Thursday, May 11, 2006

தமிழகத்தில் புதிய ஆட்சி

திமுக தலைமையிலான கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. அடுத்த முதல்வராக திமுக தலைவர் கருணாநிதி, ஐந்தாவது முறையாக, பொறுப்பேற்பார் என்று தெரிகிறது.

திமுக அமைச்சரவையில் காங்கிரஸ் (ஐ), பாமக இரண்டும் சேருமா என்பது அடுத்த கேள்வி. திமுக வட்டாரத்தில் இதற்கு ஆதரவு இருக்கும். பாமக ஆனால் சேர விரும்பாது என்று தோன்றுகிறது. காங்கிரஸ் சேர ஆசைப்படும். தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி ரேடியோவில் பேசியபோது வழவழ என்று எதையோ சொன்னார். ஆனால் திமுக - சோனியா காந்தி பேச்சுவார்த்தையில் என்ன நடக்கிறது என்பதைப் பொருத்தே இது தீர்மானிக்கப்படும்.

பாண்டிச்சேரியில் காங்கிரசுக்கு திமுகவின் ஆதரவு தேவைப்படுகிறது. எனவே பாண்டிச்சேரி, தமிழகம் இரண்டிலும் திமுக+காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையும் என்று இப்பொழுதைக்குத் தோன்றுகிறது.

கருணாநிதிக்கு வாழ்த்துகள். கஜானாவைக் காலி செய்யாமல் நல்லாட்சி தருமாறு வேண்டிக்கொள்வோம்.

சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்படவேண்டும்.

1. அரிசி கிலோ இரண்டு ரூபாய். இது உடனடியாக செயல்படுத்தப்படும், ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் இதன் விளைவுகள் என்ன என்று நாம் பார்க்கவேண்டும். இதைத் தொடர்ச்சியாக நிகழ்த்த முடியுமா என்பது சந்தேகமே.

2. இலவச கலர் டிவி. ஒப்புக்கு இது நடந்தேறும். கிட்டத்தட்ட 90 லட்சம் குடும்பங்கள் கலர் டிவி இல்லாமல் இருக்கிறார்கள் என்று ஞாநி ரேடியோவில் பேசும்போது சொன்னார். ஒரு லட்சம் கலர் டிவிக்களாகவது அடுத்த ஐந்தாண்டுகளில் வழங்கப்படலாம். அத்துடன் நிறுத்திக்கொண்டால் நல்லது!

3. டாஸ்மாக் கடைகள். இதை யாரும் பெரிய தேர்தல் விஷயமாக ஆக்கவில்லை. ஆனால் பாமக இதைப் பற்றி பேசியுள்ளது. கருணாநிதிதான் முதலில் மதுவிலக்கை விலக்கியவர். இப்பொழுது லாபம் கொழிக்கும் டாஸ்மாக்கை என்ன செய்யப்போகிறார் என்று பார்க்க வேண்டும். இழுத்து மூடி
      (அ) மதுவிலக்கைக் கொண்டுவருவாரா?
      (ஆ) மீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் ஒப்படைக்கப்படுமா?
      (இ) இல்லை; டாஸ்மாக் வருமானம்தான் கலர் டிவிக்களாக மாறப்போகிறதா?

4. நிலச்சீர்திருத்தம் - தரிசு நிலங்கள் ஏழை விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுக்கப்படும் என்ற வாக்குறுதி. இதை கம்யூனிஸ்டுகள் வரவேற்கிறார்கள். இது எந்த அளவுக்குச் செயல்படுத்தப்படும் என்று கவனமாகப் பார்க்கவேண்டும். தொண்டு நிறுவனங்கள் ஏதாவது social audit செய்து என்ன நடக்கிறது என்பதைக் கவனிக்க வேண்டும்.

இன்னமும் நிறைய வாக்குறுதிகள் உள்ளன. அவற்றைப் பற்றி வரும் நாள்களில் கவனிப்போம்.

7 comments:

  1. Yenna Sir, Therthal mudinthatum than eluthavendum enru sabathama?

    ReplyDelete
  2. mr karunanithikku nalla vayasu poittuthu. ithuthan kadasy atchy.ithai naallapady seithu makkalitta nallaper vanganum. karunanithy pear nilaikkanum.annathurai kamarajar mari karunanithy perum sariththirathula idam peranu munna lanjam muttaga illamal seithu janangalitta nalla per vanganum.s naganathan

    ReplyDelete
  3. (அ) மதுவிலக்கைக் கொண்டுவருவாரா?
    (ஆ) மீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் ஒப்படைக்கப்படுமா?
    (இ) இல்லை; டாஸ்மாக் வருமானம்தான் கலர் டிவிக்களாக மாறப்போகிறதா?
    //////////////////////////
    மீண்டும் தனியார் வசம் மதுக்கடைகள் ஒப்படைக்கப்படும் என்பதுதான் பெரும்பாலோனோர் எண்ணமாக இருக்கிறது.
    என்னைப் பொருத்தவரை முழுமையான மதுவிலக்கை அமல்படுத்தும் எண்ணம் இல்லாவிட்டால் அரசே நடத்துவது மிகுந்த லாபத்தை கொடுக்கும் என்று நினைக்கிறேன். அதன்மூலம் பல திட்டங்களை செயல்படுத்தலாம்.

    ReplyDelete
  4. 1. TASMAC should be given off to private players. (may with 2 year renewable license). Govt should focus only on Education, Health, Infra issues.

    2. As per Dinamalar - Teakadai pakkam - Sun Courier service is being planned to deliver before 11.30am of postal dept. Another business venture/avenue for Maran and family.

    3. MK should be strict against rowdyism and southern belt caste conflicts. There may be a group waiting to take advantage of minority govt. He should be as strong as JJ on this front.

    4. MK should not waver on decisions - he should show that he is the boss rather than allowing all and sundry around him to take over different regions of TN to run their rule.

    5. CET / admissions related issues need to be settled quickly

    6. Desalination plant for Chennai should be setup fast.

    7. Stalin should be given a good administrative ministry to show up his admin skills which should also make him necessary to tour different parts of TN - e.g: PWD

    8. Duraimurugan is a good choice for speaker

    9. Ponmudi is a good choice for transport. Hopefully he increases the bus fares (while retaining the bus pass) and improves the profitability of transport Cos (he can learn from Karnataka and Bangalore RTCs which are the only profit making Transport Cos in India)

    10. Education should be given to someone younger and powerful and not K.Anbazhagan. He is too old.

    11. a good HR & CE minister (not PTR Palanivel Rajan) will also do good.

    These are my wish list :-) Let us see.

    ReplyDelete
  5. //கஜானாவைக் காலி செய்யாமல் நல்லாட்சி தருமாறு வேண்டிக்கொள்வோம்.//

    நக்கலு...

    ReplyDelete
  6. Hi Badri,
    wanted to write the follow up last night but caught up busy in reading so many papers.
    I appreciate what you have written and I feel pity for your expectations.
    I think we are all expecting something good from people who doesn't know what is good.
    sriram said
    "Now the Tamil Nadu treasury will become the property of the Marans for the next 5 years"
    I too think so..
    sriram said
    "I only wish that the Law and Order does not collapse in this DMK regime just as it has happened in all the earlier regimes of MK. "

    I would say , For DMK it is in BLOOD to do rowdyism and to kill people.Might be difficult to believe, ask any EX DMK MLA , where they went many times (either assembly or police station).Most of these guys would say , we thought police station is our assembly point.They don't have manners PAL!!

    I don't think Maran&Maran brothers will allow anybody else to take up
    TASMAC.

    "8. Duraimurugan is a good choice for speaker"
    Alex , I dont think so.I have watched this guy for now fifteen years.He doesn't know how to behave in a society like a human being, I think it is better if he remains as a GOOD MLA.

    FINALLY small joke :

    [Joke edited out, as I thought it was incendiary - Badri]

    with best
    CT

    ReplyDelete
  7. அனைத்து கட்சி ஆதரவுடன் நல்லாட்சி
    தருவார் என நம்புவோம்.

    அன்புடன்,
    துபாய் ராஜா.

    ReplyDelete