சனி அன்று (25 செப்டம்பர்) கனடாவில், டொராண்டோவில் இலங்கைத் தமிழர் குடியேறிகள் (Sri Lankan Tamil Immigrants) மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 75,000 பேர் கலந்துகொண்டனர் என்று எல்.டி.டி.ஈ செய்தி நிறுவனம் கூறுகிறது. அத்துடன் கனடா பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
சரி, கூட்டம் எதைப்பற்றியது? இலங்கையில் நடக்கும் அமைதிப் பேச்சுவார்த்தை தொடரவேண்டும் என்றும், அதில் கனடா அரசாங்கமும் ஈடுபடவேண்டும் என்பதையும் வலியுறுத்துவதற்காக.
ஆனால் இப்படி ஒரு கூட்டம் நடைபெற இருப்பதாகவோ, நடந்து விட்டதாகவோ இந்திய ஊடகங்கள் எமக்குத் தெரிவிக்கவேயில்லை. ஹிந்துஸ்தான் டைம்ஸ் மட்டும் ஒரு சம்பந்தமில்லா செய்தியில், நான்கு இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் (எல்.டி.டி.ஈ ஆதரவாளர்கள்) கனடாவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது என்று கூறுகிறது.
'தி ஹிந்து'வுக்கு இலங்கை சம்பந்தமாகச் சொல்வதற்கு கருணாவின் உறவினர்கள்/நண்பர்கள் இருவர் கொழும்பிலும், மட்டக்கிளப்பிலும் கொல்லப்பட்டது மட்டும்தான் தெரிகிறது.
தமிழ் செய்தித்தாள்களான தினமணி, தினமலர் ஆகியவையும் ஒரு செய்தியும் வெளியிடவில்லை. மேலோட்டமாக, கூகிளில் தேடியதில் எந்த இந்தியச் செய்தி ஊடகமும் பொங்குதமிழ் பற்றி செய்தி எதையும் வெளியிடவில்லை என்று தெரிகிறது.
தமிழ் செய்தித் தொலைக்காட்சிகள் எதுவும் பொங்குதமிழ் பற்றிய செய்தி ஒன்றையும் வெளியிடவில்லை.
பிபிசியிலும் - உலகச்சேவை தொலைக்காட்சியிலும், இணையத்திலும் - செய்தி வரவில்லை.
எல்.டி.டி.ஈ செய்தி நிறுவனம் தமிழ்நெட் இணையத்தளத்திலும், ஈழத்தமிழர்கள் வலைப்பதிவுகளிலும் மட்டும்தான் - ஒருவேளை சில கனேடிய ஊடகங்களில் கூட இருக்கலாம் - இந்தமாதிரியான ஒரு மாபெரும் கூட்டம் நடந்துள்ளது என்பதையே அறிந்துகொள்ள முடியும்.
ஊடகங்கள் எல்லாக் குழுவினரின் கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் செய்திகளை மறைப்பதில் என்ன பிரயோசனம்?
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
1 hour ago
Seems to be quite a crowd. You might have arelady seen it, but for the benefit of others:
ReplyDeletehttp://kavithan.yarl.net
Dude,
ReplyDeleteIt was pretty cute of you to go into the 'emakku' mode while writing about a Sri Lankan Tamil meet :-)
'Pongu Tamil is a cultural event celebrating Tamil strength and solidarity" - It was not a political event - 75000 and a resolution do not make it a news-worthy event for Indians, IMHO.
Srikanth
இது மிகவும் வருத்தமளிக்ககூடிய விடயம். ஆனால் சென்றமுறை யாழ்பாணத்திலே பொங்குதமிழ் நடந்த போது தினமணி இணைய இதழில் (செய்திப்பார்வையில்) சில நிழற்படங்களை மட்டும் வெளியிட்டிருந்தது.
ReplyDeleteMontreal was quite empty last week-end. I think, that says something about the support for this political event. I didnt except BBC to be in this list. Well 'that's life!'.
ReplyDeleteÀòâ, À¢À¢º¢ ¦ºö¾¢ ¦¸¡Îò¾¢Õó¾Ð; ̨Èó¾Ð ¾Á¢§Æ¡¨ºÂ¢§Ä ¸¡½ôÀÎÅÐ þÐ:
ReplyDeletehttp://www.bbc.co.uk/tamil/news/story/2004/05/040528_tamil_currentaffairs.shtml
/கனடாவில் பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் நடந்துள்ளன
நேற்று சனிக்கிழமையன்று, கனடாவில் நடந்த பொங்கு தமிழ் நிகழ்ச்சிகள் பற்றி கனடிய பல்கலைகழக தமிழ் மணவர்கள் அமைப்பு சார்பாக பேசவல்ல கண்மணி ராசநாதன் தமிழோசைக்கு கருத்து வழங்கினார்.
புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் மிக அதிக அளவில் வாழும் கனடாவில் பொங்கு தமிழ் நிகழ்ச்சிகளை நடத்தியது பெரும் உற்சாகத்தை தந்துள்ளதாக கூறினார்.
கனடிய அரசு இலங்கை சமாதான பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அதில் ஈடுபடுவது. பேச்சுவார்த்தைகளை கனடிய மண்ணில் நடத்த அனுமதி தருவது, இடைக்கால நிர்வாகம் குறித்த புலிகளின் பிரேரணைகள் அடிப்படையிலேயே பேச்சுக்கள் நடத்தப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துவது ஆகிய மூன்று கோரிக்கைகளை பொங்கு தமிழ் வைபவத்தின் போது முன்வைக்கப்பட்டுள்ளதாக கண்மணி ராசநாதன் கூறினார்.
கனேடியர் அனைவரது காதுகளையும் எட்டும் வகையில் நேற்றைய நிகழ்வுகள் அமைந்திருந்ததாக அவர் தெரிவித்தா÷/.
By: î
/'Pongu Tamil is a cultural event celebrating Tamil strength and solidarity" - It was not a political event - 75000 and a resolution do not make it a news-worthy event for Indians, IMHO./
ReplyDeletecould be, and so be it. This always happens. When P. Chidambaram goes to US no Sri Lankan Tamil news medium gives it as a news, but it does when Vai Ko goes.
However, the point in Badri's post - at least to my understanding - is NOT this.
"'தி ஹிந்து'வுக்கு இலங்கை சம்பந்தமாகச் சொல்வதற்கு கருணாவின் உறவினர்கள்/நண்பர்கள் இருவர் கொழும்பிலும், மட்டக்கிளப்பிலும் கொல்லப்பட்டது மட்டும்தான் தெரிகிறது." Vs. "சனி அன்று (25 செப்டம்பர்) கனடாவில், டொராண்டோவில் இலங்கைத் தமிழர் குடியேறிகள் (Sri Lankan Tamil Immigrants) மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இந்தக் கூட்டத்தில் கிட்டத்தட்ட 75,000 பேர் கலந்துகொண்டனர் என்று எல்.டி.டி.ஈ செய்தி நிறுவனம் கூறுகிறது. அத்துடன் கனடா பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்."
=> "ஊடகங்கள் எல்லாக் குழுவினரின் கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் செய்திகளை மறைப்பதில் என்ன பிரயோசனம்?"
பிபிசியின் செய்தி இருப்பதை இப்பொழுதுதான் பார்த்தேன். நான் எழுதியிருந்தபோது ஆங்கிலப்பக்கங்களில் தேடிப்பார்த்து, எதுவும் கிடைக்காததால்தான் அப்படி எழுதினேன். மேலும் இந்தியாவில் ஒளிபரப்பப்படும் உலகச்சேவையிலும் இது சம்பந்தமான எதுவும் காணக்கிடைக்கவில்லை.
ReplyDeleteஸ்ரீக்காந்த் மீனாக்ஷி: இது இந்திய ஊடகங்களுக்கு இரண்டு வரிகள் ஒதுக்கக் கூட முடியாத செய்தியில்லை என்பதை நான் ஒத்துக்கொள்ளவில்லை. 75,000 மக்கள் திரளுகிறார்கள். அந்த நாட்டின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசுகிறார்கள். இலங்கையிலிருந்து வந்த நான்கு பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாட்டுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படுகிறது (அது மட்டும் ஒரு செய்தித்தாளில் செய்தியாகிறது.). சில நாள்களுக்கு முன்னர் இந்தியாவில் நுழைய ஒரு இலங்கை பாராளுமன்ற உறுப்பினருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. அது பெரிய செய்தியானது.
இந்தச் செய்தியை வெளியே காட்டாமலே காணாமல் போக்கிவிடுவதால் என்ன பயன்? வடக்கு டார்பருக்கு ஐ.நா அதிகாரி போனார் என்று தமிழ் பத்திரிகைகள் நாளை எழுதும். அது இந்தியாவிற்கு அதிகத் தேவையுள்ள செய்தியா? (அதுவும் தேவைதான். அதுவே தேவையென்றால், இதுவும்தான்.)
75,000 தமிழர் கூடிய பொதுக் கூட்டம் இந்திய செய்தியாகமல் போவதை புரிந்து கொள்ளமுடிகிறது. இந்தியாவின் மைலாய் படுகொலை என வர்ணிக்கப்பட்ட வல்வெட்டித்துறை படுகொலையும் கூடவா செய்தியில்லை இந்திய ஊடகங்களுக்கு?
ReplyDeletehttp://ntmani.blogspot.com/2004/09/blog-post_27.html
Thangamani
By: Thangamani
இந்திய ஊடகங்களில் இலங்கைத்தமிழர் பிரச்னை பற்றி கடந்த இரண்டு மூன்று நாள்களில் வந்த செய்திகள்:
ReplyDeleteதி ஹிந்துவில், கருணா உறவினர்/நண்பர் கொலை. கிழக்கு இலங்கை கொதிநிலையில்.
தினமலரில், புலிகள் பயிற்சி செய்யும் கேசட் சென்னை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்டது பற்றிய ஒரு செய்தி. படிக்கும்போது என்னவோ நேற்றுதான் இந்த கேசட்டுகளைக் கைப்பற்றினரோ என்று தோன்றும். இல்லையாம். சில நாள்களுக்கு முன்னர் கைப்பற்றினராம்.
தினமணியில், ரணில் விக்கிரமசிங்கே, புலிகளுடன் பேச்சுவார்த்தையைத் தொடருமாறு சந்திரிகாவுக்குக் கடிதமெழுதியிருக்கிறாராம்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரசில், வெளிநாட்டில் வசிக்கும் 700,000 தமிழர்களிடமிருந்து மாதம் $10 புலிகள் கட்டாய வசூல் செய்கின்றனர் என்று சந்திரிகா பேட்டி கொடுக்கிறார்.
ஓ, மற்றுமொரு செய்தியில், இலங்கையில் டீசல் விலை அதிகரித்துள்ளதாம்.
Badri,
ReplyDeleteIf one news organization suppresses a news covered by several other, it is one thing (like Sun TV did with the Vaiko march). However, to insinuate news suppression (seythigaLai maRAippathil enna prayosanam?) in this case is to say that all media houses (Tamil and English) colluded about it. That seems like a stretch.
Srikanth
பத்ரி
ReplyDeleteநன்றி.
சந்திரவதனா
Reuters, Hindustan times, Times of india , Mackenzie institute even BBC are against tamils. Poor souls, have to fight big reputed orgs and their propagandas.
ReplyDeleteBy: praba