ஏர் இந்தியா மூலம் சென்னையிலிருந்து சிங்கப்பூருக்குச் செல்லும் பயணிகள் ஏர் ஹோஸ்டஸ்களை ரொம்பவே தொந்தரவு செய்கிறார்கள். சீட் பெல்ட் கட்டிக்கொள்ளுங்கள் என்று இருக்கும் சைகைகளை யாரும் சட்டை செய்வதில்லை. ஜாலியாக எழுந்து உலாத்தும் தமிழர்களை, இடம் சுட்டி ‘உட்கார், உட்கார்’ என்று சொல்வதே பணியாளர்களின் முழு நேர வேலையாக உள்ளது.
சிங்கப்பூர் குடியேறல் படிவம் நிரப்பத் தெரியாமல் பலர் தடுமாறுகிறார்கள்.
இரவு உணவு ‘மெட்ராஸ் வுட்லண்ட்ஸ்’-ல் மசால் தோசை, தயிர் சாதம். மசால் தோசை கொஞ்சம் சின்னதாக இருக்கிறது.
சிங்கப்பூரின் முன்னாள் துணைப் பிரதமர் கோ கெங் ஸ்வீ நேற்று காலமானார். பெரிய institution builder என்கிறார்கள். சிங்கப்பூரின் கல்வி அமைப்பை உருவாக்கியவர். பறவைகள் காட்சியகம் முதல் ஆபரா தியேட்டர் வரை அமைத்தவராம். இந்திய கல்வி முறை, ஜப்பானிய கல்வி முறை, சீனக் கல்வி முறை ஆகியவை பற்றி நன்கு ஆராய்ந்து படித்துவிட்டு, பிறகுதான் சிங்கப்பூரின் கல்வி முறை எப்படி இருக்கவேண்டும் என்று தீர்மானித்து உருவாக்கினாராம்.
இந்தியா ஒரே நேரத்தில் அனைத்து தட்டுகளிலும் - ஆரம்பக் கல்வி, மேல்நிலைக் கல்வி, உயர் கல்வி என்று - பணம் செலவழித்ததால் கடைசியில் எதையுமே சரியாகச் செய்யவில்லை என்ற கருத்தை ஸ்வீ கொண்டிருந்தாராம். சிங்கப்பூரில், பட்டதாரிகள் வேலை இல்லாமல் இருக்கக்கூடாது என்ற காரணத்தால், இருக்கும் பணத்தை கல்லூரி, பல்கலைக்கழகங்களில் செலவழிக்காமல், தொழில்கல்வியில் செலவிட்டாராம்.
கல்வி பற்றிய இவரது கருத்துகளைத் தேடிப் படிக்கவேண்டும்.
வெண்முரசு 75, புதுவையில் நான்
6 hours ago
பத்ரி,
ReplyDeleteசிங்கையில் எங்கு தங்கியிருக்கிறீர்கள்?
தொடர்பு கொள்ள எண் என்ன?
எப்போது சந்திக்க அவகாசம் இருக்கும்?
பதிலை மின்மடலில் அனுப்பினாலும் சரி.நன்றி
பத்ரி
ReplyDeleteஉங்களது பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்! தினமும் இதுப் போல புதிய பார்வையில் எழுதுங்கள்!
நன்றி
மயிலாடுதுறை சிவா...
கல்வி கற்போருக்கு இந்தியாவில் சரியான வழிகாட்டுதல் இல்லை! எனவே தான் மாணவர்கள், படித்தாலும் முக்கியத்துவத்தை உணராமலே படிக்கிறார்கள்! இந்த நிலை மாற எல்லோருக்கும் கல்வி பற்றிய விழிப்புணர்வு வர வேண்டும்!
ReplyDeleteஅறிவன்: என் சிங்கை (தாற்காலிக) எண்: 8265-9380. நாளை மாலை 6.00 மணிக்குப் பின் கூப்பிடுங்கள். பேசுவோம். சந்திக்க முடியுமா என்று பார்ப்போம்.
ReplyDelete