வரும் வார இறுதியில் - 15, 16 மே 2010 - நியூ ஹொரைஸன் மீடியா சார்பில் பா.ராகவனும் நானும் சிங்கப்பூரில் (தமிழில்) எடிட்டிங் சம்பந்தமான ஒரு பயிற்சி அரங்கை நடத்துகிறோம். நேஷனல் புக் டெவலப்மெண்ட் கவுன்சில் ஆஃப் சிங்கப்பூர் ஏற்பாடு செய்திருக்கும் அமர்வு இது. (எப்படி இதில் பங்கெடுப்பது, எவ்வளவு கட்டணம், யாரிடம் தொடர்புகொள்ளவேண்டும் என்ற எதுவும் எங்களுக்குத் தெரியாது. நீங்கள் சிங்கப்பூரில் இருந்தால் NBDCS-ஐத் தொடர்புகொள்ளவும்.
அடுத்த வார இறுதியில் - 22, 23 மே 2010 - மலேசியாவில், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் சார்பில் இதே பயிற்சி அமர்வு நடைபெறுகிறது. மலேசியாவில் உள்ளவர்கள் இந்த அமர்வில் கலந்துகொள்ள விரும்பினால் இந்தச் சங்க நிர்வாகிகளை அணுகலாம். கட்டண விவரம், எவ்வளவு பேர் பங்குகொள்ளலாம் என்பதையும் அவர்களிடமே கேட்டு அறிந்துகொள்க.
வெண்முரசு 75, புதுவையில் நான்
6 hours ago
இனி சிங்கப்பூரிலிருந்தும், மலேசியாவிலிருந்தும் தரமான தமிழ்ப் புத்தகங்களை எதிர்பார்க்கலாம்!
ReplyDeleteHere is some information.
ReplyDeleteஇரண்டு விஷயங்கள்.
ReplyDelete1) நீங்கள் இத்தனை வருடங்கள் இணையத்தில் எழுதியும் சமீபத்தில் ______ எழுத்தாளரிடம் ஞானஸ்தானம் பெற்றமைக்கு வாழ்த்துகள். :-)
2)ஆள்கள் தேவை! என்ற வார்த்தைகளை தளத்தின் தலைப்பில் பார்த்தேன். 'ஆட்கள் தேவை' என்றுதானிருக்க வேண்டும் என்று நம்புகிறேன்.
ஆட்கள் என்பதை ஆள்கள் என்றும் நாட்கள் என்பதை நாள்கள் என்றும் இயற்பியல் என்பதை இயல்பியல் என்றும்தான் நான் எழுதுகிறேன். தோல்பை என்றில்லாமல் தோற்பை என்று எழுதுவதுதான் இலக்கண மரபு என்றாலும் முன்னதற்கும் பின்னதற்கும் உள்ள வித்தியாசம் உங்களுக்குப் புரிகிறதல்லவா? எனவே சில இலக்கண சந்தி விதிகளை வேண்டுமென்றே புறக்கணிக்க நான் முடிவெடுத்துள்ளேன்.
ReplyDeleteஆள்கள் தேவை என்பது வரி விளம்பரம் மாதிரி உள்ளது.எழுத்தாளர்கள் தேவை என்று போட பயப்படுகிறீர்களா :)
ReplyDeleteசுரேஷ், ஆள்கள் என்பதும், நாள்கள் என்பதும்தான் சரி. பழக்கத்தில் ஆட்கள், நாட்கள் பழகிவிட்டது. அதனால் பத்ரி எழுதியது சரி. நாட்கள் என்று எழுதினால் நாள்பட்ட கள் என்று அர்த்தம். நாள்கள் என்றால் நாள் என்பதன் பன்மை என்று அர்த்தம். :-)
ReplyDeleteநாட்கள் என்னும் சொல் வழக்கத்தில் உள்ளது. ஆனால் அதையும் நாள்கள் என்றுதான் குறிப்பிட வேண்டும். ஆழ்வார்கூட நாள்களோ நாலைந்து என்றே சொல்லுகிறார்.
ReplyDeleteராமதுரை எழுதியது
ReplyDeleteதலைப்பில் ஆள்கள் என்று உள்ளது சரியே.பத்திரிகைகளில் செய்தித் தலைப்புகளுக்கு இலக்கணம் பொருந்தாது என்ற மரபு உள்ளது. தமிழ்ப் பத்திரிகைகளில் மட்டும் அல்ல ஆங்கிலப் பத்திரிகைகளிலும் நீங்கள் தலைப்புகளைக் கவனித்தால் இது புரியும். ஆங்கிலப் பத்திரிகைகளின் பல தலைப்புகளில் Verb இல்லாமல் இருப்பதைக் காணலாம்.