தகவல் பெறும் உரிமைச் சட்டத்தைப் பிரயோகித்து மதிமுக உறுப்பினர் கிருஷ்ணசாமி என்பவர் கோவை மாநகராட்சி எவ்வளவு நூலக வரி வசூலித்தது, எவ்வளவு நூலகங்கள் கோவையில் கடந்த பத்து வருடங்களில் புதிதாகக் கட்டப்பட்டுள்ளன என்று கண்டுபிடித்துள்ளார். [தகவல் நரசிம்மன் வழியாக]
தகவலின் சாரம்: கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாநகராட்சி ரூ. 30 கோடி நூலக வரியாக வசூலித்து நூலக ஆணைத்துறைக்குக் கொடுத்துள்ளது. ஆனால் புதிதாக வெறும் 3 நூலகங்களே கடந்த 10 ஆண்டுகளில் கோவை மாநகராட்சி எல்லைக்குள் கட்டப்பட்டுள்ளது.
இதில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். புதிய நூலகங்களை ஏற்படுத்துவதும் என்னென்ன புத்தகங்களை வாங்குவது என்பதைத் தீர்மானிப்பதும் மாநில அரசின் கைக்குள் உள்ளது. வெறுமனே பணத்தை வசூலித்து மாநில அரசிடம் கொடுப்பது மட்டும்தான் உள்ளாட்சி அமைப்புகள் செய்யவேண்டிய வேலை. அதையும் சில அமைப்புகள் சரியாகச் செய்வதில்லை.
கேரளத்தில் ஒவ்வொரு உள்ளாட்சிக்கும் உட்பட்ட பகுதியில் நூலகங்கள் தாங்களாகவே புத்தகங்களை வாங்குகின்றன. மாநில அரசு இந்த நூலகங்களுக்கு மான்யம் ஏதவது தரவேண்டுமானால் தந்துவிடுகிறது. உள்ளாட்சி வரிகள் ஏதேனும் இருந்தால் அது நேரடியாக நூலகங்களுக்குச் சென்றுவிடும். அதைத்தவிர நூலகங்கள் தனி நபர்களிடம் நன்கொடை பெறலாம். நூலகத்தைப் பயன்படுத்தக் கட்டணம் வசூலிக்கலாம். தனது வருமானத்தைக் கொண்டு வேண்டிய அளவு புத்தகங்களைப் பெறலாம்.
தமிழக நூலக நடைமுறை ஒட்டுமொத்தமாக மோசம் என்று சொல்லிவிட முடியாது. மையப்படுத்துதல் vs அ-மையப்படுத்துதல் என்பதில் இரண்டிலுமே சில பிரச்னைகள் உண்டு. நூலக ஆணைக்குழு சில முக்கியமான நகரங்களில் மட்டும் நூலகங்களுக்குத் தனியாக இயங்கும் தன்னாட்சி உரிமையைக் கொடுத்துப் பார்க்கலாம்.
depression caused by tamil weather-forecasters
6 hours ago
No comments:
Post a Comment