வினாயகா மிஷன் சேலத்தில் பொறியியல், மற்றும் பிற கல்லூரிகளை நடத்தி வருகிறது. சென்னையிலும்கூட அறுபடை வீடு என்ற பெயரில் ஒரு பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறது. சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்துவரும் வழக்கொன்றில் சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் இந்த நிர்வாகத்தைக் கடுமையாகச் சாடியிருந்தார்கள்.
நான் என் ஆங்கிலப் பதிவில் AICTE விவகாரம் பற்றி எழுதியதைப் படித்துவிட்டு ஜம்மு காஷ்மீரிலிருந்து ஒருவர் என்னைத் தொடர்பு கொண்டு சில விவரங்களை கொடுத்தார்.
வினாயகா மிஷன் ரிஸர்ச் ஃபவுண்டேஷன் ஜம்முவில் தொலைதூரக் கல்வி வகுப்புகள் நடத்தி அங்குள்ள மாணவர்களுக்கு பொறியியல் பட்டம் கொடுப்பதாகச் சொல்லியுள்ளனராம்.
அதாவது பாலிடெக்னிக் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்கள் அத்துடன் வினாயகா மிஷன் வகுப்புகளில் தங்கள் பாலிடெக்னிக் படிப்பின்போதே படிக்கலாமாம். நேரடி வகுப்புகள் கிடையாது. பிராக்டிகல்ஸ் கிடையாது. மூன்று வருடப் பாடத்தை 1 - 1.5 வருடத்துக்குள் எழுதலாமாம். கடைசியில் டிகிரி சான்றிதழ் என்று ஒன்றைக் கொடுக்கிறார்கள். இதைச் செயல்படுத்தும் அதிகாரம் இவர்களுக்கு நிச்சயம் கிடையாது - AICTE க்கு இதுபற்றிய தகவல்கள் ஏதும் இருக்கிறதா என்று தெரியவில்லை.
ஜம்முவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த வகுப்புகளில் படிக்கிறார்களாம்.
வினாயகா மிஷன் கல்லூரிகள் பற்றி உங்களிடம் தகவல் ஏதும் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும்.
வினாயகா மிஷன் கல்லூரிகள் சில:
Vinayaka Mission's Kirupananda Variyar Arts and Science College, Salem
Vinayaka Mission's Kirupananda Variyar Engineering College, Salem
Vinayaka Mission's Sankarachariyar Dental College, Salem
Vinayaka Mission's Homoeopathic Medical College, Salem
Vinayaka Mission's Annapoorna College of Nursing, Salem
Vinayaka Mission's College of Pharmacy, Salem
Vinayaka Mission's College of Physiotherapy, Salem
Vinayaka Mission's Institute of Management, Salem
Vinayaka Mission's Kirupananda Variyar Sundara Swamigal Polytechnic College, Salem
Aarupadai Veedu Institute of Technology, Chennai
வினாயகா மிஷன் மீதான AICTE கருத்து:
1. As regards the Vinayaka Mission and Research Foundation, the AICTE said the deemed university had "misused the grant of the status to the maximum by violating all provisions."
வினாயகா மிஷன் மீதான சென்னை உயர்நீதிமன்றத்தின் கருத்து:
Citing the "blatant" and "glaring example" of Vinayaka Mission Research Foundation's management of its Arupadaiveedu Institute of Technology, the Bench said the interpretation by the deemed universities that the AICTE should be kept out completely could lead to such a situation.
என் ஆங்கிலப் பதிவு
சச்சிதானந்தன், கவிதைகள் மேலும் சில
10 hours ago
என்னுடன் பணிபுரியும் ஒருவர் சேலம் விநாயகா மிஷனில் MBA தொலைதூரக்கல்வியில் சேர்ந்திருக்கிறார். நீங்கள் சொல்லும் அதே வகுப்புகள் இல்லை பிராஜக்ட்டுகள் இல்லை. ஆனால் ஒரு வருடத்தில் பட்டம் தந்துவிடுவார்களாம். கட்டணமும் கம்மி! அது Deemed University என்பதால் MBA தரலாமாம். வெளிநாடுகளுக்கு இன்டர்வியூக்கு அப்ளை செய்யும் போது இதையெல்லாம் யார் கவனிக்கப்போகிறார்கள் என்றார் நண்பர்.
ReplyDeleteஉரிமையாளர் இன்றைய எம்.எல்.ஏவோ பழைய எம்.எல்.ஏவோ, அது நல்லா தெரியும். சேலம்காரர்களை விசாரித்தால்
ReplyDeleteநிறைய கதை சொல்வார்கள்
They also ran a Tamil magazine
ReplyDeleteVinn Nayagan and burnt their
fingers but when compared to
the moolah they raked in from
'education' that was pea nuts.
இந்த வாரம் குமுதம் ரிப்போர்ட்டரில் விநாயகா மிஷன் மாணவர்கள் aicte approoval வாங்க கோரி போராட்டம் நடத்தியது பற்றி வந்துள்ளது .ஏற்கனவே சத்தியபாமா,எஸ்.ஆர்.எம். நிகர்நிலைப்பல்கலைகளில் போராட்டம் நடைபெற்றது.நிகர் நிலைப்பல்கலை ஆக்குவதே யாருக்கும் கட்டுப்படாமல் கொள்ளை அடிக்க தானே ,தரம் இல்லாத கல்வி நிலையத்துகு நிகர் நிலைப் பல்கலை அந்தஸ்து தந்தவர்களை தான் உதைகனும்!
ReplyDeleteDear badri,
ReplyDeleteIn the following link more details about vinayaka mission's kirubanada variyar college is given
http://www.kumudam.com/magazine/Reporter/2006-06-01/pg4.php
Thanks for the Kumudham Reporter link. I have translated the story into english and posted in my English Blog, for the benefit of gullible students from the rest of India.
ReplyDeleteபாண்டிச்சேரியில் அறுபடைவீடு என்ற பெயரில் ஒரு மருத்துவக்கல்லூரி வைத்துள்ளார்கள் என நினைக்கின்றேன்
ReplyDeleteகாரைகாலில் விநாயகா மிஷனின் மருத்துவ கல்லூரி ஒன்று உள்ளது.
ReplyDeleteபாண்டியில் அறுபடை வீடு மருத்துவ கல்லூரியை அவர்க்கள் சொந்தமானது என கேள்விபட்டேன்.
உரிமையாளர் இன்றைய எம்.எல்.ஏவோ பழைய எம்.எல்.ஏவோ கிடையாது சன்முகசுந்தரம் தாரமஙலம் சிலை திருட்டு வழக்கில் சம்மந்த பட்டவர் தரமஙலம் காவல் நிலையதில் அவர் மீது முதல் குற்றபத்திரிக்கை (FIR)தாக்கல் செய்து உள்ள்னர்( 25 year back) பிறகு அவ்வழக்கு என்ன ஆனது என தெரியவில்லை.
ReplyDelete