(தமிழ் விக்கிபீடியா அமைப்பாளர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க...)
கல்லூரி மாணவர்களுக்கான விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டி
உ லகத் தமிழ் இணைய மாநாட்டையொட்டி தமிழ்நாடு அரசு - தமிழ் விக்கிப்பீடியா இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான “விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள்” என்ற போட்டியை நடத்துகிறது.
அனைத்து கல்லூரி மாணவர்களுக்கும் அழைப்பு:
தமிழ் விக்கிப்பீடியா (http://ta.wikipedia.org) என்பது இணையத்தில் இயங்கும் தகவல் களஞ்சியத் திட்டம். இத்திட்டத்துக்கு ஏற்ற தகவல் பக்கங்களை எழுதும் போட்டியைத் தமிழக அரசு நடத்துகிறது.
கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம், விளையாட்டு, வேளாண்மை, சட்டம், கல்வியியல், இயக்குநர் மருத்துவம் (பிசியோதெரப்பி), சித்த மருத்துவம், பல் மருத்துவம், செவிலியர், கால்நடை மருத்துவம், பல தொழில்நுட்பப் பயிலகம் என அனைத்துத் துறைகளைச் சார்ந்த தமிழ்நாட்டில் உள்ள அரசு, தனியார், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் கல்லூரி மாணவ, மாணவியர்கள் இப்போட்டியில் பங்கேற்கலாம்.
விதிமுறைகள்:
தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமையவேண்டும்.
தகவல் பக்கங்களை ஒருங்குறி (Unicode) எழுத்துருவில் தமிழில் எழுத வேண்டும். சொற்களின் எண்ணிக்கை 250 முதல் 500 வரை அமையவேண்டும்.
தகவல் பக்கங்களை ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நிறைவு செய்து http://tamilint2010.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனுப்பவேண்டும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட தகவல் பக்கங்கள் தமிழ் விக்கிப்பீடியாவில் சேர்க்கப்படும்.
பரிசுகள்
இப்போட்டியில் வெல்லும் அனைத்துத் துறை மாணவர்களுக்கும் மடிக்கணினி உள்ளிட்ட பல்வேறு மின்னணுக் கருவிகள் பரிசுகளாக வழங்கப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு
மேலும் விவரங்களுக்கு, http://ta.wikipedia.org/ என்ற இணையதளத்தைப் பார்த்து வழிகாட்டு நெறிமுறைகளைத் தெரிந்துகொள்ளலாம்.
மானுடத்தின் வெற்றி
7 hours ago
//தகவல் பக்கங்கள் ஆதாரங்களின் அடிப்படையில் நடுநிலைமையுடன் தமிழ் விக்கிப்பீடியாவுக்கு ஏற்றதாக அமையவேண்டும்.//
ReplyDeleteஎழுத விஷயம் எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வழக்கமாகச் செய்வதைப்போல் ”பிடி பார்ப்பான் குடுமியை” என்று பிராமணர்களை நாலு சாத்து சாத்தப் பார்த்தால் நடக்காது போலிருக்கிறதே. தமிழ் விக்கியில் ஒரு சுவாரசியமும் இருக்காது போல.
//எழுத விஷயம் எதுவும் இல்லாவிட்டாலும் பரவாயில்லை, வழக்கமாகச் செய்வதைப்போல் ”பிடி பார்ப்பான் குடுமியை” என்று பிராமணர்களை நாலு சாத்து சாத்தப் பார்த்தால் நடக்காது போலிருக்கிறதே.//
ReplyDeleteஅப்படி எல்லாம் இல்லை ஓய் ! தமிழ் விக்கியிலிருந்து விலகி ஜெமோவிடம் அழுதவர்களைக் கேட்டுப்பாரும். தமிழர் என்றொரு இனம் உண்டு, தனியே அவர்க்கொரு குணம் உண்டு என்று சும்மாவா சொன்னார்கள் !
அறிவிப்புக்கு நன்றி, பத்ரி
ReplyDeleteவணக்கம்,
ReplyDeleteதமிழ் விக்கிப்பீடியா தகவல் பக்கங்கள் போட்டியில் தற்போது தமிழகக் கல்லூரி மாணவர்கள் மட்டும் அல்லாது, உலகத் தமிழ்ப் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம்.
போட்டி முடிவுத் தேதி மே 15க்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
வலைப்பதிவு நண்பர்கள் அனைவரையும் இப்போட்டிக்கு வரவேற்பதில் மகிழ்கிறோம். ஆர்வமுள்ள தங்கள் நண்பர்களுக்கும் இது பற்றி எடுத்துரைக்குமாறு வேண்டிக் கொள்கிறோம்.
நன்றி,
இரவி.