Sunday, April 04, 2010

மாமல்லையின் இமயச் சிற்பத் தொகுதி - முனைவர் பாலுசாமி

தமிழ் பாரம்பரியம் குழுமம் சார்பாக நேற்று தக்கர் பாபா வித்யாலயா, வினோபா பாவே அரங்கில் நடைபெற்ற மாதாந்திர நிகழ்வில், முனைவர் பாலுசாமியின் அற்புதமான சொற்பொழிவு நடைபெற்றது.

அர்ச்சுனன் தபசு என்றும் பகீரதன் தபசு என்றும் அழைக்கப்படும் மாமல்லபுரத்தின் அற்புதமான வெளிப்புறப் புடைப்புச் சிற்பத் தொகுதி பற்றி பாலுசாமி ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அந்த அருமையான ஆராய்ச்சியை அவர் மடைதிறந்த வெள்ளம் போல அழகு தமிழில் பேசினார். அரங்கில் இருந்த சுமார் 100 பேர் அப்படியே ஆடாது அசையாது 2 மணி நேரங்கள் உட்கார்ந்திருந்தனர்.

இதைப்பற்றி விவரமாகப் பின்னர் எழுதுவேன். இப்போது வீடியோ வடிவில் அதனைக் காணலாம்.


Watch Prof. S. Balusamy on The Great Penance Panel at Mamallapuram (1/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com


Watch Prof. S. Balusamy on The Great Penance Panel at Mamallapuram (2/2) in Educational & How-To  |  View More Free Videos Online at Veoh.com

1 comment:

  1. மிகவும் அருமையான பொழிவு!! எவ்வளவு தகவல்கள்! எவ்வளவு நுணுக்கங்கள்.... பதிவிட்டமைக்கு மிக்க நன்றிகள்......

    பாலுசாமி ஒருபுறம் கலைநாயகனாக விளங்கினாலும், மறுபுறம் பாரதிபுத்திரனாக பாரதியைச் சுற்றி சுற்றி வந்து, பாரதியின் தீவிர இரசிகராக இருக்கிறார். இஃது அவரது இன்னொரு முகம்!!

    http://skkmcc.blogspot.in/2012/12/blog-post_7892.html

    பாரதிபுத்திரனின் பாரதி பற்றி புரிதலுக்கு... மேலே உள்ள இணைப்பு,

    ReplyDelete