எஸ்.கே.எஸ். மைக்ரோஃபினான்ஸ் கடன் அலுவலர் வேலை செய்துவிட்டுத் திரும்பும் வழியில் கொள்ளை அடிக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டார்.இந்திய ரிசர்வ் வங்கியின் கணக்கின்படி, இந்தியாவில் 60% பேருக்கு வங்கிக் கணக்கு கிடையாது. உண்மையில் இந்த எண்ணிக்கை இதற்கும் அதிகமாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இந்தியாவில் 100-க்கு 80 பேருக்கு வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கலாம்.
...
அவர் ஏன் கையில் நிறையப் பணத்தை வைத்திருந்தார்? பல கிராமங்களில் மக்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த குறுங்கடன்களுக்கான வட்டியை வசூல் செய்து எடுத்து வந்திருந்தார். அந்த கிராமங்களில் வங்கிகள் கிடையாது. எனவே அவர் வேறு வழியின்றி கையில் பணம் எடுத்துவர வேண்டியிருந்தது.
அதென்ன பெரிய விஷயம், இதில் பாதி பேருக்குக் கையில் பணமே இல்லையே என்று நீங்கள் கேட்கலாம். உண்மைதான். ஒரு நாளைக்கு 50 ரூபாய் வருமானம் கூட இல்லாத எத்தனையோ குடும்பங்கள் உள்ளன. ஆனால் மீதமுள்ளவர்கள், மாத, வார, நாள் சம்பளக்காரர்கள் கையில் உள்ள வருமானத்தை ஒழுங்காகச் சேர்க்கமுடியாமல் பணத்தை வீணடிக்கிறார்கள். காரணம்: வங்கிக்கணக்கு இல்லாதது. கிராமப்புறங்களில் வங்கிகளே இல்லை. நகரங்களில் பொருளாதார-சமூக ரீதியில் பிற்படுத்தப்பட்ட பலருக்கும் படிப்பறிவின்மை காரணமாகவும், உள்ளார்ந்த பயம் காரணமாகவும் வங்கிக் கணக்குகள் இல்லை.
சென்ற மாதம் ஒரு நாள் இரவு சென்னை ஏர்போர்ட்டிலிருந்து வீடு வரும்போது டாக்ஸி ஓட்டுனருடன் பேசிக்கொண்டு வந்தேன். வாடகை டாக்ஸி. அவர் ஒரு நாளைக்கு சராசரியாக 300 ரூபாய் வரை சம்பாதிக்கிறார். படிப்பு கிடையாது. வங்கிக் கணக்கு கிடையாது. இதுவரை கையில் ஒரு பைசா மிச்சமில்லை. வீட்டில் பணம் இருக்கும். ஆனால் யாராவது வந்து கேட்பார்கள், கொடுப்பார், திரும்ப வராது. அல்லது செலவழிந்துவிடும். அவருக்கு வயது 60-ஐ நெருங்குகிறது. பிள்ளைகள் சரியில்லை. இத்தனை ஆண்டுகள் சம்பாதித்து அவர் கையில் ஒரு பைசா மிச்சமில்லை. உடல் சோரும்போது அவரையும் அவரது மனைவியையும் யார் காப்பாற்றப் போகிறார்கள்? இந்தியாவில் சமூகப் பாதுகாப்புத் திட்டம் என்று எதுவும் இல்லை.
பேசிக்கொண்டே இருந்ததில் வீடு வந்து சேர்ந்துவிட்டது. இறங்கும்போது, அவரிடம் வங்கிக் கணக்கு திறப்பது பற்றிச் சொன்னேன். இனியாவது மாதம் 2,000 ரூபாய் என்று சேர்த்துவைத்தால், ஐந்து வருடங்கள் கழித்து ஓரளவுக்குப் பணம் இருக்கும் என்றும் அதைக்கொண்டு கண்ணியமாக இறுதிக் காலத்தில் வாழமுடியும் என்றும் விளக்கினேன். அவர் முகத்தில் நம்பிக்கை தெரியவில்லை. அவர் வசிக்கும் வீட்டுக்குப் பக்கத்தில் உள்ள வங்கி ஒன்றை அணுகச் சொன்னேன். செய்தாரா என்று தெரியாது.
(தொடரும்)
அடுத்த பகுதி ப்ளீஸ்
ReplyDeleteGreat post! It identifies a common problem with a simple and known solution that can make a great deal of difference to millions of people. Often the failure to save even micro amounts is due to sheer inertia and lack of convenient mechanisms to do it. I offered to retain a portion of my maid's salary and to further incentivise, paid a structured interest for the period she left it with me. Though very reluctant and even suspicious at the beginning, she was able to draw substantial sums every year or two to cover planned expenses. After she had a sizable balance and convinced of the benefits of saving, I opened a bank account. I still do the transactions for her and her passbook remians with me, but she is happy in the knowledge that she has put away something for the future.
ReplyDeleteஅந்த டாக்ஸி டிரைவரின் செல் நம்பரை வாங்கிவைத்துக் கொண்டு ஒரு ஃபால்லோ அப் செய்திருக்கலாமே?
ReplyDelete