முன்னாள் தமிழக சட்டமன்ற அவைத் தலைவர் தமிழ்க்குடிமகன் மாரடைப்பால் காலமானார். மதுரை யாதவா கல்லூரி முதல்வராக இருந்த தமிழ்க்குடிமகன், திமுக சார்பாகப் போட்டியிட்டு 1989-1991இல் தமிழக சட்டமன்ற அவைத்தலைவராக இருந்தார். பின் மீண்டும் திமுக 1996இல் ஆட்சிக்கு வந்தபோது தமிழ் வளர்ச்சித்துறை, இந்து அறநிலையத்துறை அமைச்சராக இருந்தார்.
2001இல், திமுக தேர்தல் சீட்டு கொடுக்கவில்லை என்பதால் அதிமுகவில் இணைந்தார்.
அவரது தமிழ்ப்பற்று அனைவரும் அறிந்ததே.
1997இல் சென்னையில் சைபர் குளோப் என்னும் நிறுவனத்தில் நான் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, தமிழக சட்டமன்றத்தில் நடைபெறும் அந்த நிதி ஆண்டின் நிதிநிலை அறிக்கையை இணையத்தில், தமிழில், நேர்முகம் செய்ய முயன்றோம். அப்பொழுது அமைச்சர் தமிழ்க்குடிமகனை அணுகி அதுபற்றிப் பேசினோம். இணையம் பற்றி அதிகம் தெரிந்திருக்காவிட்டாலும், இந்த முயற்சி வரவேற்கப்பட வேண்டியது என்றார்.
தொலைக்காட்சியில் முதல்வர் வாசிக்கும் பட்ஜெட் அறிக்கையை வைத்து அவசர அவசரமாக, எதையோ எழுதி, அதைத் தமிழாக்கி, தமிழ் எழுத்துக்குறியீடு, எழுத்துரு சரிசெய்து போடுவதற்குள் 'தாவு தீர்ந்துவிடுகிற' வேலை அது. ஆர்வத்தால் அதில் ஈடுபட்டிருந்தோம். எங்களுக்கு உதவிசெய்யும் வகையில், தனக்குக் கிடைத்த பட்ஜெட் அறிக்கையை, பட்ஜெட் கூட்டம் நடந்துகொண்டிருக்கிறபோதே எங்களுக்குக் கொடுத்துவிட்டார்.
'தமிழ் இணையம்' மாநாடுகளில் விடாது பங்கேற்பவர். 1997இல் சிங்கப்பூர் வந்திருந்தார். 2003 ஆகஸ்டில் கடைசியாக சென்னையில் நடந்த மாநாட்டில் சில அமர்வுகளில் பார்வையாளராக அமர்ந்திருந்தார்.
டிசம்பர் 2004இல் சிங்கப்பூரில் நடைபெறவிருக்கும் 'தமிழ் இணையம் 2004'இல் தமிழ்க்குடிமகனைப் பார்க்க முடியாது. அவரது மறைவுக்கு இரங்குவோம்.
அறிவியக்கமே நவீனநாட்டின் மையம்
9 hours ago
பத்ரி : இந்த சைபர் க்ளோப் என்ற நிறுவனம் தானே க்ளிக்டிக்கட்ஸ்.காம் என்ற வலைத்தளத்தை துவங்கி நடத்தி வந்தது? அதிலும் உங்கள் பங்கு ( participation) இருந்ததா? இப்போது அந்த வலைத் தளம் இல்லை போலிருக்கிறதே
ReplyDeleteபிரகாஷ்: கொஞ்சம், கொஞ்சம். அதன் முதல் வெர்ஷனுக்கான அல்காரிதம் என்னுடையது. அதனை அப்பொழுது எழுதியவர் இப்பொழுது சிஃபியில் வேலை பார்க்கிறார்.
ReplyDeleteஆனால் நான் வெளியே வந்த பிறகுதான் கிளிக்டிக்கெட்ஸ் பெரிதாக வளர்ந்தது. அதன்பிறகு காணோம்.