Friday, October 01, 2004

சமாச்சார்.காம் - இந்தியாவிற்கு வரும் அமெரிக்க வேலைகள்

இந்த வாரம் சமாச்சார்.காம் கட்டுரையில் outsourcing பற்றிய எளிய அறிமுகம். இதை மேற்கொண்டு தொடர உத்தேசம். இந்தக் கட்டுரை அமெரிக்காவில் இருப்பவர்களுக்காக எழுதியது அல்ல. யூனிகோடில் இங்கே.

6 comments:

  1. இந்தக் கட்டுரை அமெரிக்காவில் இருப்பவர்களுக்காக எழுதியது அல்ல.
    >>
    அப்போ நான் படிக்கலை :))

    ReplyDelete
  2. அட, உங்களுக்குத் தெரியாததா? அதனாலதான். இது எங்கூர்ல இருக்கற, இது பத்தின விஷயம் அதிகம் தெரியாதவங்களுக்காக...

    ReplyDelete
  3. எல்லாம் சரி. நிறைய வேலை இந்தியாவுக்கு வரட்டும். ஆனா இந்த கால்சென்டர் வேலைகளை மட்டும் ஒழித்துக் கட்டினால் சௌக்கியமா இருக்கும். சொந்த அனுபவத்தில் இருந்து சொல்றேன். யுடிலிடி சர்வீஸ் எல்லாம் கால் செண்டருக்கு மாத்திக் குடுத்து ஒரே தலைவேதனை. என் ஐஎஸ்பிக்கு போன் செஞ்சேன், " மேடம், ரொம்ப சிம்பிள் ப்ராப்ளம், smtp ஒழுங்கா வேலை செய்யலை. அவுட்லுக் வழியா மெயில் போக மாட்டேங்குது, கொஞ்சம் என்னன்னு பாருங்க " இது தான் நான் சொன்னது. முதலிலே ஒரு துவாரபாலகி வந்து, நான் கனக்ஷன் வாங்கின தேதி, கஸ்டமர் ஐடி, என் பேர், விலாசம், யூசர் ஐடி, என்ன கம்பியூட்டர், என்ன os, மெமரி எத்தனை, குலம், கோத்திரம், நட்சத்திரம், ராசி, வயசுக்கு வந்த தேதி எல்லாம் கேட்டு பதிந்து கொண்டு ( ·ப்ரொ·பைலிங் பண்றாங்களாம்) , இன்னொரு உபதேவதைகிட்டே லைனை டிரான்ஸ்பர் செய்வார். அந்த உ.தேவதைகிட்டேயும், இன்னொருதரம் பாட்டு பாடின பிறகுதான், பிரச்சனை என்னன்னு காது குடுத்து கேப்பார். கேட்டுட்டு, சூப்பராக ஒரு ஐடியா குடுத்தார். என்ன தெரியுமா? மெஷினை ஆ·ப் செஞ்சு மறுபடி போடணுமாம். அடங்கொக்க மக்கா, இது நம்ம டாக்டர் ராமச்சந்திரன் டெக்கினிக்காச்சே... ... [ராமச்சந்திரன் தெரியாது? தெருக்கோடி ஜிஎம்பி ங்க. வயித்துவலி, வாந்திபேதி, வாதம்னு எந்த வியாதியா இருந்தாலும், அவர் பாரசிடமால் தான் குடுப்பார். மும்மூணு வேளை. மாத்திரையை உத்துப் பாருங்க. த/அ ன்னு போட்டிருக்கும். ] சரி இதுதான் சொல்லுதே டிரை செஞ்சுத்தான் பாப்போமேன்னு, மிஷினை ஆ·ப் செஞ்சு போட்டேன். ராமச்சந்திரன் டெக்கினிக்கு எப்பவும் வேலை செய்யாது. சரி அடி போனை திரும்பன்னு, அடிச்சா, இந்த முறை இன்னொரு தேவதை. அந்த அம்மா கிட்டயும் ஒரு பாட்டம் புலம்பி, அவங்க கொஞ்சம் ஏதோ உருப்படியா சொன்னாங்க. ஆனாலும் பிராப்ளம் சால்வ் ஆகலை. இன்னும் நாலுதரம் போன் செஞ்சு, பில்லை ஏத்திகிட்டதுதான் மிச்சம். பொண்ணுங்க பேசச் சொல்லோ குளுகுளுன்னுதான் இருக்கு... அதுக்கோசரம்? வேலை ஆவ வேணாமா? ஆஹா....... டெலிபோன் பில் கட்டியே போண்டி ஆயிடுவோம்னு தோணி, எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு, வேற ஏற்பாடு செஞ்சுகிட்டேன்னு வைங்க. ஒரு ஐஎஇப்பல்லாம் போன் செஞ்சாலே, அம்மா, அய்யா... நீ கால்செண்டரா இல்ல கம்பேனியான்னு கேட்டுக்கிட்டுத்தான் மேல பேசறது. எங்க பாசையிலே, பிபிஓன்னா, Buck Passing Office

    By: mukamuudi

    ReplyDelete
  4. பத்ரி, முகமூடி சொல்லியிருப்பது சரி என்று எனது நேரடி அனுபவத்தின் மூலமும் உணர்கிறேன். நானும் DSL இணைப்புக் குறித்தே அழைத்து அழைத்து நொந்திருக்கிறேன். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்று புரிகிறது. ஆனாலும் சில மிகவும் எரிச்சலைத் தருகின்றன. உதாரணத்திற்கு, பிரச்சினையை என்னவென்று கூறியபின், ஒரு முறைக்குப் பத்து முறை, நீங்கள் கூறியது இதுதானே என்று திரும்பவும் படித்துக் காட்டுவது... உங்களைப் பெயர் சொல்லி அழைக்கலாமா என்று கேட்ட பின் ஒரு வரிக்கு மூன்று முறை பெயரைச் சொல்லி அழைப்பது இத்யாதி. இதைவிடக் கொடுமையான ஒன்று தொலைபேசி இணைப்பு மிகவும் மோசமாக இருப்பது. ஆரம்பிக்கும் முன்னரே உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள் இணைப்பு துண்டித்துவிட்டால் நாங்கள் அழைக்கிறோம் என்று சொல்லிவிட்டு வாங்கிய எண்ணை என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அரைமணி நேரம் இவர்களோடு மன்றாடிவிட்டுத் தொலைபேசித் தொடர்பு அறுந்துபோய்விடுகிறது. எனக்கு மூன்று முறை இவ்வாறு ஆகி ஒருமுறை கூடத் திருப்பி அழைக்கவில்லை. இன்னும் பல. இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    நிற்க. இடையிலே அமெரிக்கர்கள் சிலர் இந்தியர்களைப் போட்டியாக நினைக்கிறார்கள் என்று எனது நிறுவனத்திலேயே உணர்கிறேன். அதில் ஒருவர் இந்தியா வந்துவிட்டு சில நிறுவனங்கள் CMMI Level 5 சான்று வாங்கி இருக்கிறார்கள் என்பதைச் சற்றே கிண்டலாகச் சொன்னார் - அவர்களே சோதித்துக் கொள்வதால் தான் இப்படி என்று (Self-assessment). அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஆனாலும் இது பற்றிய தகவல்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? இந்த அமெரிக்க நிறுவனம் (CMMI Level 1 கூட இல்லை!). இருந்தாலும் இவர்களது தரத்திற்குச் சோதித்தால் இந்திய நிறுவனம் Level 5 என்ன Level 3 கூட வராது என்று ஒரு கூட்டத்தில் கூறினார் (வயிற்றெரிச்சல் காரணமாய் இருக்கலாம்!) - இருந்தாலும் இந்தியாவில் இதுபற்றிய உண்மை நிலவரம் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு. தகவல் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. எனது அனுபவத்தில் இந்திய நிறுவனங்கள் சில ஆவணங்கள்/திட்டங்கள் இவற்றை ஒரு தரத்தோடு செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

    By: செல்வராஜ்

    ReplyDelete
  5. பத்ரி, முகமூடி சொல்லியிருப்பது சரி என்று எனது நேரடி அனுபவத்தின் மூலமும் உணர்கிறேன். நானும் DSL இணைப்புக் குறித்தே அழைத்து அழைத்து நொந்திருக்கிறேன். அவர்களுக்கு சொல்லிக் கொடுத்த வழிமுறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்று புரிகிறது. ஆனாலும் சில மிகவும் எரிச்சலைத் தருகின்றன. உதாரணத்திற்கு, பிரச்சினையை என்னவென்று கூறியபின், ஒரு முறைக்குப் பத்து முறை, நீங்கள் கூறியது இதுதானே என்று திரும்பவும் படித்துக் காட்டுவது... உங்களைப் பெயர் சொல்லி அழைக்கலாமா என்று கேட்ட பின் ஒரு வரிக்கு மூன்று முறை பெயரைச் சொல்லி அழைப்பது இத்யாதி. இதைவிடக் கொடுமையான ஒன்று தொலைபேசி இணைப்பு மிகவும் மோசமாக இருப்பது. ஆரம்பிக்கும் முன்னரே உங்கள் தொலைபேசி எண்ணைக் கொடுங்கள் இணைப்பு துண்டித்துவிட்டால் நாங்கள் அழைக்கிறோம் என்று சொல்லிவிட்டு வாங்கிய எண்ணை என்ன செய்கிறார்கள் என்று தெரியவில்லை. அரைமணி நேரம் இவர்களோடு மன்றாடிவிட்டுத் தொலைபேசித் தொடர்பு அறுந்துபோய்விடுகிறது. எனக்கு மூன்று முறை இவ்வாறு ஆகி ஒருமுறை கூடத் திருப்பி அழைக்கவில்லை. இன்னும் பல. இதோடு நிறுத்திக் கொள்கிறேன்.

    நிற்க. இடையிலே அமெரிக்கர்கள் சிலர் இந்தியர்களைப் போட்டியாக நினைக்கிறார்கள் என்று எனது நிறுவனத்திலேயே உணர்கிறேன். அதில் ஒருவர் இந்தியா வந்துவிட்டு சில நிறுவனங்கள் CMMI Level 5 சான்று வாங்கி இருக்கிறார்கள் என்பதைச் சற்றே கிண்டலாகச் சொன்னார் - அவர்களே சோதித்துக் கொள்வதால் தான் இப்படி என்று (Self-assessment). அதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஆனாலும் இது பற்றிய தகவல்கள் உங்களுக்கு ஏதேனும் தெரியுமா? இந்த அமெரிக்க நிறுவனம் (CMMI Level 1 கூட இல்லை!). இருந்தாலும் இவர்களது தரத்திற்குச் சோதித்தால் இந்திய நிறுவனம் Level 5 என்ன Level 3 கூட வராது என்று ஒரு கூட்டத்தில் கூறினார் (வயிற்றெரிச்சல் காரணமாய் இருக்கலாம்!) - இருந்தாலும் இந்தியாவில் இதுபற்றிய உண்மை நிலவரம் என்ன என்று அறிந்து கொள்ளும் ஆர்வம் எனக்கு. தகவல் தெரிந்தால் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி. எனது அனுபவத்தில் இந்திய நிறுவனங்கள் சில ஆவணங்கள்/திட்டங்கள் இவற்றை ஒரு தரத்தோடு செய்வதைப் பார்த்திருக்கிறேன்.

    ReplyDelete
  6. முகமூடி, செல்வராஜ்: இந்திய BPO நிறுவனங்கள் பலவும் சரியாக இல்லாது இருக்கலாம். நீங்கள் கூறுவது அனைத்திலும் உண்மை உள்ளது.

    இந்த பிரச்னைகளையெல்லாம் பற்றியும் விரிவாகப் பேச வேண்டும். முக்கியமாக அழைப்பு மையங்கள் தொடர்பானவை.

    அமெரிக்க நிறுவனங்கள் தம் அதிகாரிகள் யாரையாவது இந்திய அழைப்பு மையங்களில் முழுமையாக பக்கத்திலேயே இருக்குமாறு செய்வதன் மூலம் பல குழப்பங்கள் ஏற்படாதவாறு செய்யலாம்.

    இந்திய IT, ITES நிறுவனங்களின் தரம், திறமை ஆகியவற்றைப் பற்றிய என் கருத்தை சற்றே விரிவாக எழுதுகிறேன்...

    ReplyDelete