Monday, April 27, 2009

மென்பொருள் புரோகிராமர்கள் கைது

நேற்று ட்விட்டரில்/வலைப்பதிவுகளில் வந்த செய்தி: ப.சிதம்பரத்துக்கு எதிராக பிரசாரம் செய்த 50 ஐடி இளைஞர்கள் கைது. [சசி | ஸ்ரீசரண்]

இன்றைய தினமணியில் நெடுமாறன் சொல்வதாக வந்த செய்தியில், கைது என்று குறிப்பிடப்படவில்லை.
திமுக, காங்கிரஸ் கட்சியினருக்கு தேர்தல் பயம் ஏற்பட்டுவிட்டது. மத்திய அமைச்சர் சிதம்பரத்தை எதிர்த்து மாணவர் ராஜீவ்காந்தி போட்டியிடுகிறார். இவருடன் பிரசாரத்தில் ஈடுபட்ட 16 மாணவர்களை காங்கிரஸ், திமுகவினர் தாக்கியுள்ளனர்.

சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் அம்மாணவர்களை அழைத்து மிரட்டியுள்ளார்.

இலங்கையில் தமிழர்கள் படும் அவஸ்தைகள் குறித்து சி.டி.கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதை தேர்தல் ஆணையமே தடுக்காத நிலையில் போலீசார் சிடிகள் பறிமுதலில் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது என்றார்.
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸில் வந்த செய்தி:
On Saturday, some Congress supporters pelted stones at 13 of them as they distributed pamphlets in Alangudi market. Police rushed to the spot and took them to the Alangudi station under the pretext of protecting them, said Rajiv, but moved them to Ganga Nagar police station in Pudukkottai around 7.30 pm, booked them under sections 188,147,153, 504 and 505 of IPC at midnight and remanded them in judicial custody on Sunday morning.
இது அதிகார துஷ்பிரயோகம். எதிர்த்து யாருமே பிரசாரம் செய்யக்கூடாது என்று அதிகாரத்தை ஏவிவிடுதல் வெட்கக்கேடு.

இந்தச் செய்தி, தி ஹிந்துவில் சுத்தமாகக் காணக் கிடைக்கவில்லை.

15 comments:

  1. What is your view on arrest of Regional Passport Officer Sumathi Ravichandran ? How much money she would have made by issuing several thousand Tatkal passports in last one year. (She is a distant relative of senior Minister Anbazhagan and he hightly distanced himself)

    ReplyDelete
  2. மிக்க நன்றி பத்ரி..

    பாதுகாப்புத் தருவதாக அழைத்துச் சென்று...ஆலங்குடி பகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த ராஜீவ் காந்தி மற்றும் நண்பர்களை திமுக குண்டர்கள் தாக்கியுள்ளனர். அவர்களே காவல் நிலையத்திற்கும் தகவல் தந்துள்ளனர். அங்கு வந்த காவல் துறையினரோ இங்கு தொடர்ந்து பிரச்சாரம் செய்தால் பிரச்சினை எழ வாய்ப்பிருப்பதால் அங்கிருந்து வெளியேறும்படி வற்புறுத்தியுள்ளனர். நமது நண்பர்கள் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே பாதுகாப்புக்காக எனக் கூறி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

    இவ்விடயம் உடனடியாக தமிழீழ ஆதரவுத் தலைவர்களுக்குத் தெரியப்படுத்தவே ஆலங்குடி சட்டமன்ற உறுப்பினர் ராஜசேகரன் (CPI) காவல் நிலையத்திற்குச் சென்று நண்பர்களனைவரையும் சந்தித்திருக்கிறார். பின்னர் இருநூறுக்கும் மேற்பட்ட தமிழுணர்வாளர்கள் ஆலங்குடி பேருந்து நிலையம் அருகில் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.

    அடுத்தடுத்து பிரச்சினை பெரிதாகவே இவர்கள் (ராஜீவ் காந்தி தவிர) மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்ததாக கூறி (இரவு 12 மணிக்கு) புதுக்கோட்டை கணேசபுரம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். இரவு முழுவதும் கணேசபுரம் காவல் நிலையத்தில் வைத்திருந்துவிட்டு பின்னர் ஞாயிறு காலையில் திருமயம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அங்கு இவர்களுக்கு காவல் நீட்டிப்புச் செய்யப்பட்டு புதுக்கோட்டைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்கள் அனைவரின் மீதும் நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    188 - இரு இனங்களுக்கு எதிரான மோதல்
    143 - சட்ட விரோதமாகக் கூடுதல்
    504 - தனிநபர் மீது அவதூறு பரப்புதல்
    506/2 - அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல்


    ரொம்ப யோசிச்சு எந்த பிரிவில் வழக்கு பதியலாம் என்று பட்டிமன்றமே நடத்தியிருப்பார்கள் போலிருக்கிறது!

    இரு இனங்களுக்கு எதிரான மோதல் - எந்த இரு இனங்களுக்கு எதிராக என்று தெரியவில்லை?

    சட்ட விரோதமாகக் கூடுதல் - தேர்தல் பிரச்சாரம் செய்வது சட்ட விரோதமா?

    தனிநபர் மீது ’அவதூறு’ பரப்புதல் - உண்மையின் பெயர் மாற்றப்பட்டுவிட்டது போலும்

    அவதூறு பரப்பும் வகையில் துண்டறிக்கை வெளியிடுதல் - ஒன்னும் சொல்றதுக்கில்ல!

    எனது நண்பன் ஒருவனுடன் புதுகை சிறைக்குச் சென்று தயாளன், தங்க பாண்டியன் மற்றும் முத்து கிருஷ்ணன் ஆகிய மூவரை இன்று மாலை சந்தித்தேன். காலையில் சென்ற பொழுது மாணவர் அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்று கூறி அனுமதி மறுக்கப்பட்டது. மாலையில் மீண்டும் சென்றபோது மதுரை சட்டக் கல்லூரியிலிருந்து 3 மாணவர்கள் வந்திருந்தனர். மேலும், இவ்விடயம் கேள்விப்பட்ட புதுக்கோட்டையிலுள்ள தமிழர் தேசிய இயக்கத்தைச் சேர்ந்த சிலரும் வந்திருந்தனர்.

    நண்பர்களனைவரையும் பெயிலில் எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன! மேலும், இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் முறையிடவுள்ளோம்!

    ReplyDelete
  3. உங்களது ஆலோசனைகளை எனது மின்னஞ்சல் முகவரிக்கு (skvchem@gmail.com) அனுப்பி வைக்கவும்...

    ReplyDelete
  4. இந்து பிரன்ட்லைனின் சமீபத்திய பதிப்பில் மருந்திற்கு கூட இலங்கை பற்றிய செய்தியில்லை. ஆப்கான் மற்றும் பாலஸ்தீன மக்கள் படும் துயரங்களை பற்றி பக்கம் பக்கமாக எழுதும் பிரன்ட்லைன், இலங்கை தமிழர் தற்பொழுது படும் துயரங்களை கண்டுக்கொள்ளவில்லை

    ReplyDelete
  5. Sorry offtrack. Thanks for taking time and commenting on blog, but sorry I felt your comment very offensive and rude and have posted another with more explanations. Though should let you know.

    http://dubukku.blogspot.com/2009/04/blog-post_27.html

    Thanks

    ReplyDelete
  6. இதையும் பாருங்கள்:

    http://timesofindia.indiatimes.com/India/Lanka-issue-13-arrested-for-anti-Congress-call/articleshow/4452065.cms

    ReplyDelete
  7. http://deccanherald.com/Content/Apr272009/editpage20090426132577.asp - by M.J.Akbar
    "
    It would be paradoxical, would it not, if Prakash Karat were being sworn in as foreign minister in Delhi and Buddhadev Bhattacharya were submitting his resignation in Kolkata? But stranger things have happened.

    Let me suggest one of them. If the BJP becomes the single largest party, you would be surprised by the number of small parties which suddenly discover the virtues of stability at a moment of economic crisis. The Left will be actually relieved: it can be where it is happiest — in the Opposition."

    ReplyDelete
  8. கனியத்தமிழ் கூட்டம் ஒன்று சென்னையில் கைது செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது. அதுபற்றி ஏதாவது மேலதிக விவரங்கள் தெரிந்தால் சொல்லவும்.

    ReplyDelete
  9. லக்கி: இதுதான் நான் ட்விட்டரில் தட்டியது:

    Sun TV reports that about 6 guys who made கலைஞர் தமிழினக் கொலைஞர் CD, have been arrested. Some are Sri Lankan Tamils, staying on expired passports and some Indian Tamils. I am not sure whether making such CDs (http://www.youtube.com/watch?v=KTakS5ChnSY) is really a cognizable offense as per IPC. In the screenshots they showed of the arrested folks and their office, the CDs prominent were Thiruvasagam! People may be wondering why someone is being arrested for publishing Thiruvasagam CDs!

    And the police officer talking to the TV seemed completely out of sorts, not knowing the exact reasons for the arrest. A very shoddy job. I hope the last resort - the court - comes down heavily on the Govt. once again.

    ===

    சுவாரஸ்யம் என்னவென்றால் அவர்களது தளத்தில் இந்த லிங்க் கிடைத்தது: http://www.kaniyatamil.com/kalaignar%20kavasam.html

    இந்த கபிலன் கோஷ்டி, கலைஞர்மீது சென்ற ஆண்டுதான் 108 கவசம் பாடி அவரைக் குளிர்வித்தனர். பின், சில மாதங்களுக்குமுன் ‘வடவன்’ ராம் விலாஸ் வேதாந்தி, கருணாநிதியின் தலையைக் கொய்யுங்கள் என்று சொன்னபோது இவர்கள் வேதாந்தியை ஊடுகட்டி ஒரு சிடி வெளியிட்டனராம். இப்போது கலைஞர்மீதே பாய்ந்ததும் புழல் சிறைக்கு அனுப்பிவிட்டார் தமிழினத் தலைவர்.

    ஆனால் என் கணிப்பில் ‘இந்த’ வழக்கு நிற்காது. வக்கீல்கள் நீதிமன்றம் சென்றதும் இவர்களை வெளியே அனுப்பிவிடுவார்கள்.

    ஆனால் வேறு வழக்குகள் - பாஸ்போர்ட்/விசா இரு இலங்கையர்மீதும் பதிவு செய்யப்படலாம்.

    ReplyDelete
  10. http://epaper.newindpress.com/NE/NE/2009/04/29/ArticleHtmls/29_04_2009_011_002.shtml?Mode=1

    ReplyDelete
  11. http://www.asiantribune.com/?q=node/17082

    Interesting article.

    Muthukumar Friends' Movement Charges Delhi With Compromising Nation’s Security

    ReplyDelete
  12. ப.சி. தேறுவது கடினம்.

    50 / 50 அல்லது KrackJack.

    ReplyDelete
  13. தோழர்களின் ஜாமீன் மனு ஆலங்குடி நீதிமன்றத்தால் இன்று தள்ளுபடி செய்யப்பட்டன..

    ReplyDelete
  14. கைதான தோழர்களில் 10 பேர் பிணையில் நேற்று விடுதலை
    3 பேர் சிறையில் உண்ணாவிரதத்தை தொடர்ந்துகொண்டு உள்ளனர்
    வழக்கு வாபஸ் வாங்கும் வரை உன்னவிரததி தொடரபோவதாக அறிவிதுஉள்ளனர் .
    எந்த சூழ்நிலையிலும் பிரசாரத்தை விடுவதாக இல்லை என்று தோழர்கள் தெரிவித்துஉள்ளனர்

    ReplyDelete
  15. உண்ணாவிரதமிருக்கும் செந்தில், ஆசிஃப் & முத்து கிருஷ்ணன் ஆகியோர் நாளை சிறையிலிருந்து வெளியே வரலாம் என்று தகவல் கிடைத்துள்ளது.

    சிறைவாசலில் பல தோழர்கள் அவர்களை விண்ணை முட்டும் கோசத்தோடு வரவேற்றனர்...

    தமிழின எதிரி ப.சிதம்பரத்தை தோற்கடித்தே தீருவோம் அதுவரை தொகுதியை விட்டு வெளியே வரமாட்டோம் என்றும் தொடர்ந்து பரப்புரையில் ஈடுபடுவோம் என்று கூறியது அவரகள் கொண்ட இன பற்றையும், நெஞ்சுரத்தையும் காட்டியது...

    அந்த செயல் வீரர்களை வாழ்த்துவோம்.. அவர்களுக்கு உறுதுணையாக இருந்து தமிழின எதிரிகளை ஒழிப்போம்...

    ReplyDelete