ராவ், சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தாவரவியல் பேராசிரியராக இருந்து ஓய்வுபெற்றவர்.
சென்னையில் காணக்கிடைக்கும் தாவரங்களைப் பல்வேறு வகையாகப் பிரித்து, அவற்றுடைய தாவரவியல் பெயர், பொதுவாக மக்கள் அழைக்கும் பெயர் ஆகியவற்றுடன், அந்தத் தாவரங்களைப் பற்றிய சில கதைகளையும் ஆசிரியர் விளக்குகிறார்.

இந்தப் புத்தகத்தின் வெளியீட்டு விழா 20 செப்டெம்பர் 2007 அன்று ஆழ்வார்பேட்டை ஸ்ரீபார்வதி ஹாலில் (கிழக்கு பதிப்பகம் அலுவலகத்துக்கு எதிராக) மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது.
தமிழில் இப்புத்தகத்தை கிழக்குப்பதிப்பகம் வெளியிடுமா?
ReplyDeleteஆங்கிலப் புத்தகத்தின் விலை ரூ. 200. புத்தகத்தில் 48 பக்கங்கள் கலர் படங்கள் உள்ளன (100 gsm ஆர்ட் பேப்பர்). தமிழில் பதிப்பித்தாலும் விலை கிட்டத்தட்ட ரூ. 200 வைக்கவேண்டும். எப்படியும் ரூ. 150க்குக் கீழ் குறைக்க முடியாது. அந்த விலைக்கு 160 பக்கப் புத்தகங்கள் தமிழில் விலைபோகுமா என்று தெரியாது.
ReplyDeleteஇப்பொழுதைக்கு முயற்சி செய்யப்போவதில்லை.
கட்டாயம் முயற்ச்சி செய்யுங்கள். வாங்கி படிக்க ஆவலாக இருக்கின்றோம்
ReplyDeleteலோகமாதேவி-பொள்ளாச்சி