இப்போதைக்குள் அஇஅதிமுக, திமுக கூட்டணியில் இடப் பங்கீடு நடந்து முடிந்திருக்கும் என்றால், இல்லை.
மதிமுக, நிறைய இடங்களைக் கேட்கிறதாம். 5 அல்லது அதற்குமேல். அஇஅதிமுக, 3 கூடத் தரமாட்டேன் என்கிறதாம். 4-ல் செட்டில் ஆகலாம் என்று பேச்சு. என்ன தைரியத்தில் மதிமுக, 5 அல்லது அதற்குமேல் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை. கடந்த சில ஆண்டுகளில் மிகவும் பலவீனப்பட்ட தமிழகக் கட்சி என்றால் அது மதிமுக மட்டும்தான். கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் உதிர்ந்து திமுகவுக்குப் போனார்கள். அது இன்றுவரை தொடர்கிறது.
கடந்த சில ஆண்டுகளில் வைகோ மிகவும் ஆவேசமாக குரல் கொடுத்த ஒரே விஷயம் இலங்கைப் பிரச்னை மட்டுமே. அதில் மட்டும்தான் ஜெயலலிதாவுக்கு எதிர்க்கட்சியில் இருந்தார். மற்றபடி கட்சியை அடிமட்டத்தில் வளர்ப்பதற்கான எந்த முயற்சியிலும் வைகோ ஈடுபட்டதாகத் தெரியவில்லை.
மாறாக, பாமகவை சந்தர்ப்பவாதி என்று யார் திட்டினாலும், அவர் கட்சி கட்டுக்கோப்பாக உள்ளது. கருணாநிதி மதிமுகவை உடைத்த அளவுக்கு, பாமகவை உடைப்பதில் வெற்றி பெறவில்லை. ராமதாஸ், தனக்கு என்ன வேண்டுமோ, அது எங்கு கிடைக்குமோ அங்கு சென்று சாதித்துக்கொள்கிறார்.
*
காங்கிரஸ் தொண்டர்கள், கன்னியாகுமரியிலும் சென்னையிலும் தொகுதிகள் வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் செய்கிறார்களாம். ஏற்கெனவே காங்கிரஸுக்கு அளவுக்குமீறி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது என் எண்ணம். எங்கோ இல்லை என்றால், வேறு ஓர் இடத்தில் அள்ளிக்கொடுத்துள்ளது திமுக என்ற எண்ணம் தொண்டர்களுக்கு வரவேண்டும். வேண்டுமானால் தனித்துப் போட்டியிட்டால் 39 இடங்களிலும் (40 இடங்களிலும்) போட்டியிடலாம். தேமுதிக மாதிரி!
*
கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் தொகுதிப் பங்கீட்டில் அஇஅதிமுகவுடன் உடன்பாட்டுக்கு இன்னமும் வரவில்லை. நான் என் முந்தைய பதிவில் இவர்களுக்கு அஇஅதிமுக, ஐந்து தொகுதிகள் வரை கொடுக்கக்கூடும் என்று எழுதியிருந்தேன். அது தவறான கணிப்பு. மூன்றுதான் கிடைக்கும் என்று தோன்றுகிறது. என் கணிப்பில், தமிழகத்திலும் CPI-ஐவிட, CPM வலுவான கட்சியே. CPI-க்கு என்ன கிடைக்கிறதோ அதைவிட ஒன்று அல்லது இரண்டு CPM-க்குக் கூடுதலாகத் தரலாம்.
*
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வடிவம் மனிதநேய மக்கள் கட்சி என்பது. பெயரில் முஸ்லிம் இல்லாவிட்டாலும் இது ஒரு முஸ்லிம் கட்சிதான். இந்தக் கட்சி ஆரம்பித்ததே சில மாதங்களுக்கு முன்னர்தான். திமுக கூட்டணியில் இந்தக் கட்சி மூன்று இடங்களைக் கேட்கிறதாம். ஏற்கெனவே திமுக, டோக்கன் முஸ்லிம் சீட் ஒன்று என்று வேலூரை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்குக் கொடுத்துவிட்டது.
தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 5.5% என்று கணிக்கப்படுகிறது. கிறித்துவர்களின் மக்கள்தொகையும் கிட்டத்தட்ட அதே - 5.5%. இருவரும் சேர்த்து, 11%. மனிதநேய மக்கள் கட்சி மட்டுமே எதிர்பார்ப்பது சுமார் 7.5% இடங்களை! இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வேலூர் தொகுதியைச் சேர்த்தால், 10%.
மனிதநேய மக்கள் கட்சி கேட்பது கிடைக்காது. என்னைக் கேட்டால் இவர்களுக்கு ஒரு சீட் கூடக் கொடுக்கமாட்டேன். கருணாநிதி ஒரு சீட் தருவதாகச் சொல்கிறாராம்.
கிறித்துவர்கள் ஏன் இப்படி கட்சி ஆரம்பித்து இடங்கள் கேட்பதில்லை? அவர்களுக்குள் உட்பிரிவுகள் நிறைய இருப்பதுதான் காரணம்; அவர்களால் முஸ்லிம்கள் போல ஒன்றுசேரமுடியாது என்று நினைக்கிறேன்.
*
தமிழக யாதவர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியிருந்தனர். அவர்கள் தமிழக மக்கள் தொகையில் 14%-க்கும் மேலாம். அதற்கு ஏற்றபடி அவர்களுக்கு இடங்கள் ஒதுக்கவேண்டுமாம். பேசாமல், லாலு அல்லது முலாயமை அழைத்து இவர்களே ஒரு யாதவக் கட்சி ஒன்றை ஆரம்பித்து, மருத்துவருக்குச் சரி சமமாக உட்கார்ந்து, மக்களவை 7, மாநிலங்களவை 1 என்று பேரம் பேசலாமே?
தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் என்று திடீரென சில விளம்பரங்களைப் பார்த்தேன். அப்போதுதான் இந்தப் பேரைக் கேள்விப்பட்டேன். இது என்ன ஜாதி? எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் ‘ஓனர்’ பச்சமுத்து இந்தச் சங்கத்தின் தலைவராம். நல்ல விஷயம்.
மானுடத்தின் வெற்றி
6 hours ago
//கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியும் தொகுதிப் பங்கீட்டில் அஇஅதிமுகவுடன் உடன்பாட்டுக்கு இன்னமும் வரவில்லை. நான் என் முந்தைய பதிவில் இவர்களுக்கு அஇஅதிமுக, ஐந்து தொகுதிகள் வரை கொடுக்கக்கூடும் என்று எழுதியிருந்தேன். அது தவறான கணிப்பு. மூன்றுதான் கிடைக்கும் என்று தோன்றுகிறது. என் கணிப்பில், தமிழகத்திலும் CPI-ஐவிட, CPM வலுவான கட்சியே. CPI-க்கு என்ன கிடைக்கிறதோ அதைவிட ஒன்று அல்லது இரண்டு CPM-க்குக் கூடுதலாகத் தரலாம்.//
ReplyDeleteசி.பி.எம்., சி.பி.ஐயை விட வலுவானது என்ற உங்கள் கணிப்பு ஓக்கே. ஆனால் சி.பி.எம். என்பதே பதினெட்டு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு. இதில் பிரதானமானது அரசு ஊழியர் சங்கம். இப்படிப்பட்ட கட்சி அதிமுகவோடு கூட்டணி அமைப்பதால் தன்னுடைய முழுமையான ஓட்டு வங்கியை கூட்டணிக்கு பெற்றுத்தர முடியும் என்று நம்புகிறீர்களா?
இரண்டரை லட்சம் பேரை ஒரே நாளில் டிஸ்மிஸ் செய்ததை யார் வேண்டுமானாலும் மறந்துவிடலாம். டிஸ்மிஸ் செய்யப்பட்டவர்கள் மறப்பார்களா?
If we go by spurious percentages claimed by each caste outfit in our "enlightened" state, I am sure our state population figure will be two to three times more its current one.
ReplyDelete//தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் என்று திடீரென சில விளம்பரங்களைப் பார்த்தேன். அப்போதுதான் இந்தப் பேரைக் கேள்விப்பட்டேன். இது என்ன ஜாதி?//
ReplyDelete”பார்க்கவ குல க்ஷத்திரியர்கள்” எனப்படும் பார்க்கவர்களில் மூன்று பிரிவுகள் முக்கியமானவை: மூப்பனார் (ஸ்ருதிமான்), உடையார் (நத்தமான்) மற்றும் நயினார் (மலையமான்). நயினார்கள் திருக்கோயிலூர் பகுதியில் கணிசமான அளவில் வாழ்கின்றனர்.
//கிறித்துவர்கள் ஏன் இப்படி கட்சி ஆரம்பித்து இடங்கள் கேட்பதில்லை? அவர்களுக்குள் உட்பிரிவுகள் நிறைய இருப்பதுதான் காரணம்; அவர்களால் முஸ்லிம்கள் போல ஒன்றுசேரமுடியாது என்று நினைக்கிறேன்.//
ReplyDeleteஅன்னை மேரி ஒருவர் இருந்தாராமே. அவர் உருவத்தில் ஜெயலலிதா கட்-அவுட் வைத்தபோது இந்தியா முழுவதும், கன்னியாகுமரியில் இருந்து நாகலாந்துவரை ஒன்று சேர்ந்த சர்ச்சில் மணியடித்துக் கண்டனம் தெரிவித்தவர்கள், பெங்களூர் சர்ச்சுக் கண்ணாடிகளில் கீறல் விழுந்ததற்காக இந்தியா முழுவதும் தன்னிச்சையாக முடிவு செய்து பள்ளியை மூடியவர்கள் ஒற்றுமை இல்லாதவர்களாகவா உங்கள் கண்களுக்குத் தெரிகிறது?
மேலும் கிருத்துவர்கள் ஏன் ஒரு உண்மையான கட்சியை புதிதாக ஆரம்பிக்கவேண்டும்? அவர்களின் கட்டுப்பாட்டுக்குள் ஏற்கனவே வந்துவிட்ட அந்த தேசிய கட்சிக்கு ஆதரவாகச் சில லெட்டர்பேட் கட்சிகளை ஆரம்பித்து செயல்பட்டுவருகிறார்களே. அது போதாதா?
அந்த தேசிய கட்சியின் தலைமைக்கு நெருக்கமானவர்கள், கிச்சன் கேபினட் முழுவதும் கிருத்துவர்கள். மாநிலங்களிலும் தலைமைப் பதவி அவர்களுக்கே.
இவ்வளவு ஏன்? அந்த தேசியக் கட்சி கிருத்துவர்களுக்கு அதிக இடம் தரவேண்டும் என கிருத்துவர்கள் உரிமையுடன் கேட்குமளவுக்கு ஒன்றோடொன்றாக பாலோடு நீராகக் கலந்துபோயிருக்கும்போது இப்படியெல்லாம் நீங்கள் எழுதி சிரிப்பை வரவழைக்காதீர்கள்.
சந்தேகம் இருந்தால் இங்கே பாருங்கள்: http://www.haindavakeralam.com/HKPage.aspx?PageID=8274&SKIN=B
பார்கவ குலத்தைப் பற்றி எழுதியிருக்கிறீர்கள். முல்லைக்கு தேர் கொடுத்த பாரி மன்னனும் இதே குலத்தை சேர்ந்தவர் தானாம். இது அவர்களின் பத்திரிக்கை விளம்பரத்திலிருந்து தெரியவந்தது.
ReplyDeleteபெரியாரின் கொள்கைகள் ஒலிக்கத்தொடங்கிய நாள் முதல் ஜாதிகளின் எண்ணிக்கை குறைந்திருக்க வேண்டும். ஆனால், எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்திருக்கிறது எனத் தோன்றுகிறது. சொல்லப் போனால் வந்தேறி பார்ப்பனர்களின் உட்பிரிவுகள் குறைந்து இருப்பது போல் தோன்றுகிறது. ஆனால் மண்ணைச்சேர்ந்த மற்ற ஜாதிகள் இன்னும் பிரிந்திருக்கின்றன அல்லது புதிய ஜாதிகள் பிறந்திருக்கின்றன. யாராவது இதற்கு எதாவது செய்து, எண்ணிக்கையை குறைத்து, சண்டைகளையும், குத்து-வெட்டுக்களையும் குறைக்க முயற்சி செய்கிறார்கள? செய்வார்களா?
"எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் ‘ஓனர்’ பச்சமுத்து இந்தச் சங்கத்தின் தலைவராம். நல்ல விஷயம். "
ReplyDeleteராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக ‘ஓனர்’ வெங்கடாச்சலமும் இந்தச் சங்கத்தின் ஒரு பார்ட்னர்.
தமிழகத்தில் இப்படி ஜாதி அரசியல் தலைவிரித்தாடுவது கொடுமையான விஷயம்!
ReplyDelete//
ReplyDeleteகிறித்துவர்கள் ஏன் இப்படி கட்சி ஆரம்பித்து இடங்கள் கேட்பதில்லை? அவர்களுக்குள் உட்பிரிவுகள் நிறைய இருப்பதுதான் காரணம்; அவர்களால் முஸ்லிம்கள் போல ஒன்றுசேரமுடியாது என்று நினைக்கிறேன்.
//
அவர்கள் கட்சிவேறு ஆரம்பித்து தொலையவேண்டுமா ?
இருக்கும் திராவிடக் கட்சிகள் ஹிந்துக் கோயில்களை கொள்ளையாடித்து கிருத்தவ மதமாற்றத்திற்கு பணம் கொடுப்பது போதாதா ?
ஜாதி அரசியல் கொடுமையான விஷயம்
ReplyDeleteCan you explain how you have arrived at the calculation that CPM should be given 5 seats while you say that MDMK should be given less seats. (என்ன தைரியத்தில் மதிமுக, 5 அல்லது அதற்குமேல் கேட்கிறார்கள் என்று தெரியவில்லை.) However I would agree with your point that "கட்சியை அடிமட்டத்தில் வளர்ப்பதற்கான எந்த முயற்சியிலும் வைகோ ஈடுபட்டதாகத் தெரியவில்லை". If ADMK miss MDMK then it is definite that it will get a zero.
ReplyDeleteமதிமுக என்பது வைகோ ஒருவரை மட்டும் நம்பி உள்ள கட்சி ... இருக்கும் தொண்டர்கள் எல்லாம் வைகோவின் தொண்டர்களே.
ReplyDeleteலாரல் ஹார்டி விலகிய பொழுது கணேசுடன் ஒரு மாவட்டச் செயலர் போனார். ஆனால் செஞ்சியாருடன் யார் போனது.
கண்ணப்பன் கோவை பகுதியில் மட்டும் சிறிது பாதிப்பை எற்படுதாலாம் அது கூட பெரிய அளவில் இருக்காது.
ஆகவே மதிமுக அதனுடைய முழு பலத்துடன் தான் இருக்கிறது.
ராமதாஸ் காரியம் சாதிதது கொள்வது புத்திசாலித்தனம் என சொலும் நீங்கள் அவருடைய பட்ட வர்த்தன அரசியல் (..)தனத்யும் ஆதரிக்கிறீர்கள்.
//சி.பி.எம்., சி.பி.ஐயை விட வலுவானது என்ற உங்கள் கணிப்பு ஓக்கே. ஆனால் சி.பி.எம். என்பதே பதினெட்டு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு. இதில் பிரதானமானது அரசு ஊழியர் சங்கம். இப்படிப்பட்ட கட்சி அதிமுகவோடு கூட்டணி அமைப்பதால் தன்னுடைய முழுமையான ஓட்டு வங்கியை கூட்டணிக்கு பெற்றுத்தர முடியும் என்று நம்புகிறீர்களா?//
ReplyDeleteலக்கிலூக்... அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் என்ன செய்வது? சிபிஎம்மிற்கு என்று பல்வேறு அரங்கங்கள் உண்டு. அந்த அரங்கங்களில் ஒன்றுதான் தொழிற்சங்கமும். அதுவே சிபிஎம் அல்ல. தொழிற்சங்கத்தில் இருப்பவர்கள் வேறு கட்சிகளில் இருப்பதும் அவர்களுக்கு ஓட்டுபோடுவதும் சகஜமான ஒன்று. முழுவிவரம் தெரியாமல் பொது ஊடகத்தில் கருத்திடுவது முறையல்ல.
//தமிழகத்தில் முஸ்லிம்களின் மக்கள்தொகை 5.5% என்று கணிக்கப்படுகிறது. //
ReplyDeleteஎன்ன கிழக்கு தோழரே தாங்கள் எப்போதுமே புள்ளி விபரங்களை குறைத்து சொல்வதெ தங்களின் வேலையாகிப் போய் விடுகிறது.
சரி தங்கள் பதிப்பதக்தில் இஸ்லாம் மற்றும் இஸ்லாமியர்கள் சம்பந்தப்பட்ட புத்தங்களின் மொத்த சதவிகிதத்தை பாருங்கள். தமிழகத்தின் இஸ்லாமியர்களின் எண்ணிக்கை விளங்கிப் போகும். (கூட்டிக் கழித்துப் பார்தால் கணக்கு சரியாக தான் வரும்)
/* எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் ‘ஓனர்’ பச்சமுத்து இந்தச் சங்கத்தின் தலைவராம். நல்ல விஷயம். /*
ReplyDelete'ஓனர்’ என்று போட்டது நல்ல பஞ்ச். நகைச்சுவை. அவர்கள் வருடத்திற்கு 6,7 கோடி ரூபாய்வரை மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்குகிறார்களாமே? எவ்வளவு கறக்கிறார்கள் என்று தெரியவில்லை.
பிப்ரவரியில் தொடங்கப்பட்ட கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை என்னும் கட்சி பற்றி குறிப்பிட மறந்துவிட்டீர்களே?
கல்கத்தாவில போய் உட்காந்துகிட்டு சிங்கி அடிக்கிறது எல்லாம் 'வந்தேறி'ன்ற வாரத்தையை பயன்படுத்துவது சிரிப்புதான் வருகிறது. அப்படியெனில் இதையெல்லாம் போனேறி என்று அழைக்கலாமா?
ReplyDeleteதிரு. வெங்கட சுப்ரமணியன் அவர்களுடன் நடந்த மொட்டை மாடி கூட்டதின் ஒலிப்பதிவு சுட்டியை பகிர்ந்த்து கொள்ளவும்.
ReplyDelete- நகுல்
//தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அரசியல் வடிவம் மனிதநேய மக்கள் கட்சி என்பது. பெயரில் முஸ்லிம் இல்லாவிட்டாலும் இது ஒரு முஸ்லிம் கட்சிதான்//
ReplyDeleteபத்ரி சார் 'மனிதநேய மக்கள் கட்சி' ஆங்கில சுருக்கத்தில் MMK,
அதாவது (MUSLIM MUNNETRA KAZHAGAM) ம.ம.க வில் முஸ்லிம் வந்ததது இப்படித்தான்.
2. திருவாளர் சுப்பு அவர்களுக்கு....
//லக்கிலூக்... அப்படி நீங்கள் நினைத்துக்கொண்டிருந்தால் என்ன செய்வது? சிபிஎம்மிற்கு என்று பல்வேறு அரங்கங்கள் உண்டு. அந்த அரங்கங்களில் ஒன்றுதான் தொழிற்சங்கமும். அதுவே சிபிஎம் அல்ல. தொழிற்சங்கத்தில் இருப்பவர்கள் வேறு கட்சிகளில் இருப்பதும் அவர்களுக்கு ஓட்டுபோடுவதும் சகஜமான ஒன்று. முழுவிவரம் தெரியாமல் பொது ஊடகத்தில் கருத்திடுவது முறையல்ல.//
சிபிஎம்க்கு பல்வேறு அரங்கங்கள் உள்ளது என்பது உண்மை, அவர்கள் அனைவரும் வெவ்வேறு கட்சிகளில் இருப்பார்கள் என்பதும் உண்மை. ஆனால் சிபிஎம்-ன் வாக்கு வங்கி அந்த அரங்கத்திருந்துதான் பெறப்படும். சிபிஎம்-ன் அனைத்து கருத்து வடிவங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பவை அந்த அரங்கம்தான். அரசு ஊழிழர் சங்கம், போக்குவரத்து தொழிலாளர் மத்திய சங்கம் செயாவின் கூட்டணியை முழுமையாக ஏற்க வாய்பில்லை.
சிபிஎம்-ன் பாலிசியை மக்களிடம் கொண்டுசெல்பவை தொழிற்சங்க அரங்கங்கள்தான் (தமுஎச உட்பட).
லக்கி தெரியாமல் எழுதவில்லை. தெரிந்தே சரியாக எழுதியுள்ளார்.
- சென்னைத்தமிழன்
//தமிழன் சொன்னது…
ReplyDelete"எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகத்தின் ‘ஓனர்’ பச்சமுத்து இந்தச் சங்கத்தின் தலைவராம். நல்ல விஷயம். "
ராமச்சந்திரா மருத்துவ பல்கலைக்கழக ‘ஓனர்’ வெங்கடாச்சலமும் இந்தச் சங்கத்தின் ஒரு பார்ட்னர்.//
இவர்களே மிகப்பெரிய கல்வி நிறுவனங்களை நடத்தி வருகிறார்கள்,கட்சி ஆரம்பிப்பதெல்லாம் ஒரு புறம் இருக்கட்டும்..,
ஏன் இவர்கள் தங்கள் ஜாதி மக்களுக்கு இலவசமாகவோ அல்லது
குறைந்த செலவிலோ கல்வியறிவு கொடுக்கக்கூடாது?
இதற்க்கு Govt quota தெவையில்லை
management quota இவர்களிடம் தானே இருக்கிறது.
கலைக்கோவன் என்ன கேட்கிறீர்கள்..???
ReplyDeleteஇதெல்லாம் செய்ய அவங்க இளிச்ச வாயகன்களா..??
வியாபாரத்தில் தான் பார்ட்னர் உண்டு. சங்கத்திலேயே பார்ட்ட்னர் வைத்ததால் இதுவும் ஒரு வியாபாரமே..???
சங்கத்தின் நோக்கங்கள்:
மேலும் அறிவற்ற ஜாதி வெறி கூட்டத்தை உண்டுபண்ணுவது..
வெயிட் காட்டுவது.. சீட் கேட்பது, மிரட்டுவது, தன்னலமற்ற தீயாக சீலர்களாக (மருத்துவர் அய்யா ) போல உருவாக வேண்டும்.
அவனெல்லாம் செய்யும் போது நாம செய்ய முடியாதா என்ற எண்ணம்தான்.
அதன் மூலம் மேலும் பல்கலைகழகங்களை
ஏற்படுத்தி கொள்ளையடிப்பது..
வர வர பத்ரியின் பதிவுகள் மேலோட்டமான நீயா நானா போல ஆகி வருவது தெரிகிறது..
என்ன கொடும சார் இது...பா.மா.கா வை சாதி கட்சி,மரம் வெட்டி கட்சி,சின்ன புத்தி உள்ள கட்சி என்று விமர்சித்த மக்கள்!, இன்று அவரவர் சாதி பெயரில் கட்சிகள் ஆரம்பிக்கும் பொழுது விமர்சனங்களை முன்வைக்காமல் மாறாக.... இந்த சாதியில் இவரர் இருக்கிறார்,அவர் இருக்கிறார் என்கிறார்கள்.நல்ல சமுதாயம்!!..
ReplyDeleteஎன்னை பொறுத்தவரை விஜயகாந்த் டெபாசிட் கூட இல்லாமல் இழந்தால்,திருப்பதிக்கு போய் மொட்ட போடுவேன்.
//
ReplyDeleteகடந்த சில ஆண்டுகளில் மிகவும் பலவீனப்பட்ட தமிழகக் கட்சி என்றால் அது மதிமுக மட்டும்தான். கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் உதிர்ந்து திமுகவுக்குப் போனார்கள். அது இன்றுவரை தொடர்கிறது.
//
செஞ்சி ராமச்சந்திரன், எல்.கணேசன் ஆகியோர் திமுகவில் இணந்தாகிவிட்டது.
மதிமுகவிலிருந்து அதன் அவைத் தலைவர் மு.கண்ணப்பன், தேனி மாவட்டச் செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்எல்ஏ ஆகியோர் அடுத்தடுத்து விலகியுள்ள நிலையில்...
"முதல்வர் கருணாநிதி மதிமுகவை அழிக்க முயற்சி செய்கிறார்."
"நாங்கள் தான் உண்மையான திமுக என்பதை உணர்த்துவோம்" என்று வைகோ சொன்னார்.
மு.கண்ணப்பன் இணைப்பு விழாவில், ‘’மதிமுக என்றால் மறுபடியும் திமுக என்று கருணாநிதி பேசினார்.
வைகோ.. இலங்கை தமிழர் பிரச்னையை வைத்து பிழைப்பு ஓட்டிக்கொண்டிருக்கிறார்.
அது ஓட்டை பெற்றுத்தருமா? ஓட்டையாகப் போகுமா? பார்ப்போம்.
//சிபிஎம்க்கு பல்வேறு அரங்கங்கள் உள்ளது என்பது உண்மை, அவர்கள் அனைவரும் வெவ்வேறு கட்சிகளில் இருப்பார்கள் என்பதும் உண்மை. ஆனால் சிபிஎம்-ன் வாக்கு வங்கி அந்த அரங்கத்திருந்துதான் பெறப்படும். சிபிஎம்-ன் அனைத்து கருத்து வடிவங்களுக்கும் செயல் வடிவம் கொடுப்பவை அந்த அரங்கம்தான். அரசு ஊழிழர் சங்கம், போக்குவரத்து தொழிலாளர் மத்திய சங்கம் செயாவின் கூட்டணியை முழுமையாக ஏற்க வாய்பில்லை.
ReplyDeleteசிபிஎம்-ன் பாலிசியை மக்களிடம் கொண்டுசெல்பவை தொழிற்சங்க அரங்கங்கள்தான் (தமுஎச உட்பட).
லக்கி தெரியாமல் எழுதவில்லை. தெரிந்தே சரியாக எழுதியுள்ளார். //
திரு சென்னைத் தமிழன் அவர்களே...
1. தமுஎச ஒரு தொழிற்சங்கம் அல்ல. அது தமிழ் முற்போக்கு எழுத்தாளர்கள்கள் சங்கம். தற்போது தமிழ் முற்போக்கு கலைஞர்கள் சங்கம்.
2. அரசு ஊழிழர் சங்கம், போக்குவரத்து தொழிலாளர் மத்திய சங்கம் செயாவின் கூட்டணியை முழுமையாக ஏற்க வாய்பில்லை - இது சரியே. ஆனாலும் முற்றிலும் சரியல்ல.
3. சிபிஎம்-மின் அனைத்து கொள்கைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பது தொழிற்சங்கங்கள் மட்டுமல்ல. இளைஞர் சங்கம், மாதர் சங்கம் போன்ற அமைப்புகளும் ஒன்று. தொழிற்சங்கங்கள் மட்டுமே இயக்கமாகாது. அதுவும் ஒரு வழி. அவ்வளவே. மக்கள் இயக்கங்களும், கட்சி போராட்டாங்களும், இளைஞர் சங்கங்களும், தமுஎச-வும், மாதர் சங்கமும் அவை போன்றவையே. அறிவியல் இயக்கம் கூட உண்டு.
வெறுமனே வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று கருத்திடுவது தவறு. முழுபுரிதலோடு கருத்திடுவதே முறை. அதனையே சுட்டிக்காட்டினேன். நன்றி.
அரசு ஊழியர் சங்கத்தில் எழுந்த எதிர்ப்பலையை கண்டு பயந்து தான் சி.பி.எம் அதிக இடங்கள் கேட்பது போல் கேட்டு கூட்டணியிலிருந்து வெளியில் செல்லாமா என்று பார்த்து கொண்டுள்ளதாக பட்சி கூறுகிறது
ReplyDelete//தமிழ்நாடு பார்க்கவ குல சங்கம் என்று திடீரென சில விளம்பரங்களைப் பார்த்தேன். அப்போதுதான் இந்தப் பேரைக் கேள்விப்பட்டேன். இது என்ன ஜாதி?//
ReplyDelete//”பார்க்கவ குல க்ஷத்திரியர்கள்” எனப்படும் பார்க்கவர்களில் மூன்று பிரிவுகள் முக்கியமானவை: மூப்பனார் (ஸ்ருதிமான்), உடையார் (நத்தமான்) மற்றும் நயினார் (மலையமான்). நயினார்கள் திருக்கோயிலூர் பகுதியில் கணிசமான அளவில் வாழ்கின்றனர். //
இதில் உடையார்கள் அதிகளவு கத்தோலிக்க கிருத்தவர்கள். ராமநாத புற மாவட்டத்தில் அதிகம் உள்ளனர் (இவர்களுக்கு அதரவாக பன்னீர் செல்வம் மாவட்டம் அறிவிக்க பட்டது. பன்னீர் செல்வம் முதல் இந்தி எதிர்ப்பு போரட்டத்தை நடத்தியவர்.முதல் பிராமணர் அல்லாத பாரிஸ்டர் ) . ஆனால் சாதி சங்கங்களில் இந்துக்களும் கிருத்துவர்களும் மிகவும் இணைந்து செயல்படுகிறார்கள். எங்கள் ஊரில் கிருத்தவ வன்னியர் சங்கம் உள்ளது. பொதுவாக ராமதாசுக்கு அதரவாக இருப்பார்கள். பிராமண கிருத்தவர்கள் மிக குறைவு என்று நினைக்கிறன் , திருச்சியில் ஜோசப் தோப்பு என்ற அக்ரகாரம் இருப்பதாக கேள்விப்பட்டிருக்கிறேன். எனது கல்லூரியில் ஜோசப் சிவன் என்ற பிராமண கிருத்தவ பாதிரியார் இருந்தார்
உண்மை தான் யாதவர்கள் தனியே கட்சி ஆரம்பித்து கூட்டணியாகப் போட்டியிடலாம்
ReplyDelete