Sunday, April 04, 2010

தொல்காப்பியம் பற்றி அவ்வை நடராஜன் (வீடியோ)

சில மாதங்களுக்கு முன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியம் தொடர்பான ஒரு பயிலரங்கம் நடைபெற்றது. பேரா. தெய்வசுந்தரம் தலைமையிலான Computational Linguistics துறை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இது. மத்திய செம்மொழி ஆராய்ச்சி நிறுவனம் இதற்கான நிதி உதவியைச் செய்திருந்தது.

நிறைவு நாள் அன்று அவ்வை நடராஜன் தொல்காப்பியம் பற்றிய முக்கியமான சொற்பொழிவை நிகழ்த்தினார். அதே அமர்வில்தான் சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கர்னல் திருவாசகமும் உரை நிகழ்த்தினார். அது சீரியஸ் நிகழ்வில் கொஞ்சம் நகைச்சுவை அம்சம் கொண்டதாக இருந்தது. அதனால் அந்த வீடியோவை இங்கு சேர்க்கவில்லை. கீழே அவ்வை நடராஜனின் உரை பட வடிவில். (அவ்வை நடராஜனின் பல சொற்பொழிவுகளையும் ஒளி/ஒலி வடிவில் சேகரித்து இணையத்தில் ஏற்றுவது வரும் காலத் தமிழ் மாணவர்களுக்கு நல்ல பலன் தரும்.)


Watch Avvai Natarajan on Tholkappiyam in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

1 comment: