நிதீஷ் குமார் ஆட்சியில் கொஞ்சமாவது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாம்.
என்ன புதிதாக நடக்கிறது என்று பிசினஸ் ஸ்டாண்டர்ட் செய்தித்தாளில் தகவல் கொடுத்துள்ளனர்.
* இப்பொழுதெல்லாம் அமைச்சர்கள் அலுவலகத்துக்கு வருகிறார்களாம். அதனால் தலைமைச் செயலகம் குப்பை கூளங்களின்று உள்ளதாம்.
* அமைச்சர்கள் ஒவ்வொரு வாரமும் கூடி கேபினட் மீட்டிங் நடத்துகிறார்களாம். முன்னெல்லாம் - லாலு/ராப்ரி காலத்தில் - மாதம் ஒரு முறை கூடி அரை மணி நேரம் பேசினாலே அதிகமாம்.
* இந்த வருடத்தில்தான் முதன்முதலாக முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாம். கடந்த வருடங்களில் vote-on-account தாக்கல் செய்து பட்ஜெட் போடும்போது ஆறு மாத காலம் செலவாகியிருக்கும்.
* சின்னச் சின்ன குற்றங்கள் குறைந்துள்ளனவாம். ஆனால் பெரிய குற்றங்கள் இன்னமும் தொடர்கின்றன. ("We do not have state-sponsored crime," says a businessman.)
முழுச் செய்தியையும் படியுங்கள்.
Pac-Man வீடியோ கேம்
4 hours ago
13 ஆண்டுகள் அட்டூழியத்தை 6 மாதத்தில் எப்படி சுத்தம் செய்ய முடியும்...?
ReplyDeleteவஜ்ரா ஷங்கர்.
Laalu prasad got #2 rank among the best ministers in India.
ReplyDeleteIt is wonder how he was not successful as CM?
Rajaram
பத்ரி,
ReplyDeleteஒரு சிறு சந்தேகம் .முடிந்தால் நிவர்த்தி செய்யவும் .லல்லு என்றாலே நிர்வாகத் திறமையற்ற ஒரு ஜோக்கர் என்பது போலத் தான் இது வரை சித்தரிக்கப்பட்டுள்ளார் .அவரது ஆட்சியில் தான் பீகார் இவ்வளவு மோசமானதாக சொல்லப்படுகிறது .ஆனால் அதே லல்லு இப்போது ரயில்வே அமைச்சராக இருக்கிறார் .இந்தியா டுடே அவரை இரண்டாவது சிறந்த அமைச்சராக வரிசைப்படுத்தியுள்ளது .தனது நிர்வாகத் திறமையினால் ரயில்வேயின் வருமானத்தை பெருமளவு அதிகரித்திருக்கிறார் என்று சொல்லுகிறது .இதில் எது உண்மை .நிர்வாக திறமையற்ற ,அறிவுஜீவி தன்மையற்ற பாமர லல்லுவின் நிர்வாகத்தில் ரயில்வே துறை சாதனை செய்வதன் ரகசியமென்ன ?
ஒரு மத்திய அமைச்சராக இருந்து ஒரு துறையை மட்டும் நிர்வாகம் செய்வதற்கும் முதல்வராக இருந்து ஒரு மாநிலத்தை ஆள்வதற்கும் வித்தியாசம் உள்ளது. லாலு முட்டாள் கிடையாது. லாலு ஜோக்கராக நடந்துகொண்டதற்குக்கூட உள்காரணங்கள் ஏதேனும் இருக்கலாம்.
ReplyDeleteலாலு முதல்வராக இருந்தபோது ஊழல் செய்தார் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. அவர் அதனால்தான் பதவி விலக வேண்டி வந்தது. உடனே தன் அதிகாரத்தை நிலைநிறுத்த தன் கட்டளைக்கு உட்பட்டு நடக்க்கூடிய தன் மனைவியை முதல்வராக்கினார். ஆட்சியைப் பிடிக்க இருந்த ஆசை நிர்வாகத்தின்மீது மாறவில்லை. அவரது உறவினர்கள் நிலைமையைத் தங்களுக்குச் சாதகமாக்கிக்கொண்டனர்.
ஆனால் பீஹாரின் அழிவுக்கு லாலு மட்டும் காரணமல்ல. நிர்வாகத்தில் இருக்கும் அதிகாரிகள் - ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் முதற்கொண்டு அடுத்த சில நிலைகளில் உள்ளவர்கள் - தங்களால் முடிந்தவரை தாங்களும் ஊழல் செய்தனர். கட்சியின் பிற அமைச்சர்கள், அடுத்த மட்டத் தலைவர்கள் என்று அனைவரும் சேர்ந்து கொண்டனர்.
லாலு கடந்த இரண்டு வருடங்களாக ரயில்வே துறையை மிக நன்றாக நிர்வகித்துள்ளார் என்பது ரயில்வேயின் லாபத்திலிருந்தே தெரிய வரும். இன்று ஓ.என்.ஜி.சிக்கு அடுத்ததாக மிக அதிகமாக லாபம் சம்பாதிக்கும் மத்திய அரசின் துறை/கம்பெனி ரயில்வே. ரூ. 10,000 கோடிக்கு மேல் லாபம். இந்த நிலை தொடர்ந்தால் ரயில்வே வெகு சீக்கிரமே ஓ.என்.ஜி.சியைத் தாண்டிவிடும். இதற்கு இந்தியா டுடே காட்டும் இரண்டு காரணங்கள்: (1) சொந்தக்காரர்களை அனுமதித்து, துறையைக் கெடுக்கவில்லை; (2) அதிகாரிகளுக்கு நிறைய சுதந்தரம் கொடுத்து அவர்கள் கொடுக்கும் நல்ல யோசனைகளைச் செயல்படுத்தத் தவறவில்லை.
மற்றுமொரு முக்கியமான காரணம் என்னைப் பொருத்தமட்டில்... லாலு இரண்டு வருடங்களுக்கு முன்னர்வரை தாம் எப்படி ஆட்சி செய்தாலும் பீஹார் தனக்குத்தான் என்று நினைத்திருந்தார். அந்த நினைவு இப்பொழுது மாறியுள்ளது. மக்கள் எதிர்பார்ப்பை சரியான முறையில் நடத்திவைப்பதுதான் தனது அரசியல் வாழ்வை நீட்டிக்கும் என்று அவர் புரிந்துகொண்டுள்ளார். அதன் விளைவே அவரது புதிய அணுகுமுறை.
லாலு பற்றி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் வாழ்க்கை வரலாறு
பத்ரி,
ReplyDeleteவிளக்கத்திற்கு நன்றி!
லாலு முட்டாள் போலத் தோற்றமளிப்பது ஒரு திட்டமிடப்பட்ட வெளிவேஷம். படித்தவர், அரசியல் கணக்குகளில் விற்பன்னர், எந்த நேரமும் எதிர்ச்சக்திகளைத் தலைதூக்கவிடாமல் காய் நகர்த்தும் வல்லவர் - நல்லவரா என்பது பெரிய கேள்விக்குறி, புத்திசாலி என்பதில் சந்தேகம் வேண்டாம்.
ReplyDeleteபீஹாரின் நாசத்துக்கு லாலு மட்டுமே காரணமல்ல என்று பத்ரி சொல்வது உண்மையாக இருக்கலாம். ஆனால் 13 வருடங்கள் துளியும் முன்னேறிவிடாமல் பார்த்துக்கொண்டதில் லாலுவுக்குப் பெரிய பங்கு உண்டு.
நிதிஷ் குமார், ஜார்க்கண்ட் பிரிந்த (பெரிய அளவு வருமானம் குறைந்த) பீஹாரை முன்னேற்ற எதிர்காற்றுச் சவாரி செய்து வருகிறார். துளி அளவு முன்னேற்றமும் பெரிதும் பாராட்டப்படவேண்டும்.
(பத்ரி - இது சற்று Digression தான் - ஆனால் இட ஒதுக்கீடு தற்போதைய எரியும் பிரச்சனை என்பதால் - முடிந்தால் அனுமதியுங்கள்! :) )
ReplyDelete>> 13 ஆண்டுகள் அட்டூழியத்தை 6 மாதத்தில் எப்படி சுத்தம் செய்ய முடியும்...? >>
இரண்டாயிரமாண்டுப் "பின்னடைவை" ஒரு தலைமுறைக்குள் எப்படிச் சரிசெய்யமுடியும் என்று யாரோ பேசுவது கேட்குது! :)
சரி சரி! End of digression!
-----------------------------------
>> மக்கள் எதிர்பார்ப்பை சரியான முறையில் நடத்திவைப்பதுதான் தனது அரசியல் வாழ்வை நீட்டிக்கும் என்று அவர் புரிந்துகொண்டுள்ளார். அதன் விளைவே அவரது புதிய அணுகுமுறை. >>
இதோடு நான் உடன்படுகிறேன். பீஹாரில் பல பதின்ம ஆண்டுகளாக இருந்து வந்த Law & Order பிரச்சனையை ஏதோ லாலு காலத்தில்தான் புதிதாக உண்டானது என்பதாகச் சிலர் சித்தரிப்பது சரியா என்று தெரியவில்லை.
" ரண்வீர் சேனா" போன்ற உயர்சாதிவாத பயங்கரவாத கொடூர அமைப்புக்களும் அதன் எத்ரிவினையாகத் தோன்றிய மாவோ, நக்ஸல் அமைப்புக்களும் - பீஹாரில் காலம் காலமாய் இருந்துவரும் - வர்ணாஸ்ரம, மேட்டுக்குடி சார்ந்த மற்றும் நில உடமையாள பூஷ்வாத்தனமும் கலந்த ஒரு கலவர பூமியாகவே இருந்து வந்திருக்கிறது.
இந்தச் சமூகக் காரணிகள்தான், மிகக் கடுமையான சாதீய / வர்க்க அடுக்குமுறைகள்தான் பீகாரின் பொருளாதார-சமூக வளர்ச்சிகான தடைக்கல்லாக இருந்து வந்திருக்கிறது.
அதன் எதிர்வினையாகத்தான் பிற்படுத்தப்பட்ட/சிறுபானமைச் சமூக மக்களின் குரலாக லாலு அடையாளம் காணப்பட்டு ஆட்சியைப் பிடித்தார்.
இந்துத்துவ சக்திகளை எதிர்த்து அவர் நடத்திய கடும் போராட்டம் எப்பொதும் குறிப்பிடத்தகுந்தது. அத்வானியின் ரத யாத்திரையை (1990-91-இல்) தடுத்து நிறுத்திய சமூகநீதி வீரராகவே அவர் மக்களால் போற்றப்பட்டார்.
அவர் நிர்வாகத்தை சீர்படுத்த இன்னும் கவனம் எடுத்திருக்கவேண்டும்; ராம்விலாஸ் பாஸ்வானுடன் அவர் மொதல் போக்கில் இல்லாமல் ஒத்து அரசியல் செய்திருந்தால் - நிதீஷ் ஆட்சிக்கு வந்திருக்கவே முடியாது.