வெஸ்ட்லண்ட் நிறுவனமும் கிழக்கு பதிப்பகமும் இணைந்து, ஜெஃப்ரி ஆர்ச்சரின் இரு புத்தகங்களைத் தமிழில் கொண்டுவருகிறார்கள்.
A Twist in the Tale என்ற சிறுகதைகளின் தொகுப்பு. Not a Penny More, Not a Penny Less என்ற நாவல்.
ஐஐடி சென்றபின்னர்தான் ஆங்கில பல்ப் புத்தகங்களை ஆர்வமாகப் படிக்க ஆரம்பித்தேன். நான் 1990-ல் ஐஐடி ஹாஸ்டலில் கண்டெடுத்த புத்தகம் A Twist in the Tale. அதன்பின், ஜெஃப்ரி ஆர்ச்சரின் ஒரு புத்தகம் விடாமல் படித்திருக்கிறேன். A Prisoner of Birth வரை. Paths of Glory வாங்கி வைத்துள்ளேன், இன்னமும் படிக்க ஆரம்பிக்கவில்லை.
அவரது புத்தகங்களை தமிழுக்குக் கொண்டுவருவதில் நான் ஈடுபடுவேன் என்று ஒருக்காலும் நினைத்ததில்லை. இந்தப் புத்தகங்களுக்கான இந்திய மொழிகள் உரிமை (டாடா/லாண்ட்மார்க்) வெஸ்ட்லண்ட் நிறுவனத்திடம் உள்ளது. தமிழ் மாற்றம், மற்றும் இந்தப் புத்தகங்களின் விற்பனை உரிமை கிழக்கு பதிப்பகத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் ஜெஃப்ரி ஆர்ச்சர் இந்தியா வருகிறார். மே 10 அன்று அவர் சென்னை லாண்ட்மார்க்கில் புத்தகங்களைக் கையெழுத்திட்டுத் தருகிறார். அப்போது அவரிடமிருந்து தமிழ்ப் புத்தகங்களையும் கையெழுத்திட்டுப் பெறலாம். இது தொடர்பான அறிவிப்பை, நேரம் முடிவானதும் தெரிவிக்கிறேன்.
My favorite author and my favorite books.I think people who read them in Tamil will relish them depending on the translation.
ReplyDeleteI can assure you that the translations will be very Tamil friendly and readable and won't be like junoon translations. Each book has been worked on thrice.
ReplyDeleteஷண்முகப்ரியன்: A Twist in the Tale - அச்சுக்கு முந்தைய தமிழ் பிரதி, லேசர் பிரிண்டரில் அடித்தது உங்களுக்கு வேண்டுமா? வேண்டும் என்றால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் (badri@nhm.in). அதைப் படித்துப் பார்த்து, தமிழாக்கம், எடிடிங் எப்படி உள்ளது என்பதை நீங்கள் முடிவு செய்து, அதைப்பற்றி எழுதலாம்.
ReplyDeleteஇன்னொருவர் யாராவது (சென்னையில் இருப்பவர்) கேட்டால் மற்றொரு லேசர் பிரிண்ட் அவுட் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். பிடிஎஃப் அனுப்பச் சொல்லி தயவுசெய்து யாரும் கேட்காதீர்கள். நன்றி.
அடுத்த வாரம் (திங்கள்) Not a Penny More, Not a Penny Less, லேசர் பிரிண்ட் அவுட் - இரு பிரதிகள் தரத் தயாராக உள்ளேன். அது வேண்டும் என்பவர்களும் (சென்னையில் உள்ளவர்கள்) அஞ்சல் அனுப்பவும்.
நன்றி!
ReplyDeleteOff topic: Abraham Eraly எழுதிய THE MUGHAL WORLD (Penguin)படித்துக்கொண்டிருக்கிறேன்.நீங்களும் படித்திருக்கலாம்...மொகலாய மன்னர்களைப் பற்றி நிறைய ஆராய்ச்சி செய்து விசயஞானத்தோடு அருமையாக எழுதியிருக்கிறார்.இது போன்ற புத்தகங்களை தமிழில் கொண்டுவரும் யோசனை இருக்கிறதா?
நல்ல விஷயம்... தவறாமல் எக்மோர் கன்னிமரா இலவச புத்தக கண்காட்சிக்கு சில புத்தகங்களை அனுப்பிவிடுங்கள்.
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteஎல்லாம் சொன்னீர்கள், விலைமட்டும் குறிப்பிடவில்லையே :)
தலைப்புகள் ஆங்கிலத்தை அப்படியே மொழிபெயர்க்கவேண்டும் என்று ஒப்பந்தப்படி ஏதேனும் கட்டாயமா? இரண்டு தலைப்புகளும் ‘சுமார்’ என்பது என் கருத்து, ஏற்கெனவே ஆங்கிலத்தில் படித்தவர்களுக்கு லேசாகக் கிளுகிளுப்பூட்டலாம், புதியவர்கள் ஆசையாக எடுப்பார்களா என்று கொஞ்சம் சந்தேகமாக இருக்கிறது.
- என். சொக்கன்,
பெங்களூர்.
சுமார்தான். ஆனால் வேறு தலைப்புகள் கிடைக்கவில்லை. தோன்றினால் சொல்லுங்கள். அடுத்த எடிஷனில் போட்டுவிடலாம்.
ReplyDeleteபுதியவர்கள் தலைப்புக்காக அல்ல, ஜெஃப்ரி ஆர்ச்சரின் பெயருக்காக வாங்குவார்கள் என்பதுதான் எங்கள் கருத்து.
விலை இன்னும் முடிவாகவில்லை. முடிவு செய்ததும் சொல்கிறேன்.
நல்ல முயற்ச்சி பத்ரி.
ReplyDeleteவாழ்த்துகள்.
பல்லாவரம் புத்தக கண்காட்சி நிலவரம் என்ன..??
கலக்கல்!
ReplyDeleteஷண்முகப்ரியன்: A Twist in the Tale - அச்சுக்கு முந்தைய தமிழ் பிரதி, லேசர் பிரிண்டரில் அடித்தது உங்களுக்கு வேண்டுமா? வேண்டும் என்றால் எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள் (badri@nhm.in). அதைப் படித்துப் பார்த்து, தமிழாக்கம், எடிடிங் எப்படி உள்ளது என்பதை நீங்கள் முடிவு செய்து, அதைப்பற்றி எழுதலாம்.//
ReplyDeleteகண்டிப்பாக பத்ரி.நாளையோ,நாளை மறுதினமோ உங்களிடம் பிரதிகளைப் பெற்றுக் கொள்கிறேன்.நன்றி.
ட்விஸ்ட் இன் த டேல் போல சுஜாதா தூண்டில் கதைகள் எழுதியது நினைவு வருகிறது. இன்றுதான் http://chennaidailyfoto.wordpress.com பதிவில் இந்த ஆர்ச்சர் தொகுப்பின் ஒரு கதையை (The steal) மேற்கோள் காட்டினேன். ஆச்சரியமாக இங்கு அந்த தொகுப்பு பற்றி பதிவு. வாழ்த்துக்கள் பத்ரி. யார் தமிழாக்குகிறார்கள்?
ReplyDelete'ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல்' தலைப்பு எனக்குச் சரியே என்று படுகிறது.என்ன,பைசா என்பதற்குப் பதில் 'காசு 'என்று இருந்தாலும் அதே தொனிதான் இருந்திருக்கும் ஆனால் அது உங்கள் எழுத்து.ரொம்பவும் தலை இடக் கூடாது.
ReplyDeleteஆனால் 'முடிவில் ஒரு திருப்பம்' என்பதை ரொம்பவே மூலத்தில் இருந்து மாற்றி விட்டீர்கள் பத்ரி.
'A TWIST IN THE TALE'ஐ 'A TWIST IN THE END ' என்று ஆக்கி விட்டீர்கள்.
'கதையில் ஒரு திருப்பம்' என்றால் அந்தத் திருப்பம் எந்த இடத்தில் வேண்டுமானாலும் வரலாம்.கதைகளைப் படிக்கப் படிக்கத்தான் அது மெல்ல வாசகர்களுக்குப் புரிய ஆரம்பித்து முடிவில்தான் அது என்பதைத் தெரிந்து கொண்டவுடன் ஒவ்வொரு கதைக்கும் முடிவில் வரும் புன்னகையை நீங்கள் முதலிலேயே இழக்கச் செய்கிறீர்கள்.
திருப்பம் முடிவில்தான் என்பதைக் கூட ஆசிரியர் சஸ்பென்ஸாக(இதற்குத் தமிழ் என்ன?) வைத்திருந்ததை நீங்கள் முதலிலேயே உடைத்து விடுகிறீகள்.
மொழிபெயர்ப்பில் மூன்று கடல்களைக் கடந்து பாரிஜாதப் பூவைப் பறித்து வரவேண்டும்.
முதல் கடல் அது இன்னொருவரின் படைப்பு.
இரண்டாவது கடல் அது இன்னொரு மொழி.
மூன்றாவது கடல் உங்கள் தாய்மொழி.
பாரிஜாதப் பூ உங்கள் கையில் சிரிக்க என்னுடைய வாழ்த்துகள்.
'NO COMEBACKS' BY FREDERICK FORSYTH IS ALSO OF THE SAME GENRE,I THINK.
ReplyDeleteகலக்கல்! அதே விறுவிறுப்புடன் இருந்து, துள்ளல் தமிழும் சேர்ந்தால் - ஆஹாவென்றிருக்கும்.
ReplyDeleteவாழ்த்துக்கள்.
’நாளை தேன் கிடைக்கும்’ என்று கேள்விப்பட்டதுபோல் இருக்கிறது. தேன் குடிக்க காத்திருக்கிறேன். twist-in-the-tale ஓர் அற்புதமான தொகுப்பு. ஷண்முகப்ரியன் சொல்வது போல் ஆரம்பத்திலேயே கடைசியில் ஒரு திருப்பம் இருக்கிறது என்று சொல்லிவிடுவது வாசகர்களுக்கு சுவாரசியத்தைக் குறைத்துவிட வாய்ப்பிருக்கிறது! ‘எதிர்பார்க்காத திருப்பங்கள்’, ‘யூகிக்க முடியாத திருப்பங்கள்’, ‘திருப்பங்கள் இல்லாமல் கதைகளா?’, ‘சுவாரசிய திருப்பக் கதைகள்’. இவற்றுள் ஏதாவது தேருமா?
ReplyDeleteI wanted to share this link related to translation, you may already be aware of it
ReplyDeletehttp://portal.unesco.org/culture/en/ev.php-URL_ID=7810&URL_DO=DO_TOPIC&URL_SECTION=201.html
ஒரு பைசா கூடாமல் ஒரு பைசா குறையாமல் புத்தகத்தை வாங்கி விட்டேன் படிக்க படிக்க ஆர்வமாக உள்ளது... எப்படி எல்லாம் பங்குசந்தையில் ஏமாற்றுகின்றார்கள் என்பதை மிக்த்தெளிவாக விளக்கியுள்ளார் (தமிழ் ஆக்கம் செய்தவருக்கு நன்றி) ஆங்கிலத்தில் படிப்பதைவிட தமிழ் படிக்கும்போது கதையில் உள்ள காதாபத்திரங்கள் நம் மனதில் பதிகின்றது ”பொன்னியின் செல்வனுக்கு” பிறகு என் மனதில் பதிந்த கதை.
ReplyDelete