மார்ச் 12 முதல் 15 வரை, கிழக்கு பதிப்பகத்தின் சென்னையைச் சுற்றி நடக்கும் புத்தகக் கண்காட்சியின் மூன்றாவது பதிப்பு தி.நகரில் நடைபெறுகிறது. இதற்குமுன், மைலாப்பூர், நங்கநல்லூர் ஆகிய இடங்களில் நடைபெற்றது.
இடம்: எல்.ஆர்.சுவாமி ஹால் - தியாகராய நகர் சிவா விஷ்ணு கோவிலுக்கு எதிரே, சங்கரபாண்டியன் ஸ்டோருக்கு அருகில்
நேரம்: காலை 10.00 முதல் இரவு 8.30 வரை
நாத்திகத்திற்கு தத்துவம் உண்டா?
8 hours ago
சிறப்பு தள்ளுபடி ஏதும் உண்டா..??
ReplyDeleteபத்ரி,
ReplyDeleteதிடிரேன இப்படி சிறப்பு புத்தக காண்காட்சிகள் ஏன்? இதன் நோக்கமென்ன?.. புதிய புத்த்கங்கள் ஏதாவது அறிமுகபடுத்தப்பட்டுள்ளனவா?
வண்ணத்துப்பூச்சியார்: அனைத்துப் புத்தகங்களுக்கும் குறைந்தபட்சம் 10% தள்ளுபடியாவது இருக்கும். பல ஓல்ட் ஸ்டாக் புத்தகங்களுக்கு அதைவிட அதிகமான தள்ளுபடியும் இருக்கலாம். அங்கே போய்ப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
ReplyDeleteஅக்னி பார்வை: இந்தப் புத்தக விற்பனைக் காட்சிகளின் உள்நோக்கம் ஒன்றுதான். புத்தக விற்பனையை அதிகரிப்பது. புதிய புத்தகங்களை அறிமுகப்படுத்துவது நிச்சயமாக இல்லை.
கிழக்கு பற்றி எவ்வளவு பேருக்குத் தெரிகிறதோ அதைப்போல நூறு மடங்கு பேருக்கு இப்படி ஒரு பதிப்பகம் இருப்பதே தெரியவில்லை. எனவே தெருத்தெருவாகப் போய் “அய்யா, நாங்கள் இருக்கிறோம்” என்று காண்பிப்பதே இதன் நோக்கம். ஒரே இடத்தில் அனைத்துப் புத்தகங்களையும் ஒருசேரக் காண்பிப்பது. முடிந்தவரை வாசகர்களின் தொடர்பு விவரங்களைத் திரட்டுவது. பிறகு அவர்களுக்கு புதிய புத்தகங்கள் பற்றிய விவரங்களைத் தொடர்ச்சியாக அளிப்பது. இதுதான் நோக்கம்.
திருச்சிக்கு வரும் உத்தேசம் உண்டா?
ReplyDeleteநன்றி பத்ரி.
ReplyDeleteவேளச்சேரி பக்கம் any chance ?
ReplyDeleteபத்ரி - நான் காமதேனு மூலமாகவும் - புத்தக கண்காட்சி மூலமாகவும் வாங்குகிறேன். இருந்தாலும் எங்கள் பகுதி கிழக்கு தாம்பரம் பக்கம் வாருங்களேன்.
ReplyDeleteநடராஜன்