நேற்றி ஈரோட்டில் தெருவில் பார்த்த காட்சி.
தனியாக காயை சீவி, பின் கொதிக்கும் எண்ணெயில் போடுவது எல்லாம் வீடுகளுக்குத்தான் லாயக்கு. இங்கே நேராக சீவியிலிருந்து எண்ணெய்க்குள். சில விநாடிகளில் தகதகவென தங்கமாக மின்னும் நேந்திரம் சிப்ஸ் ரெடி.
தம்பியின் வாழ்த்து
7 hours ago
சென்னைபற்றித் தெரியவில்லை. ஆனால் கோயம்பத்தூர், ஹைதராபாத், பெங்களூர் என்று நான் பார்த்த இடங்களிலெல்லாம் இப்படிதான் நேந்திரம் சிப்ஸ் போடுகிறார்கள் - DTHபோல, இது DTO (Direct-To-Oil) :)
ReplyDelete- என். சொக்கன்,
பெங்களூர்.
நன்றாக இருந்தது. தி.நகரிலும் இதே போலத்தான் செய்கிறார்கள். நீங்கள் பார்த்ததில்லையா ?இதேபோல துரித உணவகத்திற்கு கோஸ் கத்தரிப்பதை பார்த்திருக்கிறீர்களா ? அதுவும் வித்தியாசமாக இருக்கும்.
ReplyDelete“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்
சென்னையில் அனேகமாக எல்லாக் கடைகளிலும் இப்படித்தான் செய்கிறார்கள். பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteதமிழ்நாடு கேரளா பார்டர்ல ஒரு ஊரில் (பெயர் மறந்துவிட்டது) முழுக்க முழுக்க நேந்திர சிப்ஸ் வியாபாரம் தான். தனியா சீவி வைக்கிறப்போ ஒண்ணோட ஒண்ணு ஒட்டிக்கிற வாய்ப்பு அதிகம், இதிலே அப்படி இல்லை.
ReplyDelete//இது DTO (Direct-To-Oil) :)// :) :) :)
ReplyDeleteஇன்னொன்றை கவனித்து இருக்கிறீர்களா?? சிப்ஸை வறுத்தபின் அவர்கள் உப்பை சேர்ப்பதில்லை. உப்பு கலந்த தண்ணீரை அவ்வப்போது நேராக எண்ணையிலேயே ஊற்றுகின்றனர் !! !!!
ReplyDeleteமதுரை டவுண்ஹால் ரோட்டில் தங்கரீகல் எதிரில் இம்மாதிரி சிப்ஸ் போடுவார்கள்!
ReplyDeleteநீங்கள் வீடியோ எடுத்த சிப்ஸ் கடை அருகில் முதலில் அரசின் பாக்கெட் சாராயகடை இருந்தது!
அனேகமாக எல்லாக் கடைகளிலும் இப்படித்தான் செய்கிறார்கள். பல இடங்களில் பார்த்திருக்கிறேன்.
ReplyDeleteபலே...
ReplyDelete