Saturday, September 11, 2004

மக்கள் தொகை கணக்கெடுப்பு விவகாரம்

இன்றைய பிசினஸ் ஸ்டாண்டர்டில் சுர்ஜித்சிங் பல்லா மக்கள்தொகைக் கணக்கெடுப்பு தொடர்பான பிரச்னை பற்றி தனக்கே உரிய பாணியில் எழுதியுள்ளார்.

முதலில் இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு வாரியத்தின் இணையத்தளத்திற்குப் போய் அங்கே கிடைக்கும் சில எண்களை கவனமாகப் பார்க்கவும். மேலும் சென்சஸ் மேப்ஸ் தளத்தில் உங்களுக்கு வேண்டிய தகவல்களை நுண்ணியமாக, மாநில அளவில், மாவட்ட/தாலுக்கா அளவில் பெற்றுக்கொள்ளலாம். (ஜாவா தேவை.)

முஸ்லிம்கள் அதிகமான எண்ணிக்கையில் பிள்ளைகளைப் பெற்றுத் தள்ளுகிறார்களா? இந்துக்கள் இன்னமும் சில வருடங்களில் சிறுபான்மையினராகி விடுவரோ என்றெல்லாம் பயம் சிலருக்கு.

முஸ்லிம் வாக்கு வங்கியை விட எனக்கு பயமளிப்பது வட இந்திய வாக்கு வங்கி. தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் மக்கள்தொகை அதிவேகமாக அதிகரித்து வருகிறது.

இன்றைய தேதியில் மக்கள் தொகை மாறியுள்ளதைக் கணக்கில் வைத்து புதுப் பாராளுமன்றத் தொகுதிகளை உருவாக்க வேண்டி வந்தால் அவையனைத்தும் பீஹாரிலும், உத்திரப் பிரதேசத்திலும், ராஜஸ்தானிலும், குஜராத்திலும்தான் போய்ச்சேரும்.

1991-2001 மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் கண்டறிந்த, ஆனால் பேசப்படாத விஷயங்கள்: [மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள வடகிழக்கு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் ஆகியவற்றை விலக்கி, மேலும் ஜம்மு & காஷ்மீரையும் விலக்கி - ஏனெனில் அங்கு 1991இல் சென்சஸ் நடைபெறவில்லை - பார்க்கும்போது]

மிகக் குறைந்த மக்கள்தொகைப் பெருக்க விகிதம் உள்ள மூன்று மாநிலங்கள்:
  • கேரளம்: 9.4%
  • தமிழகம்: 11.2%
  • ஆந்திரம்: 13.9%
மிக அதிக மக்கள்தொகைப் பெருக்க விகிதம் உள்ள மாநிலங்கள்:
  • பீஹார்: 28.4%
  • ராஜஸ்தான்: 28.3%
  • ஹரியானா: 28.1%
  • உத்திரப் பிரதேசம்: 25.8%
இதில் இந்துக்கள் 18% அதிகரித்துள்ளனர், முஸ்லிம்கள் 26% அதிகரித்துள்ளனர் என்பது பற்றி சிலர் கவலைப்படுகிறார்கள். எனக்கு வட இந்திய மக்கள் தொகை கன்னாபின்னாவென்று அதிகரிப்பது பீதியைக் கிளப்புகிறது. அரசியல் அதிகாரம் வடக்குக்கே அதிகமாக இருக்கும். அதனால் பணம் வீணாக அங்குதான் செலவழிக்கப்படும். அப்படி செலவழித்தும், வடக்கின் வளர்ச்சி தெற்கை விட மிகவும் குறைவாக இருக்கும். முக்கியமாக மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளான நீர், மின்சாரம், சாலைகள், உணவுப்பொருட்கள், கல்வி, அடிப்படைச் சுகாதாரம் ஆகியவை. அப்படித்தானே இன்று இருக்கிறது? இதை மாற்ற, வடக்கில் கட்டின்றிப் பெருகும் மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி, அங்கு கல்வி, வேலை வாய்ப்பு அதிகரிப்பது, அடிப்படை மருத்துவ வசதியை அதிகரிப்பது ஆகியவற்றில் மனதைச் செலுத்தாது, முக்கிய எதிர்க்கட்சியான பாஜகவோ முஸ்லிம்கள் படுவேகமாக வளர்கிறார்கள் என்று கத்துகிறது.

மக்கள் தொகையை அதிரடியாகக் கட்டுப்படுத்த கீழ்க்கண்ட மாநிலங்கள் உடனடியாக அதிக முயற்சிகளை எடுக்க வேண்டும். மேலே குறிப்பிட்ட நான்கு மாநிலங்களான பீஜார், ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப் பிரதேசம் ஆகியவற்றுடன் மஹாராஷ்டிரம் (22.6%), மத்தியப் பிரதேசம் (24.3%), குஜராத் (22.5%), ஜார்கண்ட் (23.2%).

தெற்கில் மிக அதிகமான மக்கள் தொகைப் பெருக்கம் கர்நாடகத்தில்தான் (17.2%).

சுர்ஜித்சிங் பல்லாவின் கட்டுரையில் ஷெட்யூல்ட் வகுப்பினரின் தொகைப் பெருக்கம் பற்றி இவ்வாறு சொல்கிறார்:
The real story of the census may not be the politically induced “analysis” of population growth among the Muslims but the sharp decline in growth rate among the scheduled castes/tribes (SC/ST)—from a growth rate of 2.7 per cent 1981–91 to only 2 per cent per annum, 1991–01. Unless the SC/STs have sharply escalated their income levels, it is unclear as to what might have caused this oversized drop. NSS data do not reveal a similar tendency—here the decline is only 0.1 percentage point.

One explanation is that there is no more “caste deflation”, i.e. households and individuals can benefit from reservations for OBCs, etc. so there is no need to classify oneself as an SC/ST.
இந்தக் கூற்று பொருந்தக்கூடியதா என்று பார்த்தேன். ஒவ்வொரு மாநிலத்திலும் ஷெட்யூல்ட் வகுப்பினரின் தோகைப்பெருக்கம் எப்படியுள்ளது என்று கவனித்தால், தமிழகத்தைத் தவிர்த்து, மற்ற அனைத்து மாநிலங்களிலும் ஷெட்யூல்ட் வகுப்பினரின் பெருக்கம் மாநிலப் பெருக்கத்தை விடக் குறைவாக உள்ளது. தமிழகத்தில் மட்டும் மொத்த ஜனத்தொகை 11.2% அதிகரித்திருக்க, ஷெட்யூல்ட் வகுப்பினரில் தொகை 19% அதிகரித்திருந்தது. ஷெட்யூல்ட் வகுப்பினர் அதிக அளவில் இருக்கும் மஹாராஷ்டிரத்தில் மாநிலத்தொகை 22.6% அதிகரித்திருக்கையில், ஷெட்யூல்ட் வகுப்பினரில் தொகை 10.2% தான் அதிகரித்திருந்தது. இதேபோன்றுதான் மற்ற மாநிலங்களிலும்.

ஒருவேளை சுர்ஜித் பல்லா சொல்வதுபோல கடந்த 15 வருடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கென (OBC) இட ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டிருப்பதால், யாரும் வேண்டுமென்றே தான் SC என்று பொய்யாகச் சொல்லியிருக்க வேண்டியதில்லை என்பதனால் இருக்கலாம். தமிழகத்தில் எம்ஜியார் காலத்திலிருந்தே (80களிலேயே) பிற்படுத்தப்பட்டோருக்கென இட ஒதுக்கீடு இருந்து வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

14 comments:

  1. 1, reservations for bcs in tamil nadu has a longer history.MGR increased it to 50% from 32 %.
    2, in terms of castes there is no uniformity in classification.caste X might have been classified as SC
    in Tamil Nadu but it need not be so in AP or Kerala. It is also possible that people might have tried to hide their real caste identity for various reasons.
    3, there are many communities which consider themselves as both hindu and muslim.and the rigidity in relegious identity is a question of politics than faith.nandy and
    others have pointed out this.
    4, the real problem is social development and impacts of the increase in population.we lag behind some african
    countries in terms of human development indicators and
    the variation within states is also alarming in this.
    5,another very important perhaps the most important issue is the male-female ratio and the implications of the current trend.
    it is easy to use census figures to whip up fears and to create a bias against some sections of the society while ignoring the major issues.that is what RSS and VHP
    and the other units in sangh parivar want.

    ReplyDelete
  2. சுரதா, க்ருபாஷங்கருக்கு நன்றி.

    ReplyDelete
  3. ரவி: human development indicators, மற்றும் ஆண்/பெண் விகிதம் பற்றி சொல்லியிருந்தீர்கள். அதுபற்றியும் மிக விளக்கமான எண்களை சென்சஸ் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம். ஆண்/பெண் விகிதம் நேரடியாகவே கிடைக்கிறது. தோண்டித் துருவினால் எத்தனை வீடுகளில் மின்சாரம் உள்ளது, எந்த மாதிரியான அடுப்பு (கேஸ், கெரசின், விறகு, கரி...), எத்தனை அருகில் பள்ளிக்கூடம் உள்ளது போன்ற பலவற்றுக்கும் சென்சஸ் தகவல் உள்ளது.

    இதைப்பற்றியெல்லாம் பேசுவதை விடுத்து...

    ReplyDelete
  4. 1.இதுமாதிரியான ஒரு விளக்கத்தை சமீபத்தில் படிக்க நேர்ந்தது. தமிழ் நாட்டிலும், பிற தென்மாநிலங்களிலும் திறம்பட மக்கள் தொகை கட்டுப்பாட்டை நடைமுறைப்படுத்தியதற்கான பரிசா இது என்று அந்தக்கட்டுரையாளர் கேள்வியெழுப்பியிருந்தார். மேலும் குடும்பக்கட்டுப்பாடு என்பது தாய்சேய் நலவிடுதிகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், ஓரளவுக்கேனும் மருத்துவ விழிப்புணர்வு இவற்றை உள்ளடக்கியது. இது முக்கியமானது.

    2. இதுபோன்ற பிழையான புள்ளிவிவரங்களை (முஸ்லீம்கள் மக்கட்த்தொகைப் பெருக்கம் பற்றி) உண்டாக்குவதும், பின் அவற்றை தமது பிரச்சாரத்துக்கு பயன்படுத்துவதும் சங்பரிவார்களின் வழக்கமான பாணி.

    நன்றி

    ReplyDelete
  5. முந்தைய பின்னூட்டம் என்னுடையது
    -தங்கமணி

    ReplyDelete
  6. முஸ்லீம்கள் மக்கட் தொகைப் பெருக்கம் பற்றி, சென்ஸசில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்கிறது இந்தச் சுட்டி. க்ட்ட்ப்://ந்ந்ந்.தட்ச்டமில்.cஒம்/னெந்ச்/2004/09/09/முச்லிம்.க்ட்ம்ல்

    ReplyDelete
  7. முஸ்லீம்கள் மக்கட் தொகைப் பெருக்கம் பற்றி, சென்ஸசில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்கிறது இந்தச் சுட்டி. க்ட்ட்ப்://ந்ந்ந்.தட்ச்டமில்.cஒம்/னெந்ச்/2004/09/09/முச்லிம்.க்ட்ம்ல் -- பிரசன்னா

    ReplyDelete
  8. முஸ்லீம்கள் மக்கட் தொகைப் பெருக்கம் பற்றி, சென்ஸசில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்கிறது இந்தச் சுட்டி. க்ட்ட்ப்://ந்ந்ந்.தட்ச்டமில்.cஒம்/னெந்ச்/2004/09/09/முச்லிம்.க்ட்ம்ல் -- பிரசன்னா

    ReplyDelete
  9. முஸ்லீம்கள் மக்கட் தொகைப் பெருக்கம் பற்றி, சென்ஸசில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்கிறது இந்தச் சுட்டி. க்ட்ட்ப்://ந்ந்ந்.தட்ச்டமில்.cஒம்/னெந்ச்/2004/09/09/முச்லிம்.க்ட்ம்ல் -- பிரசன்னா

    ReplyDelete
  10. முஸ்லீம்கள் மக்கட் தொகைப் பெருக்கம் பற்றி, சென்ஸசில் ஏற்பட்ட குளறுபடியே காரணம் என்கிறது இந்தச் சுட்டி. க்ட்ட்ப்://ந்ந்ந்.தட்ச்டமில்.cஒம்/னெந்ச்/2004/09/09/முச்லிம்.க்ட்ம்ல் -- பிரசன்னா

    ReplyDelete
  11. ஐயோ.. :( ஸாரி பத்ரி. எப்படி இத்தனை முறை வந்தத்தென்று தெரியவில்லை. :( அச்சுட்டி: http://www.thatstamil.com/news/2004/09/09/muslim.html --Haranprasanna

    ReplyDelete
  12. a long post by me was not included.let me c whether this is posted.
    ravi srinivas

    ReplyDelete
  13. ரவி: அவ்வப்போது blogger பின்னூட்டங்களைத் தின்றுவிடுகிறது. ஏன் என்று தெரியவில்லை. கடைசியாக நீங்கள் கொடுத்திருந்தது வந்துள்ளது.

    ReplyDelete
  14. பத்ரி, ஆங்கிலத்தில் கீழுள்ள பெட்டியில் தட்டும்போது மேலே உள்ள பெட்டியில் தமிழில் எழுத்துகள் தெரிவதில்லை. கொஜ்சம் செப்பனிட வேடும். செய்யுங்கள். - ஹரன்பிரசன்னா.

    ReplyDelete