Saturday, December 10, 2011

கிழக்கு பாட்காஸ்ட்: இந்தியா உடையுமா? (பாகம் 3)

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள உடையும் இந்தியா: ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் என்ற புத்தகத்தை முன்வைத்து, இந்தியா எதிர்நோக்கும் அச்சுறுத்தல்கள் எவையெவை என்று ஓர் அலசல். புத்தக ஆசிரியர் அரவிந்தன் நீலகண்டனுடன்.



9 comments:

  1. தமிழாக்கத்துக்கு ஒரு பரிந்துரை-

    Do Not Sprint The Marathon

    Author: Raghunathan V
    Published: Harper Collins Publishers
    Language: English
    ISBN: 9788172238575
    Page: 184
    Format: Paperback

    நீங்களே இதைப் படித்திருக்கலாம்.

    சரவணன்

    ReplyDelete
  2. ராஜீவ் மல்ஹோத்ராவும்,அ.நீலகண்டனும் பினாயக் சென் கைது செய்யப்பட்டு பிணையின்றி சிறையிலிருந்து அவரை ஆதரித்து எழுதினார்களா இவர்களுக்கு பழங்குடி மக்கள் மீதோ, இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது தடுக்கப்பட வேண்டும் என்பதிலோ அக்கறை இருக்கிறதா.

    ReplyDelete
  3. ஃபோன் நம்பர் சொல்லும் போது தொண்ணூற்றி நான்கு நாற்பத்தி ஐந்து தொண்ணூறு- ஒன்று இரண்டு மூன்று நான்கு. மற்றும் தொண்ணூற்றி நான்கு நாற்பத்தி ஐந்து- தொண்ணூற்றி ஏழு தொண்ணூற்றி ஏழு தொண்ணூற்றி ஏழு என்று சொன்னால் சல்லீசாக ஞாபகம் வைத்துக்கொள்ள உதவும்.

    ReplyDelete
  4. பினாயக் சென்னும் அருந்ததி ராயும் எனது தெருவில் தண்ணீர் வரவில்லை என்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? எங்களுக்கு கழுவ கூட தண்ணியில்லையே.... இவர்களுக்கு எல்லாம் இதை பற்றி அக்கரை கொஞ்சமாவது இருக்கிறதா?

    ReplyDelete
  5. பத்ரி, இந்த மாதிரி இன்னும் ரெண்டு புத்தகம் போட்டிங்கன்னா சீக்கிரமே இந்தியா உடைஞ்சிடும் :-)

    இந்தியா உடைவதுகூட அவ்வளவு விசனத்துக்குரிய விஷயம் இல்லதான்..எந்த அடிப்படையில் உடைகிறது என்பதில்தான் பிரச்சினை. தேசீய இனங்களின் அடிப்படையில் என்றால் ஓ.கே! மத அடிப்படைவாத வதந்திகளும், புரட்டுகளும், திரிபுகளும் (அல்லது பதில்-வதந்திகளும், பதில்-திரிபுகளும், பதில்-புரட்டுகளும்)ஆராய்ச்சிகளாக முன் வைக்கப் படுவதுதான் ஏற்க இயலாத விஷயம்.

    சரவணன்

    ReplyDelete
  6. பத்ரி, சரவணன் சொல்வது போல் இந்தியா உடைஞ்சுபோச்சுன்னா அதுக்கு முழு முதல் காரண கர்த்தா நீங்கள் தான்.

    பிரதி உபகாரமாக இப்பவே அருந்ததி ராய், பீநாயக் சென் இன்ன பிற இஸ்லாமியத் தீவிரவாத அடிவருடிகள், மாவோயிஸ்டு நக்ஸல் நாதாரிகள் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து புத்தகமாக வெளியிட்டுவிடவும். இந்தியா அப்படி சேர்ந்து தேசியம் கொப்பளித்து வழியும் நாடாக மாறிவிடும். தானிக்கு தீனி சரியாப் போகும்.

    ReplyDelete
  7. //
    இந்தியா உடைவதுகூட அவ்வளவு விசனத்துக்குரிய விஷயம் இல்லதான்.
    //

    ம்ம்ம்ம்...க்கும்ம்ம். ஒம்ம ஆசை என்னன்னு வெளிச்சம் போட்டு வெளக்கினதுக்கு நெம்ப நன்னி வே.

    ஒம்ம மாதிரியான் யோக்கியர்கள் வந்தால் சொம்பை உள்ளே தான் எடுத்து வைக்கோணும்.

    ReplyDelete
  8. 'பினாயக் சென்னும் அருந்ததி ராயும் எனது தெருவில் தண்ணீர் வரவில்லை என்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவார்களா? எங்களுக்கு கழுவ கூட தண்ணியில்லையே.... இவர்களுக்கு எல்லாம் இதை பற்றி அக்கரை கொஞ்சமாவது இருக்கிறதா'

    பினாயக் சென் ஏழைகளிடையே மருத்துவம் செய்தவர்.மக்களுக்காக போராடியுள்ளார்.
    ராஜீவ் மல்ஹோத்ரா பிரின்ஸ்டனில் இருக்கிறார்,
    உங்கள் தெருவில் தண்ணீர் வரவில்லை என்பதற்காக அவர் அங்கேயிருந்து இங்கு வந்தா போராடமுடியும்.பினாயக் சென்னும்,ராயும் அரசை எதிர்த்து குரல் கொடுப்பார்கள்,தண்ணீர் அடிப்படை உரிமை என்பார்கள்.மல்கோத்ராவும்,அ.நீலகண்டனும் அதைக்கூட செய்யமாட்டார்கள்.

    ReplyDelete
  9. அன்னானி,
    பதிவோ புத்தகத்தின் பொருளோ பிநாய்க் சென், அருந்ததி நாய் பற்றியது அல்ல.
    புத்தகத்தில் கொடுக்கப்பட்டுள்ள தரவுகளைப் பொய் என்று நிரூபிக்க முடிந்தால் செய்யவும். இல்லாவிட்டால் நவதுவாரங்களையும் கான்கிரீட் கொண்டு அடைத்துக்கொள்ளவும்.

    ReplyDelete