Wednesday, October 20, 2004

ராஜ் டிவி அப்லிங்கிங் உரிமை ரத்து பிரச்னை

மார்ச் 2003: ராஜ் டிவி நிறுவனம் தன்னிடம் ஏற்கனவே இருக்கும் சானல்களான ராஜ் டிவி (Raj TV), ராஜ் டிஜிட்டல் பிளஸ் (Raj Digital Plus) ஆகியவற்றுடன், ராஜ் விஸ்ஸா (Raj Vissa), ராஜ் மியூஸிக்ஸ் (Raj Musix) என்னும் மற்றும் இரண்டு சானல்களின் சிக்னல்களை நேரடியாக, இந்தியாவிலிருந்தே மேலேற்ற அனுமதி கோரி செய்தி, ஒளிபரப்புத்துறை அமைச்சகத்திடம் (Department of Information and Broadcasting) விண்ணப்பிக்கிறது.

செயற்கைக்கோளுக்கு சிக்னல்களை மேலேற்றும் அனுமதியைத் தருவது தொலைதொடர்பு அமைச்சகத்தின் (Department of Telecommunication) Wireless Planning and Coordination Wing (WPC) ஆகும்.

ஜூன் 2003: ராஜ் டிவி நிறுவனம் தன் தெலுங்கு சானல் 'ராஜ் விஸ்ஸா'வை 23 ஜூன் 2003 அன்று தொடங்குகிறது. அப்பொழுதைய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தொடங்கி வைக்கிறார். அதே மாதத்தில் ஆர்ப்பாட்டம் எதுவுமின்று ராஜ் மியூசிக்ஸ் என்னும் 24 மணிநேர தமிழ் ஆட்டம்/பாட்டம் சானல் ஆரம்பிக்கப்படுகிறது.

மார்ச் 2004: ராஜ் டிவி நிறுவன உரிமையாளர் M.ராஜேந்திரன் (M.Raajhendhran) பாஜகவில் சேர்கிறார்.

மே 2004: பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ், திமுக, பிற கட்சி கூட்டணி ஆட்சியைப் பிடிக்கிறது. திமுகவின் தயாநிதி மாறன் தொலைதொடர்பு அமைச்சர் ஆகிறார். தயாநிதி மாறன், அவரது அண்ணன் கலாநிதி மாறன் ஆகியோர் தமிழ், கன்னடம், தெலுகு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி நடத்தும் சன் டிவி நிறுவனத்தின் உரிமையாளர்கள். ராஜ் டிவி நிறுவனம் சன் டிவி நிறுவனத்துக்கு போட்டி நிறுவனமாகும்.

ஜூலை 2004: தொலைதொடர்பு அமைச்சகத்தின் WPC, ராஜ் டிவி நிறுவனம் ஒழுங்கான அனுமதி வாங்காமல், பணமும் கட்டாமல் ராஜ் மியூசிக்ஸ், ராஜ் விஸ்ஸா எனும் சானல்களின் சிக்னல்களை மேலேற்றுவது ஏன் என்று கேட்டு ராஜ் டிவி நிறுவனத்துக்குக் கடிதம் எழுதுகிறார்கள். பதறி அடித்துக்கொண்டு ராஜ் டிவி நிறுவனம், WPCக்கு பதில் கடிதமும், ரூ. 3.15 லட்சத்துக்கான வரைவோலையும் அனுப்பி வைக்கின்றனர். அத்துடன் புதிதாக ஆரம்பித்த இரண்டு சானல்களையும் - கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்குப் பிறகு - மொத்தமாக நிறுத்தி விடுகின்றனர்.

(நேரடியாக இந்தியாவிலிருந்து செயற்கைக்கோளுக்கு சிக்னல்களை அனுப்ப 1 MHz க்கு WPCக்கு ரூ. 35,000 பணம் கட்ட வேண்டும். ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ் ஆகிய இரண்டு சானல்களையும் மேலேற்ற 9 MHz தேவை. அதற்கு மேல் இன்னமும் இரண்டு சானல்களை ஏற்ற மற்றும் 9 MHz. அதற்கான கட்டணம் 9*35,000 = ரூ. 3.15 லட்சம்.)

25 ஆகஸ்ட் 2004: முறையான அனுமதி இல்லாமல் சிக்னல்களை மேலே ஏற்றியதனால் ராஜ் டிவி நிறுவனத்துக்குக் கொடுத்திருந்த சிக்னல்களை மேலேற்றும் உரிமை - நான்கு சானல்களுக்கும் சேர்த்து - ரத்து செய்யப்படுகிறது என்று WPC ராஜ் டிவி நிறுவனத்துக்கு அறிவிக்கிறது.

26 ஆகஸ்ட் 2004: இந்த உத்தரவை தடை செய்யக் கோரி ராஜ் டிவி சென்னை உயர்நீதி மன்றத்தை அணுகுகிறது.

27 ஆகஸ்ட் 2004: நீதிபதி R.பாலசுப்ரமணியன் தற்காலிகத் தடையுத்தரவு பிறப்பிக்கிறார். நீதிமன்றத்தில் விவாதம் தொடர்கிறது.

13 அக்டோபர் 2004: நீதிபதி K.ரவிராஜ பாண்டியன் வழக்கின் முடிவை தள்ளி வைக்கிறார். விவாதங்களில் ராஜ் டிவி சிக்னலை மேலேற்றும் உரிமை செய்தி ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் கீழ்தான் வரவேண்டும் என்று வாதாடுகின்றனர். அத்துடன் தாங்கள் செய்த தவறை ஒப்புக்கொண்டு, இப்படிப்பட்ட தவறுக்கு சிக்னலை மேலேற்றும் உரிமையை முற்றிலுமாக ரத்து செய்வது, அதுவும் ஏற்கனவே நடந்து கொண்டிருக்கும் இரண்டு பழைய சானல்களின் சிக்னல்களையும் மேலேற்றும் உரிமையையும் சேர்த்து ரத்து செய்வது நியாயமற்றது என்று வாதாடுகின்றனர். (மத்திய) அரசு வக்கீலோ, ஏற்கனவே ராஜ் டிவி, WPCஇடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறியதால் (அதாவது இரண்டு சானல்கள் - 9 MHz என்பதை மாற்றி 18 MHz சிக்னல் மேலேற்றியது) மொத்த அனுமதியையும் ரத்து செய்ய WPCக்கு அதிகாரம் உண்டு என்று வாதாடுகிறார். நீதிபதி, ராஜ் டிவி தான் செய்த தவறை சரி செய்ய என்ன செய்ய வேண்டும் என்று அரசு வக்கீலிடம் கேட்கிறார். அதற்கு அரசு வக்கீல் TRAIதான் (தொலைதொடர்பு, ஒளி/ஒலிபரப்பு கட்டுப்பாடு வாரியம்) இதற்கு தீர்ப்பு சொல்ல வேண்டும் என்கிறார்.

19 அக்டோபர் 2004: எல்லோரும் வீரப்பன் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, நீதிபதி ரவிராஜ பாண்டியன் தன் தீர்ப்பில் "WPC ஆணை செல்லுபடியாகும்... அதாவது ராஜ் டிவி இனி நேரடியாக தன் சிக்னல்களை செயற்கைக்கோளுக்கு இந்தியாவிலிருந்து மேலேற்ற முடியாது" என்று தீர்ப்பளிக்கிறார். ஆனால் ராஜ் டிவிக்கு மேல் முறையீடு செய்ய இரண்டு வாரங்கள் வாய்ப்பளிக்கிறார். அதுவரை தீர்ப்பு நடைமுறைப்படுத்தப்படாது.

====

இனி...

ராஜ் டிவி உடனடியாக உச்ச நீதிமன்றத்தை அணுகி இடைக்காலத் தடையுத்தரவைப் பெற வேண்டும். அதே நேரத்தில் TRAI யை அணுகி, தான் செய்த தவறுக்கு என்ன நிவாரணம் என்று கேட்க வேண்டும். TRAI இதுவரை இதுபோன்ற பிரச்னையில் ஈடுபட்டதில்லை. சொல்லப்போனால் Conditional Access System (CAS) பிரச்னை பெரிதாகி வெடித்ததும்தான் பாஜக அரசு ஒலி/ஒளிபரப்புத்துறை விவகாரத்தையும் TRAI தலையில் சுமத்தியது. அதுவரை TRAI தொலைபேசி/செல்பேசி சம்பந்தமான பிரச்னைகளை மட்டும்தான் கவனித்து வந்தது.

TRAI தலைவர் பிரதீப் பைஜால் நியாயமான, சுதந்திரமான அதிகாரி. அதனால் ராஜ் டிவியின் நிலையைப் புரிந்து கொண்டு பிரச்னையைத் தீர்க்கும் விதமாக ஒரு தீர்ப்பைக் கொடுக்கலாம்.

WPC நடத்தை கேவலமாக உள்ளது. தான் செய்தது தவறு என்று ராஜ் டிவி நிறுவனத்தாரே ஒப்புக்கொள்கிறார்கள். ஓர் அரசுத்துறை செய்ய வேண்டியது பழிவாங்குதல் அல்ல. தவறுக்கு தண்டனையைத் தீர்மானிப்பதும் அவர்கள் பொறுப்பல்ல. அதற்குத்தான் TRAI உள்ளது.

சிக்னல் மேலேற்றும் உரிமை மறுக்கப்பட்டால் ராஜ் டிவி நிறுவனத்தின் இரண்டு தமிழ் சானல்கள் - ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ் - பல கஷ்டங்களுக்கு உள்ளாக நேரிடும். வேறு நாட்டிலிருந்து சிக்னலை மேலேற்ற வேண்டும். இதனால் நிகழ்ச்சிகளை முன்னதாகவே செய்து கேஸட்டுகளில் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும். வேறு செயற்கைக்கோள் தேட வேண்டும். இதனால் எல்லா கேபிள் ஆபரேட்டர்களிடமும் இருக்கும் சிக்னல் டிகோடர்களை (decoder) மாற்ற வேண்டும். நேரடி ஒளிபரப்பு எதையும் செய்ய முடியாது.

தயாநிதி மாறன் ஒரு மூலையில் சிரித்துக்கொண்டே "எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. எல்லாம் சட்டப்படி நடக்கிறது" என்று சொல்லிவிடலாம். ஆனால் நிச்சயம் உண்மை அதுவல்ல என்றே தோன்றுகிறது. இது ஒன்றும் கொலைக்குற்றம் அல்ல. ஒரு குறிப்பிட்ட அளவு அபராதத் தொகையை விதித்து, 'ஒழிந்து போ' என்று விட்டுவிடக் கூடியதுதான்... சென்னை உயர்நீதி மன்றத் தீர்ப்பு வருத்தத்தை அளிக்கிறது.

14 comments:

  1. நியாயமான கருத்து. சட்ட திட்டங்களை வைத்துக் கொண்டு அராஜகத்தை எவ்வாறு நிகழ்த்துவது என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் செயல்தான் நிகழ்கிறது.

    வெளிநாட்டில் இருந்து வரும் தொலைதொடர்பு அழைப்புக்களை, இந்தியாவில் உருவானதைப் போல காண்பித்த ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு அபாராதம் விதித்து மன்னிக்க முடியும் என்றால், ராஜ் டிவியின் குற்றமும் மன்னிக்கக் கூடிய ஒன்றே.

    ரிலையன்ஸின் குற்றம் கடுமையானது- என் பார்வையில்

    ReplyDelete
  2. ராஜின் தெலுங்கு சேனலான விஸ்ஸாவிடம் உரிமை இருந்த ஒரு தெலுங்கு திரைப்படத்தை முறைகேடாக சன் நெட் ஒர்க்கின் தெலுங்கு சேனலான தேஜா ஒளிபரப்பியது. இதைத் தொடர்ந்து தேஜாவுக்கு விஸ்ஸா தரப்பிலிருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டதாகவும் அதற்கான பழிவாங்கும் நடவடிக்கையாகவே மேற்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் சென்னை தனியார் தொலைக்காட்சி வட்டாரங்கள் பேசிக்கொள்கின்றன.

    By: பாரா

    ReplyDelete
  3. இதைத் தான் நான் இரண்டு மாசத்துக்கு முன்னாடி சொன்னேன்...திட்டித் தீத்துட்டாங்க :-)
    நீங்க விசு 'சம்சாரம் அது மின்சாரம்'ல சொல்றாப்புல, 'அந்த அம்மையப்ப முதலியாரைத் தெரியலையா?'ன்னு அடுக்கடுக்கா, கலக்குவாரே...அது மாதிரிபுள்ளிவிவரத்தோட சொல்லியிருக்கீங்க. நல்ல பதிவு!
    http://arunviews.blogspot.com/2004/08/blog-post_27.html


    By: Arun

    ReplyDelete
  4. அருண்: உங்கள் பதிவை இப்பொழுதுதான் கவனிக்கிறேன். எப்படியோ அந்த நேரத்தில் நான் அதைப் பார்க்கமல் விட்டிருக்கிறேன்...

    உங்கள் பதிவுக்கு வந்த எதிர்வினைகள் உங்கள் பதிவின் முக்கியக் கேள்விகளை விட்டுவிட்டு வேறெதையோ பற்றி மட்டுமே பேசியுள்ளதாகத் தெரிகிறது.

    இப்பொழுதைக்கு இந்தியாவின் வான்வெளியில் யார் வேண்டுமானாலும் எந்த சானலை வேண்டுமானாலும் பரப்பலாம். அதற்கு எந்த உரிமையும் தேவையில்லை. பிபிசி, சிஎன்என் முதல் பல நூறு சானல்கள் அப்படி காண்பிக்கப்படுகின்றவையே.

    இந்திய அரசால் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே விஷயம் இந்தியாவிலிருந்து சிக்னல்களை செயற்கைக்கோள் மேலேற்றுவதே. இங்குதான் DoT/WPC உள்ளே நுழைகிறது.

    சில சமயம், "நாட்டு நலன் கருதி" சில சேனல்களை கேபிள் ஆபரேட்டர்கள் ஒளிபரப்பக்கூடாது என்று (இப்படித்தான் பிடிவி சிலமுறை மறைக்கப்பட்டுள்ளது) அரசு சொல்வது வழக்கம்.

    நம் நாட்டில் மட்டும் அகலப்பாட்டை இணையத்தின் விலை குறைந்தால், DoT/WPC யால் கூட இம்மாதிரி கூத்துகளை அடிக்க முடியாது. ஒரு 'கட்டிப்பிடி' ஆடல்/பாடல்களையோ, வெறும் டாக் ஷோக்களையோ இணையம் வழியாக அனுப்ப 3-5 MBPS பேண்ட்விட்த் போதும். அதுமட்டும் ரூ. 2 லட்சத்துக்குள் வந்துவிட்டால், பின் யாரிடமும் அனுமதியும் கேட்க வேண்டியதில்லை, உரிமையும் பெற வேண்டியதில்லை. இப்படி இணையம் வழியாக அனுப்பப்படும் சிக்னலை வெளிநாடு ஒன்றிலிருந்து செயற்கைக்கோள் ஒன்றின் மீதி ஏற்றி மீண்டும் இந்தியாவில் ஒளிபரப்பலாம்.

    நீங்கள் சொன்னது போல எந்த ஊடகமும் இது பற்றி அதிகமாக அலட்டிக்கொள்ளவில்லை. நாசி ஜெர்மனியில் நாசிக்கள் ஒவ்வொரு கூட்டத்தினரையும் அடக்கி ஒடுக்கும்போது பிறர் அமைதியாக இருந்தது போல இன்று ராஜ் டிவி நசுக்கப்படும்போது எல்லோரும் வாயை மூடிக்கொண்டு இருந்து விட்டால்? நாளை குங்குமத்துக்கு எதிரி என்று குமுதத்தைக் குடையப்போக (எல்லாமே குப்பை என்ற போதிலும்!), இப்படியே போய்க்கொண்டிருந்தால்?

    ராஜ்: நீங்கள் சொன்ன ரிலையன்ஸ் விவகாரம்... சரிதான். பி.எஸ்.என்.எல்/எம்.டி.என்.எல் கொடுத்திருக்கும் அந்தப் புகார் உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரிலையன்ஸ் செய்தது ஏமாற்றல் - தீவிர குற்றமாகிறது. அங்குதான் ரிலையன்ஸ் பெற்றுள்ள தொலைபேசிச்சேவை உரிமத்தை ரத்து செய்யலாமா, கூடாதா என்ற பேச்சு எழலாம்! அதை விடுத்து ராஜ் டிவியை தேவையில்லாமல் அடித்து நொறுக்க முயல்வது அசிங்கமாக உள்ளது.

    ReplyDelete
  5. Reliance has committed not one but many business frauds. The recent two are masking incoming calls from US and delevering them as india originated calls(It helps the compny to bypassing the revenue share of the end carrier), the bigger lie was providing mobile service with WLL licence. A Mobile license for all india would have costed Rs 5000 crores...but reliance provided service without getting any....finially end up paying Rs 1550 crores as fine, that too after a year and a half. Why i am saying all this is, if laws are so flexible when it comes to Reliance, why it cant be the same way when the invloved party RAJ is willing to accept the mistakes and pay the necessary. The thought of one group controlling the entire media, makes me feel like tamilnadu becoming a Hitler's Germany. (Only in the media propoganda sense).

    By: Ganesh

    ReplyDelete
  6. Reliance has committed not one but many business frauds. The recent two are masking incoming calls from US and delevering them as india originated calls(It helps the compny to bypassing the revenue share of the end carrier), the bigger lie was providing mobile service with WLL licence. A Mobile license for all india would have costed Rs 5000 crores...but reliance provided service without getting any....finially end up paying Rs 1550 crores as fine, that too after a year and a half. Why i am saying all this is, if laws are so flexible when it comes to Reliance, why it cant be the same way when the invloved party RAJ is willing to accept the mistakes and pay the necessary. The thought of one group controlling the entire media, makes me feel like tamilnadu becoming a Hitler's Germany. (Only in the media propoganda sense).

    By: GaneshBy: Ganesh

    ReplyDelete
  7. "Justice K. Raviraja Pandian, holding that the channel had not come to the court "with clean hands by disclosing full details," said it had aired two channels — Vissa and Raj Musix — from October 1 , 2003 "unauthorisedly" in spite of the fact that its licence had not been renewed.

    The payment of fee arrears would not entitle the network to "automatic renewal," the judge said, adding "increasing the bandwidth and airing the two additional channels for more than a year is an unauthorised act."

    Ruling that the Ministry of Telecommunications was the competent authority to issue the termination order, he said the order was in conformity with the principles of natural justice."

    if you cant understand this and see the issue only as Raj TV vs Sun TV you are fit to join Dinamalar and promote Andumani type of journalsim.

    ReplyDelete
  8. Ravi Srinivas: It appears to me that you are spoiling for streetfight. I am not going to take the bait.

    I still disagree witht the learned Judge's decision. I think it is too harsh. I am sure the options still open to Raj TV, namely the Supreme Court of India and TRAI could/should give them necessary relief.

    I still think the issue has been taken to the extreme because of Dayanidhi Maran and Sun TV. If Dinamalar thinks the same or otherwise, I care the least.

    ReplyDelete
  9. corruption is not equivalent to murder.so shall we
    simply levy fine on those convicted of corruption charges and let them off. some acts are void abinitio if the laws are violated.courts go by materials before them, law and arguments advanced on behalf of parties. a judge will go only by these and not by rumors or canards that appeared in newspapers. considering the facts the judgement sounds reasonable and RAJ TV can appeal and seek justice. that avenue is
    open and let them prove that they have been
    unduly punished contrary to the letter and spirit of law. ravi srinivas

    ReplyDelete
  10. fine, let them do it.judges interpret rules and laws and go by what the law says and if the punishment is harsh it is not because of the preferences of the judge but because of law. let Raj TV question the very law or rules or prove that they have been unduly punished or have been discriminated agaist.if the law provides for demolishing an unauthorised construction and if the judge says that demolition is permitted as it is legal that is it. you cant say it is too harsh.
    in that case you should challenge the law. u cant have it both ways - i will violate law and i should not punished as that would affect me.

    ReplyDelete
  11. Why we tamils can never have an haealthy discussion? is it the impact of davidian party(political) culture ?

    Badri your example of indiffereence during nazi's extermeination of different ethnies is very approriate...

    ReplyDelete
  12. >Why we tamils can never have an haealthy discussion? is it the impact of davidian party(political) culture ?

    No, it is the impact of sugarcane juice party (comical) culture!

    hee, hee, hee!!!

    By: S Krupa Shankar

    ReplyDelete
  13. Badri, please bear with me for raising this question here.

    Ravi Srinivas said: "if the laws are violated.courts go by materials before them, law and arguments advanced on behalf of parties. a judge will go only by these and not by rumors or canards that appeared in newspapers."

    Ravi, you would you apply this to all the cases, courts and judges in India too, right? Just asking because it may be useful later. who knows. . :-)

    By: PK Sivakumar

    ReplyDelete
  14. yes, this observation was made in this context because of the reports in dinamalar which tried to imply that other i.e. non-legal factors have played a part in the decision of WPC. if WPC had acted beyond its powers the court would have struck it down.anyway let them appeal and let us see how the issue is decided in the end.

    ReplyDelete