சொக்கனின் வலைப்பதிவில் இரு வாசகர்கள் NHM ஆன்லைன் கடையைப் பற்றிக் கேட்ட கேள்விகளுக்கான பதில்கள், இங்கே என் பதிவிலும்:
1. NHM ஆன்லைன், இந்தியா முழுமைக்கும் (வெளிநாடுகளுக்கும்கூட) புத்தகங்களை அனுப்பும்.
2. இந்தியாவுக்குள்ளாக ரூ. 250-க்குப் புத்தகங்கள் வாங்கினால், பதிவு அஞ்சல் மூலம் தபால் செலவு ஏதும் இன்றி புத்தகங்களை அனுப்புகிறோம். (கூரியர் வழியாக வேண்டும் என்றால் அதற்கு செலவாகும்.)
3. நேரடியாக டிஸ்கவுண்ட் ஏதும் கிடையாது. ஆனால் 20 புத்தகங்கள் ஆயிரம் ரூபாய்க்கு என்று கிழக்கு புக் கிளப் என்ற வழியில் கொடுக்கிறோம். எந்த 20 புத்தகத்துக்கும் அல்ல; ஆனால் இந்த ஆஃபரில் குறிப்பிட்டுள்ள சுமார் 150-200 புத்தகங்களிலிருந்து ஏதேனும் 20 புத்தகங்களுக்கு. அவற்றை வாங்கினால் உங்களுக்கு குறைந்து 25% முதல் 50% வரை கூட டிஸ்கவுண்ட் கிடைக்கலாம். நீங்கள் தேர்வு செய்யும் புத்தகங்களைப் பொருத்தது அது.
4. மேலே சொன்ன ஸ்கீமை, 8 புத்தகங்கள் 500 ரூபாய்க்கு என்றும் extend செய்ய உள்ளோம். அது பொங்கல் தினத்தன்று அறிமுகமாகும்.
5. பரிசோதனை நிமித்தம் ரூ. 150-க்கு மேல் புத்தகம் வாங்கினாலே தபால் செலவு இலவசம் என்று சொல்லலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறோம். செய்தாலும் செய்வோம். இதனை ஆங்கிலப் புத்தாண்டு அறிமுகமாகச் செய்வதற்கும் ஒரு யோசனை உள்ளது.
6. தனியாக ஒற்றை புத்தகத்துக்கு என்று டிஸ்கவுண்ட் வருமா என்று சொல்லமுடியாது. ஆனால் சில மார்க்கெட்டிங் யோசனைகள் செய்துகொண்டிருக்கிறோம். திடீரென ஒரு குறிப்ப்ட்ட தினத்தன்று (12 மணி நேரம், 24 மணி நேரம்) எந்தப் புத்தகத்தை வாங்கினாலும் அதற்கு டிஸ்கவுண்ட் அல்லது ஒன்று வாங்கினால் இன்னொன்று இலவசம் என்றெல்லாம் செய்யலாமா என்று யோசனை உள்ளது. இதனைச் செயல்படுத்த எஞ்சினியரிங் வேலைகள் சிலவற்றைச் செய்யவேண்டும். செய்து முடித்ததும் சொல்கிறேன்.
7. ரிவார்ட் பாயிண்ட்ஸ் என்ற முறையை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளோம். அதுபற்றியும் விரைவில் தகவல் தெரிவிக்கிறேன்.
8. நீங்கள் எந்த முகவரிக்குப் போகுமாறும் புத்தகங்களை NHM ஆன்லைனில் வாங்கலாம். புத்தகத்தை பரிசாகப் பெறுபவர் எந்தப் பணமும் கட்டவேண்டியதில்லை. நீங்கள் பணத்தைக் கட்டிவிட்டால் போதும்!
சர்வோதய ஜெகந்நாதன் விருது, ஏற்புரை
8 hours ago
//மேலே சொன்ன ஸ்கீமை, 8 புத்தகங்கள் 500 ரூபாய்க்கு என்றும் extend செய்ய உள்ளோம். அது பொங்கல் தினத்தன்று அறிமுகமாகும்//
ReplyDeleteஇதென்ன போங்காட்டம் ? ஆயிரத்துக்கு இருவதுன்னா ஐந்நூறுக்கு பத்து தானே? இருந்தாலும் இந்த டீலிங் எனக்குப புடிச்சிருக்கு .. இப்படியே கொஞ்ச நாளைக்கு மைண்டைன் பண்ணுங்க
பிரகாஷ்: இது போங்காட்டமே இல்லை:-) இதுவே 2000 ரூபாய் என்றால் 40 அல்ல, 45 புத்தகம் தருவோம். ரூ. 5000 என்றால் 125 புத்தகங்கள்! லார்ஜ் பேக் என்றால் அதன் அட்வாண்டேஜே தனிதானே?
ReplyDeleteஒரே ஒரு சந்தேகம். கிழக்கு பதிப்பகம் புதிய வெளியிடும் புத்தகங்கள் திருப்பூர் புத்தகக்கடைகளில் கிடைப்பதற்கு எத்தனை நாளாகும்? மகேஸ்வரி புத்தக நிலையத்தில் கேட்ட போது Order கொடுத்துள்ளோம். இன்னும் வரவில்லை என்கிறார்கள். இந்த தாமதம் குறித்து ஒரு புரிந்துணர்வை தருவீர்களா?
ReplyDeleteBadri,
ReplyDeleteI think you're missing the NRI market.
If there's a scheme with minimal/no shipping like amazon.com (you can keep a minimum buying amount ofcourse), seriously it will open up a huge market for Kizhakku.
For instance, I want to buy the rajiv kolai vazhakku, Prabhakaran book, Chetan Bhagat's 2states etc. I am not aware of a good way to buy them all online from US. Its a huge untapped market IMHO..
ஜோதிஜி: பொதுவாக எங்கள் புதுப் புத்தகங்கள் எல்லாமே, வெளியாகி மூன்று நாள்களுக்குள், தமிழகத்தில் எந்த மூலையாக இருந்தாலும் கிடைக்கவேண்டும்.
ReplyDeleteதிருப்பூரில் என்ன பிரச்னை என்று கேட்டு இங்கே தகவல் சொல்கிறேன்.
நடராஜ்: இந்தியாவுக்கு வெளியே புத்தகங்கள் அனுப்புவது இப்போதைக்குக் கடினமான செயல். ஷிப்பிங் செலவே இல்லாமல் அனுப்ப ஒரு வழி அடுத்த சில ஆண்டுகளுக்குக் கிடைக்குமா என்று தெரியவில்லை. ஆனால்...
ReplyDeleteஅமேசான் கிண்டில் போன்ற தீர்வுகள் சாத்தியம். நல்ல DRM இருக்கும்பட்சத்தில் அனைத்து புதுப் புத்தகங்களையும் மின் புத்தகங்களாகக் கொண்டுவரத் தயாராக உள்ளோம். அது ஒன்றின்மூலமாகத்தான் போஸ்டல் செலவே இல்லாமல் அடுத்த விநாடியே உங்கள் கைக்குக் கிடைக்குமாறு செய்யமுடியும்.
ஏதேனும் முன்னேற்றம் இருந்தால் நிச்சயமாக இங்கே தகவல் சொல்கிறேன்.
பிரகாஷ்: இது போங்காட்டமே இல்லை:-) இதுவே 2000 ரூபாய் என்றால் 40 அல்ல, 45 புத்தகம் தருவோம். ரூ. 5000 என்றால் 125 புத்தகங்கள்! லார்ஜ் பேக் என்றால் அதன் அட்வாண்டேஜே தனிதானே? //
ReplyDeleteha... haa... rasithen!
நன்றி. இன்று அவர்களே அழைத்து வந்து விட்டது என்றார்கள். உங்கள் முயற்சி இதில் இருந்து இருந்தால் நன்றி.
ReplyDeleteGood scheme, Badri. Thanks!!
ReplyDeleteI fail to understand how your books on another site area available at a discount while your site does not have a discount -
ReplyDeleteMany of your publications on thehindushopping.com area individually available with a 10% discount!
Anon: இதில் என்ன ஆச்சரியம்? நாங்கள் குறிப்பிட்ட ஒரு டிஸ்கவுண்டில் புத்தகங்களை பிறருக்குத் தருகிறோம். அவர்கள் விரும்பினால் என்ன டிஸ்கவுண்டை வேண்டுமானாலும் தங்கள் வாடிக்கையாளர்களுக்குத் தரலாம். ஆனால் நாங்கள் அதையே செய்யவேண்டும் என்பதில்லையே?
ReplyDeleteஉதாரணமாக, இன்றுகூட சென்னை, ரங்கநாதன் தெரு ஜெயச்சந்திரன் டெக்ஸ்டைல்ஸ் போனீர்கள் என்றால் அங்கே கிடைக்கும் எங்கள் புத்தகங்கள் அனைத்துக்கும் 20% டிஸ்கவுண்ட் உண்டு. ஆனால் சென்னை எல்டாம்ஸ் சாலையில் எங்கள் ஷோரூமில் ஒரு பைசா டிஸ்கவுண்ட் கூடக் கிடையாது.
இதெல்லாம் பாலிசி மேட்டர்.
தி ஹிந்து ஷாப், இந்தியாபிளாஸாவால் நடத்தப்படுகிறது. அவர்களது இணையக் கடையிலும் இதே டிஸ்கவுண்ட் இருக்கலாம். சொல்லப்போனால், இந்தியாபிளாஸா புக் கிளப் உறுப்பினராகச் சேர்ந்தீர்கள் என்றால் ஒவ்வொரு புத்தகத்துக்கும் 25% கழிவு தருவதாகச் சொல்கிறார்கள். அதில் சேர்ந்து, கிழக்கு புத்தகங்களை மேலும் அதிக டிஸ்கவுண்டில் பெற்றுக்கொள்ள வாழ்த்துகள்:-)
Badri Sir,
ReplyDelete8 Books for Rs 500. When it will be availble in nhm.in??