"The practice of wearing a traditional coloured gown during a convocation ceremony at any university is a barbaric colonial practice. Why can't we wear simple dress instead of these gowns."
பட்டமளிப்பு விழாவின்போது மேடையில் பேசிக்கொண்டிருந்த மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ், திடீரென கவுனைக் கழற்றி எறிந்துவிட்டு, ‘இது ஒரு காட்டுமிராண்டி காலனி ஆதிக்க வழக்கம்’ என்று சொல்லியிருக்கிறார்.
காட்டுமிராண்டி வழக்கம் என்று சொல்லியிருக்கக்கூடாது என்பது பலரது கருத்து. ஆனால் அடிப்படையில் ஜெயராம் ரமேஷ் சொல்லவந்தது, நாம் அனைவரும் பிரிட்டிஷ் நடைமுறையை, அவர்கள் பட்டம் அளிக்கும்போது நடந்துகொள்ளும் விதத்தை அப்படியே காப்பி அடித்து வருகிறோம் என்பதே.
***
சுமார் 20 வருடங்களுக்குமுன் நான் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழா நினைவுக்கு வருகிறது. ஒரு இனம்புரியாத படபடப்பு. ஒவ்வொரு பட்டத்துக்கும் என்று தனித்தனி வண்ண அங்கிகள். முன்னமே பணம் கட்டி, குறிப்பிட்ட நாள் அன்று அதனை சட்டை மேல் அணிந்துகொண்டேன். அதன் மணம் சகிக்கவில்லை. வியர்வை வேறு.
முதலில் ஐஐடி டைரக்டர், சேர்மன் என்று பலரும் பிளேடு போட்டுத் தள்ளினார்கள். இத்தனை பிஎச்டி, இத்தனை எம்.டெக், இத்தனை பி.டெக் என்று ஒரே புள்ளிவிவரக் குவியல். அடுத்து, கான்வொகேஷன் அட்ரஸ் என்று சிறப்பு விருந்தினர் பேசவேண்டும். அப்போது சிறப்பு விருந்தினராக வந்தவர் அப்துல் கலாம். (அவர் அவ்வளவு ஃபேமஸ் ஆகியிருக்கவில்லை அப்போது.) ஜெயராம் ரமேஷ் போல அங்கியைக் கழற்றி விசிறவில்லை. மாறாக ‘எந்தரோ மஹானுபாவுலு, அந்தரிகி வந்தனமு’ என்று ஆரம்பித்தார். கைத்தட்டல் பலமாக இருந்தது. அதன்பிறகு அவர் என்ன பேசினார் என்று ஒரு வரிகூட ஞாபகம் இல்லை.
இப்படி எல்லோரும் பேசி முடிந்து, முதலில் பிஎச்டி பட்டங்கள் விநியோகிக்கப்பட்டன. அதில் சில கௌரவ டாக்டர் பட்டங்களும் இருந்தன. பின்னர் முதுநிலைப் பட்டங்கள். கடைசியாக எங்களுக்கு.
நான் பட்டம் பெற ஒருமுறையும், பிராஞ்சில் முதல் மாணவனாக வந்ததால் பதக்கம் பெற ஒருமுறையும் மேடை ஏறவேண்டி இருந்தது. எல்லாம் முடிந்துவிட்டது என்று கிளம்பும் நேரம் அட்மின் ஊழியர் ஒருவர் என் பெயரைச் சொல்லி விசாரித்து, என் கையில் இருந்த பட்டச் சான்றிதழைப் பிடுங்கிக்கொண்டார்! அதில் ஏதோ தவறு நிகழ்ந்துவிட்டதாம். ஆனால் மேடையில் கொடுக்கவேண்டுமே என்பதால் அதை அப்படியே கொடுத்துவிட்டார்களாம். அடுத்த நாள் அலுவலகம் வந்து புதிதாக ஒன்றைப் பெற்றுக்கொண்டு செல்லுமாறு சொன்னார்கள்.
உண்மையில் இந்தச் சான்றிதழ் பெரும் பிரச்னையாக ஆகிப்போனது. இரண்டு மூன்று முறை ஏதாவ்து சிக்கல். சேர்மன் எம்.எஸ்.சுவாமிநாதன் இடையில் வெளிநாடு சென்றுவிட்டார். அவரது கையெழுத்து வேண்டியிருந்தது. நடுவில் ஒருமுறை எல்லாம் சரியாக வந்தபின்னும் லாமினேஷன் செய்து வெட்டும்போது குறுக்கே வெட்டிவிட்டது. கடைசியில் நொந்துபோன ரெஜிஸ்திரார், ‘நீ கிளம்பி அமெரிக்கா போ, நான் நேராக உன் பல்கலைக்கழகத்துக்கே அனுப்பி வைக்கிறேன்’ என்று சொல்லிவிட்டார்.
***
ஜெயராம் ரமேஷின் கதைக்கு வருவோம். இந்தியா இந்தப் பழக்கத்தை அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடும் என்று நான் நினைக்கவில்லை. பாரம்பரியம் என்று வரும்போது அதில் உள்ள சில பகட்டுகள் நமக்குப் பிடிக்கின்றன. அந்த ஒரு தினத்தில், பட்டம் வாங்குபவர்கள் தனித்துத் தெரியவேண்டும் என்று நினைப்பார்கள். தலைக்கு மேல் தொங்கும் குஞ்சலம் வைத்த பட்டைத் தொப்பியோ, கன்னாபின்னாவென்று இருக்கும் அங்கியோ, ஏதோ ஒன்று வேண்டும். மாறாக இந்திய முறையில் நாமாக எதையாவது உருவாக்காதவரையில் பிரிட்டிஷ் வழக்கமான அங்கியும் குல்லாயும் இருந்தே தீரும்.
மனிதன் கடவுளைப் படைத்தானா?
3 hours ago
The convocation gown is just one of the elements of the convocation ceremony. There is the convocation procession prior to the funtion, the order in which the degrees are given etc. I think all these elements and practices have become institutionalized over long period of time to accord a solemn nature to the function. That the graduating students may find it boring is a different matter :) I am not sure if years of institutionalized practice can be changed immediately.
ReplyDeleteபத்ரி, புகைப்படத்தில் இருப்பது நீங்களா? ஆகா! எத்தனை வித்தியாசம்?
ReplyDeleteNID graduates have worn Indian ethnic dresses for a several decades. 15 years back we wore uniform kurtas for men and salwar/saree for women at IITB (no gown or cap). Many universities/institutes have done away with the colonial style gowns and hats and it not such a big deal any more. Jairam Ramesh could've avoided the drama.
ReplyDeleteஜெயராம் ரமேஷ் எப்போதும் இந்திய உடைதான் அணிகிறாரா ? பேண்ட் ஷர்ட்டை உருவி எறியத் தயாரா ?
ReplyDeleteRevisionism is not what we would expect from a statesman like Ramesh. Unfortunate.
ஏதோ தப்பான படத்தை போட்டுட்டீங்களா?
ReplyDeleteஇதுவே அத்வானியோ, மோடியோ சொல்லியிருந்தால் பத்திரிக்கை உலகமே கொத்தெழுதிருக்கும் தானே ?
ReplyDeleteஅவனவன், அந்த கருமம் பிடிச்ச கவுனுக்கும் தொப்பிக்கும் வக்காலத்து வாங்குவான். டீஸ்டா செடல்வாத் எல்லாம் அறிக்கைவிடுவாள். அதை சி.என்.என்/ஐ.பி.என் பிரைம் டைம் நிகழ்ச்சியாக ஒளிபரப்பும், சர்தேசாய் தம்பதியர் பிளாக் எழுதி வைத்திருப்பார்கள், என்.டி.டீ.வி பிக் பைட் நிகழ்ச்சியில் ஒரு பக்கம் ஐ.ஐ.டி/ஐ.ஐ.எம் மாணவர்களும் ஒரு பக்கம் காங்கிரஸ் ஜால்ராக்களும், இன்னொரு பக்கம் சில நட்டு கழண்ட கேசுகள், ஆனால் ஹிந்துத்வாவாதிகளாக சித்தரிக்கப்படவேண்டியவர்கள் உட்கார்ந்துகொண்டு பேசி பிளேடு போடுவார்கள். என்னமோ நாட்டுல வேற பிரச்சனையெல்லாம் பிரச்சனையே இல்லாத மாதிரி 3-4 நாட்கள் டாப் ஸ்லாட்டில் இதுவே ஓடிக்கொண்டிருக்கும். டைம்ஸ் நௌ அர்னாப் கோஸ்வாமி வேறு அவர் பங்குக்கு அவரது மனிப்பர்ஸ் வாயை மூடாமல் பேசிக்கோண்டே இருப்பார். நல்லவேளை இதெல்லாம் நடந்துத் தொலையவில்லை.
ஆனால், உண்மையிலேயே இத்தகய விசயங்கள் எல்லாம் அவர்கள் செய்வது தான் ஞாயமாக இருக்கும்.. இல்லாட்டி பாருங்க...ஸ்காட்ச் விஸ்கி குடிக்கும் லிமூசீன் லிபரல் ஜெய்ராம் ரமேஷ் பேச்சை எவனுமே கேட்கப்போவதில்லை...