தமிழில் ‘மதராசபட்டினம்’ (பழனியப்பா பிரதர்ஸ் வெளியீடு) என்றும் ஆங்கிலத்தில் ‘Madras : Tracing The Growth of The City Since 1639’ (Oxygen Books வெளியீடு) என்றும் சென்னை நகரின் வரலாற்றை எழுதியுள்ள கே.ஆர்.ஏ. நரசய்யா, இப்போது மதுரையின் வரலாற்றை ‘ஆலவாய்: மதுரை மாநகரத்தின் கதை’ என்ற புத்தகமாக தமிழில் எழுதியுள்ளார். இந்தப் புத்தகத்தை பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டுள்ளனர்.
நாளை சனிக்கிழமை (4 ஜூலை 2009) மாலை 5.00 மணிக்கு வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா வித்யாலயாவில் நரசய்யா தான் ‘ஆலவாய்’ புத்தகத்துக்காகச் செய்த ஆராய்ச்சிகள் பற்றிப் பேச உள்ளார்.
தமிழ்ப் பாரம்பரியம் குழுமம் சார்பாக மாதாமாதம் முதல் ஞாயிறு அன்று நடக்கும் இந்த நிகழ்ச்சி இது.
ஐராவதம் மகாதேவனிடம் சென்று தமிழ் பிரமி எழுத்துக்களைப் படிக்கக் கற்றது, மாமண்டூர், திருப்பரங்குன்றம், அழகர் கோவில், ஆனைமலை சென்று அங்குள்ள கல்வெட்டுகளைப் படித்தது, மதுரைக் கோவில், திருமலை நாயக்கர் மகால், திருவாதவூர், திருமோகூர், ஓவாமலை ஆகிய இடங்களில் செய்த ஆராய்ச்சிகள், ரோஜா முத்தையா நூலகம், உ.வே.சாமிநாதய்யர் நூலகம், MIDS, மாவட்டப் பொது நூலகங்கள் ஆகிய இடங்களில் மேற்கொண்ட ஆராய்ச்சிகள் பற்றி நரசய்யா பேசுகிறார்.
மேலும் விவரங்களுக்கு தொடர்புகொள்ள:
அ.அண்ணாமலை: gandhicentre@gmail.com; 94441-83198
பத்ரி சேஷாத்ரி: badri@nhm.in; 98840-66566
டி.கே.ராமச்சந்திரன்: tkramachandranias@hotmail.com; 99406-41144
எஸ்.கண்ணன்: 044-2498-5836
எஸ்.சுவாமிநாதன்: sswami99@gmail.com; 044-2461-1501
அமரன் - ஒரு மகத்தான படைப்பு
1 hour ago
Is this book available online ?
ReplyDeleteகிருஷ்ணன்: பழனியப்பா பிரதர்ஸ் புத்தகங்கள் இணையக் கடைகள் எங்கே கிடைக்கும் என்று தெரியாது. விசாரித்துச் சொல்கிறேன். இந்தப் புத்தகம் வெளியாகி மூன்று மாதங்கள் ஆகிவிட்டன.
ReplyDeleteSir, were you able to find the internet shop where we could order this book online ?
ReplyDelete