Wednesday, December 16, 2009

இனி இது சேரி இல்லை - இன்று விஜய் டிவியில்

   

இன்று புதன்கிழமை, 16-12-2009, இரவு 10.00 மணிக்கு விஜய் டிவியில் அன்னை சத்யா நகர் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது.

அன்னை சத்யா நகரில் சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் ஈடுபட்டு, சில மாற்றங்களைக் கொண்டுவந்தது பற்றி ஆங்கிலத்திலும் தமிழிலும் புத்தகங்களை நாங்கள் வெளியிட்டோம். அதுபற்றி நான் என் வலைப்பதிவில் எழுதியிருந்தேன். அதனைப் படித்து, அந்தப் புத்தகத்தை வாங்கிச் சென்ற விஜய் டிவியின் ‘நடந்தது என்ன?’ நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் அதனைப் படமாக்குவது என்ற முடிவுக்கு வந்தனர்.

கடந்த நான்கு நாள்களாக அன்னை சத்யா நகருக்கே சென்று அங்குள்ள மக்களைப் பேட்டிகண்டு, இந்தத் திட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேசி, ஒரு நிகழ்ச்சியைத் தயாரித்துள்ளனர். அது இன்று இரவு ஒளிபரப்பாகிறது. கட்டாயம் பார்க்கவும்.

நான் எழுதிய முந்தைய பதிவுகள்:

இனி இது சேரி இல்லை...
அன்னை சத்யா நகர்

4 comments:

  1. நிகழ்ச்சி பற்றிய விபரத்திற்கு நன்றி! நிகழ்ச்சியைப் பார்த்தேன்.

    ReplyDelete
  2. ஒரு நல்ல முயற்சியை பாராட்டும் தொடர்ச்சியாக இருந்தது. இன்னும் மீடியா கவனம் தேவை.
    -விபின்

    ReplyDelete
  3. நன்றி பத்ரி சார். நிகழ்ச்சி எப்படி இருந்தது? உங்கள் கருத்து தேவை!

    ReplyDelete
  4. சாயி ராம்: நிகழ்ச்சியை நான் இன்னமும் பார்க்கவில்லை. அன்று இரவு ஸ்ரீரங்கம் செல்லவேண்டியிருந்தது. நிகழ்ச்சி விடியோ கேட்டுள்ளேன். கிடைத்தால், பார்த்துவிட்டு நிச்சயம் அதுபற்று எழுதுகிறேன்.

    ReplyDelete