல்லக்கூடாது.

ஆனால் பொதுமக்களாகிய நாம் நிச்சயமாக, இதுபோன்ற இடைஞ்சல்கள் ஏதும் இன்றி, நம் பிரதிநிதிகளைக் குறை சொல்லலாம்.

அணு ஒப்பந்தப் பிரச்னையை தேவையின்றி ஊதிப் பெரிதாக்கி, அந்தக் குழப்பத்தில் அரசியல் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தலையில்லாக் கோழிகள் மட்டுமல்லர், தலையில்லா மனிதர்களும்கூட.

2 comments:

  1. Can you read this week's "O Pak-kangal" article by Gyani in Ananda Vikatan..

    His doubts and thoughts also looks like 100% Valid!

    Can u read it and share your thoughts?

    -Nakul

    ReplyDelete
  2. Have you watched John Cleese doing the 'headless chicken' act in 'the Psychiatrist' episode of BBC's one of the all time great TV serials - Fawlty Towers? It is next only to his 'Don't mention the war' ('The German') Hilterish walk.

    ReplyDelete