10 லட்சம் தாண்டினாலும் இலவசப் பொருள் விநியோகம் என்றாவது ஒருநாள் நிற்கும். அப்பொழுது குங்குமம் விற்கும் பிரதிகள் சடாரென குறையும் என்றே பலரும் சொல்கிறார்கள். தி எகனாமிக் டைம்ஸ் பத்திரிகையில் வந்த செய்தியில் 'ABC (Audit Bureau of Circulation) ஆடிட் படி ஜூன் 2004இல் குங்குமம் வெறும் 75,000 பிரதிகள்தான் விற்பனையானது; குமுதம் கிட்டத்தட்ட 400,000 பிரதிகள் விற்பனையானது' என்று சொல்லியிருப்பதை மனதில் கொள்ள வேண்டும்.
குங்குமம் ஏன் ஏற்கனவே தமிழ் உலகில் இருக்கும் குமுதம், விகடன் போல தானும் இருக்க வேண்டும்? குமுதம், விகடனுக்கு இல்லாத சில வசதிகள் குங்குமத்துக்கு உண்டு. குங்குமம், சன் டிவி/கே டிவி/சன் நியூஸ்/SCV ஆகிய சானல்கள், சூரியன் எஃப்.எம் பண்பலை வானொலி அனைத்தும் ஒரே குழுமத்தின் உரிமையின் கீழ்.
ஏன் குங்குமம் மற்ற இதழ்களைப் போல பத்து பேரிடமிருந்து சிறுகதைகளை வாங்கி, அதில் இரண்டை வைத்துக்கொண்டு, மீதியைத் தூர எறிய வேண்டும்? சினிமா செய்திகள், துணுக்குகள் ஆகியவற்றை குமுதம்/விகடனைப் போலச் செய்ய வேண்டும்?
பேசாமல் குங்குமத்தை சன் டிவி, சூரியன் எஃப்.எம் இரண்டின் துணையிதழாக வெளியிடலாமே? சன் நியூஸில் வரும் அந்த வாரச் செய்திகளின் சுருக்கம் இரண்டு பக்கங்களில். அத்துடன் அந்தப் பக்கத்திலேயே "செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள சன் நியூஸ் தொலைக்காட்சியைப் பார்க்கவும்" என்று விளம்பரம் போட்டு விடலாம். சன் டிவியில் அந்த வாரம் காண்பிக்கப்படும் தொடர் சீரியல்களின் கதைச் சுருக்கத்தை - ஒவ்வொன்றும் இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் போட்டுவிடலாம். அத்துடன் அவற்றின் கீழ், "மெட்டி ஒலி, திங்கள் முதல் வெள்ளி வரை உங்கள் சன் டிவியில் இந்த நேரத்தில்" என்று போட்டு விடலாம். அதே போல சன் டிவி, கே டிவியில் காண்பிக்கப்படும் திரைப்படங்களின் கதைச்சுருக்கம், டாப் டென் பாடல்கள் லிஸ்ட் ஆகியவை. வணக்கம் தமிழகத்தில் வரும் ஆசாமிகள் பற்றிய சுருக்கம், அவர்கள் கொடுத்த அறிவுரைகள், சாலமன் பாப்பையா, சுகி சிவம் இப்படி யாராவது டிவியில் என்ன சொல்கிறார்களோ, அதை அப்படியே சுருக்கமாக இதழில் போட்டு விடலாம்.
முக்கியமாக, அடுத்த வாரம் சன் டிவி குழும சானல்களில் என்னென்ன நிகழ்ச்சிகள், சூரியன் எஃப்.எம்மில் என்ன நிகழ்ச்சிகள் என்பதைப் பட்டியலிடலாம். விளம்பரங்களுக்கு - சன் டிவி, சூரியன் எஃப்.எம்மில் நிகழ்ச்சிகளின் விளம்பரதாரர்களையே பிடித்து ஐந்து சதவிகிதம் அதிகம் கட்டினால் குங்குமம் இதழிலும் வரும் என்று போடலாம்.
இதுபோலவே சன் டிவி குழுமத்துக்கான இணையத்தளத்தையும் (யூனிகோடில்!) ஒப்பேற்றலாம். செய்திகள் வர வர இணையத்தளத்தில் சூடாகவும், அடுத்து செய்தி சானலிலும், பின் கடைசியாக வாரா வாரம் குங்குமத்திலும் வரவைக்கலாம். கேளிக்கை விஷயங்களை இணையம் முதல், தொலைக்காட்சி/வானொலியுடன் அச்சு இதழ் வரை எல்லா இடத்திலும் அப்படியே போடலாம். குங்குமத்தில் சிறுகதை, துணுக்குகள் ஆகியவற்றை அறவே ஒழித்து விடலாம். தொடர்கதைகளுக்கு பதில் - அண்ணமலையும், மெட்டி ஒலியும் அது போன்றவையும். சினிமா பற்றிய கிசுகிசுக்கள், வம்புகள் ஆகியவற்றை மட்டும் "exclusive to குங்குமம்" என்று விட்டுவைக்கலாம்.
இப்படிச் செய்வதால் குங்குமத்துக்கு தனிப்பண்பு இருக்கும். அதன் கூட மிளகாய்த்தூள், மஞ்சள் பொடி, ஷாம்பூ, பாதாம்பருப்பு கொடுக்காமலேயே கூட மூன்று, நான்கு லட்சம் ஓடும். தொடர்ச்சியாக சன் டிவி பார்ப்பவர்கள் அனைவரும் இந்த துணையிதழையும் வாங்குவர். இதனால் நாளை முப்பது லட்சம் பிரதிகள் கூட விற்க வாய்ப்பு உண்டு.
சிஎன்என், பிபிசி கூட இணையம், வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றை முழுதாக, தடங்கலின்றி இணைத்துள்ளார்கள். சன் குழுமம், இவற்றுடன் அச்சு இதழையும் சேர்த்து புரட்சி செய்யலாம்.
Saturday, October 23, 2004
Subscribe to:
Post Comments (Atom)
குங்குமம் இதைச் செய்யலாம் அதைச் செய்யலாம் என்று பட்டியல் குடுத்திருப்பது சீரியஸாகவா அல்லது நக்கலாகவா? சொன்னால் நானும் கொஞ்சம் பாய்ண்ட்டுகள் எடுத்துக் கொடுக்க வசதியாக இருக்கும்
ReplyDeleteBy: anonymous
சீரியஸ்.
ReplyDeleteபத்ரி, முக்கியமான ஆலோசனையை இலவசமாக கொடுத்துள்ளீர்கள். ஆனாலும் இவர்கள் மாறமாட்டார்கள்.
ReplyDeleteஊடக உலகில் மாறன் குழுமம் பின் தங்கி இருப்பது அச்சு ஊடகத்தில்தான். அதையும் பிடிக்க வேண்டும் என்றுதான் அவசரப்படுகிறார்கள். அந்த அவசரத்தை ஏற்கனெவே இருக்கும் மற்ற பத்திரிக்கைகளிடமிருந்து சாராம்ச ரீதியாக வித்தியாசப்பட்டு பெற முயற்சிக்கவில்லை என்பதுதான் வேதனை.
கற்பனைப் பஞ்சம் தமிழ் பத்திரிக்கை உலகையே பிடித்தாட்டிக் கொண்டிருக்கிற
http://www.sunnetwork.org/specials/sun-in-news/pitch/
ReplyDeleteஇங்கே உள்ள கலாநிதி மாறன் செவ்வியைப் படிக்கவும். மாறனுடைய இந்த வருடத்தைய பிராஜெக்ட் அச்சு ஊடகம். முதலில் செய்தித்தாள்கள் பக்கம் போவதாக இருந்துள்ளது. ஆங்கில செய்தித்தாள் ஒன்றை வெளிக்கொண்டு வருவதாக இருந்தது, கடைசியில் சில காரணங்களால் தள்ளிப்போயிருக்கிறது போல. அதற்குள் குங்குமத்தை ஒரு கலக்கு கலக்குவது என்று முடிவு செய்துள்ளார்.
ஆனால் ஆங்கிலம், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளிலும் தினசரிகளைக் கொண்டு வருவதாகச் சொல்கிறார். மலையாளம் மட்டும் இப்பொழுதைக்குக் கிடையாதாம் - நெரிசல் மிகுந்த சந்தை என்கிறார்.
தயாநிதி மாறன் மே தேர்தலுக்குக்குப் பின்னர் தில்லி சென்றதும்தான் குங்குமம், கலாநிதி மாறன் கைக்கு வந்துள்ளது. அதைத் தொடர்ந்துதான் இந்த "புச்சு கண்ணா புச்சு" யுக்தி. அதனால்தான் கலாநிதி மாறனின் முந்தைய திட்டமான செய்தித்தாள் (தாற்காலிகமாக) கழற்றி விடப்பட்டு, வார இதழ் பக்கம் ஃபோகஸ்.
கலாநிதி மாறன் திறமை வாய்ந்தவர்... பார்க்கலாம், அடுத்து என்ன செய்கிறார் என்பதை.
குங்குமம் & கம்பெனி, புதுசாக ஒன்றை செய்து பார்த்ததாக நினைவில்லை.( சன்டீவி உள்பட) . ஒப்புக் கொண்டாலும், இல்லாவிட்டாலும், குமுதமும், ஆவியும் தான் வார இதழ்களுக்கான பெஞ்சு மார்க். புச்சு கண்ணா புச்சு விளம்பர உத்தி, குங்குமத்தை வார இதழ்களின் மார்க்கெட் லீடராக கொண்டு வருவதற்கான முயற்சி அல்ல. அது குமுதம் , ஆனந்த விகடன் மார்க்கெட்டைப் படிப்பதற்கான முயற்சி மட்டுமே. குங்குமம் விற்பனையில் முந்தி விட்டால், அவர்களின் mission complete. அதற்கு மேல் யோசிக்க தமிழ்நாட்டு மீடியாவுக்கு எல்லாம் ' பத்தாது'. இந்த out-of-the-box ஐடியாவை அவர்களிடம் காட்டினால்.... வேணாம் , சொன்னால் உங்களுக்கு கோவம் வந்து இங்கிலீஸில் திட்டுவீர்கள். சுருக்கமாகச் சொன்னால், தினமலருக்கு வாரமலர் போல, சன் டீவியின் சப்ளிமெண்டாக இதை மாற்றவேண்டும் என்று சொல்கிறீர்கள்.
ReplyDeleteஇந்த ஐடியா ஏன் ஒத்து வராது என்பதற்கு ஒரு சில பாய்ண்ட்டுகள்.
* ஒரு பொருளை டெலிஷாப்பிங் நெட்வொர்க்கில் விளம்பரம் செய்வதற்கும் சன் டீவியில் ப்ரைம் டைமில் விளம்பரம் செய்வதற்கும் இடையில் இருக்கும் வித்தியாசம் தான், குங்குமம் அதனளவில் ஒரு வாரப்பத்திரிக்கையாக இருப்பதற்கும், சன் குழுமத்தின் சப்ளிமெண்ட் இதழாக இருப்பதற்கும் இடையில் இருக்கிறது. சன் டிவீயின் சப்ளிமெண்டாக ஒரு இதழ் வந்தால், மூணு நாலு லட்சம் பேர் வாங்குவார்கள்மென்று சொல்வது எந்த அடிப்படையில்?
* குங்குமத்தின் நோக்கம், விற்பனையில் அனைவரையும் முந்திக் கொண்டு செல்வது. தமிழில் நம்பர் ஒன் வார இதழாக வரவேண்டும் என்பது. அதற்கு, இந்த விளம்பர உத்தி கைகொடுக்கும் என்றாலும், ஆதாரமாக உள்ளடக்கம் தரமாக இருக்க வேண்டும். நீங்க சொல்லலாம், சிறுகதை வேணாம், துணுக்கு வேணாம் என்று..ஆனால், இவை இல்லாமல் ஒரு வார இதழை யாராலும் யோசிக்க முடியாது.
* ஒரு வார இதழை நல்லாச் செய்வதற்கு வேற சில வழிகள் இருக்கின்றன. ஒரு நல்ல ஆசிரியர் கிடைத்தாலே பாதிக் கிணறு தாண்டியது மாதிரிதான். சன்டீவிக்கு அரசியல் கலர் இருந்தாலும், அதையும் மீறி, எல்லாக் கட்சிக்காரர்களும் தான் பார்க்கிறார்கள். அதற்குக் காரணம், சன்டீவியின் ஒளிபரப்பு துல்லியம், நிகழ்ச்சிக் கிடையில் எத்தனை விளம்பரம் என்ற பாலிசி , மூவி டைட்டில் உரிமைகள், டீவி சம்மந்தப் பட்டவர்களுக்கு நல்ல வரும்படி, நல்ல அடிப்படை கட்டமைப்பு வசதிகள். ஆனால், குங்குமத்தின் உள்ளடக்கம் மிகக் கேவலமாக இருக்கிறது. அதிநவீன இலக்கியம் என்றும் இல்லாமல், குப்பை என்றும் இல்லாமல், இடைப்பட்ட பாதையைத் தேர்ந்தெடுத்து, விளம்பரத்துக்கு ஆன செலவில் பத்து சதவீதம் , உள்ளடக்கத்துக்கும் செலவு செய்தால், நல்ல உத்தியாக இருந்திருக்கும். ஆனால் எது நல்ல கண்டெண்ட் என்பது யாருக்குமே தெரியாமல் இருக்கிறதால் வருகிற பிராப்ளம் இது. :-)
By: anonymous
There used to be a daily called Dinabhoomi, I am not sure if it is still there. They used to give tons of freebees for their deepvali issue and it used to be pre booked. So there is no surprise in what Kungumam is claiming today. As everyone else has pointed out, the whole thing will die, when the plug on the advertisement campaign and the freebees is pulled. A real strategy would be to ensure proper content and positioning for the magazine before going boom boom on the advertisement. Sun TV is a success story due to their Content Strategy. Sun TV content rests on its two pillars namely Cinema and Serials. Anyone who likes to break SUN clout needs to learn a lot from Star Plus. Start was able to push both Zee and Sony only because of their content strategy. Start used KBC as a trigger to promote Stat Plus. During the KBC ad breaks they advertised for their own channel’s serials and new Hindi movies. Rest is history. If only Kungumam had planned their content strategy before going best kanna best they could have surely become first kanna first.
ReplyDeleteBy: Ganesh