13 ஜூன் 2009, சனிக்கிழமை, மாலை 6.00 மணிக்கு, கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தில் தமிழ் விக்கிபீடியா பற்றி ரவிசங்கர் பேசுகிறார்.
அவர் அனுப்பியுள்ள சிறு அறிமுகம் இதோ:
இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது. 5,000-க்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன. ஆனால், இந்தத் தமிழ் உள்ளடக்கம் பெருமளவு பக்கச் சார்புடையதாகவும், கருத்து சார்ந்ததாகவும், அரசியல்-திரைப்படம்-சமையல்-ஆன்மிகம்-கிரிக்கெட் என்று குறுகிய வட்டத்தில் உழல்வதாகவும் உள்ளது. கல்வி நோக்கில் ஒரு தலைப்பு குறித்துத் தேடினால், தகவலை முன்வைத்து நடுநிலையுடன் எழுதப்பட்ட விரிவான கட்டுரைகள் குறைவே.
ஆங்கிலத்தில் இந்தத் தேவையை நிறைவு செய்ய ஏராளமான தளங்கள் உள்ளன. அவற்றில் முதன்மையானது ஆங்கில விக்கிபீடியா. ஆனால், தமிழ்நாட்டில் ஒரு கலைக்களஞ்சிய ஆங்கிலக் கட்டுரையைப் புரிந்து பயன்படுத்தும் மக்கள் 30 விழுக்காடாவது இருப்பார்களா என்பது கேள்விக்குரியது.
ஆங்கிலம் போல் தமிழில் ஏராளமான தகவல் தளங்கள் இல்லை. தமிழ் விக்கிபீடியா மட்டுமே ஒரே ஒருங்கிணைந்த தகவல் தளமாக இருப்பதால், தமிழ் விக்கிபீடியாவை வளர்க்க வேண்டியது முக்கியம். கடந்த 5 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் தமிழ் விக்கிபீடியாவில் 18,000+ கட்டுரைகளே உள்ளன. இவற்றில் குறிப்பிடத்தக்க அளவு குறுங்கட்டுரைகள். இன்னும் பல முக்கிய துறைகளைக் குறித்து அடிப்படைக் கட்டுரைகள்கூட இல்லை. குறைந்தது ஒரு இலட்சம் கட்டுரைகளாவது இருந்தாலே ஒரு குறைந்தபட்ச பயனை நல்க இயலும்.
தமிழ் விக்கிபீடியாவுக்குப் பங்களிக்க இருக்கும் மிகப் பெரிய தடைகள்:
* கணினியில் தமிழில் எழுதத் தெரியாமை.
* தமிழில் கோர்வையாகக் கட்டுரை எழுத இயலாமை.
* இணையம் குறித்த அடிப்படை அறிவின்மை. வலையில் எழுதும் பழக்கமின்மை.
* சரியான கணினி, இணைய வசதிகள் இல்லாமை.
தமிழ் வலைப்பதிவர்கள், இந்தத் தடைகளைக் கடந்தவர்கள். பல நாடுகளில் இருந்து பல துறைகள் குறித்து எழுதக்கூடியவர்கள். எனவே, வலைப்பதிவர்களிடம் இருந்து பெரிய அளவில் பங்களிப்புகளை எதிர்ப்பார்க்கிறோம். இருப்பினும், ஏறத்தாழ பத்து தமிழ் வலைப்பதிவர்கள் மட்டுமே தமிழ் விக்கிபீடியாவுக்கு பங்களித்து வருகிறார்கள். வலைப்பதிவர்கள் பங்களிப்பதற்கான தடைகள்:
* பிளாகர், வேர்டுபிரெசு போல மீடியாவிக்கி மென்பொருள் பயன்படுத்த இலகுவாக இல்லாமை.
* வலைப்பதிந்தால் மறுமொழிகள், நண்பர்கள், ஊடக வாய்ப்புகள் என்று பயன்கள் கிட்டுவது போல விக்கிபீடியாவுக்குப் பங்களிப்பதால் தனக்கு என்ன நன்மை கிடைக்கும் என்ற கேள்வி.
* விக்கிபீடியா செயல்படும் தன்மை பற்றி தெளிவின்மை. (நான் எழுதும் கட்டுரையை இன்னொருவர் எப்படித் திருத்தலாம், திருத்தினால் நான் எழுதியது வீணாகாதா, விக்கிபீடியா நடுநிலையானதா, மற்ற பங்களிப்பாளர்களிடம் மல்லுக்கட்டி நேரம் போகுமா, ஆங்கில விக்கிபீடியா போல் இங்கும் பிரச்னை வருமா... போன்ற கேள்விகள்.)
வலைப்பதிவர்கள் மனத்தில் இருக்கும் இக்கேள்விகளுக்கு விடை அளிக்கும் முகமாகவும், கூடிய பங்களிப்புகளை வேண்டியும் இந்தக் கூட்டம் நடைபெறும். கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல்:
* விக்கிமீடியா திட்டங்கள் அறிமுகம்.
* விக்கிபீடியாவில் கட்டுரை எழுதுவது எப்படி? ஒரு பத்து நிமிட அறிமுகம்.
* விக்கிபீடியாவுக்கு வலைப்பதிவர்கள் எப்படிப் பங்களிக்கலாம்?
* கேள்வி-பதில், கலந்துரையாடல்.
இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு, மேலதிகப் பயிற்சி பெற விரும்புபவர்கள் சூன் 14, சென்னையில் நடக்கும் விக்கிபீடியா பட்டறையிலும் கலந்து கொள்ள வரவேற்கிறோம். விவரங்களுக்கு http://bit.ly/7Wofa பார்க்கவும்.
விலகி அணுகுபவை
2 hours ago
//இந்திய மொழிகளில் இந்திக்கு அடுத்து தமிழ்தான் இணையத்தில் அதிக அளவு இடம் பெற்றிருக்கிறது//
ReplyDeleteஇதனையொத்த அல்லது இணையத்தில் தமிழின் இடம் இதைவிட அதிகமாக இருப்பதாகவே பலரும் சொல்லிவருகின்றனர். இதை நீங்களாவது நம்புகிறீர்களா? இந்த இடஅளவு எப்படி யாரால் அளவிடப்படுகிறது? முறையான புள்ளியியல் அளவீட்டு முறைகள் ஏதேனும் பயன்படுத்தப்படுகின்றனவா?
ஆங்கில விக்கிபீடியாவை எந்த ஓர் அமெரிக்கப் பல்கலைக்கழகமும் அங்கீகரித்ததாகத் தெரியவில்லை. மாணவ்ர்கள் எழுதும் கட்டுரைகளில் விக்கிபீடியாவை மேற்கோள் காட்டக்கூடாது என்றே பல பல்கலைக்கழகங்கள் அறிவுறுத்திவருகின்றன. விக்கியின் ஆங்கில உள்ளடக்கத்தின் தரமே அவ்வளவுதான். வேண்டுமானால், விக்கியைச் சில focused group-கள் தம் கருத்துப் பரப்பலுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர, தனிப்பட்டவர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது.
அறிமுகத்துக்கு நன்றி, பத்ரி.
ReplyDeleteரெங்கதுரை,
இந்திய மொழி இணைய உள்ளடக்கத்தில் தமிழின் பங்கு 19% என கூகுள் இந்தியாவின் ஆய்வு மேலாளர் தெரிவித்துள்ளார். இதை எப்படி அளவிடுகிறார்கள் எனத் தெரியவில்லை. ஆனால், கூகுளின் வேலையே இணைய உள்ளடக்கத்தை ஆய்வது தான் என்பதால் இந்த கூற்று நம்பகத்துக்குரியது.
விக்கி தவிர வேறு எந்தெந்த வகைகளில் நம்பத் தகுந்த கட்டற்ற இணைய தமிழ் உள்ளடக்கத்தை உருவாக்கலாம் என்பது குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி.
//விக்கி தவிர வேறு எந்தெந்த வகைகளில் நம்பத் தகுந்த கட்டற்ற இணைய தமிழ் உள்ளடக்கத்தை உருவாக்கலாம் என்பது குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். நன்றி.//
ReplyDeleteநால் :) :) :)
//இந்திய மொழி இணைய உள்ளடக்கத்தில் தமிழின் பங்கு 19% என கூகுள் இந்தியாவின் ஆய்வு மேலாளர் தெரிவித்துள்ளார்.//
ReplyDelete???
இந்தியாவில் உள்ள இனையதளங்களில் (19 per cent of the total content on the web in India) அது 19 சதம்
.blogspot
.wordpress
ஆகியவை இதில் வந்திருக்காது என்றே நினைக்கிறேன்
ஆக மொத்தமாக கணக்கிட்டால் இது மாறலாம்
தகவலுக்கு நன்றி பத்ரி.
ReplyDeleteமொட்டை மாடியில் சந்திப்போம்.
ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை
ReplyDeletehttp://kuzhali.blogspot.com/2009/06/tami-wikipedia.html
அப்படி மேற்கோள் காட்ட வேண்டாம் என்று பல்கலைக்கழகங்கள் மட்டும் சொல்லவில்லை. அதனை உருவாக்கிய ஜிம்மி வேல்ஸே சொல்கிறார்.
ReplyDeleteவிக்கி மட்டுமல்ல இணையத்தில் இருந்து எதையும் மேற்கோள் காட்டுவதை கல்லூரிகள் பெரும் பாலும் ஒப்புக்கொள்வதில்லை. மேலும் விக்கி என்பது தனிப்பட்டவர்கள் தாக்கத்தை ஏற்படுத்தவும் அல்ல.!
இடுகையின் தொடக்கத்தில் இருந்த “ஜூன்” முடிவில் “சூன்” ஆக மாறிய மாயம் என்னவோ! :)
ReplyDeleteதமிழ் விக்கிபீடியாவில் கிரந்த எழுத்துக்களை “செலக்டிவாக” - அதாவது ஜெயலலிதா, ஸ்டாலின் போன்ற பிரபலங்கள் நீங்கலாக - ஒதுக்கி அல்லது மாற்றி எழுதப்படும் வழிமுறையின் தாக்கமோ!
மேல்விவரங்களுக்கு கணிதமேதை இராமானுஜ(ச)ன் பற்றிய விவாதங்களை இந்தச் சுட்டியில் வாசித்துப் பாருங்கள்:-
http://tinyurl.com/ramanusan-episode
அன்புடன்
எஸ்.கே
எஸ்.கே: ஜூன், சூன் ஆனதன் மர்மம்: முதல் இரு வரிகள் நான் எழுதியவை. அடுத்த அனைத்தும் ரவிசங்கர் எழுதியவை.
ReplyDeleteஅவர் எழுதியதில் ‘விக்கிப்பீடியா’ என்று இருந்ததை ‘விக்கிபீடியா’ என்று மாற்றினேன். ஏனோ காரணத்தால் பலர் அதனை ஒரு ‘ப்’ போட்டு அழுத்தி உச்சரிப்பதை என்னால் புரிந்துகொள்ளமுடியவில்லை.
‘வி(க்)கி’, ‘பீடியா’ என்ற இரண்டு சொற்கள் சேரும்போது எந்தப் புணர்ச்சி விதியைப் பயன்படுத்தி அது ‘விக்கிப்பீடியா’ என்று ஆனது என்று எனக்குப் புரியவில்லை. மற்றொருவிதமாக, அது ஆங்கிலத்திலேயே Wikipedia என்ற முழுச் சொல்லாகவே இருப்பதால், அப்படியே தமிழ் ஒலிப்பான்களைக் கொண்டு அதனை விக்கிபீடியா என்று சொல்வதே சரி என்பது என் கருத்து.
தமிழ் விகியில் ஒரு தலிபான் குழு இயங்குகிறது. அதன் முக்கிய நோக்கம் தமிழிலிருந்து கிரந்த எழுத்துகளை எடுக்க வேண்டும். அதனால் மற்றவர்கள் கட்டுரை எழுத வேண்டும், இவர்கள் சென்று கிரந்த எழுத்துகளை மாற்ற வேண்டும். அது தவிற, சமஸ்கிருத சம்பந்த வார்த்தைகள் இருந்தால், அதை `சுத்த` தமிழில் எழுத வேண்டும். தமிழ்விகியை கண்ட்ரோல் செய்யும் 4/5 நபர்கள் இந்த புல்லுரிவு கொள்கையைத்தான் தீவிரமாக கடைப் பிடிக்கின்றனர். உதாரணமாக `இஸ்லாம்` என கட்டுரை யாராவது எழுதினால், அதை `இசுலாம்` என மாற்றுவர். யாராவது லத்தீன் கவி ஹோரேஸ் என கட்டுரை எழுதினால், அதை ஓராசு என மாற்றுவர்.
ReplyDeleteமு.க.ஸ்டாலின் பெயரையும், இசுட்டாலின் என மாற்றினர். ஆனால் இதற்கு நீண்ட சர்ச்சைகளுக்கு பின் ஸ்டாலின் என மாற்றப் பட்டது. இந்த தலிபானின் கூற்றுப்படி தமிழ்விக்கி , ஊடகங்கள், தமிழிலக்கியம், சாதாரண தமிழரகளின் தமிழ் எழுத்துகள், இவையெல்லாம் கிரந்த எழுத்துகளால் கெடுக்கப் படுவிட்டன. தமிழ்விகி, புதிய கிரந்தம் தவிற்கும் ஊடகம். அதனால் மற்றவர்கள் கட்டுரைகளை எழுத வேண்டும்; இந்த தலிபான் குழு அதிலிருந்து கிரந்த எழுத்திகளையும், வட மொழி வார்த்தைகளையும் அகற்ற வேண்டும். இதுவே இவர்களது புல்லுருவி கொள்கை. இந்த intellectual vandalism நிறுத்தாத வரை, மற்றவர்கள் தமிழ்விகியில் போகக் கூடாது.
இந்த தலிபான் குழு இப்படி ஆயிரக்கணக்கான இடங்களில் வேண்டலிசம் செய்துள்ளது.
எது விகிபீடியா இல்லை என்று http://en.wikipedia.org/wiki/Wikipedia:What_Wikipedia_is_not சொல்கிறது. விக்கி ரூல்களே, இது Wikipedia is not a soapbox, propaganda, advocacy, or recruitment of any kind, commercial, political, religious, or otherwise. என உறுதியாக உள்ளன. ஆனால் இந்த புல்லுரு்வி தலிபான், தமிழ் விக்கியை கிரந்த ஒழிப்பு மேடையாகத்தான் பயன் படுத்துகிரது.
அதனால் கட்டுரைகள் பொதுவாக `சப்` என்று உள்ளன. அதற்கு மேல் எவ்வளவோ தகவல், இணப்பு, இலக்கண குறைபாடுகள். ஆங்கில விக்கியோட, தமிழ் விக்கியை கம்பேர் செய்தால், தமிழர்களுக்கு தெரிந்த சப்ஜெக்டான ` காமராசர் வாழ்க்கை, அல்லது ராஜாஜி அல்லது அண்ணாதுரை வாழ்க்கை, பத்தில் ஒரு பங்கு கூட இல்லை
குழலி அவர்களே,
ReplyDeleteஇந்த ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள தமிழ் விகிபீடியாவில் வடமொழி எழுத்துக்களை நீக்கும் ஒரு சிலர் இருப்பதாக வேறு சிலர் புகார் செய்கிறார்களே. நீங்கள் சொல்லும் சிலரும், இந்த வட மொழி வெறுக்கும் சிலரும் வெவ்வேறு சிலரா ஒரே சிலரா ?
பத்ரி,
ReplyDeleteவிக்கிபீடியா என்பதை wikibedia என்ற ஒலிக்க இயலும். pedia என்ற ஒலி வருவதற்காகவே ப் சேர்த்து எழுதுகிறோம்.
குப்பன் - kuppan
குபீர் - kubeer.
பவுக்கு முன் ப் வராவிட்டால் b ஒலியே வரும் (ப முதல் எழுத்தாக இல்லாத இடங்களில்)
புருனோ, Google Knolல் கட்டற்ற உள்ளடக்கம், கூட்டு ஆக்கத்துக்கு வழியுண்டா என்பது அந்தந்த கட்டுரைகளின் முதன்மை ஆசிரியர்களைப் பொறுத்தது. இது போன்ற இடையூறுகள் இல்லாமல் விக்கிப்பீடியா கிடைக்கிறது.
ReplyDeleteசுமார் 18,20 வருடங்களுக்கு கிரந்த எழுத்துகளை தமிழகத்தில் பயின்று விட்டு அவற்றை தவிர்த்து இங்கு த.வி யில் வாசி, புரிந்து கொள். நான் சொல்வதைதான் நீ வாசிக்கவேண்டும் என்பது எதேச்சதிகாரம் என்பதை தான் காட்டுகின்றது. பாட நூல்களில் நாடுகளின் பெயர்களை, ஊர்களின் பெயர்களை புத்தகத்தில் உள்ளது போல (கிரந்தத்துடன்) வாசித்து விட்டு நான் சொல்வது போல்தான் வாசிக்க வேண்டும் எனபது பொருத்தமற்றது. உ.தா இப்பொழுது ஸ்பெயின் அதை யசுவேனியா இது யாருக்குமே தெரியாது. இதற்கு அவற்றை எப்படியாவது அகராதி பார்த்து தெரிந்து கொள்ளவேண்டும் என்கின்றனர். அகராதியில் இல்லாதவைத்தான் இங்கு கொடுக்கப்படுகின்றன அல்லது உருவாக்கப்படுகின்றன. அனைவருக்கும் இவ்வார்த்தைகள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள், சிறுவர்கள் பயன்படுத்தவே மாட்டார்கள். இவை த.வி யில் மண்டிக்கிடக்கும் குறைகள். தவிர தமிழ் தமிழகத்தில் பொருளீட்டு மொழி. (ஒரு குறிப்பிட்ட சதவீதம்). பிற நாடுகளில் அப்படி அல்ல. இங்கேதான் அதிக பெரும்பன்மைத் தமிழர்கள் வாழுகின்றனர். (குறைகள் இருக்கும்)
ReplyDeleteதமிழில் அதிகாரி, பதவி போன்ற சொற்களை வழக்கொழிந்த சொற்காளாக தமிழகத்தில் பயன் படுத்தி வருகின்றனர். ஆனால் சேவை மனப்பான்மை உள்ள இத்தளங்களில் அதிகாரி, நிருவாகி என்பது தமிழில் வார்த்தைகளே இல்லாதது போல் உருவாக்கப்பட்டுள்ளது. ஏன் ஒருங்கிணைப்பாளர், முதுநிலைப் பயனர், தள நடுவர் என்ற வார்த்தைகள் நல்ல வார்த்தைகள் இல்லாயா? இவை பொதுவுடமை சொல்லாகவும் அனைவரும் ஏற்றுக் கொள்ள வைக்கும்.
தனி நபர் தாக்குதல் எல்லை மீறிப்போகின்ற அளவுக்கு இருக்கின்றது சமயத்தில் சைபர் குற்றத்தில் புகார் செய்யும் அளவுக்கு. முகத்தை தளத்தில் வெளியிட்டு விட்டு ஒரு சில முதுநிலை பயனர்கள் விமரசனம் செய்கின்றனர். பெண்கள் இவ்விமர்சனத்தை பார்த்து முகம் சுளிக்கின்றனர். இவர் முகத்தை போல்தான் இவர் வார்த்தைகளும் உள்ளது என்று வன்மைநாக கூறுகின்றனர்.
பிறரை தயக்கமின்றி குறை சொல்லும் மன்ப்பான்மையும் மண்டிக்கிடக்கின்றது. இத்தனைக்கும் முதுநிலை பயனர்களே பல நேரங்களில் மேற்கொள்கின்றனர். நான் முனைவர் கல்வி பயின்றவன் என்றால் என்னைத் தவிர யாருமே படிக்கவில்லை என்று அர்த்தமா? எனக்கு கல்வி புகட்டிய ஆசிரியரும் முனைவர் தான், அரசு பாடநூல்களை உருவாக்கியவர்களும் முனைவர்கள்தான், அரசிதழகளை உருவாக்குபவர்களும் முனைவர்கள்தான் ஆகையால் அவர்களும் சரியாகத்தான் சொல்லியிருப்பார்கள் என்று எண்ணுகின்ற மனப்பான்மை இங்கு சிலருக்கு இல்லை. நான் ஒரு புதிய கருத்தை திணிக்க முற்படுகின்றேன் அதை மறுக்கின்றாரே என்ற எண்ணம் அவருக்கு இயல்பாகவே ஏற்பட்டு விடுகின்றது.
பிறர் செயல் எப்படி நமக்கு எரிச்சலை உண்டு பண்ணுமோ அதுபோல் நம் செயலும் பிறருக்கு எரிச்சலை உண்டு பண்ணும் என்று எண்ணுவதில்லை. நாம் பிறரை குற்றம் சொல்லுவதை நிறுத்தினாலொழிய நம் குற்றம் நமக்குத் தெரியாது. பல நேரங்களில் தன்மானத்தை விட்டு விலகியிருக்க வேண்டியிருக்கின்றது. இந்த நிலையிலிருந்து த.வி மாறவேண்டும்.
குழலி சொல்வது முழுக்க உண்மை, இன்னொரு பெயரில்லாதவர் தாலிபான்கள், குழுவாக செயல்படுகின்றார்கள் என்று சொன்னதும் உண்மை. தமிழை இவர்கள் தான் காப்பாற்றுகிறேன் என்று என்ற ஆணவத்துடன் செயல்படுகின்றனர். ஏதோ பிரச்சாரத்திற்காக வந்துள்ளவர்கள் போல் தெரிகின்றது.
ReplyDeleteபுருனோ, குழலி கூறுவது முழுவதும் உண்மை. விக்கியில் குரூப் பாலிட்டிக்ஸ். தாசில்தார்ருக்கு ஜால்ரா போடுபவரே நிர்வாகி. இவர்கள் உரையாடலே அது உண்மை எனக் கூறுகின்றது. ஒரு குற்றச்சாட்டிற்கும் பதில் கூறமுடியவில்லை. இது விக்கிப்பீடியா அல்ல சர்ச்சைபீடியா.
ReplyDeleteஅவர்கள் கூறமாட்டார்கள் அவர்களுக்கு அவர்கள் பாஸ் தாசில்தார் கட்டளை இட்டு இருக்கின்றார். குழலி போன்றோருக்கு பதில் அளிக்கத்தேவையில்லை. அவர் விட்டால் தமிழ் நாட்டுக்கே தமிழ் அரசியல் தத்துவம் எல்லாம் சொல்லிக்கொடுப்பார். உலகிலேயே அவர் மட்டும் பற்று வைத்திருக்கின்றாராம். ஆங்கிலத்தில் பொழப்பு நடத்தும் அவருக்கு என்ன எகத்தாலம் பாருங்கள். தமிழ்நாட்டில் எல்லோரும் சேர்ந்து எதிர்க்கின்ற வரை ஒயமாட்டார் என நினைக்கின்றேன். குரூப் பாலிட்டிக்ஸ் தேர்தலில் நிற்கப்போகின்றாரோ? டெப்பாசிட் கிடைக்காதே?
ReplyDeleteதமிழ் விக்கிப்பீடியா மீதான விமர்சனங்களும் பதில்களும்
ReplyDelete