Friday, May 19, 2006

சென்னைக்கு மெட்ரோ ரயில் எப்பொழுது வரும்?

மெட்ரோ ரயிலா, இல்லை மோனோ ரயிலா என்ற கேள்வி ஜெயலலிதா காலத்தில் எழுந்தது. இப்பொழுது ஜெயலலிதா அகன்றதும் மோனோ ரயில் இழுத்து மூடப்படும் என்று தெரிகிறது. அரசியலுக்கு அப்பால் தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தை வடிவமைத்து உருவாக்கிய ஸ்ரீதரனும் சென்னை மோனோ ரயில் திட்டம் சரியானதல்ல என்று சொல்லியிருக்கிறார். எனவே தில்லி முறையில் மெட்ரோ ரயில்தான் சென்னைக்கும் தீர்வாக அமையும் என்று முடிவு செய்து கொள்ளலாம்.

இன்று மஹாராஷ்டிரா அரசு மும்பை மாநகருக்கு மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்த ரிலையன்ஸ் எனெர்ஜி நிறுவனத்தைப் பங்காளியாக சேர்த்துக்கொண்டுள்ளது. 146.5 கிலோமீட்டர் பாதை, கட்டுமானம் ஆகியவற்றை உருவாக்க ரூ. 19,500 கோடிகள் ஆகும் என்றும் டிசம்பர் 2009 முதல் பயணிகள் இந்தப் பாதையைப் பயன்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.

சென்னையும் உடனடியாக இதே வழியில் இறங்கினால் 2010-ல் உபயோகத்துக்கு வரலாம். கருணாநிதி அரசு இதுபோன்ற திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த விழையவேண்டும்.

5 comments:

  1. நாட்டின் உள்கட்டமைப்பு தான் அந்த நாட்டை மிக விரைவில் வள்ர்ச்சி பாதைக்கு அழைத்து செல்லும். எவ்வளவு சீக்கிரம் செய்ய முடியுமோ அவ்வளவு சீக்கிரம் செய்து நல்லது.

    ReplyDelete
  2. Metro-Rail for Chennai is a must and should be built at the earliest. Then many people[like me] using their own vehicles will opt for public transport as in Delhi.This will reduce traffic jams and the air pollution and at the same time reduce expenditure on personal transport.
    Natesan

    ReplyDelete
  3. "சென்னையும் உடனடியாக இதே வழியில் இறங்கினால் 2010-ல் உபயோகத்துக்கு வரலாம்."
    I am also Looking forward to this.
    There is nothing wrong in expecting.Looking into the numbers for Maharashtra,I am sure Karunanidhi will make a start as he did For Veeranam , pesticide dispersal ...way back in 1970's.

    Nagai siva is making a point.

    with best
    CT

    ReplyDelete
  4. கலைஞர் கவனத்துக்கு இதைக் கொண்டுபோகவேண்டுமே?(இடையில் ஆயிரம் வேலையிருக்குமல்லவா?)

    ReplyDelete
  5. Lets keep Dreaming about Metro Rail for Chennai. The state, union government could not even complete the MRTS rail system. It was supposed to be completed by 2002. The MRTS project was concieved more than twenty years ago. It is the ultimate example of Waste of Taxpayers Money.

    I am still not convinced by Metro Rail, its cost per Km is very high like MRTS.

    I don't know how relevant Metro rail would be for chennai. Chennai already has suburban rail system and MRTS. Add Metro Masala to this?

    Metro rail may not be enough, we need complimenting transport systems.

    First lets have low floored A/c buses like that of singapore, if not possible by the state, allow private players to provide A/c services. Then we can think of Metro Rail.

    ReplyDelete