இந்தியா 246, ஆஸ்திரேலியா 474 & 127/4 (42 ஓவர்கள்) - மார்ட்டின் 29*, கிளார்க் 11*
இந்தியா அவ்வப்போது குறிப்பிட்ட இடைவெளிகளில் விக்கெட்டுகளை எடுத்துக் கொண்டிருந்தது. முதலில் ஹெய்டனின் விக்கெட் அதிர்ஷ்டவசமாகக் கிடைத்தது. காடிச் பந்தை பாயிண்டுக்குத் தள்ளிவிட்டு வேகமாக ஒரு ரன் எடுக்க முயற்சித்தார். ஹர்பஜன் தன் வலதுகைப் பக்கம் ஓடி பந்தைப் பிடித்து நேராக ஸ்டம்பில் அடிக்க ஹெய்டன் ரன் அவுட்டானார். காடிச் பின் கும்ப்ளேயின் பந்தில் முதல் ஸ்லிப்பில் இருக்கும் திராவிடிடம் கேட்ச் கொடுத்தார். லெஹ்மான் ஹர்பஜன் சிங்கின் பந்தில் பேட், கால்காப்பில் பட்டு சில்லி பாயிண்டில் சோப்ராவால் கேட்ச் பிடிக்கப்பட்டு ஆட்டமிழந்தார்.
இப்பொழுதுதான் ஆடுகளம் சிறிது சிறிதாக உடைந்து சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக ஆதரவு கொடுக்கிறது. இந்த ஆடுகளத்தில் நாளை விளையாடுவது மிகவும் கஷ்டமாக இருக்கும். கிளார்க், மார்ட்டின் இருவரும் கவனமாக விளையாடுகிறார்கள். நாளை மதிய உணவு இடைவேளை வரை விளையாடி இன்னமும் நூறு ரன்களாவது எடுக்க முனைவார்கள் என்று நினைக்கிறேன். 450 இருந்தால் போதுமென்று நினைப்பார்களா அல்லது 500 தேவையென்று எதிர்பார்ப்பார்களா என்று தெரியவில்லை.
450 போதும். ஷேன் வார்னை இந்த ஆடுகளத்தில் விளையாடுவது கஷ்டமாக இருக்கும். மெக்ராத்தும், கில்லெஸ்பியும் எப்படியும் ஆளுக்கு இரண்டு விக்கெட்டுகள் எடுத்துக் கொடுப்பார்கள்.
கடைசி இரண்டு நாள்களும் ஆட்டத்தை நேரில் பார்க்கப் போகிறேன். அதனால் இரவு ஒரு பதிவுதான்.
நிர்மால்யா கருத்தரங்கு, உரைகள் எண்ணங்கள்
16 hours ago
பத்ரி, பெங்களூர் வருகிறீர்களா? எங்கு தங்குகிறீர்கள் என்று மின்னஞ்சலில் சொன்னால் வந்து பார்ப்பேனே!!
ReplyDeleteமீனாக்ஸ்,
ReplyDeleteஸ்டேடியத்துக்கே வந்தால் நானும் உங்களோடு ஒட்டிக்கொள்வேனே ;)
- என். சொக்கன்
By: N. Chokkan
பெங்களூரா....? மேட்ச் நாளைக்கு முடியப் போகிறது . வந்து என்ன செய்யறதுன்னு பத்ரி நெனைக்கிறாரோ என்னமோ ? :-)
ReplyDelete[ பட்டேலும், இர்ஃபானும் இத்தனை தூரம் தாக்குப் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. 2001 இல் கல்கத்தா மேட்ச் மாதிரி மேட் மீண்டும் நடக்குமா? ]
By: prakashBy: prakash
பெங்களூரா....? மேட்ச் நாளைக்கு முடியப் போகிறது . வந்து என்ன செய்யறதுன்னு பத்ரி நெனைக்கிறாரோ என்னமோ ? :-)
ReplyDelete[ பட்டேலும், இர்ஃபானும் இத்தனை தூரம் தாக்குப் பிடிப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. 2001 இல் கல்கத்தா மேட்ச் மாதிரி மேட் மீண்டும் நடக்குமா? ]
By: prakash