நேற்று படித்த ஒரு செய்தி அதிர்ச்சியைத் தந்தது.
இலங்கையில் விகடன் விற்பனையாளர் கைது!
கொழும்பிலும் யாழ்ப்பாணத்திலும் தமிழ்ப் புத்தகக் கடை நடத்தி வருபவர் ஸ்ரீதர் சிங். தமிழ்ப் பதிப்பாளர்கள் பலருக்கும் இவரைத் தெரியும். நான் இவரைச் சந்தித்திருக்கிறேன். என் தோழன் சத்யா கடைசியாக (இரண்டு வருடங்கள் முன்?) கொழும்பு சென்றிருந்தபோது இவருடன் நிறையப் பேசியிருக்கிறான். கொழும்பில் தமிழ்ப் புத்தகக் கடை நடத்துவதன் பயங்கள், அநிச்சயமான நிலை, எப்போது வேண்டுமானாலும் காவல்துறையினர் வந்து என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை ஆகியவை பற்றி பேசியுள்ளனர்.
ஆனந்தவிகடன் இதழ்களை இலங்கையில் காசு கொடுத்து வாங்கும் சில நூறு (ஆயிரம்?) பேர்களுக்கு விநியோகம் செய்கிறார் ஸ்ரீதர் சிங். அதில் கடைசி இதழில் கொழும்பு நகரின்மீது சமீபத்தில் நடந்த வான் தாக்குதல் படங்களும் செய்தியும் இருந்த காரணத்தால் ஸ்ரீதர் சிங் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.
அது ஒருவிதத்தில் தடை செய்யப்படவேண்டும் என்றால் இலங்கைக் காவல், அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்துவிட்டுப் போய்விடலாம். இதில் ஸ்ரீதர் சிங் தெரிந்து எந்தத் தவறையும் செய்யவில்லை. ஆனால் இலங்கை போன்ற இடத்தில் இருக்கும் சீரழிந்த மனித உரிமை நிலையில், அவரை ராணுவம் சுட்டுக் கொல்லாமல் ஏதோ இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற அளவில் அதுவே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது. வரும் சில நாள்களுக்குள் அவர் விடுவிக்கப்படுபாறு வேண்டுவோம்.
காட்டாட்சிகள் ஒரு நாள் அழிவுபடும்.
Saturday, March 07, 2009
Subscribe to:
Post Comments (Atom)
//அவரை ராணுவம் சுட்டுக் கொல்லாமல் ஏதோ இடத்தில் அடைத்து வைத்திருக்கிறார்கள் என்ற அளவில் அதுவே பெரிய விஷயம் என்று தோன்றுகிறது//
ReplyDeleteஇது போன்ற செய்திகள் தமிழ் நாட்டில் உள்ள தமிழ் இனத்தலைவர், தமிழ்குடிதாங்கி போன்றோர்களுக்கு தெரியுமா?
ஆனந்தவிகடன் சென்னை வழக்கறிஞர்-போலீஸ் மோதல் குறித்து எழுதியிருப்பதை பாருங்கள். எல்லோருக்கும் தெரிந்த விஷயம் சுசாமி சாதி சொல்லி திட்டியதாக வக்கீல்கள் சொன்னது பின்னால் உருவாக்கப்பட்டதாக இருக்கவே வாய்ப்பு என்று. சுசாமி சாதியை சொல்லி திட்டப்பட்டது அனைவருக்கும் தெரியும். ஆனால் ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ரிப்போர்ட்டை பாருங்கள். பத்ரி, தமிழ்நாட்டில் பிராமண எதிர்ப்பு என்பது நாசிகள் ஜெர்மனியின் யூதவெறுப்பை ஒத்ததாக இருக்கிறது. "யூத நாய்கள்" குறித்து கோஷமிடும் நாசி ஸ்ட்ராம் ட்ரூப்பர் குண்டர்களுக்கும் திராவிட இயக்க ரவுடிகளுக்கும் வித்தியாசம் இல்லை. இந்நிலையில் பிராம்மணர்களை குறித்து தவறான தகவல்களை பரப்பிவரும் ஆனந்தவிகடனுக்கும் மூன்றாந்தர நாசி பிரச்சார இதழான Der Strummer க்கும் வித்தியாசம் அதிகமில்லை. நியாயப்படி மானுடதுவேஷத்தை பரப்புவதாக ஆக்ஷன் எடுக்கப்பட வேண்டிய பத்திரிகை ஆனந்தவிகடன். ஒரு இனத்துவேஷி மற்றொரு பேரினவாதியிடம் அடிவாங்குகிறது.
ReplyDelete//வரும் சில நாள்களுக்குள் அவர் விடுவிக்கப்படுபாறு வேண்டுவோம்.//
ReplyDeleteஅதைத் தவிர வேறெதுவும் செய்ய முடியாது...
//காட்டாட்சிகள் ஒரு நாள் அழிவுபடும்.//
இந்த காட்டாட்சிகளுக்கு முட்டுக் கொடுத்துக் கொண்டிருக்கும் போலி ஜனநாயகங்களும் சேர்த்து...
//அரவிந்தன் நீலகண்டன் சொன்னது…
ReplyDeleteஒரு இனத்துவேஷி மற்றொரு பேரினவாதியிடம் அடிவாங்குகிறது.//
விகடன் இனத்துவேஷியாகவே இருக்கட்டும். பேரினவாதியிடம் அடிவாங்குவது விகடனா? இந்த பதிவு ஒரு புத்தகக் கடைக்காரர் இலங்கைக் காட்டாட்சியாளர்களால் கைது செய்யப்பட்டிருப்பதைப் பேசுகிறது. அதைக் கண்டிக்க வக்கில்லாத அரவிந்தன் இப்படி திசை திருப்பி அதை நியாயப்படுத்தவும் செய்கிறார். மதவெறி அமைப்புகளின் இணையப் பிரச்சாரகருக்கு மனிதாபிமானத்தோடு சிந்திக்கமுடியாது என்று இன்னொரு முறை நிரூபித்திருக்கிறார்.
பத்ரி,
ReplyDeleteசென்னை புத்தக சந்தையில் உங்களின் வெளியீடான விடுதலைப்புலிகள் புத்தகம் தடை செய்யப்பட்டது ஏன் /எவ்வாறு/யாரால் என இன்னமும் நீங்கள் தெளிவு படுத்தவில்லை.
ஆனந்த விகடன் கூட தமது முகவர் சிறைப்பிடிக்கப்பட்டது பற்றி வாய் திறக்கவில்லை. இனிமேல் அவர்கள் ஈழம் பற்றியோ புலிகள் பற்றியோ எச்செய்தியும் வெளியிட மாட்டார்கள்!
நகுநந்தன்: இதில் எந்த ஒளிவுமறைவும் இல்லை. புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது எனச் சொன்னது கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தின் Assistant Police Commissioner. வாய்மொழி உத்தரவுதான், எழுத்துமூலம் அளிக்க மாட்டோம் என்று தெளிவாகச் சொல்லிவிட்டனர். அதனை நாங்கள் எளிதாக மீறியிருக்கலாம். ஆனால் அவ்வாறு மீற பபாஸி அனுமதிக்கவில்லை. காவலர்களைவிட அதிகக் கடுமையுடன் புத்தகங்களை எடுக்கச் சொன்னார்கள். அந்த நிகழ்வை நடத்துவது பபாஸிதான் என்பதால் அவர்களது கட்டளையைப் பின்பற்றி நடந்தோம்.
ReplyDeleteஇதைப்பற்றி நான் பத்திரிகைப் பேட்டிகளில் தெளிவாகச் சொல்லியிருக்கிறேனே. பதிவிலும் எழுதியுள்ளேன்.
இன்றும்கூட ஆங்காங்கே எதாவது ஒரு கடையில், “இந்தப் புஸ்தகமெல்லாம் வெச்சு விக்கக் கூடாதுங்க” என்று சில அரை பிட் கான்ஸ்டபிள்கள் முதல் சில “வக்கீல்கள்” (ஆம்!) விற்பனையாளர்களிடம் பேசுகின்றனர். ஆனால் யாரும் கண்டுகொள்வதில்லை.
பத்ரி,
ReplyDeleteஅமெரிக்காவில் கல்விகற்ற நீங்கள் வெறும் வாய்மொழி உத்தரவுக்கு கட்டுப்பட்டது ஆச்சரியம் அளிப்பதாகவே உள்ளது. சென்னை தெருக்களில் ஆட்டோ ஓட்டுவோர் பொலிசின் கட்டலைகளை மீறமுடியாது தவிப்பது போன்ரது இது. ஆனாலும் பத்திரிகைத்தொழிலில் உள்ல நீங்கள் இதற்குக்கட்டுப்பட்டது அதிர்ச்சி தான்! அத்துடன் ப்பாஸி எவ்வாறு இம்முடிவை எடுத்தது என கேள்வி எழுப்ப முடியாதா? பபாஸி பத்திரிகை சுதந்ண்டிரத்தை மதிக்கிறதா இல்லையா? இந்திய நடுவண் அரசின் சட்ட திட்டங்களை மதிக்கிரதா இல்லையா? எல்லாவ்ற்றுக்கும் மேலாக வருடாவருடம் பத்திரிகைத்தொழிலில் உள்லவர்கள் இச்சுதந்திரத்துக்காக நூற்றுக்கனக்கில் உயிர் விடுகிறார்கள். அண்மைய உதாரணம் கொல்லப்பட்ட லசந்த விக்கிரமதுங்கா, சிறையில் இருக்கும் வித்தியாதரன், திசைநாயகம் போன்றோர். இவ்வாறு உங்களுக்கு கிடைத்த சுதந்திரத்தை பொலிஸின் வாய்ன்மொழி உத்தரவுக்கும் பபாசியின் உத்தரவுக்கும் தாரைவார்க்கலாமா?
அமெரிகாவில் வாஷிங்ரன் டி.சி யில் வெள்ளைமாளிகை முன் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக நடந்த பேரணியில் புலிகளின் கொடிகள் தாராளமாகப் பறந்தன. இத்தனைக்கும் புலிகள் அமெரிகாவில் தடை செய்யப்பட்ட அமைப்பு!