எனது இரண்டாவது மொழிபெயர்ப்பு நூல் இப்போது வெளியாகியுள்ளது. ஷெர்லாக் ஹோம்ஸ் தொடரில் முதல் நூல். இதைத் தொடர்ந்து அடுத்த கதைகளையும் மொழிபெயர்க்க ஆரம்பித்துவிட்டேன்.
மொழிபெயர்ப்பு இப்போதெல்லாம் அலுப்பதில்லை. ஆனால் மொழிபெயர்த்து அச்சில் வந்ததைப் படிக்கும்போதும் பல வாக்கியங்களை மாற்றலாம் போன்றே உள்ளது. மொழிபெயர்ப்பு என்பது எப்போதுமே முடிவுறாத ஒரு வேலை என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.
இந்தப் புத்தகத்தின் விலை தொடர்பாக சிலர் என்னைத் தொடர்புகொண்டனர். ஒரு புத்தகத்துக்கு விலை வைக்கும்போது அதனை எத்தனை பிரதிகள் அடிக்கிறோம், அது எப்படி விற்கும் என்ற யூகத்தை வைத்தே செய்கிறோம். அதன்படி, இந்த நூல் அதிகமாக விற்காது என்று நினைத்து, குறைவான பிரதிகள் அச்சடித்துள்ளோம். குறைவான பிரதிகள் அச்சாகும்போது, ஒவ்வொரு பிரதிக்கான அச்சுக் கூலி அதிகமாக ஆகும். அதன் காரணமாகவே விலை சற்று அதிகம்.
ஆனால், இந்தப் புத்தகம் வேகமாக விற்கும் என்பது முதல் இரு மாதங்களில் தெரிந்துவிடும். அப்படி ஆகும்பட்சத்தில் இதன் விலை குறைக்கப்படும்.
இந்தப் புத்தகம் பற்றிய பா.ராகவனின் பதிவு
சேலம் புத்தகக் கண்காட்சியில் இன்றும் இருப்பேன்
6 hours ago
அது சரி
ReplyDelete120 ரூபாய் என்பது அதிக விலை இல்லையே
ஏன் இவ்வளவு பயம்
வாழ்த்துக்கள் பத்ரி!
ReplyDeleteஅப்பாடா,
ReplyDeleteஒரு வழியாக புத்தகம் வந்தே விட்டது. இந்த புத்தகம் அச்சேறும் நிலையில் இதனைப் பற்றி என்னுடைய காமிக்ஸ் பதிவு ஒன்றில் சுட்டி ஒன்று கொடுத்தேன். (எத்தனை பேர் கிழக்குக்கு போன் செய்தார்களோ, எனக்கு ஏழெட்டு கால்'கள் வந்து விட்டன - புத்தகம் எங்கே என்று?). = http://tamilcomicsulagam.blogspot.com/2009/05/thigil-library-another-great-initiative.html
உங்கள் மொழியாக்கத்தில் உங்களை போலவே எனக்கும் ஒரு குண்டு தைரியம் உண்டு.
புத்தகம் அதிகமாக விற்று, இந்த ஒரு விஷயத்திலாவது உங்களின் எதிர்பார்ப்பும், கால்குலேஷனும் தவறாகப் போக வேண்டும் என்று நான் ஒரு வாசகனாக விரும்புகிறேன்.
கிங் விஸ்வா.
Carpe Diem.
தமிழ் காமிக்ஸ் உலகம்
//ஆனால், இந்தப் புத்தகம் வேகமாக விற்கும் என்பது முதல் இரு மாதங்களில் தெரிந்துவிடும். அப்படி ஆகும்பட்சத்தில் இதன் விலை குறைக்கப்படும்.//
ReplyDelete;)) இப்படிச் சொன்னால் முதல் பிரதியை வாங்காமல் இரண்டாம் பிரதிக்காக எல்லாரும் காத்திருக்க மாட்டார்களா? அப்படி என்றால் எப்படி முதல் பிரதி சீக்கிரமாக விற்கும்?
http://vetpractice.blogspot.com/2009/12/blog-post.html
ReplyDelete