William Shirer எழுதிய "The Rise and Fall of the Third Reich" என்னும் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறேன். இதற்கு முன்னர் 1995இல் அந்தப் புத்தகத்தைப் படித்திருந்தேன். இரண்டாவது முறையாக இப்பொழுது படிக்கும்போது பல விஷயங்கள் அதிகமாகப் புரிகின்றன. முக்கியமாக அடோல்ப் ஹிட்லரின் அரசியல் சூழ்ச்சிகள், தந்திரங்கள் முதலியன. ஹிட்லரின் முன்னால் நம்மூர் அரசியல்வாதிகள் வாயில் விரல்வைத்து சூப்பும் சிறுகுழந்தைகள்.
ஆனால், ஒரு விஷயத்தில் நம் அரசியல்வாதிகள், அது ஜவஹர்லால் நேருவாகட்டும், அவர் புதல்வி இந்திரா காந்தியாகட்டும், ஹிட்லரை அப்படியே முறையாகப் பின்பற்றியிருக்கிறார்கள்.
ஜெர்மனியை ஒட்டிய நாடு ஆஸ்திரியா. இரு நாடுகளிலும் பேசும் மொழி ஜெர்மன்தான். ஹிட்லர் பிறந்து வளர்ந்தது ஆஸ்திரியாவில்தான். பின்னர்தான் அவர் ஜெர்மனி சென்றார்.
ஜெர்மனியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய ஹிட்லர் - முதலில் சான்செலர் (பிரதமர்) ஆனார், பின்னர் அதிபர், சான்செலர் என்ற இரண்டு பதவிகளையும் ஒருங்கே வகித்தார் - ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு இணைக்க முற்பட்டார். அதற்கு அவர் பயன்படுத்திய ஜெர்மன் சொல் Anschluss. ஆஸ்திரியாவின் சான்செலர் எங்கெல்பெர்ட் டோல்பஸ் என்பவரை நாஸிக்கள் கொன்று விட்டனர். தொடர்ந்து குர்ட் ஷுஸ்னிக் என்பவர் ஆஸ்திரியாவின் சான்செலரானார்.
ஹிட்லர் ஷுஸ்னிக்கை ஜெர்மனிக்கு பேச்சுவார்த்தைக்காக வரச்சொல்லி, ஆஸ்திரியாவின் மந்திரிசபையில் பெருத்த மாற்றங்களை ஏற்படுத்த வேண்டுமென்றும், இல்லாவிட்டால் ஜெர்மன் இராணுவம் ஆஸ்திரியாவில் புகுந்து அட்டகாசம் செய்யும் என்றும் மிரட்டினார். சீஸ்-இன்குவார்ட் என்னும் நாஸியை உள்துறை (காவல்துறை) அமைச்சராக்கவேண்டும் என்பது அதில் முக்கியமான கோரிக்கையாக இருந்தது. ஆனால் மந்திரிசபை மாற்றத்துக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டியது ஆஸ்திரியாவின் அதிபர் (பிரசிடெண்ட்) மிக்லாஸ். ஹிட்லர் ஷுஸ்னிக்கிற்கு மூன்று நாள்கள் அவகாசம் கொடுத்து ஆஸ்திரியா அனுப்பி வைத்தார். ஆனால் மிக்லாஸ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்துவிட்டார். இதற்கிடையே ஷுஸ்னிக்கும் நாடு தழுவிய தேர்தல் (ரெபரண்டம்) ஒன்றை வைத்து தன் நிலையை வலுவாக்க முயற்சித்தார். இதனால் கடுப்பான ஹிட்லர் தன் தூதர் ஒருவரை அனுப்பி ஷுஸ்னிக்கை மிரட்டி ரெபரண்டத்தை வாபஸ் பெற வைத்தார். பின் இதோ இராணுவம் உள்ளே புகுந்து உங்களை உதைக்கப் போகிறது என்று மிரட்டி ஷுஸ்னிக்கை ராஜினாமா செய்யவைத்து, மிக்லாஸை "பதவி நீக்கம்" செய்யவைத்து, சீஸ்-இன்குவார்ட்டை தானே சான்செலர், அதிபர் பதவிகளை எடுத்துக்கொள்ளச் செய்தார்.
தொடர்ந்து சீஸ்-இன்குவார்ட் அனுப்பியதாக (பொய்யான) ஒரு தந்தியை வைத்து ஜெர்மன் இராணுவத்தை ஆஸ்திரியா அனுப்பி, அதன்பின் மக்களிடையே ஒரு தேர்தல் வைத்தார். அந்தத் தேர்தலில் 99% மேற்பட்டோர் ஆஸ்திரியா ஜெர்மனியோடு இணைவதற்கு தாங்கள் ஒப்புக்கொள்வதாக வாக்களித்தனர்.
ஆக இப்படி இல்லாத தகிடுதத்தங்களெல்லாம் செய்து ஆஸ்திரியாவை ஜெர்மனியோடு இணைத்ததற்குப் பெயர்தான் Anschluss.
நேரு பிரதமராக இருந்தபோது இந்தியா எப்படி மணிப்பூரை தன்னோடு "இணைத்துக்கொண்டது" என்பது பற்றி தங்கமணியின் பதிவு விளக்குகிறது.
நான் முன்னமேயே, இந்திரா காந்தியின் எமெர்ஜென்சி காலத்தில் சிக்கிம் இந்தியாவுடன் எப்படி "இணைக்கப்பட்டது" என்பதைப் பற்றி சிறிய குறிப்பொன்றை எழுதியுள்ளேன்.
இப்படிப்பட்ட பின்னணியில் நாம் எப்படி அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசமுடியும்?
Wednesday, September 08, 2004
Subscribe to:
Post Comments (Atom)
வடகிழக்கு மாநிலங்களில் இருக்கும் கிறிஸ்துவ மதத்தைப் பற்றி ஆவேசமாகப் பேசும் சங்பரிவார் அங்கு இப்போது இருக்கும் இந்துமதமும் பரப்பப்பட்டதே என்பதை மறைத்துவிடுவர்
ReplyDeleteஇந்தியாவுடன் இப்படி நடத்தப்பட்ட இணைப்புகளை வசதியாக மறந்துவிட்டு, மறைத்துவிட்டு இலங்கையின் விசயத்தில் இறையாண்மை, இறையாண்மை என்று ஜபிப்பது நவீன இந்திய அரசியல் அறிவுஜீவி ஜனநாயகம் (இறையாண்மை மக்களிடமிருந்து வருகிறதா இல்லை அரசியல்வாதிகளிடமிருந்து வருகிறதா?)
இப்படிப்பட்ட விசயங்கள் குறித்து கேள்விகேட்பதோ, விவாதிப்பதோ மிகுந்த வலியைத் தருகிறது என்கிறது மேல் ஜாதிமனப்பான்மையை உள்வாங்கிக் கொண்ட தேசபக்தி.
நன்றி பத்ரி.
இப்படிப்பட்ட பின்னணியில் நாம் எப்படி அமெரிக்காவின் ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் பேசமுடியும்
ReplyDelete>>
இப்படிப்பட்ட பின்னணி இருக்கிறது என்று நமக்கு எப்போது, யாரால் சொல்லப்பட்டது?
பரி: மறைக்கப்பட்ட வரலாறுகள் பல. திரிக்கப்பட்ட வரலாறுகள் பல. நான் என் வரலாற்றுப் புத்தகத்தில் "புலிகேசி என்ற கொடியவன்" நரசிம்ம வர்மப் பல்லவன் மீது படையெடுத்ததைப் பற்றி மட்டும்தான் படித்துள்ளேன். போதாக்குறைக்கு கல்கி வேறு கதைகளாக எழுதித் தள்ளி விட்டார். என் கர்நாடக நண்பர்களது பாடப்புத்தகங்களிலோ புலிகேசி மாபெரும் லோக்கல் ஹீரோ!
ReplyDeleteநாம்தான் நம் நாட்டின் வரலாற்றைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். இதையெல்லாம் பிறர் வந்து சொல்லிக்கொடுப்பார்களா என்ன?
அருணாச்சலப் பிரதேசம் பற்றிய சிறுகுறிப்பு: இந்திய அரசு இந்தியாவின் பல்வேறு இடங்களிலிருந்து நீர்நிலைகள் வழியாக மின்சாரம் (hydro electric) தயாரிக்கலாம் என்று கணித்துள்ளனர். 63 இடங்களிலிருந்து 94,000 மெகாவாட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கின்றனர். இதில் வடகிழக்கு மாநிலங்களிலிருந்து (பிரச்னைகள் அதிகமாக இருக்கும் இடங்கள்) 59,000 மெகாவாட் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு. அருணாச்சலப் பிரதேசத்திலிருந்து மட்டுமே 50,000 மெகாவாட்!
ஆக அருணாச்சலப் பிரதேச மக்களைப் பற்றி அவ்வளவு கவலைப்படவேண்டியதில்லை. ஒரே எம்.எல்.ஏ கூட்டம் ஐந்து வருஷம் காங்கிரஸ், பின் அடுத்த நாலு வருஷம் பாஜக, அடுத்து காங்கிரஸ், அடுத்து பாஜக என்று குதிரை தாவுவார்கள். ஏதாவது கலவரம் என்றால் இராணுவத்தை விட்டு தாக்க வேண்டியதுதான். ஆனால் அங்கிருந்து நாம் பெறப்போகும் 50,000 மெகாவாட் மின்சாரம் முக்கியமாயிற்றே? சரி. அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு எந்த வருடத்திலிருந்து இந்திய அரசு மின்சார வசதி செய்து கொடுத்துள்ளது என்று கண்டுபிடியுங்கள் பார்ப்போம்...
இதற்கும், அமெரிக்கா இராக்கில் பெட்ரோலை மட்டுமே மனதில் வைத்து செலுத்தும் அரசியலுக்கும், போர்களுக்கும் என்ன வித்தியாசம்?
நாம்தான் நம் நாட்டின் வரலாற்றைத் தேடிப் பிடித்து படிக்க வேண்டும். இதையெல்லாம் பிறர் வந்து சொல்லிக்கொடுப்பார்களா என்ன?
ReplyDelete>>
முழுசா போட்ட கமெண்ட்ட வெட்டி பாதி போட்டது என் தப்புதான்.
ஆமாம், நம் வரலாற்றை நாம்தான் தேடிப்பிடித்துப் படிக்க வேண்டும். திரிக்கப்பட்டதையெல்லாம் அடையாளம் காண வேண்டும்.
ஒரு சாதரணனுக்கு இதெல்லாம் சாத்தியமா? ஊடகங்களுக்கு அக்கறையே இல்லையா?
எந்த பிரச்சினையை எடுத்தாலும் வரலாற்று ரீதியான பின்னணி தரும் மேற்கத்திய ஊடகங்கள் போல் இந்திய ஊடகங்கள் செய்வதுண்டா?
தினமும் குண்டு வெடிக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீனிய பிரச்சினையின் பின்னணியைக் கேட்டால் ( http://www.npr.org/features/feature.php?wfId=3854466 ) ஒரு perspective கிடைக்கிறது.
'Yet another suicide bomb in the West Bank' என்று Prime time-ல் அலறும் network TV-செய்திகளுக்கு மத்தியில் இப்படி வரலாற்று ரீதியான உண்மைச் செய்திகளையும் பெற முடிகிறது.
ஆகப்பெரிய காஷ்மீர் பிரச்சினைக்கே எனக்குத் தெரிந்து Indian Express மட்டும்தான் தனியாக ஒரு பகுதி ஒதுக்கியுள்ளார்கள்.
http://www.expressindia.com/kashmir/index.php
BBC-ன் http://news.bbc.co.uk/1/hi/in_depth/south_asia/2002/kashmir_flashpoint/default.stm இந்தப் பகுதி அதைவிட விவரமாக இருக்கிறது.
வேண்டாம். Indian media பற்றி ஆரம்பித்தால் நிறுத்தவே மாட்டேன் :)
Badri
ReplyDeleteI am wondering why you stopped with Sikkim and Manipur. Go ahead and expose how imperialistic, India was in annexxing Hyderabad, Junnagadh and other places too. Fortunately you have a likeminded Govt at the center that would listen to your great ideas. Maino and commies would be extremely happy to balkanize the nation back in to tiny hamlets.
S.T
திருமலை: பாண்டிச்சேரி, கோவா, ஹைதராபாத், ஜுனாகத், திருவாங்கூர், புதுக்கோட்டை .... கதைகளே வேறு. காஷ்மீர், மணிப்பூர், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் போன்ற இடங்களை இணைத்த கதை வேறு என்று உங்களுக்குப் புரிகிறதா? முதல் கொத்தில் உள்ள இடங்களில் இருக்கும் மக்களுக்கும், இரண்டாம் கொத்தில் உள்ள மக்களுக்கும் இந்தியப் பெருநாட்டில் உள்ள மக்களுக்கும் இடையே கலாச்சாரத்தில், இனத்தில், மொழியில் உள்ள வேற்றுமைகள் புரிகிறதா?
ReplyDeleteபல்வேறு இணைப்புகளுக்குப் பின், எங்கெல்லாம் இன்று பிரச்னை உள்ளது. அதுமட்டும் ஏன் என்று புரிகிறதா?
இதுபோன்ற விஷயங்களைப் பேசினாலே ஏன் உங்களுக்குக் கோபம் வருகிறது?
மைனோ என்று சொல்லி சோனியா காந்தியை அலட்சியப் படுத்திவிடுவதால் ஏதேனும் ஆகிவிடப் போகிறதா? ஆ, ஒரு இத்தாலியன்தானே என்றதனால் ஏதேனும் ஆகிவிடப் போகிறதா?
சரி, மைனோவும், காம்மிகளும் நாட்டைத் துண்டாட நினைக்கிறார்கள். பாஜக, ஆர்.எஸ்.எஸ், மற்றும் உங்களைப் போன்ற சிலர் - இன்னமும் அகண்ட பாரதம் என்னும் கருத்தை வைத்துள்ளனரா? போனவார துக்ளக் கேள்வி பதிலில் யாரோ ஒரு வாசகர் கேட்ட கேள்விக்கு (ஜின்னா, சாவர்கர், கருணாநிதி, மணிசங்கர ஐயர் விஷயம்தான்) சோ பதிலளிக்கையில் பாகிஸ்தான் தனியாக இருப்பதுதான் சரி என்று சொல்லி விட்டார். சோ, பாஜகவின் கொ.ப.செ கிடையாதுதான். ஆனாலும் வலதுசாரிகளில் சிலருக்காவது இந்த எண்ணம் இருக்கிறது என்பதை நினைக்க சந்தோஷமாக இருக்கிறது.
«ýÒûÇ Àòâ
ReplyDelete¯í¸§Ç¡Î §¸¡À¢òÐì ¦¸¡ñÎ ±ÉìÌ ±ýÉ ¬¸ô §À¡¸¢ÈÐ? ¿£í¸û ´Õ ¸ÕòÐ ¨Åò¾¢Õ츢ȣ÷¸û, ¿¡ý ±ÉÐ ±¾¢÷Å¢¨É¨Â ±ÉÐ À¡½¢Â¢ø, ¯Ã¢¨ÁÔ¼ý ¨ÅòÐû§Çý. ¯¹¸û ¸Õò§¾¡Î ¯¼ýÀÎõ ÀÄ ¾Õ½í¸Ç¢ø, ¿£í¸û ¦º¡øÅÐ ºÃ¢¦ÂýÈ¢Õ츢§Èý, ¯¼ýÀ¼¡¾ þ¼í¸Ç¢ø ±ý ¸Õò¨¾ ¿¡ý ¨Å츢§Èý. þ¾¢§Ä §¸¡Àõ ±í¸¢Õ츢ÈÐ?
¸¡‰Á£Õõ, º¢ì¸¢Óõ, Á½¢ôâÕõ, ¸Ä¡îº¡Ã 㾢¡¸ §ÅÚÀΞ¡ø «Åü¨È þó¾¢Â¡×¼ý þ¨½ò¾Ð ¦ÀÕõ ¾ÅÚ ±ýÀÐ ¯í¸û Å¡¾õ. «§¾ §¿Ãò¾¢ø, ¨†¾Ã¡À¡Ðõ, §¸¡Å¡×õ ¸Ä¡îº¡Ã 㾢¡¸ þó¾¢Â¡×¼ý ´üÚô §À¡Å¾¡ø «ó¾ þ¨½ôÒ ºÃ¢ ±ý¸¢È£÷¸û. ±É즸ýɧš, †¾Ã¡À¡ò¾¢Öõ, §¸¡Å¡Å¢Öõ ´Õ º¢Ä þ¼í¸ÙìÌ ¦ºøָ¢ø, §ÅüÚ ¿¡ðÊø þÕìÌõ ¯½÷§Å Åó¾Ð. Áì¸ÙìÌô À¢Êì¸Å¢ø¨Ä¦ÂÉ¢ø «Ð ¸¡‰Á£Ã¡¸ þÕó¾¡ø ±ýÉ ¨†¾Ã¡À¡ò¾¡¸ þÕ󾡦ÄýÉ, þ¨½ò¾Ð ¾ÅÚ¾¡§É? ¯í¸û Å¡¾ôÀÊô À¡÷ò¾¡ø þó¾¢Â¡Å¢ø ¯ûÇ ÀÄ ÀÆíÌÊ þÉí¸Ùõ, þó¾¢Â¡Å¢ø ¿¢Ä×õ ±ùÅ¢¾ þÉ, ¦Á¡Æ¢, ¸Ä¡îº¡Ãí¸Ù¼ý ´ýÚ §À¡Å¾¢ø¨Ä, ¬¸ «Å÷¸û ź¢ìÌõ À̾¢¸¨Ç þó¾¢Â¡×¼ý þ¨½ò¾Ðõ ¾ÅÚ¾¡§É? «ó¾Á¡É¢ý ¯ûÇ ÀÆíÌÊ¢ɨÃÔõ, Áò¾¢Âô À¢§Ã¾º ÀÆíÌÊ¢ɨÃÔõ þó¾¢Â¡×¼ý §º÷ò¾Ðõ ¾ÅÚ¾¡§É? «ôÀʧ ¿£ðÊì ¦¸¡ñÎ §À¡É¡ø, ¾Á¢Æ÷¸û §ÅÚ, ¬ó¾¢Ã÷¸û §ÅÚ, ż þó¾¢Â÷¸û §ÅÚ, ¬¸ ±øÄ¡ Á¡¿¢Äí¸¨ÇÔõ ´ýÚ §º÷ò¾Ðõ ¾ÅÚ¾¡§É? ¯í¸û ¸ÕòÐôÀÊ À¢Ã¢ôÀо¡§É, ¯º¢¾Á¡¸ þÕìÌõ?
þó¾¢Â¡ ±ýÀ§¾ Àø§ÅÚ þÉí¸Ç¢ý ¸Ä¨Å¾¡§É? §ÅüÚ¨Á¢ø ´üÚ¨Á ¸¡Ïõ þ¼õ¾¡§É?
¿£í¸û ÌÈ¢ôÀ¢Îõ ÅÄк¡Ã¢Â¡É §º¡×õ þ¨¾§Â ÀÄ Ó¨È ÜÈ¢ÔûÇ¡÷. þó¾¢Â¡ þýÛõ ´Õ ÓôÀÐ ¬ñθÙìÌû ÐñÎ Ðñ¼¡¸î º¢¾üÅ¢Îõ ±ýÚ. «ô¦À¡ØÐ ¿¡ý ¿õÀÅ¢ø¨Ä, ¬É¡ø þô¦À¡ØÐ «Å÷ ¾£÷츾⺢¦ÂÉ ´òÐì ¦¸¡û¸¢§Èý. º¢È¢Â, º¢È¢Â, ¿¡Î¸û, þó¾¢Â¡ §À¡ýÈ ´Õ ¦Àâ ¿¡ðμý þ¨½óÐ þÕôÀ¾¢ø¾¡ý «Å÷¸ÙìÌõ ź¾¢. «ôÀÊ þ¨½ò¾ À¢ý Áò¾¢Â «Ãº¡í¸õ «Å÷¸ÙìÌ⠯â¨Á¸¨ÇÔõ, ź¾¢¸¨ÇÔõ ¦ºöÐ ¾ÃÅ¢ø¨Ä, «¨¾ ¿£í¸û ¸ñÊ츢§Èý ±ýÚ ¦º¡ýÉ¡ø ¯í¸Ù¼ý §º÷óÐ ¸ñÊì¸ ¿¡Ûõ ¾Â¡÷. ¬É¡ø þ¨½ô§À ¾Å¦ÈýÚ ¦º¡ýÉ¡ø Àø§ÅÚ ¸¡Ã½í¸Ç¡ø ±ýÉ¡ø ²üÚì ¦¸¡ûÇ þÂÄÅ¢ø¨Ä.
§ÁÖõ «ù¨Å¾ þ¨½ôÒ¸û ´Õ Àñʾ ƒÅ†÷Ä¡ÄÖõ, «ý¨É þó¾¢Ã¡Å¡Öõ (Àð¼í¸û ºÃ¢¾¡§É) ÁðÎõ ±Îì¸ôÀð¼ ÓÊÅøÄ. Àø§ÅÚ Ã¡ÏÅ ÁüÚõ ¿¡ðÊý ¯Ç×òÐ¨È §À¡ýÈÅ÷¸Ç¡ø ¾£÷ì¸Á¡É ¬§Ä¡º¨É¸ÙìÌô À¢ý ±Îì¸ô Àð¼ ÓÊ×.
¨Á§É¡ ±ýÛõ ¦ÀÂ÷ ¯í¸ÙìÌ À¢Êì¸Å¢ø¨Ä¦ÂÉ¢ø, À¡Ã¾ Á¡¾¡ «ý¨É §º¡É¢Â¡ ±ý§È «¨ÆòРŢðÎô §À¡¸¢§Èý. ¸õɢԊθÙõ þóРáõ §À¡ýÈÅ÷¸Ùõ «Õ½¡îºÄô À¢Ã§¾ºò¨¾ þó¾¢Â¡×¼ý þ¨½ò¾¨¾ ¾ÅÚ ±ýÚ ÜÈ¢ ÅÕ¸¢È¡÷¸û. «¨¾ò¾¡ý ¿£í¸Ùõ ÜÈ¢ÔûÇ£÷¸û. ¬¸§Å¾¡ý ¯í¸û ¸Õò¨¾Ôõ «Å÷¸¨ÇÔõ §¿÷ §¸¡ðÊø ¨Åò§¾ý. ÁüÈÀÊ ±ýÉ¢¼õ §Áøº¡¾¢ ÁÉôÀ¡ý¨Á¨Â ¯ûÅ¡í¸¢ì ¦¸¡ñ¼ §¾ºÀì¾¢ ¦¸¡ïºõ Á¢îºõ þÕôÀ¾¡ø ¿¡ý þùÅ¡Ú ±Ø¾¢Â¢Õì¸Ä¡õ. Å¢ðÎò ¾ûÙí¸û. «ôÒÈõ, ¬÷ ±Š ±Š …¥¼ý ±ý¨ÉÔõ þ¨½ò¾Ð ÌÈ¢òÐ Á¢ì¸ Á¸¢ú.
«ýÒ¼ý
±ùÅ¢¾ì §¸¡Àí¸ÙÁüÈ
º.¾¢ÕÁ¨Ä
பிறருக்கு நல்லது எது என்பதை நான் தான் முடிவுசெய்வேன் என்பதே ஒரு ஆதிக்க, மேல்ஜாதிய மனப்பான்மை. அந்த நல்லதை தீர்மானிக்கும் கதையாடல்களை அது உருவாக்கி அதன் வழியே பார்க்கச்சொல்லி தன்னிடமிருக்கும், பிரச்சார, ஊடக, பணபல, அதிகாரபலத்தை பயன்படுத்துகிறது. இதை அது கதாகாலட்சேபமாகவும் செய்யலாம்; ஆங்கில ஊடகங்கள், பாடப்புத்த்கங்கள், ஹாலிவுட் படங்கள் வழியாகவும் செய்யலாம். அமைதியை நிலைநாட்டும், ஜனநாயகத்தை நிலைநாட்டும் படைகள் வழியாகவும் செய்யலாம். இதை அமெரிக்க, ஈராக், வியட்நாம், இலத்தீன் அமெரிக்க நாடுகளுக்குச் செய்யும்போது நாம் புரிந்துகொள்கிறோம். அதனால் அமெரிக்கா அடையும் லாபமெது என்பது கண்ணுக்குத் தெரிகிறது; கருத்து மறைப்பதில்லை. ஆனால் இந்தியா செய்வதை கருத்து மறைக்கிறது. உதாரணமாக சங்க்பரிவார், 3000 வருடங்களாக இந்தியா எந்த நாட்டின் மீது படையெடுத்து அடிமைப்படுத்தியது இல்லை என்று நற்சான்றிதழ் கொடுக்கும். முதலில் இந்தியா என்ற நாடு இல்லை; குறுநில மன்னர்கள் தமது ஆதிக்க வெறியை ஜாதி பிரிவுகளிலேயே தீர்த்துக் கொண்டனர்; பலம் வாய்ந்த அரசுகள், அடுத்தவரை அடிமைப்படுத்தியதும் உண்டு; இராஜேந்திர சோழன் முதல், பல பலம்பெற்ற அரசுகள் அதைச் செய்தார்கள். ஆனால் இப்படிப்பட்ட கருத்தை உருவாக்கி விநியோகம் செய்யும் போது, நாமும் அன்பை சுரக்கும் நியாயவாதிகள் என்று சொல்வதால் வாங்கிக் கண்ணில் ஒத்திக்கொள்வோம். இப்படித்தான் அமெரிக்கா செய்கிறது. ஆக்ஸிஸ் ஆப் ஈவில் என்றது, அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே அபாயத்தில் இருக்கிறது என்றது.. அமெரிக்க மக்கள் நம்புவதில் மட்டும் என்ன தவறிருக்கிறது? என்ன நமக்கு 28 வருடங்களாக அதைச் செய்ய திறமையிருக்கிறது. ஏனெனில் இதையெல்லாம் நுட்பமாகச் செய்யும் திறமை 2000 வருடங்களாக கைகூடி வந்தது; ஆனால் அமெரிக்காவுக்கு 200 வருடத்திலேயே (கருப்பின ஆதிக்கம்) பிசுபிசுத்துப்போய்விடவில்லையா?
ReplyDeleteஇப்படிப்பட்ட கலாச்சார வேறுபாடு இருப்பதால்தான் அதை பூசி மொழுகி ஒரே நவீன இந்து கதையாடலுக்குள் வடகிழக்கு மாநிலங்களை கொண்டுவரமுடியாதா என்று சங்பரிவார் தவிக்கிறது; இதையே அமெரிக்கா, அமெரிக்க நலனை முன்நிறுத்தும், கோக்-வழிப்பட்ட அமெரிக்க கலாச்சாரத்தை பரப்புகையில் சங்பரிவார் நமது கலாச்சாரம் போச்சே என்று கூப்பாடு போடுகிறது. மெக்காலேபுத்திரர்கள் என்கிறது. மிஷினரிகள் பண்ணும் சதி என்கிறது.
இது இரண்டு சுரண்டல்காரர்களுக்குகிடையே நடக்கும் யுத்தம். அவ்வளவுதான். மக்கள் அவர்கள் ஆய்தங்க்ஜளைக் கைப்பற்றி அவ்வப்பொழுது திரும்பத்தாக்கும் போது தீவிரவாதமென்ற படங்காட்டுகிறது. எரியிறதை அடக்குனா கொதிக்கிறது அடங்கும் என்பது சாதாரன நியதி.
ரொம்பவும் மகிழ்ந்துவிடாதீர்கள் பத்ரி. சோ எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பாரோ! பாகிஸ்தான் இருப்பதால் தான் இந்தியா இருக்கிறது என்ற புரிதலில் கூட சொல்லியிருக்கலாம். அப்படி அவர் புரிந்துகொண்டிருந்தால் அதுவும் பெரிய தவறில்லைதான்.
ReplyDeleteஅருணாசலபிரதேச மின்சார விவகாரம் குறித்த தகவலுக்கு நன்றி.
The Rise and Fall of the Third Reich படித்த பொழுது (15வருடங்களுக்கு முன்) எனக்கும் சிலவிசயங்கள் புரியவில்லை; சில விசயங்கள் புலப்படவில்லை; அப்போது நான் ஹிந்து அடிப்படைவாதங்களில் நம்பிக்கைக் கொண்டிருந்தேன். திரும்ப வாசிக்கவேண்டும்.
ரொம்பவும் மகிழ்ந்துவிடாதீர்கள் பத்ரி. சோ எந்த அர்த்தத்தில் சொல்லியிருப்பாரோ! பாகிஸ்தான் இருப்பதால் தான் இந்தியா இருக்கிறது என்ற புரிதலில் கூட சொல்லியிருக்கலாம். அப்படி அவர் புரிந்துகொண்டிருந்தால் அதுவும் பெரிய தவறில்லைதான்.
ReplyDeleteஅருணாசலபிரதேச மின்சார விவகாரம் குறித்த தகவலுக்கு நன்றி.
The Rise and Fall of the Third Reich படித்த பொழுது (15வருடங்களுக்கு முன்) எனக்கும் சிலவிசயங்கள் புரியவில்லை; சில விசயங்கள் பிடித்திருந்தது; அப்போது நான் ஒரு ஹிந்து அடிப்படைவாதங்களில் நம்பிக்கைக் கொண்டிருந்தேன். திரும்ப வாசிக்கவேண்டும்.
i appreciate your views badri. unfortunately the so called patriots dream of an India where such questions are irrelevant.basically the whole north east is different from the mainstream india in many ways.many problems arise because of the refusal to accept this reality.my friends who had worked in north east had told how shocked they were when they realised that many in north east do not consider themselves as indians or talk of india as a foregin country.while it may be impossible to recify all the mistakes or wanton annexions of the past it is possible to do justice to
ReplyDeletetheir demands.but nation states have often proved that they are more interested in upholding territorial sovergenity than anything else.whether it is putins russia or singhs india this seems to be the rule.
Interesting. My belief is that if somebody wants autonomy, we should give them. There is no point in holding them against their wishes. I was bit concerned about northeast because of the economic viability. Since they have this huge elecric power potential, they should be able to pay their bills as an independent entity. Getting rid of northeast will benefit india because it's a big economic liability for india and more difficult to manage because there are no ports.
ReplyDeleteOn a related note, do you support freedom for Tibet? Why don't commies like N. Ram support freedom for Tibet?
Thoreau
திருவாளர் பத்ரி,
ReplyDeleteஉங்களுடைய நியாயத்தில் உங்களுக்கு உடன்பாடு இருந்தால், இந்தியா காஷ்மீரை இணைத்தது தவறு. காஷ்மீரை பாகிஸ்தானிற்கு திருப்பி தர வேண்டும் என்று வெளிப்படையாக எழுத முடியுமா?.
சுதந்திர காஷ்மீரே உங்கள் கருத்து எனும் பட்சத்தி, தன்னை ஆக்கிரமிக்கத் துடிக்கும் பாகிஸ்தானிடமிருந்து காஷ்மீர் தன்னை காப்பாற்றிக் கொள்ளும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதா?
சீன நாட்டால் வட கிழக்கு பகுதியில் இருக்கும் ஆபத்தை எவ்வாறு சமாளிப்பது? தாங்கள் உத்தேசிக்கும் திட்டம் என்ன?
பதிலளிப்பீர்கள் என நம்புகிறேன்.
I think the questions that Rajkumar have asked are those that need to be answered for any sensible discussion of this issue. I would even add to it the issue of Tamil Eelam as related not only to Srilankan but to the Indian Govt. as well. That it gets related with 'upper caste' mentality as found in some of the earlier replies is only ridiculous.
ReplyDelete